Tuesday 28 October 2014

சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2

என்.செல்வராஜ்

     சிறந்த நாவல்கள் பட்டியல் --1 (பட்டியல் -1) ல் பல எழுத்தாளர்களின் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை. சிறந்த நாவல்கள் பட்டியலையும் 62 என்கிற அளவில் முடித்திருந்தேன். இப்போது முக்கிய எழுத்தாளர்களின் பதிவுகளையும், பட்டியலில் இடம் பிடிக்கும் மற்ற நாவல்களையும் பார்க்கலாம்.

பட்டியல் 1 ல் டாப் 10 இடங்களைப் பிடித்த 26 நாவல்களை தர வரிசைப் படுத்தி இருந்தேன். டாப் 10 பதிவில் 3 பரிந்துரைகளைப் பெற்ற நாவல்களை 11 வது இடத்துக்கு பரிந்துரை செய்திருந்தேன் . அந்த நாவல்கள் நாவல் பரிந்துரை பட்டியல்களில் பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் தர வரிசைப் படுத்தப்பட்டன.அந்த வகையில் அடுத்த 14 இடங்களில் அந்த நாவல்களைத்  தர வரிசைப் படுத்தி இருந்தேன். டாப் 10 பதிவுகளில் 2 பரிந்துரைகளைப்  பெற்ற நாவல்களை 12 வது இடத்துக்கு பரிந்துரை செய்திருந்தேன் . அந்த நாவல்கள் நாவல்  பரிந்துரை பட்டியல்களில் பெற்ற  பரிந்துரைகளின் அடிப்படையில் தர வரிசை படுத்தப்பட்டன. அந்த வகையில் அடுத்த 22 இடங்களில் அந்த  நாவல்களை  தர வரிசைப் படுத்தி இருந்தேன். டாப் 10 பரிந்துரைகள், எனது தலை சிறந்த நாவல்கள் கட்டுரையில்  உள்ளதுநாவல் பரிந்துரைப் பட்டியல்சிறந்த நாவல்கள் பட்டியல்-1 மற்றும் 2 ல் உள்ளவைஇவற்றையே  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் என குறிப்பிட்டு இருக்கிறேன். சிறந்த நாவல்களுக்கான பட்டியல் 2041 பதிவுகளைக்
 கொண்டது.இந்த பரிந்துரைகளின் பட்டியலை நான் முழுவதும் கொடுக்க காரணம் வாசகர்கள் பயனடைவர்  என்பதற்காகவே. சிலர் இந்த பட்டியலைப் படிக்கும்போது குறிப்பிட்ட எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட நாவல்களைப்  படிக்க இயலும். மேலும் ஆதாரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தந்தால் வாசகர்கள்
பட்டியலின் முழு பரிமாணத்தைக் காண்பர்.

முக்கிய சில எழுத்தாளர்களின் பதிவுகளை முதலில் காணலாம்.

க நா சுப்ரமணியம்   ( இலக்கிய விசாரம் நூலில்)

      இவர் சிறந்த  இலக்கிய விமர்சகர். சிறந்த நாவல்களை  எழுதி இருக்கிறார். பட்டியலிடுவதை இவர் ஆரம்பித்தார்.

  1. பிரதாப முதலியார் சரித்திரம்  2. கமலாம்பாள் சரித்திரம் 3. பத்மாவதி சரித்திரம் 4. முருகன் ஓர் உழவன் 5. தேசபக்தன் கந்தன்    6. சுந்தரி 7. கேட்ட வரம் 8. சினேகிதி 9. பொய்த்தேவு 10. இதயநாதம் 11. கரித்துண்டு 12. மண்ணசை 13. சத்தியமேவ 14. நித்ய கன்னி 15. புத்தம் வீடு 16. உன்னைப்போல் ஒருவன் 17. புத்ர 18. மோகமுள் 19. நைவேத்யம் 20. அணையா விளக்கு21.நாகம்மாள் 22. ஒரு புளிய மரத்தின் கதை 23. நினைவுப்பாதை 24. தண்ணீர் 25. அவன் ஆனது  26. மாமிசப் படைப்பு 27. வெக்கை 28. கடல் புரத்தில் 29. அசடு 30. வாசவேஸ்வரம் 31. சட்டி சுட்டது 32. ஜே ஜே சில குறிப்புகள் 33. அறுவடை 34. 18 வது அட்சக்கோடு 35. தொலைந்து போனவர்கள் 36. சூர்ய வம்சம் 37. நாய்கள் 38. நான்கு அத்தியாயங்கள் 39. ரெயினீஷ் அய்யர் தெரு 40. கம்பாநதி 41. கோபல்ல கிராமம் 42. பிறகு 43. இருபது வருஷங்கள் 44. வாடிவாசல் 45. ஜீவனாம்சம் 46. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 47. சில நேரங்களில் சில மனிதர்கள் 48.தந்திர பூமி 49. குருதிப்புனல் 50. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன  51. அபிதா 52. கரைந்த நிழல்கள் 53. கிருஷ்ணப்பருந்து 54. ஒரு நாள் 55. பெண் ஜன்மம் 56. புகை நடுவில் 57. அம்மா வந்தாள்  58.அசுரகணம் 59. தியாக பூமி 60. கள்வனின் காதலி 61.தலை முறைகள்

வெங்கட் சாமிநாதன் ( தமிழ் இலக்கியம் 50 வருட வளர்ச்சியும் மாற்றங்களும் கட்டுரை)

             இவர் இலக்கிய விமர்சகர். இந்த கட்டுரை சொல்வனம்.காம் இணைய தளத்தில் வந்தது. இதில் இவர் குறிப்பிடும்   நாவல்கள்.

1. மோகமுள்  2. வாடிவாசல் 3. ஜீவனாம்சம் 4. பொய்த்தேவு 5. ஒரு நாள் 6. நாகம்மாள் 7. சட்டி சுட்டது 8. அறுவடை 9. விசாரனைகமிஷன் 10. மானுடம் வெல்லும் 11. வானம் வசப்படும் 12. தலை முறைகள் 13. எட்டு திக்கும் மத யானை
14.ஒரு கடலோர கிராமத்தின் கதை 15. துறைமுகம்  16. கூனன் தோப்பு 17. சாய்வு நாற்காலி 18. பிறகு 19. வெக்கை 20. கருக்கு 21. பழையன கழிதலும் 22. ஆனந்தாயி 23. தூர்வை 24. கோவேறு கழுதைகள் 25. ஒன்பது ரூபாய் நோட்டு 26. கவலை 27. சுதந்திர தாகம் 28. நல்ல நிலம் 29. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 30. விஷ்ணுபுரம்

             எண்பதுகளில் தமிழ் இலக்கியம்  கட்டுரையில் (சொல்வனம்.காம் இணைய தளத்தில் வந்தது ) இவர் குறிப்பிடும்  நாவல்கள்.

