Sunday 17 November 2019

எனக்குப் பிடித்த நூறு நூல்கள்

சரவணன் மாணிக்கவாசகம்
முகநூலில் எழுதியிருப்பது

1. மோகமுள்- தி.ஜானகிராமன்

2. அபிதா-லா ச ரா


3. ஜே ஜே சிலகுறிப்புகள்-சுந்தரராமசாமி


4. புதுமைப்பித்தன் கதைகள்- புதுமைப்பித்தன்


5. சிறிது வெளிச்சம்- கு ப ரா


6. மௌனி கதைகள் - மௌனி


7. கு அழகிரிசாமி கதைகள்- கு. அழகிரிசாமி


8. நாகம்மாள்- ஆர். சண்முக சுந்தரம்


9. வாடிவாசல்- சி சு செல்லப்பா


10. பொய்த்தேவு- க நா சு


11. நினைவுப் பாதை- நகுலன்


12. பசித்த மானிடம்- கரிச்சான் குஞ்சு


13. வாசவேஸ்வரம்- கிருத்திகா


14. கடைத்தெருக்கதைகள் - மாதவன்


15. புத்தம் வீடு- ஹெப்சிபா ஜேசுதாசன்


16. பள்ளிகொண்டபுரம்- நீலபத்மநாபன்


17. அசடு- காசியபன்


18. இடைவெளி- சம்பத்


19. புயலிலே ஒரு தோணி- ப சிங்காரம்


20. நித்யகன்னி- எம்.வி. வெங்கட்ராம்


21. காகித மலர்கள்- ஆதவன்


22. கிருஷ்ணா கிருஷ்ணா-இந்திரா பார்த்தசாரதி


23. சிறகுகள் முறியும்- அம்பை


24. எஸ்தர்- வண்ணநிலவன்


25. கலைக்கமுடியாத ஒப்பனைகள்- வண்ணதாசன்


26. நாளை மற்றுமொரு நாளே- ஜி நாகராஜன்


27. அவன் ஆனது- சா கந்தசாமி


28. அரங்கநாதன் கதைகள்- மா அரங்கநாதன்


29. மண்ணாசை- சங்கர்ராம்


30. சார்வாகன் கதைகள்- சார்வாகன்


31. கோபல்ல கிராமம்- கி ராஜநாராயணன்


32. அசோகமித்ரன் கதைகள்- அசோகமித்ரன்


33. கரமுண்டார் வீடு- தஞ்சை பிரகாஷ்


34. முத்துலிங்கம் கதைகள் - அ முத்துலிங்கம்


35. பிச்சமூர்த்தி கதைகள் - .ந பிச்சமூர்த்தி


36. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்- பிரபஞ்சன்.


37. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்


38. சிறுகதைகள்- பி எஸ். ராமையா


39. பஞ்சும் பசியும்- தொ மு சிதம்பர ரகுநாதன்


40. நீர்மை- ந முத்துசாமி


41. நீலக்கடல்- கிருஷ்ணன் நம்பி


42. சிறுகதைகள் - சூடாமணி


43. மூங்கில் குருத்து - திலீப் குமார்.


44. சிறுகதைகள் - வல்லிக்கண்ணன்.


45. பிறகு- பூமணி


46. என்பிலதனை வெய்யில் காயும்- நாஞ்சில் நாடன்


47. நதிமூலம்- விட்டல்ராவ்


48. அங்குத்தாய்- சி ஆர் ரவீந்திரன்


49. காடு- பா ஜெயப்பிரகாசம்


50. மதினிமார்கள் கதை- கோணங்கி


51. நெடுங்குருதி- எஸ். ராமகிருஷ்ணன்


52. சிறுகதைகள்- ஜெயமோகன்


53. வெயிலோடு போய்- தமிழ் செல்வன்


54. கிழிசல்கள் - கந்தர்வன்


55. தேர்- இரா முருகன்


56. கரிசல்கள்- பொன்னீலன்


57. கீறல்கள்- ஐசக் அருமைரஜன்


58. அம்மன் நெசவு- சூத்திரதாரி


59. பெருவலி- சுகுமாரன்.


