என். செல்வராஜ்
வருடந்தோறும் பல நாவல்கள்
வெளியாகின்றன. அவற்றுள் சில நாவல்கள் அந்த ஆண்டில் பரிசினைப் பெறுகின்றன. பரிசினைப் பெறாத நாவல்கள் சிறந்த நாவல்கள் இல்லை என்பது இதன் பொருளல்ல. பரிசு பெறாத பல நாவல்கள் வாசகர் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன.
சாகித்ய அகாடமி ஒவ்வோர்
ஆண்டும் விருது வழங்கி வருகிறது. அந்த விருது பற்றிய சில விமர்சனங்கள் இருந்த போதிலும் விருது தருவதையே
குறை சொல்ல முடியாது. மத்திய அரசால் வழங்கப்படும்
இலக்கிய விருது
சாகித்ய அகாடமி விருது.
சாகித்ய அகாடமி விருது
இது வரை சாகித்ய அகாடமி விருது
பெற்ற நாவல்களைப் பார்க்கலாம்.
நாவல் எழுத்தாளர் ஆண்டு
1. அலை ஓசை --- கல்கி 1956
2. அகல் விளக்கு -
மு. வரதராசன் 1961
3. வேங்கையின் மைந்தன் அகிலன் 1963
4. சமுதாய வீதி
நா பார்த்தசாரதி 1971
5. சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் 1972
6. வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் 1973
7. குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி 1977
8. சேரமான் காதலி கண்ணதாசன் 1980
9. ஒரு காவிரியைப் போல லக்ஷ்மி 1984
10. வேரில் பழுத்த பலா சு சமுத்திரம் 1990
11. கோபல்லபுரத்து மக்கள் கி ராஜநாராயணன் 1991
12. குற்றாலக் குறிஞ்சி கோவி மணிசேகரன் 1992
13. காதுகள் எம்.வி.வெங்கட்ராம் 1993
14. புதிய தரிசனங்கள் பொன்னீலன் 1994
15. வானம் வசப்படும் பிரபஞ்சன் 1995
16. சாய்வு நாற்காலி தோப்பில் முகம்மது மீரான்
1997
17. விசாரனைக் கமிஷன் சா கந்தசாமி 1998
18. சுதந்திர தாகம் சி சு செல்லப்பா 2001
19. கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து 2003
20. கல் மரம் திலகவதி 2005
21. இலையுதிர் காலம் நீல பத்மநாபன் 2007
22. காவல் கோட்டம்
சு வெங்கடேசன்
2011
23. தோல்
டி செல்வராஜ் 2012
24. கொற்கை ஜோ டி குரூஸ் 2013
25. அஞ்ஞாடி பூமணி 2014
ஞானபீடம் பரிசு பெற்ற நாவல்
சித்திரப் பாவை அகிலன் 1975
தமிழ் வளர்ச்சித்
துறையின் பரிசு பெற்ற நாவல்கள்
நாவல் எழுத்தாளர் ஆண்டு
1. சேரன் குலக்கொடி முதல் பரிசு கோவி மணிசேகரன்
1971-1972
2. ஆயிரம் வாசல் இதயம் முதல் பரிசு தாமரை மணாளன் 1971-1972
3. நெஞ்சே நினை இரண்டாம் பரிசு சுகி சுப்ரமணியம்
1971-1972
4. கரிசல் முதல் பரிசு பொன்னீலன் 1976
5. மண்ணின் மணம் முதல் பரிசு வாசவன் 1977
6. பிராமணன் இங்கே இரண்டாம் பரிசு பண்ணன் 1977
7. படிகள் முதல் பரிசு கமலா சடகோபன் 1978
8. கனாக் கண்டேன் தோழி இரண்டாம் பரிசு ஜே எம் சாலி 1978
9. தாயகம் முதல் பரிசு பொன்.சௌரிராஜன் 1979
10. நச்சுவளையம் இரண்டாம் பரிசு இராம பெரிய கருப்பன் ( தமிழண்ணல்) 1979
11. ஊருக்குள் ஒரு புரட்சி முதல் பரிசு சு சமுத்திரம் 1980
12. கோடுகளும் புள்ளிகளும் இரண்டாம் பரிசு மாரி அறவாழி 1980
13. சோழ இளவரசன் கனவு முதல் பரிசு விக்கிரமன் 1981
14. அந்தப்புரம் இரண்டாம் பரிசு தாமரை மணாளன் 1981
15. சொன்னது நீதானா முதல் பரிசு சி ஏ நடராஜன் 1982
16. அன்னை பூமி இரண்டாம் பரிசு இராஜலட்சுமி இராமமூர்த்தி ( கோமகள் )