1. அவதூதர் 2. தாமஸ் வந்தார் 3. ரத்தம் ஒரே நிறம் 4. கோபல்ல புரத்து மக்கள் 5. டணாய்க்கன் கோட்டை 6. நிற்க நிழல் வேண்டும்  7. நதிமூலம் 8. காலவெளி 9. மிதவை 10. ஜே ஜே சில குறிப்புகள் 11. இடைவெளி


சுந்தர ராமசாமி    ( மனக்குகை ஓவியங்கள் கட்டுரை நூலில்) சிறந்த நாவல்களாக குறிக்கும் நாவல்கள்

1.தலைமுறைகள் 2. பள்ளிகொண்டபுரம் 3. கிருஷ்ணபருந்து 4. நினைவுப்பாதை 5. ரத்த உறவு 6. புத்தம் வீடு 7. கோவேறு கழுதைகள் 8. நெடுங்குருதி 9. விஷ்ணுபுரம் 10. பின் தொலடரும் நிழலின் குரல் 11. நாகம்மாள் 12. மோகமுள் 13. அம்மா வந்தாள் 14. மரப் பசு 15. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 16.வாடிவாசல் 17. ஒரு நாள் 18. நாளை மற்றுமொரு நாளே 19. இடைவெளி  20. நிழல்கள்  21. ஒரு புளிய மரத்தின் கதை 22. தலை கீழ் விகிதங்கள் 23. சதுரங்க குதிரை 24. அசடு 25. ரப்பர் 26. ஒரு கடலோர கிராமத்தின் கதை 27. கூனன் தோப்பு 28. சாய்வு நாற்காலி 29. துறைமுகம் 30.ஏறுவெயில் 31. நிழல் முற்றம் 32. பழையன கழிதலும் 33.கருக்கு  34.  ஒன்பது ரூபாய் நோட்டு   

பா ராகவன்  ( வலைத்தளம்)

1. அம்மா வந்தாள் 2. ஜே ஜே சில குறிப்புகள் 3. கல்லுக்குள் ஈரம் 4. அரசூர் வம்சம் 5. விஷ்ணுபுரம் 6. ரப்பர் 7. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 8. வேதபுரத்து வியாபாரிகள் 9. நெடுங்குருதி 10. குள்ளச்சித்தன் சரித்திரம் 11. மானுடம் வெல்லும் 12. பொன்னியின் செல்வன் 13. ஒற்றன் 14. இன்று 15. வாடிவாசல் 16. அவன் ஆனது 17. பசித்த மானுடம் 18. புத்தம் வீடு 19. நல்ல நிலம் 20. நுண்வெளி கிரணங்கள் 21. எட்டு திக்கும் மத யானை 22. பள்ளிகொண்டபுரம் 23. கோவேறு கழுதைகள் 24. நிலா நிழல் 25. குருதிப் புனல் 26. ஸீரோ டிகிரி 27. பின் தொடரும் நிழலின் குரல் 28. இரும்புக்குதிரைகள் 29. புலிநகக்கொன்றை 30. கொரில்லா 31. தீ  32. சடங்கு  33. புயலிலே ஒரு தோணி 34. கடலுக்கு அப்பால்


சி சரவண கார்த்திகேயன்  ( வலைத்தளம்)

1.பொன்னியின் செல்வன் 2. ஒரு புளிய மரத்தின் கதை  3. ஜே ஜே சில குறிப்புகள் 4. பின்தொடரும் நிழலின் குரல் 5. விஷ்ணுபுரம் 6. ஏழம் உலகம் 7. ராஸலீலா 8. பகடையாட்டம் 9. புலிநகக்கொன்றை 10. சிலுவை ராஜ் சரித்திரம் 11. கங்கணம் 12. சில நேரங்களில் சில மனிதர்கள் 13. தேரோடும் வீதி 14. குருதிப் புனல் 15. யாமம் 16. மீனின் சிறகுகள் 17. உள்ளேயிருந்து சில குரல்கள் 18. என் பெயர் ராமசேஷன் 19. ஆஸ்பத்திரி 20. காக்டெயில் 21. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் 22. இரண்டாம் ஜாமங்களின் கதை 23. ஆதலினால் காதல் செய்வீர் 24. இனியெல்லாம் சுகமே 25. துப்பறியும் சாம்பு  26. புயலிலே ஒரு தோணி


அய்யனார் விஸ்வனாத்   ( பண்புடன் இணைய இதழ்- தமிழ் நாவல்கள் ஒரு அழகியல் பார்வை கட்டுரை)

1. தாண்டவராயன் கதை 2. வெட்டுப்புலி 3. கன்னி 4. இடைவெளி 5. உள்ளேயிருந்து சில குரல்கள் 6. நினைவுப் பாதை 7. நிழல்கள் 8. நாய்கள் 9. வாக்குமூலம் 10. சொல் என்றொரு சொல் 11. தலை கீழ் விகிதங்கள் 12. சதுரங்க குதிரைகள் 13. எட்டு திக்கும் மத யானை 14. கோபல்ல கிராமம் 15. கோபல்லபுரத்து மக்கள் 16. மோகமுள் 17. மரப்பசு 18. அம்மா வந்தாள் 19. செம்பருத்தி 20. மலர்மஞ்சம் 21. அன்பே ஆரமுதே 22.பச்சைக் கனவு 23. அபிதா 24. தண்ணீர் 25. கடல்புரத்தில் 26. கம்பா நதி 27.ரெயினீஸ் அய்யர் தெரு 28. மெர்க்குரிப்பூக்கள் 29. ஜே ஜே சில குறிப்புகள் 30. நாளை மற்றுமொரு நாளே 31. புயலிலே ஒரு தோணி 32. கடலுக்கு அப்பால் 33. ஏறு வெயில் 34. கூளமாதாரி 35. கள்ளி 36. கானல் நதி 37. குள்ள சித்தன் சரித்திரம் 38. வாடிவாசல் 39. காதுகள் 40. பசித்த மானுடம் 41. வாசவேஸ்வரம் 42. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 43. சாயவனம் 44. குருதிப்புனல் 45. சோளகர் தொட்டி 46. கருக்கு 47. தலைமுறைகள் 48. வெக்கை 49. ஒரு கடலோர கிராமத்தின் கதை 50. மானுடம் வெல்லும் 51.என் பெயர் ராமசேஷன் 52. பாய்மரக்கப்பல் 53. பாழி 54. செடல் 55. தகப்பன் கொடி 56. கொரில்லா 57. ரத்த உறவு 58. அளம் 59. அஞ்சலை 60. ஆழி சூழ் உலகு 61. கள்ளம் 62. பிளம் மரங்கள் பூத்து விட்டன 63. ஒப்பந்தம் 64. தரையில் இறங்கும் விமானங்கள் 65. ஒரு மனிதனின் கதை 66. கரையோர முதலைகள் 67. பந்தயப்புறா 68. நெடுங்குருதி 69. யாமம் 70. பின் தொடரும் நிழலின் குரல் 71. காடு  72. ஏழாம் உலகம் 73. ராஸலீலா 74. ஸீரோ டிகிரி


சுப்ரபாரதி மணியன்  ( வலைத்தளம்)

1. நாகம்மாள் 2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 3. ஒரு நாள் 4. மோகமுள் 5. ஒரு புளிய மரத்தின் கதை 6. கோபல்ல கிராமம் 7. நாளை மற்றுமொரு நாளே 8. மானசரோவர் 9. வெக்கை 10. தலைமுறைகள்  11. துறைமுகம் 12. காகித மலர்கள் 13. சாயாவனம் 14. புயலிலே ஒரு தோணி 15. கடல்புரத்தில் 16. தலைகீழ் விகிதங்கள் 17.வாக்குமூலம் 18. மானுடம் வெல்லும் 19. மண்ணகத்து பூந்துளிகள்