60. மணைமாட்சி- எம். கோபாலகிருஷ்ணன்


61. தாடங்கம்- சத்தியானந்தன்


62. நுண்வெளி கிரகணங்கள்- சு. வேணுகோபால்


63. ஆழி சூழ் உலகு- ஜோ டி குருஷ்


64. கன்னி- பிரான்ஸிஸ் கிருபா


65. வெளியேற்றம்- யுவன் சந்திரசேகர்


66.ரத்த உறவு- யூமா வாசுகி


67.பாட்டியின் சிநேகிதன்- நா விச்வநாதன்


68.அஞ்சலை- கண்மணி குணசேகரன்


69.பார்த்தனீயம்- தமிழ் நதி


70. சுளுந்தீ- முத்துநாகு


71. மெய்யுள்- மு தளையசிங்கம்


72. புலிநகக்கொன்றை- பி ஏ கிருஷ்ணன்


73. கூகை- சோ தர்மன்


74. கருக்கு- பாமா


75. பழையனகழிதலும்- சிவகாமி


76. கொரில்லா- ஷோபா சக்தி


77. கடலோடி- நரசய்யா


78. ஏ கே செட்டியார் படைப்புகள் -முழுத்தொகுப்பு


79. ஆதிரை- சயந்தன்


80. இருபதுவருடங்கள் -எம் எஸ் கல்யாண சுந்தரம் 


81. செடல்- இமயம்


82. கணையாயின் கடைசிப்பக்கங்கள்- சுஜாதா


83. மாதொருபாகன்- பெருமாள் முருகன்


84. நினைக்கப்படும் - ஜெயந்தன்


85.ஒரு கடலோடி கிராமத்தின் கதை- தோப்பில் முகம்மது மீரான்


86. மண்ணில் தெரியுது வானம் - ந சிதம்பர சுப்பிரமணியன்


86. உள்ளிருந்து சில குரல்கள்- கோபி கிருஷ்ணன்.


87. ராஜேந்திர சோழன் சிறுகதைகள்- ராஜேந்திர சோழன்


88. ஸீரோ டிகிரி- சாரு நிவேதிதா


89. கவலை- அழகியபெரியநாயகி அம்மாள்


90. மெல்லக் கனவாய் பழங்கதையாய்- பா.விசாலம்


91. சோளகர் தொட்டி -பாலமுருகன்


92. நாடோடித்தடம்- ராஜசுந்தரராஜன்


93. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்- போகன்


94. கீதாரி- தமிழ் செல்வி


95. தகப்பன் கொடி- அழகிய பெரியவன் 


96.அப்பா- சுப்ரபாரதி மணியன்


97. அட்சரேகை தீர்க்கரேகை- எஸ். சங்கரநாராயணன்


98. ஐந்தவித்தான்- ரமேஷ் பிரேதன்


99. காலங்கள் சாவதில்லை- தெளிவத்தை ஜோசப்


100. ராஜன் மகள்- பா வெங்கடேசன்.


