A S கல்யாணராமன் மயிலாப்பூர் சென்னை,
A S கல்யாணராமன் அவர்கள் தீவிர வாசகர்.வயது
தொன்னூறு . சிறந்த நாவல்கள்
நூற்று ஐம்பது என்ற எனது கட்டுரைக்கு பின்னூட்டம் இட்டிருந்தார். அதில் ஒரு சில
நாவல்களைத் தவிர மற்றவற்றைப் படித்திருப்பதாக எழுதி இருந்தார். அவரின்
சிறந்த நாவல்கள் பட்டியல் இது. எனக்கு கடிதம் மூலமாக அனுப்பி வைத்த அந்த
பட்டியலை இங்கே பதிவிடுகிறேன். அந்த கடிதம் இடையில் சில வருடமாக
கிடைக்காமல் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் தான் கிடைத்தது.
1. பொய்த்தேவு - க நா சுப்ரமண்யம்
2. ஒரு நாள் - க நா சுப்ரமணியம்
3. வாடிவாசல் - சி சு செல்லப்பா
4. தலைமுறைகள் - நீல பத்மநாபன்
5. பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்
6. மோகமுள் - தி ஜானகிராமன்
7. மலர் மஞ்சம் - தி ஜானகிராமன்
8. அபிதா - லா ச ராமாமிர்தம்
9. காதுகள் - எம் வி வெங்கட்ராம்
10. வாசவேஸ்வரம் – கிருத்திகா
11.புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
12. புயலில் ஒரு தோணி - ப சிங்காரம்
13. இருபது வருஷங்கள் - M S கல்யாணசுந்தரம்
14. கடல் புரத்தில் - வண்ண நிலவன்
15.ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்
16. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
17. கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்
18. ரப்பர், விஷ்னுபுரம், காடு – ஜெயமோகன்
19. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்
20. கள்ளி - வா மு கோமு
21. கோவேறு கழுதைகள் – இமையம்
22. செடல் – இமையம்
23.நல்ல நிலம் - பாவை சந்திரன்
24. தொலைந்து போனவர்கள் - சா கந்தசாமி
25. அஞ்ஞாடி - பூமணி
26. வானம் வசப்படும் – பிரபஞ்சன்
27. எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்
28. கரமுண்டார் வீடு - தஞ்சை ப்ரகாஷ்