வண்ணநிலவன்  ( ஆழம் இதழில்)

   1. தியாகபூமி 2. மோகமுள் 3. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 4. ஒரு புளிய மரத்தின் கதை 5. ஜே ஜே சில குறிப்புகள்  6. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 7. சாயாவனம் 8. அசடு 9. தலைமுறைகள் 10.பள்ளிகொண்டபுரம்   11.நினைவுப்பாதை 12. புத்தம்வீடு 13. நாளை மற்றுமொரு நாளே 14. காகிதமலர்கள்

ஆர் வி (சிலிக்கான் ஸெல்ஃப் வலைத்தளம்)

 1. விஷ்ணுபுரம் 2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 3. பின் தொடரும் நிழலின் குரல் 4. சாயாவனம் 5. கோபல்ல கிராமம் 6. வாசவேஸ்வரம் 7. கரைந்த நிழல்கள்  8. காடு 9. ஆழி சூழ் உலகு 10. என் பெயர் ராமசேஷன் 11. மோகமுள் 12. நிழல் முற்றம் 13. மானசரோவர் 14. வெக்கை 15. ஜே ஜே சில குறிப்புகள் 16. புலிநகக்கொன்றை 17. வாடிவாசல்  18. ஒற்றன் 19. நாளை மற்றுமொரு நாளே 20. பொன்னியின் செல்வன் 21. பொய்த்தேவு 22. புயலிலே ஒரு தோணி 23.வெள்ளை யானை 24. ஒரு புளிய மரத்தின் கதை 25. 18 அவது அட்சக்கோடு  26. தண்ணீர் 27. புத்தம் வீடு 28. மானுடம் வெல்லும் 29. கோபல்லபுரத்து மக்கள் 30. பசித்த மானுடம் 31. ஏழாம் உலகம் 32. அம்மா வந்தாள் 33. சில நேரங்களில் சில மனிதர்கள் 34. இடைவெளி 35. பாற்கடல் 36. காலவெளி 37. கமலாம்பாள் சரித்திரம் 38. நித்யகன்னி 39. ஜெய ஜெய சங்கர 40. நெடுங்குருதி 41. வன்மம் 42. அபிதா 43. பத்மாவதி சரித்திரம் 44. தலைமுறைகள் 45. பிறகு 46. கடல்புரத்தில் 47. ஒரு கடலோர கிராமத்தின் கதை 48. எட்டுத் திக்கும் மத யானை 49. ரப்பர் 50 கள்ளி  51. தரையில் இறங்கும் விமானங்கள் 52. நிர்வாண நகரம் 53.வானம் வசப்படும் 54. அஞ்சலை 55. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 56. என்பிலதனை வெயில் காயும் 57. உபபாண்டவம்  58. ஸ்ரீமான் சுதர்சனம் 59. குருதிப்புனல் 60.நைலான் கயிறு 61. கூளமாதாரி 62. கூகை 63. மெர்க்குரிப்பூக்கள் 64. பந்தயப்புறா 65. பிரதாப முதலியார் சரித்திரம் 66. வெட்டுப்புலி 67.அகல்யா 68. புதிய மொட்டுக்கள் 69. கருத்த லெப்பை


ஜெயமோகன் ( திண்ணை இணைய இதழ் 2001 ) ல்  2000 ஆண்டு வரை சிறந்த தமிழ் நாவல்கள் என்று அவர் குறிப்பிடும் நாவல்கள்.

 1. விஷ்ணுபுரம் 2. பின் தொடரும் நிழலின் குரல் 3. புயலிலே ஒரு தோணி 4. ஒரு புளிய மரத்தின் கதை 5. மோகமுள் 6. பொய்த்தேவு 7. ஜே ஜே சில குறிப்புகள் 8. தலைமுறைகள் 9. கிருஷ்ணப் பருந்து  10. மானுடம் வெல்லும் 11. பிரதாப முதலியார் சரித்திரம் 12. கமலாம்பாள் சரித்திரம் 13.பத்மாவதி சரித்திரம் 14. ஒரு நாள் 15. வாடிவாசல் 16. அம்மா வந்தாள் 17. கோபல்ல கிராமம் 18. நாகம்மாள் 19. பிறகு 20. நாளை மற்றுமொரு நாளே 21. புத்தம் வீடு 22. பள்ளி கொண்டபுரம் 23. 18 ஆவது அட்சக்கோடு 24. தண்ணீர் 25. தலைகீழ் விகிதங்கள் 26. ஒரு கடலோர கிராமத்தின்    கதை 27.காகித மலர்கள் 28. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன 29. அபிதா 30. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 31.சில நேரங்களில் சில மனிதர்கள்  32. தாகம் 33.சாயாவனம் 34. சூரிய வம்சம் 35. வாசவேஸ்வரம் 36. கடலுக்கு அப்பால் 37.நினைவுப்பாதை 38. பாதையில் படிந்த அடிகள் 39. சிதறல்கள் 40. மற்றும் சிலர் 41. தூர்வை 42. கோவேறு கழுதைகள் 43. கள்ளம் 44. ரப்பர் 45. உபபாண்டவம்

இரண்டாம் பட்டியலில் முக்கியத்துவம் உடைய நாவல்களாக அவர் குறிப்பிடும் நாவல்கள்

1.பசித்த மானுடம் 2. ஜீவனாம்சம் 3. இதயநாதம் 4. புத்ர 5. நித்ய கன்னி 6. வேரோட்டம் 7. செம்பருத்தி 8. மலர் மஞ்சம் 9. அன்பே ஆரமுதே 10. கோபல்லபுரத்து மக்கள் 11. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 12. சட்டி சுட்டது        13. வெக்கை 14. குறத்தி முடுக்கு 15. புணலும் மணலும் 16. உறவுகள் 17. கரைந்த நிழல்கள் 18. கடல்புரத்தில் 19. மிதவை 20. வேள்வித்தீ 21.என்பிலதனை வெயில் காயும்  22. சதுரங்க குதிரை  23. சாய்வு நாற்காலி 24. கூனன் தோப்பு 25.வானம் வசப்படும் 26. மகாநதி  27. என் பெயர் ராமசேஷன்  28. தந்திர பூமி 29. சுதந்திர பூமி 30. பஞ்சும் பசியும் 31. தேநீர் 32. மலரும் சருகும் 33. விசாரணை கமிஷன் 34. அவ்ன் ஆனது 35. இடைவெளி 36. முப்பது வருஷம் 37. நேற்றிருந்தோம் 39.புகை நடுவில் 40. தர்மஷேத்ர 41. மௌனப்புயல் 42. பிளம் மரங்கள் பூத்துவிட்டன 43. குருதிப்புனல் 44. திக்கற்ற பார்வதி 45. ஆத்துக்குப் போகணும்  45. நல்ல நிலம் 46. ஈரம் கசிந்த நிலம் 47. மானாவாரி மனிதர்கள் 48. உப்பு வயல் 49. கொக்கு பூத்த வயல் 50. நிழல் முற்றம்.