Saturday 16 November 2019

தமிழின் சிறந்த நாவல்கள் -50 ஒரு வாசகனின் பரிந்துரை

ராயகிரி சங்கர்

இது  நூல்வெளி.காம் தளத்தில் வெளியாகி உள்ளது

வாசிப்பின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு உங்களின் பதிலைப்பொறுத்தே இருக்கிறது இப்பத்தியைத் தொடர்ந்து வாசிப்பதா வாசிக்காமல் கடந்து செல்வதா என்பது. எனக்கு வாசிப்பு என்பது ஒரு பிறவியில் பலபிறவிகளுக்கான வாழ்க்கை அனுபவங்களை அடைதல். விதிக்கப்பட்ட வாழ்வின்மேல் நின்றுகொண்டு என்னைச்சுற்றி இருப்பவர்களின் வாழ்வைப் புரிந்துகொள்ளுதல். 
மேலும் தீரா வெறியோடு அலைந்துதிரிந்து பொருள் சேர்க்கும் இவ்வாழ்வின் பொருள்தான் என்ன என்பதும். வாசிப்பினை நேரக்கொலை என்று கருதி புத்தகங்களைத் தேடிப் படிப்பவர்களோடு எனக்கு உடன்பாடில்லை. யானையைப் பிடித்து வந்து பிச்சையெடுக்க அங்குசத்தால் அடிமைப்படுத்தி வைப்பது போன்றதுதான் புத்தக வாசிப்பை வெறும் பொழுது போக்கிற்கெனத் தெரிவு செய்வது. இன்னொன்றும் இருக்கிறது. இலக்கியம் எல்லாருக்கும் உரியதல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே அதன் கதவுகள் திறக்கின்றன. 
மெய்காண் முறை என்பார் எழுத்தாளர் ஜெயமோகன். கண்களால் காணும் அனைத்தின் உள்ளும் கட்புலனாகா கருப்பொருளை உருப்பெருக்கிகொண்டு காட்டுபவைதான் அத்தனை கலைகளும். இலக்கியம் மொழிகொண்டு இருப்பதால் நம்மைப் பாதிக்கும் அதன் ஆற்றல் அளப்பரியது.நம் மனம் என்பது முழுக்கவும் சொற்கனால் ஆனது. சொற்களில் உறைந்த நினைவுகளே படிமங்கள். இவ்வுலகைச் சொற்கள் கொண்டே அறிகிறோம். சொற்களின்றி நாம் காணும் பருப்பொருட்கள் இல்லை. அதொன்றே இரண்டாயிரம் ஆண்டுகளாக இடையறாமல் தொடர்ந்து வரும் நம் இலக்கிய மரபு. 
தமிழில் தீவிர இலக்கியம் என்றொரு பிரிவு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நம்மில் பெரும்பாலோருக்கு அதன் முழுப் பரிணாம வளர்ச்சி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கல்வி நிலையங்கள் சங்க இலக்கியத்தையும் அறநெறிக் கருத்துக்களை வலியுறுத்தும் புனைவுகளையுமே நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. விதிவிலக்காக சில இருக்கலாம். அதிகம் சுய தேடலினால் மட்டுமே நம் வாசிப்பு ரசனையை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. வழிகாட்டவோ எடுத்துச்சொல்லவோ இங்கே அதிகப் பேர்கள் இல்லை. 
இப்போதைக்கு வாசிக்க வேண்டிய ஐம்பது தமிழ் நாவலாசிரியர்கள் என்று நான் கருதும் ஒரு பட்டியலை இடுகிறேன். யாருக்கேனும் சிலருக்கு இது உதவக்கூடும். 
1. சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள், குழந்தைகள் ஆண்கள் பெண்கள். 

2. தி.ஜானகி ராமன் - மோகமுள், அம்மா வந்தாள், நளபாகம், செம்பருத்தி, 

3. அசோகமித்திரன் - கரைந்த நிழல்கள், தண்ணீர், பதினெட்டாவது அச்சக்கோடு, மானசரோவர், ஒற்றன் 

4. ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீசுக்குப்போ, கங்கை எங்கே போகிறாள், உன்னைப்போல் ஒருவன், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 

5. இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல், இயேசுவின் தோழர்கள், 

6. ஆதவன் - காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் 

7. ப.சிங்காரம் - புயலிலே ஒருதோணி 

8. நாஞ்சில் நாடன் - எட்டுத்திக்கும் மதயானை, சதுரங்க குதிரை, என்பிலதனை வெயில் காயுமே, மாமிசப்படைப்பு 

9. பிரபஞ்சன் - வானம் வசப்படும், மானுடம் வெல்லும் 

10. தஞ்சைப்பிரகாஷ் - கரமுண்டார் வீடு, கள்ளம், மீனின் சிறகுகள் 

11. பூமணி - அஞ்ஞாடி, வெக்கை, பிறகு, நைவேத்தியம் 

12.எஸ்.ராமகிருஷ்ணன் - உறுபசி, யாமம், துயில், நெடுங்குருதி, உப பாண்டவம், சஞ்சாரம், இடக்கை 

13. ஜெயமோகன்.- காடு, ரப்பர், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம், கொற்றவை, பின்தொடரும் நிழலின் குரல், இரவு, ஏழாம் உலகம் 

14. யுவன் சந்திரசேகர் - குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம், கானல்நதி, வெளியேற்றம், மணற்கேணி 

15. சாரு நிவேதிதா - ஸீரோ டிகிரி, புதிய எக்ஸைல், ராஜ லீலா. காம ரூபக்கதைகள், தேகம் 

16. கண்மணி குணசேகரன் - அஞ்சலை, நெடுஞ்சாலை, வத்தாரங்குடி, 

17. சு.வேணுகோபால் - நுண்வெளிக் கிரணங்கள் 

18. ஜி.நாகராஜன் - குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே 

19. நகுலன் - நினைவுப்பாதை, நிழல்கள் 

20. சம்பத் - இடைவெளி 

21. கோபால கிருஷ்ணன் - மணற்கடிகை, அம்மன்நெசவு 

22. ஷோபா சக்தி - கொரில்லா 

23. செந்தூரம் ஜெகதீஷ் - கிடங்குத்தெரு 

24. யூமா வாசுகி - இரத்த உறவு 

24. ஜெ.பிரான்சிஸ் கிருபா - கன்னி 

25. என்.ஸ்ரீராம் - அத்திமரச்சாலை 

26. கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம் 

27. சயந்தன் - ஆதிரை 

28. தமிழ்நதி - பார்த்தீனியம் 

29.சோ.தர்மன் - கூகை, துார்வை 

30. பி.ஏ.கிருஷ்ணன் - புலி நகக்கொன்றை, கலங்கிய நதி 

31. சி.ஆர்.ரவீந்திரன் - ஈரம் கசிந்த நிலம் 

33. கிருத்திகா - குருசேத்திரம். புகை நடுவே 

34. சல்மா - .இரண்டாம் ஜாமங்களின் கதை 

35. உமா மகேஸ்வரி - யாரும் யாருடனும் இல்லை 

36. ஹெப்சிபா ஜேசுதாசன் - புத்தம் வீடு 

37. பாமா - கருக்கு 

38. இமையம் - கோவேறு கழுதைகள், ஆறுமுகம் 

39. கி.ராஜநாராயணன் - கோபல்ல கிராமம் 

40. சுகுமாரன் - வெலிங்டன் 

41. எஸ்.செந்தில்குமார் - காலகண்டம், மருக்கை, 

42. சு.வெங்கடேசன்- காவல்கோட்டம் 

43.பா.வெங்கடேசன் - பாகீரதியின் மதியம் 

44. ராஜ் கௌதமன் - சிலுவைராஜ் சரித்திரம் 

45. வண்ணநிலவன் - கடல்புரத்தில் 

46. தோப்பில் முகமது மீரான் - சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணம் தெரு, துறைமுகம், கூனன்தோப்பு 

47. கீரனுார் ஜாகீர்ராஜா - மீன்காரத்தெரு, குட்டிச்சுவர்கலைஞன், வடக்கேமுறி அலிமா 

48. வா.மு.கோமு - சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும், நாயுருவி 

49. நீல பத்மநாபன் - தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் 

50. ஜோ.டி.குருஸ் - ஆழி சூழ் உலகு, கொற்கை, அஸ்தினாபுரம்.

 
-ராயகிரி சங்கர், புளியங்குடி.

எனக்கு பிடித்த நாவல்கள் - வேலூர் பா லிங்கம்

கனலி கலை இலக்கிய இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அந்த பட்டியல்

1.பொய்த்தேவு,  ஒரு நாள் -  க நா சுப்ரமண்யம்

2.புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாஸன்

3. நாகம்மாள் - ஆர் ஷண்முகசுந்தரம்

4. உயிர்த்தேன், அம்மா வந்தாள் - தி ஜானகிராமன்

5. ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் - ஜெயகாந்தன்

6.கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்

7. அபிதா - லா ச ராமாமிர்தம்

8.தொலைந்து போனவர்கள் - சா கந்தசாமி

9.பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்

10. கிருஷ்ணப்பருந்து - ஆ மாதவன்

11. மாமிசப்படைப்பு, மிதவை , தலைகீழ்விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