எம். வேதசகாயகுமார்  ( நவீனத்திற்குப் பின்னரான தமிழ் நாவல் - மாற்றுவெளி இதழ் 2010 )

    இவர் விமர்சகர். இவர் இந்த கட்டுரையில் குறிப்பிடும் நாவல்கள்

  1. பொய்த்தேவு 2. நாகம்மாள் 3. மண்ணாசை 4. முருகன் ஓர் உழவன் 5. சுந்தரி 6.செம்பருத்தி 7. உயிர்த்தேன்  8. மோகமுள் 9. தலைமுறைகள் 10. மரப்பசு 11. தண்ணீர் 12. நாளை மற்றுமொரு நாளே 13. ஜே ஜே சில குறிப்புகள்
  14. சதுரங்க குதிரை 15. எட்டு திக்கும் மத யானை 16. கிருஷ்ணபருந்து 17. கோபல்ல கிராமம் 18. ரப்பர் 19. விஷ்ணுபுரம்    20. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 21. பின் தொடரும் நிழலின் குரல் 22.மணல்கடிகை 23.பிறகு 24.ஆழி சூழ் உலகு    25. காவல்கோட்டம் 26. கொற்கை 27. மறுபக்கம் 28. புதிய தரிசனங்கள் 29.காடு 30. கொற்றவை 31. உப பாண்டவம்   32. நெடுங்குருதி 33. கருக்கு 34. ஆனந்தாயி 35.இரண்டாம் ஜாமங்களின் கதை 36. யாரும் யாருடனும் இல்லை  37. சிலுவைராஜ் சரித்திரம் 38. கவலை 39. நிலாக்கள் தூர தூரமாக 40. நாடு விட்டு நாடு 41. அஞ்சலை


இந்திரா பார்த்தசாரதி   ( நேஷனல் புக் ட்ரஸ்டுக்காக பரிந்துரைத்த பட்டியல்)

          1. சில நேரங்களில் சில மனிதர்கள் 2. குருதிப்புனல்  3. மோகமுள் 4. நாகம்மாள் 5. ஒரு கடலோர கிராமத்தின் கதை    6. ஒரு புளிய மரத்தின் கதை 7.    18 ஆவது அட்சக்கோடு         8. பத்மாவதி சரித்திரம் 9. பொய்த்தேவு 10. பிரதாபமுதலியார்   சரித்திரம்  11. புத்தம் வீடு   12. சாயாவனம்  13.தலைமுறைகள் 14. தியாக பூமி 15. வாடிவாசல்  16. வேருக்கு நீர்


 மதுரைவாசகன் (சுந்தர்)          (வலைத்தளம்)

          1. கடல்புரத்தில் 2. கம்பானதி 3. உப பாண்டவம் 4. உறுபசி 5. யாமம் 6. நெடுங்குருதி 7. துயில் 8. கொற்றவை      9. விஷ்ணுபுரம் 10. புயலிலே ஒரு தோணி 11. கடலுக்கு அப்பால் 12. பசித்த மானுடம் 13. குறிஞ்சி மலர்     14. ஒரு கடலோர கிராமத்தின் கதை 15.வாடிவாசல் 16. நாளை மற்றுமொரு நாளே 17. கோபல்ல கிராமம்     18. பார்த்திபன் கனவு 19. பொன்னியின் செல்வன் 20. ஆழி சூழ் உலகு 21. நிழல் முற்றம் 22. கல் மரம்    23. ஒரு புளிய மரத்தின் கதை 24. ஜே ஜே சில குறிப்புகள் 25. பொய்த்தேவு 26. கானல் நதி 27. அபிதா 28. வேள்வித்தீ             29. அலைவாய்க்கரையில் 30. நளபாகம் 31. தரையில் இறங்கும் விமானங்கள் 32. நட்டுமை 33. கள்ளிக் காட்டு இதிகாசம்   34. கன்னி மாடம் 35. காவல் கோட்டம்


   சில டாப் 10 பதிவுகள்

   எம்.சுந்தரமூர்த்தி   (வலைத்தளம் )

   1. நாளை மற்றுமொரு நாளே 2. கடல்புரத்தில் 3. ஒரு புளியமரத்தின் கதை 4. மாமிசப் படைப்பு 5.ஏற்கனவே  சொல்லப்பட்ட மனிதர்கள் 6. அம்மா வந்தாள் 7. கோபல்ல கிராமம் 8. எக்ஸிஸ்டன்ஷலிசமும்  ஃபேன்சி பனியனும் 9. வெக்கை    10. ஒரு கடலோர கிராமத்தின் கதை

  பூரி  ( வலைத்தளம்)

  1. சாயாவனம்  2. சில நேரங்களில் சில மனிதர்கள் 3. பொன்னியின் செல்வன் 4. ஜே ஜே சில குறிப்புகள் 5. ஒரு புளிய மரத்தின் கதை 6. காலவெளி 7. இருவர் 8. மானசரோவர் 9. மோகமுள் 10. நாளை மற்றுமொரு நாளே 11. வெக்கை.

  சா. கந்தசாமி ( எல்லாமாகிய எழுத்து கட்டுரை நூலில் (2013) )

   1. சர்மாவின் உயில் 2. புயலிலே ஒரு தோணி 3. ஒரு புளிய மரத்தின் கதை 4. 18 வது அட்சக்கோடு 5. பள்ளிகொண்டபுரம்    6. அவன் ஆனது 7. வானம் வசப்படும்  8. ஒரு கடலோர கிராமத்தின் கதை 9. நல்ல நிலம் 10. யாமம்

               சிறந்த நாவல்கள் பட்டியல் -1 ல் 62 நாவல்களப் பார்த்தோம்அந்த பட்டியலில் மேலும் இரண்டு நாவல்கள் இடம்  பிடிக்கின்றனஅவை

      49ஆவது இடத்தை   அசடு    நாவல் பிடிக்கிறது
      52 ஆவது இடத்தை   நல்ல நிலம்   பிடிக்கிறது

         49. அசடு     -  காஷ்யபன்

       டாப் 10 பரிந்துரைகள் :- 2, நா சுப்ரமணியம், அசோகமித்திரன்

 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8இரா முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், சி மோகன்,   
               நாஞ்சில் நாடன்,       சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், முருகேச பாண்டியன்,
                இரா குருநாதன்,

      52. நல்ல நிலம் -   பாவை சந்திரன்

          டாப் 10 பரிந்துரைகள் :- 2, கற்பக வினாயகம், சா கந்தசாமி
                                   
         பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, கோவை ஞானி, ஜெயமோகன்
இரா முருகன்வெங்கட் சாமினாதன்,  நாஞ்சில் நாடன், பா ராகவன், க பூரணசந்திரன்,சுப்ரபாரதி மணியன்

   65. தியாகபூமி -   கல்கி

          டாப் 10 பரிந்துரைகள் :- 2, இரா முருகன், அசோகமித்திரன்

         பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 4,ஜெயமோகன், க நா சுப்ரமணியம்,  
         வண்ணநிலவன், இந்திரா பார்த்தசாரதி


   66. பாலும் பாவையும்  -  விந்தன்

     டாப் 10 பரிந்துரைகள் :- 2, இரா முருகன், வாலி
                      
     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:3, கோவை ஞானி, பெ.தேவி, இரா குருனாதன்  67. யவனராணி   - சாண்டில்யன்


    டாப் 10 பரிந்துரைகள் :- 2, சிம்புதேவன், தி டாப் டென்ஸ்.காம்
                      
    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 3,ஜெயமோகன், பாலகுமாரன், ஜெ வீரநாதன்


   
                                 இதுவரை டாப் 10 பட்டியலில் 2 பரிந்துரைகள் வரை பெற்ற நாவல்களைப் பார்த்தோம். இனி  முழு  பட்டியலில்   பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில்  அடுத்து வரும் நாவல்களை வரிசைப்படுத்தலாம். சமமான  பரிந்துரைகளை   பெற்ற நாவல்கள் அகர வரிசையில் தர வரிசை படுத்தப் பட்டுள்ளன. டாப் 10 ல் 1 பரிந்துரை பெற்ற நாவல் அந்த வரிசையில் மேலே கொண்டு வரப்பட்டு உள்ளது.

       68. சிலுவைராஜ் சரித்திரம்- ராஜ் கௌதமன்

                  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13, நாஞ்சில் நாடன்( டாப் 10), எஸ்.ராமகிருஷ்ணன், சு வேணுகோபால், ஜெயமோகன்,    சி சரவண கார்த்திகேயன், வேதசகாயகுமார், முருகேச பண்டியன், கொழந்த, வெங்கடரமணன், மா மனிமாறன்,       பூரணசந்திரன், பாவண்ணன், அரங்கசாமி

     69.  யாமம்- எஸ்.ராமகிருஷ்ணன்

     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13, சா கந்தசாமி (டாப் 10) , எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன், நாஞ்சில் நாடன்,    சி சரவண கார்த்திகேயன், சுப்ரபாரதி மணியன், அய்யனார் விஸ்வநாத், முருகேச பண்டியன், கொழந்த,     வெங்கடரமணன், விஜயமகேந்திரன்,ஜெயமோகன்,சுந்தர்

    70.  அபிதா- லா சா ராமாமிர்தம்

        பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13, கோவை ஞானி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இரா முருகன், சி  மோகன் நா சுப்ரமணியம், அய்யனார் விஸ்வநாத்,பெ.தேவி, சுந்தர், முருகேச பாண்டியன், இரா  குருநாதன், ஆர் வி
பிரேம் ரமேஷ்

   71.    கருக்கு பாமா

    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13, இரா முருகன், கோவை ஞானி, எஸ்.ராமகிருஷ்ணன், வெங்கட் சாமினாதன்,   நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், அய்யனார் விஸ்வநாத்வேதசகாயகுமார், பெ.தேவி,   பூரணசந்திரன், இரா குருநாதன், அம்பை

 72. புலிநகக் கொன்றை - பி கிருஷ்ணன்

    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 12, இரா முருகன், எஸ் ராமகிருஷ்ணன், சு வேணுகோபால், ஜெயமோகன்,     நாஞ்சில் நாடன்,சி சரவண கார்த்திகேயன்,         பா ராகவன், கொழந்த, வெங்கட ரமணன், க பூரணசந்திரன், ஆர் வி, அரங்கசாமி        

  73. காடு-- ஜெயமோகன்
 
             பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 11, நாஞ்சில் நாடன்(டாப் 10), எஸ் ராமகிருஷ்ணன், அய்யனார்   விஸ்வநாத், வேதசகாயகுமார், முருகேச பண்டியன், விஜய மகேந்திரன், ஆர் வி, பாவண்ணன்,    அரங்கசாமி,ஜெயமோகன், வேனில் கிருஷ்ணமூர்த்தி.

  74. கம்பா நதி - வண்ணநிலவன்

     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, எஸ் ராமகிருஷ்ணன்(டாப் 10), சி மோகன், ஜெயமோகன், விக்ரமாதித்யன்,    நாஞ்சில் நாடன், நா சுப்ரமணியம், அய்யனார் விஸ்வநாத், சுந்தர், பூரணசந்திரன், பிரேம் ரமேஷ்


      75. கூளமாதாரி - பெருமாள் முருகன்

          பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, எஸ் ராமகிருஷ்ணன், சு வேணுகோபால், ஜெயமோகன், நாஞ்சில் நாடன்   அய்யனார் விஸ்வநாத், முருகேச பாண்டியன், மா மணிமாறன், பூரணசந்திரன், ஆர் வி, அரங்கசாமி

      76. தந்திரபூமி  -  இந்திரா பார்த்தசாரதி

      பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10, இரா முருகன், ஜெயமோகன், விக்ரமாதித்யன், நாஞ்சில் நாடன்,   நா சுப்ரமணியம், பெ.தேவி, கொழந்த , முருகேச பாண்டியன், இரா குருனாதன், அசோகமித்திரன் 

   77. தலைகீழ் விகிதங்கள்நாஞ்சில் நாடன்

                பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10,  ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சி மோகன், நாஞ்சில் நாடன்,   சுந்தர   ராமசாமி, சுப்ர பாரதி மணியன், முருகேச பாண்டியன், இரா குருனாதன், அரங்கசாமி, அய்யனார்  விஸ்வநாத்

       78. ஸீரோ டிகிரி  - சாரு நிவேதிதா

      பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10,  கோவை ஞானி, எஸ் ராமகிருஷ்ணன்,                      சு வேணுகோபால், நாஞ்சில் நாடன்,    பா ராகவன், ஜெயமோகன், அய்யனார் விஸ்வநாத், கொழந்த, பூரணசந்திரன், அம்பை

     79. ஒரு நாள் - நா சுப்ரமணியம்
               
           பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9,  சா கந்தசாமி (டாப் 10), ஜெயமோகன், சி மோகன், வெங்கட் சாமினாதன்,    நா சுப்ரமணியம், சுந்தர ராமசாமி, சுப்ர பாரதி மணியன், இரா குருனாதன், பெருமாள் முருகன்,  
             
    80. கடலுக்கு அப்பால்-    சிங்காரம்

    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, ரமணி( டாப் 10), ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சி மோகன்,   நாஞ்சில் நாடன்  ,பா ராகவன், அய்யனார் விஸ்வநாத், சுந்தர், முருகேச பாண்டியன்.