12. கீரல்கள்- ஐசக் அருமைராஜன்

13. அசடு - காசியபன்

14. பிறகு, வெக்கை - பூமணி

15. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

16. நாளை மற்றுமொரு நாளே , குறத்தி முடுக்கு - ஜி நாகராஜன்

17. ஏழாம் உலகம், காடு, விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

18. மாதொரு பாகன், பூக்குழி - பெருமாள் முருகன்

19. ரத்த உறவு - யூமா வாசுகி

20. கோவேறு கழுதைகள், செல்லாத பணம் - இமையம்

21. பழையன கழிதலும், ஆனந்தாயி - சிவகாமி

22. அஞ்சலை, கோரை -  கண்மணி குணசேகரன்

23. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்

24. கள்ளி - வா மு கோமு

25. கருக்கு - பாமா

26. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு

27. பஞ்சும் பசியும் - தொ மு சி ரகுநாதன்

28. வேள்வித்தீ , நித்தியகன்னி - எம் வி வெங்கட் ராம்

29.ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

30. நினைவுப்பாதை - நகுலன்

31.கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்

32. கடல்புரத்தில், கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

33.துருக்கி தொப்பி , மீன் காரத்தெரு - கீரனூர் ஜாகிர்ராஜா

34. மணல்கடிகை, மனைமாட்சி - எம்.கோபாலகிருஷ்ணன்

35.சோளகர் தொட்டி - ச பாலமுருகன்

36. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

37. நெஞ்சின் நடுவே - சி எம் முத்து

38. வாசவேஸ்வரம் - கிருத்திகா

39. புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் - ப சிங்காரம்

40. வல்லிசை, தகப்பன் கொடி - அழகிய பெரியவன்

41. யாரும் யாருடனுமில்லை - உமா மகேஸ்வரி

42. நுண்வெளிக்கிரணங்கள் - சு வேணுகோபால்

43. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணக்குமார்

44. தோல் - டி செல்வராஜ்

45. கரமுண்டார் வீடு - தஞ்சை ப்ரகாஷ்

46. வாடிவாசல் - சி சு செல்லப்பா

47. நதிமூலம் - விட்டல்ராவ்

48. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

49. காகித மலர்கள் - ஆதவன்

50. யாமம், உறுபசி, இடக்கை - எஸ் ராமகிருஷ்ணன்

51. தூர்வை, சூல்  - சோ தர்மன்

52. இதயநாதம் - சிதம்பர சுப்ரமண்யன்

53. மண்ணாசை - சங்கரராம்

54. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

55. தாகம் - கு சின்னப்ப பாரதி

56. கரிசல், மறுபக்கம் - பொன்னீலன்

57. இடைவெளி - சம்பத்

58. மௌனத்தின் சாட்சியங்கள் - சம்சுதீன் ஹீரா

59. பொன்னகரம் - அரவிந்தன்

60. வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு - மு ராஜேந்திரன்

61. ஈரம் கசிந்த நிலம் - சி ஆர் ரவீந்திரன்

62.. உப்புவயல் - ஸ்ரீதர கணேசன்

63. சலூன் - வீரபாண்டியன்

64. கங்காபுரம் - அ வெண்ணிலா

65. ஏழரைப்பங்காளி வகையறா - எஸ் அர்ஷியா

66. ஐம்பேரியற்கை -  மாற்கு

67. ரேகை - சுப்ரபாரதி மணியன்

68. நீவாநதி - கவிப்பித்தன்

69. சுளுந்தீ  - முத்துநாகு

70. ஆறாவடு -  சயந்தன்

71. போர் உலா - மலரவன்

72.  ம்  ,  பாக்ஸ் கதைப்புத்தகம்  - ஷோபா சக்தி

73. அகாலம் -  புஷ்பராணி

74. ஊழிக்காலம் - தமிழ்க்கவி

75. விடமேறிய கனவு, நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

76. பார்த்தீனியம் - தமிழ்நதி