   81. கொரில்லா- ஷோபா சக்தி


    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9, எஸ் ராமகிருஷ்ணன், சு வேணுகோபால், நாஞ்சில் நாடன், பா ராகவன்,   ஜெயமோகன், அய்யனார் விஸ்வநாத், முருகேச பாண்டியன், விஜயமகேந்திரன், அரங்கசாமி

    82. மரப்பசு  -  தி ஜானகிராமன்

    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9,  எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன்,   அய்யனார் விஸ்வநாத், வேதசகாயகுமார், பெ.தேவி,                         முருகேச பாண்டியன், அம்பை

   83.  உப பாண்டவம்- எஸ்.ராமகிருஷ்ணன்

     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:8, ராஜமார்த்தாண்டன்(டாப் 10), ஜெயமோகன்,எஸ் ராமகிருஷ்ணன்,   நாஞ்சில் நாடன், வேதசகாயகுமார், சுந்தர், ஆர் வி, ஜெ வீரனாதன்      


   84. குள்ளச்சித்தன் சரித்திரம்யுவன் சந்திரசேகர்


     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, நாஞ்சில் நாடன் (டாப் 10)எஸ் ராமகிருஷ்ணன், சு வேணுகோபால், ஜெயமோகன்,   பா ராகவன்,    அய்யனார் விஸ்வநாத், முருகேச பாண்டியன், கொழந்த
   

  85. சதுரங்க குதிரை- நாஞ்சில் நாடன்

                 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8பாவண்ணன்(டாப் 10), கோவை ஞானி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன்,   சுந்தர ராமசாமி, பூரணசந்திரன், அய்யனார் விஸ்வநாத், வேதசகாயகுமார்

  86.  மலரும் சருகும் - டி செல்வராஜ்

            பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, கந்தர்வன்(டாப் 10) , ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வேதசகாய குமார்,    பெ.தேவி, முருகேச பாண்டியன், இரா குருனாதன், அசோகமித்திரன்.

87. இரண்டாம் ஜாமங்களின் கதை- சல்மா

     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, இரா முருகன், நாஞ்சில் நாடன், சி சரவண கர்த்திகேயன், வேதசகாய குமார்,    முருகேச பாண்டியன், வெங்கடரமணன், விஜயமகேந்திரன், மா மணிமாறன்

88. நாய்கள்- நகுலன்

  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன்,                                
  நா சுப்ரமணியம், ஜெயமோகன்,    அய்யனார் விஸ்வநாத், முருகேச பாண்டியன்,          இரா குருனாதன், பிரேம் ரமேஷ்

89. நிழல் முற்றம்பெருமாள் முருகன்

  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8 , எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன்ஜெயமோகன், சுந்தர ராமசாமி,   சுந்தர், ஆர் வி, அம்பை, இரா முருகன்

90. பழையன கழிதலும் -   சிவகாமி

  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8, எஸ் ராமகிருஷ்ணன், வெங்கட் சாமினாதன், விக்ரமதித்யன், சுந்தரராமசாமி,    ஜெயமோகன், பூரணசந்திரன், இரா குருனாதன், பெ.தேவி      


91. செடல்   - இமையம்

      பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8எஸ் ராமகிருஷ்ணன், சு வேணுகோபால், நாஞ்சில் நாடன்,   சுப்ரபாரதி மணியன்ஜெயமோகன், அய்யனார் விஸ்வநாத், முருகேச பண்டியன், மா மணிமாறன்


92. செம்பருத்திதி ஜானகிராமன்


  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8ஜெயமோகன், சி மோகன், பாலகுமாரன், விக்ரமாதித்யன், நாஞ்சில் நாடன்,   அய்யனார் விஸ்வநாத், வேதசகாய குமார், பெ.தேவி


93. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தர ராமசாமி


   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, ராஜமார்த்தாண்டன்( டாப் 10), ஜெயமோகன்,எஸ் ராமகிருஷ்ணன்,    வெங்கட் சாமினாதன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், வேதசகாய குமார்

94. தாகம்----கு சின்னப்ப பாரதி

    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7இரா முருகன்(டாப் 10), ஜெயமோகன், சி மோகன்,     முருகேச பாண்டியன்,   பூரணசந்திரன், நாஞ்சில் நாடன், இரா குருனாதன்

95. மண்ணாசை- சங்கரராம்


   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, அசோகமித்திரன்( டாப்10), க நா சுப்ரமணியம், ஜெயமோகன், வேதசகாயகுமார்,   பெ.தேவி, இரா குருனாதன், பெருமாள் முருகன்

96. மாமிசப் படைப்பு -- நாஞ்சில் நாடன்

   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, சுந்தரமூர்த்தி(டாப் 10), பிரேம் ரமேஷ், ஜெயமோகன், நாஞ்சில் நாடன்,  க நா சுப்ரமணியம், பெ.தேவி, க பூரணசந்திரன்.


97.  தரையில் இறங்கும் விமானங்கள்-- இந்துமதி

     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, இரா முருகன், அய்யனார் விஸ்வநாத், சுந்தர், இரா குருனாதன், ஆர் வி, ஜெயமோகன், பாலகுமாரன்.

98. சட்டி சுட்டது   - ஆர் ஷண்முகசுந்தரம்

    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, ஜெயமோகன், சி மோகன், வெங்கட் சாமினாதன், நாஞ்சில் நாடன், க நா சுப்ரமணியம், பெ.தேவி, இரா குருனாதன்

99. சொல் என்றொரு சொல் -- பிரேம் ரமேஷ்

    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, எஸ் ராமகிருஷ்ணன், சு வேணுகோபால், ஜெயமோகன், நாஞ்சில் நாடன்,  அய்யனர் விஸ்வநாத், ந முருகேச பாண்டியன், கொழந்த

100. ஏறுவெயில்   -  பெருமாள் முருகன்

  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7,  கோவை ஞானி, வெங்கட் சாமினாதன், நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி,  அய்யனார் விஸ்வநாத், க பூரணசந்திரன், அம்பை.

101. வாக்குமூலம்---நகுலன்

 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7, கோவை ஞானி, விக்ரமாதித்யன்,நாஞ்சில் நாடன், சுப்ரபாரதி மணியன் ,ஜெயமோகன்,அய்யனார் விஷ்வநாத், பிரேம் ரமேஷ்

102. என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில் நாடன்

   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,  வெங்கட்(டாப் 10), ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பெ.தேவி, ஆர் வி  பிரேம் ரமேஷ்


103. எக்சிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- - சாரு நிவேதிதா


 பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,  சுந்தரமூர்த்தி (டாப் 10), நாஞ்சில் நாடன், ஜெயமோகன், க பூரண்சந்திரன்,  இரா முருகன், எஸ் ராமகிருஷ்ணன்

104. ஒற்றன்அசோகமித்திரன்

    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, எஸ் ராமகிருஷ்ணன்(டாப் 10), கோவை ஞானி, பா ராகவன், கொழந்த, இரா குருனாதன், ஆர் வி

105. கரமுண்டார் வீடுதஞ்சை பிரகாஷ்


            பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, வெங்கட் சாமினாதன்( டாப் 10), எஸ் ராமகிருஷ்ணன், சு வேணுகோபால்,  நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பூரணசந்திரன்

106. கரிசல்  -  பொன்னீலன்


     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, அறிவுமதி(டாப் 10), எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பெ.தேவி,  . பூரணசந்திரன், இரா குருனாதன்

107. கூனன் தோப்பு--தோப்பில் முகம்மது மீரான்


             பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,பாவண்ணன்(டாப் 10), ஜெயமோகன், வெங்கட் சாமினாதன், நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, க பூரணசந்திரன்

108. தகப்பன் கொடி- அழகிய பெரியவன்


    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, சாரு நிவேதிதா(டாப் 10), எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன்,   அய்யனார் விஸ்வநாத், மா மணிமாறன், சு வேணுகோபால்

109. புதிய தரிசனங்கள் - பொன்னீலன்

           பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, கோபால் ராஜாராம்(டாப் 10), நாஞ்சில் நாடன், ஜெயமோகன்,   வேதசகாயகுமார்,   பூரணசந்திரன், இரா குருனாதன்.

110. மானசரோவர்அசோகமித்திரன்

         
          பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, பூரி (டாப் 10), இரா முருகன், நாஞ்சில் நாடன், சுப்ரபாரதி மணியன்,    ஜெயமோகன், ஆர்வி

111.  ம்  ஷோபா சக்தி


          பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6சாருநிவேதிதா(டாப் 10), நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சு வேனுகோபால்,    முருகேச பாண்டியன், அரங்கசாமி


112 .  யாரும் யாருடனும் இல்லை- உமா மகேஸ்வரி


                                பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6நாஞ்சில் நாடன்(டாப் 10), சு வேணுகோபால், வேதசகாய குமார்,     முருகேச பாண்டியன், பாவண்ணன், அரங்கசாமி


113. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்- எம் ஜி சுரேஷ் 


          பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, நாஞ்சில் நாடன், சி சரவணகார்த்திகேயன், கொழந்த, வெங்கட ரமணன்,   பூரண சந்திரன், பிரேம் ரமேஷ்

114. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்எம் ஜி சுரேஷ்


                              பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6எஸ் ராமகிருஷ்ணன், சு வேணுகோபால், நாஞ்சில் நாடன்,  சுப்ரபாரதிமணியன்,கொழந்த, பூரணசந்திரன்

115. அலைவாய்க் கரையில் - ராஜம் கிருஷ்ணன்

                             பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6பாலகுமாரன், இரா குருனாதன், பூரணசந்திரன், முருகேச பாண்டியன்   சுந்தர், பெ.தேவி

116. ஆனந்தாயி சிவகாமி

              
        பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, கோவை ஞானி, வெங்கட் சாமினாதன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன்வேதசகாய குமார், பெ.தேவி.

117. ஜீவனாம்சம்சி சு செல்லப்பா


                        பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, ஜெயமோகன், சி மோகன், வெங்கட் சாமினாதன்,நாஞ்சில் நாடன்,   நா சுப்ரமணியம், இரா குருனாதன்


118. கள்ளம்தஞ்சை பிரகாஷ்

    
                     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, கோவை ஞானி, ஜெயமோகன், இரா முருகன், நாஞ்சில் நாடன், அய்யனார் விஸ்வநாத், பூரணசந்திரன்

119.குறிஞ்சித் தேன்-   ராஜம் கிருஷ்ணன்

       பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, ஜெயமோகன், பெ.தேவி, இரா குருனாதன், நாஞ்சில் நாடன்,   சுந்தர், பூரணசந்திரன்

120. தேநீர்-   டி செல்வராஜ்

                    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, கோவை ஞானி, ஜெயமோகன், இரா முருகன், நாஞ்சில் நாடன்  வேதசகாயகுமார், இரா குருனாதன்

121. தொலைந்து போனவர்கள்சா கந்தசாமி


                    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, கோவை ஞானி, எஸ் ராமகிருஷ்ணன், நா சுப்ரமணியம், ஜெயமோகன்,    பூரணசந்திரன், இரா குருனாதன்

122. பத்மாவதி சரித்திரம்- . மாதவைய்யா

            
       பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, ஜெயமோகன், நா சுப்ரமணியம், வேதசகாய குமார், பெ.தேவி, ஆர் வி  இந்திரா பார்த்தசாரதி


123. புணலும் மணலும்-   மாதவன்


                    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6ஜெயமோகன், சி மோகன், பாலகுமாரன், நாஞ்சில் நாடன், வேதசகாய குமார்     முருகேச பாண்டியன்


124.  ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா


               பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6இரா முருகன், எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், வெங்கட் சாமினாதன்,  சுப்ரபாரதி மணியன், ஜெ வீரநாதன்


125. ராஸலீலா-   சாருநிவேதிதா

         
     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6, நாஞ்சில் நாடன், சி சரவண கார்த்திகேயன், அய்யனார் விஸ்வநாத்,  வெங்கட ரமணன், விஜயமகேந்திரன்

126. ரெயினீஷ் அய்யர் தெரு   - வண்ணநிலவன்


     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நா சுப்ரமணியம், அய்யனார் விஸ்வநாத்   பூரணசந்திரன், பிரேம் ரமேஷ்

127. வாடாமல்லிசு சமுத்திரம்


           பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6இரா முருகன், கோவை ஞானி, எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன்,     ஜெயமோகன், பூரணசந்திரன்


128.  அலைஓசை  -  கல்கி

          பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5, ஃபோரம்ஹப்.காம் (டாப் 10), ஜெயமோகன், பெ.தேவி, இரா குருனாதன்,  இரா முருகன்

129.   பகடையாட்டம்-   யுவன் சந்திரசேகர்

         பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, நாஞ்சில் நாடன் (டாப் 10), சி சரவணகார்த்திகேயன், ஜெயமோகன் முருகேச பாண்டியன், வெங்கட ரமணன்,

130.  புத்ர - லா சா ராமாமிர்தம்

    
                        பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, கோபால் ராஜாராம் (டாப் 10), ஜெயமோகன், நா சுப்ரமணியம்,  பெ.தேவி, இரா குருனாதன்

131. மெர்க்குரிப்பூக்கள்பாலகுமாரன்

                      பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, பாலகிருஷ்ண பாலாஜி (டாப்-10), ஆர் வி, அய்யனார் விஸ்வநாத்,    ஜெ வீரனாதன், ஜெயமோகன்

132. ஆறுமுகம்இமையம்

       பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5,  நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பெ.தேவி, பூரணசந்திரன், அம்பை


133. கல்லுக்குள் ஈரம்-    சு நல்லபெருமாள்

                  பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5,  நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பா ராகவன், இரா குருனாதன், கோவை  ஞானி


134.  கள்ளி   -  வா மு கோமு

              
            பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, நாஞ்சில் நாடன், அய்யனார் விஸ்வநாத்,             சு வேணுகோபால் முருகேச பாண்டியன், ஆர் வி


135. கவலை-   அழகிய பெரிய நாயகி அம்மாள்


          பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, கோவை ஞானி, வேதசகாயகுமார், பூரணசந்திரன், பிரேம் ரமேஷ்,   வெங்கட் சாமினாதன்


136. கனவுச் சிறை -   தேவகாந்தன்

         பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், சு வேணுகோபால், ஜெயமோகன், முருகேச பாண்டியன்

137.சங்கதி  -  பாமா

         பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, வெங்கட் சாமினாதன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பெ.தேவி, பூரணசந்திரன்


138. சாயத்திரை- சுப்ர பாரதி மணியன்

      பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, எஸ் ராமகிருஷ்ணன், சு வேணுகோபால், இரா முருகன், நாஞ்சில் நாடன்,  ஜெயமோகன்


139. துறைமுகம்-   தோப்பில் முகம்மது மீரான்

      பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, வெங்கட் சாமினாதன், சுந்தர ராமசாமி, சுப்ர பாரதி மணியன், ஜெயமோகன்,    பூரண சந்திரன்


140. நிழல்கள்  -  நகுலன்

        பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, இரா முருகன், சி மோகன், சுந்தர ராமசாமி, அய்யனார் விஸ்வநாத், இரா குருனாதன்141.  பஞ்சும் பசியும்   - தொ மு சி ரகுநாதன்

         பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5, கோவை ஞானி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வேதசகாய குமார், பெ.தேவி


142. பாய்மரக்கப்பல்பாவண்ணன்

          பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  5,  இரா முருகன், எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அய்யனார் விஸ்வநாத்


143. மிதவைநாஞ்சில் நாடன்

        
     பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:5, கோவை ஞானி, ஜெயமோகன், வெங்கட் சாமினாதன்,    நாஞ்சில் நாடன்,    வேதசகாய குமார்           இந்த 143 நாவல்களில் 26 நாவல்கள் தலைசிறந்த நாவல்கள், 117 நாவல்கள் சிறந்த நாவல்கள் ஆகும்.    5 பரிந்துரைகளைப் பெற்ற நாவல்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த பட்டியலை 150      நாவல்கள் என்ற அளவில் முடிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் மேலும் 7 நாவல்களை( 4 பரிந்துரைகள்  பெற்ற      நாவல்கள்)   பட்டியலில்  சேர்க்கலாம். அவை எவை எனப் பார்ப்போம்.


144. இதயநாதம்-   சிதம்பர சுப்ரமணியம்

              பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4,  நா சுப்ரமணியம்(டாப் 10), ஜெயமோகன், சி மோகன், நாஞ்சில் நாடன்

145. இரும்பு குதிரைகள் -- பாலகுமாரன்

    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4, ஃபோரம்ஹப்.காம்(டாப் 10) இரா முருகன், கோவை ஞானி, பா ராகவன்

146. கன்னி  -  ஜெ  பிரான்சிஸ் கிருபா

   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4, சு வேணுகோபால்( டாப் 10), நாஞ்சில் நாடன், அய்யனார் விஸ்வநாத் மணிமாறன்

147. சுதந்திரபூமி -- இந்திரா பார்த்தசாரதி


   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4,  அசோகமித்திரன்(டாப் 10), ஜெயமோகன், நாஞ்சில் நாடன், இரா குருனாதன்


148. தில்லானா மோகனாம்பாள் -   கொத்தமங்கலம் சுப்பு


    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4,  அசோகமித்திரன் (டாப் 10), எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், இரா குருனாதன்

149. தூர்வை   -   சோ தர்மன்


    பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4,  வெங்கட் சாமினாதன்(டாப் 10), கோவை ஞானி, ஜெயமோகன், பூரணசந்திரன்


150. மலர் மஞ்சம் - தி ஜானகிராமன்

   பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:  4,  விக்ரமாதித்யன் (டாப் 10), ஜெயமோகன், நாஞ்சில் நாடன், அய்யனார் விஸ்வநாத்


இந்த 150 நாவலுக்கும் கீழே பல குறிப்பிடத்தக்க நாவல்கள் உள்ளனஅவற்றை நான் தர வரிசைப்  படுத்தவில்லை.  4 பரிந்துரைகள் பெற்ற நாவல்களை குறிப்பிடத்தக்க நாவல்கள் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.

        1. அளம்-- சு தமிழ்ச்செல்வி
        2. அன்பே ஆரமுதேதி ஜானகிராமன்
        3. அறுவடை   -  ஆர் ஷண்முக சுந்தரம்
        4. ஆஸ்பத்திரி  - சுதேசமித்ரன்
        5. ஈரம் கசிந்த நிலம்   -  சி ஆர் ரவீந்திரன்
       6. இருபது வருடங்கள்   -  எம் எஸ் கல்யாண சுந்தரம்
       7. உறுபசி   -  எஸ் ராமகிருஷ்ணன்
       8. கல்மரம்   -  திலகவதி
       9. கங்கணம்பெருமாள் முருகன்
     10. கரித்துண்டு  - மு வரதராசனார்
     11. கருத்த லெப்பைகீரனூர் ஜாகிர் ராஜா
     12. காக்டெயில்சுதேசமித்ரன்
     13. காதுகள்  -  எம் வி வெங்கட் ராம்
     14. கேட்ட வரம்அநுத்தமா
     15. மானாவாரி மனிதர்கள்   -  சூர்யகாந்தன்
     16. மறுபக்கம்   -   பொன்னீலன்
     17. முருகன் ஒரு உழவன்--- காசி வேங்கடரமணி
     18. நதிமூலம்  -  விட்டல் ராவ்
     19. நெஞ்சில் ஒரு முள் - மு வரதராசனார்
     20. நேற்றிருந்தோம்கிருத்திகா
     21. நிலாக்கள் தூர தூரமாக  -  பாரத தேவி
     22. நுண்வெளி கிரணங்கள்  -  சு வேணுகோபால்
     23. ஒன்பது ரூபாய் நோட்டு  - தங்கர் பச்சான்
     24. பாரீசுக்குப் போ  --ஜெயகாந்தன்
     25. பாழி  -     கோணங்கி
     26. போக்கிடம்விட்டல் ராவ்
     27. சடங்குஎஸ் பொ
     28. சங்கம்  -  கு சின்னப்ப பாரதி
     29. சோற்று பட்டாளம்-   சு சமுத்திரம்
     30. சுந்தர காண்டம்  -  ஜெயகாந்தன்
     31. சூரிய வம்சம்  -  சா கந்தசாமி
     32.  உள்ளேயிருந்து சில குரல்கள்கோபி கிருஷ்ணன்
     33. வெள்ளாவி  -  விமல் குழந்தைவேல்
     34. வெட்டுப் புலி  - தமிழ்மகன்
     35. விசாரனை கமிஷன்சா கந்தசாமி

   
          இந்த நாவல்கள் மேலும் சில பரிந்துரைகளைப் பெற்றால்  சிறந்த நாவல்கள் பட்டியலில் இடம் பெறும்.

இதுவரை நாம் பார்த்த இந்த முடிவுகளின் மூலம் தலைசிறந்த நாவல்கள், சிறந்த நாவல்கள்   எவை எவையென பார்த்தோம். இந்த முடிவுகள் மூலம் இந்த நாவல்களை நான் தர வரிசை படுத்தியுள்ளேன்.   இந்த தரவரிசை நிரந்தரமானது என்று சொல்ல முடியாது. மேலும் சில பரிந்துரைகள் கிடைக்கும் போது  இந்த வரிசையை மீண்டும் ஆய்வு செய்யலாம். நாவல் எழுதும் பல எழுத்தாளர்கள் அவர்களின் கருத்தை
  வெளியிட்டால்  அது இந்த முயற்சிக்கு வெற்றியைத் தரும். இந்த தொடர் கட்டுரைக்கு இதில் நான் குறிப்பிட்ட   பல எழுத்தாளர்களுக்கும், சிலிக்கான் ஷெல்ஃப் இணைய தளத்தை நடத்தி வரும் ஆர் வி க்கும் என் நன்றிகள்