1982
17. சாயங்கால மேகங்கள் முதல் பரிசு நா பார்த்தசாரதி 1983
18. நரசிம்மவர்மனின் நண்பன் இரண்டாம் பரிசு டாக்டர் பூவண்ணன் 1983
19. ஜய ஜய சங்கர முதல் பரிசு ஜெயகாந்தன் 1984
20. காஞ்சிக் கதிரவன் இரண்டாம் பரிசு கோவி மணிசேகரன் 1984
21. சுந்தரியின் முகங்கள் முதல் பரிசு செ.யோகநாதன் 1985
22. ஒற்றன் இரண்டாம் பரிசு அசோகமித்திரன் 1985
23. மயிலுக்கு ஒரு கூண்டு முதல் பரிசு ஏ நடராஜன் 1986
24. கோதை சிரித்தாள் இரண்டாம் பரிசு க நா சுப்ரமணியம் 1986
25. சுழலில் மிதக்கும் தீபங்கள் முதல் பரிசு ராஜம் கிருஷ்ணன் 1987
26. தேரோடும் வீதி இரண்டாம் பரிசு நீல பத்மநாபன்
1987
27. இங்கிருப்பது அதுதான் முதல் பரிசு என் ஆர் தாசன் 1988
28. அந்திநேரத்து விடியல்கள் இரண்டாம்
பரிசு வாசவன் 1988
29. ஆடக சுந்தரி முதல் பரிசு மாரி 1989
30. சாதிகள் இல்லையடி பாப்பா இரண்டாம் பரிசு அம்சா தனகோபால் 1989
31. சுகஜீவனம் முதல் பரிசு பாலகுமாரன்
1990
32. வைரமலர் இரண்டாம் பரிசு ரமணி சந்திரன் 1990
33. சிதறல்கள் மூன்றாம் பரிசு பாவண்ணன் 1990
34. யாருக்காக உலகம் முதல் பரிசு மூவேந்தர் முத்து 1991
35. மாவீரன் ஷெர்ஷா இரண்டாம் பரிசு பொன் பத்மநாபன் 1991
36. பறளியாற்று மாந்தர் மூன்றாம் பரிசு மா அரங்கநாதன் 1991
37. பெருந்துறை நாயகன் முதல் பரிசு வே கபிலன் 1992
38. சசிகலா இரண்டாம் பரிசு ஆருத்ரா பாலன்
1992
39. தனியாக ஒருத்தி மூன்றாம் பரிசு செ.யோகநாதன்
1992
40. சதுரங்க குதிரை முதல் பரிசு நாஞ்சில் நாடன் 1993
41. கூனன் தோப்பு இரண்டாம் பரிசு தோப்பில் முகம்மது மீரான் 1993
42. குறிஞ்சாம் பூ மூன்றாம் பரிசு கொ. மா.
கோதண்டம் 1993
43. தெய்வம் காத்திருக்கிறது முதல் பரிசு பி எஸ் ஆர் ராவ் 1994
44. மரணத்தின் நிழலில் இரண்டாம் பரிசு செ கணேசலிங்கன் 1994
45. மானுடப் பண்ணை மூன்றாம் பரிசு தமிழ் மகன் (பா வெங்கடேசன்) 1994
46. குடிசையும் கோபுரமும் முதல் பரிசு டாக்டர் சி ராமகிருஷ்ணன் 1995
47. உப்பு வயல் இரண்டாம் பரிசு ஸ்ரீதர கணேசன் 1995
48. சேதுபதியின் காதலி மூன்றாம் பரிசு டாக்டர் எஸ் எம் கமால் 1995
49.ஒன்பது ரூபாய் நோட்டு முதல் பரிசு தங்கர் பச்சான் 1996
50. சில பாதைகள் சில பயணங்கள் இரண்டாம் பரிசு க நடராஜன் 1996
51. களரி மூன்றாம் பரிசு ப ஜீவகாருண்யன்
1996
52. கனவுக் கிராமம் முதல் பரிசு அறிவியல் நம்பி 1997
53. செம்பியன் தமிழவேள் இரண்டாம் பரிசு புலவர் செந்தமிழ் சேய் 1997
54. நீதியின் காவலர் நீதிபதி நீலமேகம் மூன்றாம் பரிசு
திருக்குறள் சி ராமகிருஷ்ணன்
1997
55. மறுபடியும் பொழுது விடியும் முதல் பரிசு ஜோதிர்லதா கிரிஜா 1999
56. செந்நெல் இரண்டாம் பரிசு சோலை சுந்தர பெருமாள் 1999
57. என் பெயர் ரங்கநாயகி மூன்றாம் பரிசு இந்திரா சௌந்திரராஜன் 1999
58. ரத்த உறவு யூமா வாசுகி 2000
59. தகப்பன் கொடி அழகிய பெரியவன் 2001
60. மாணிக்கம் சு தமிழ்ச்செல்வி 2002
61. ஆழி சூழ் உலகு ஜோ டி குரூஸ் 2004
62. கூகை சோ தர்மன் 2005
63. நீர்வலை எஸ் ஷங்கரநாராயணன் 2006
64. நதியின் மடியில் ப ஜீவகாருண்யன் 2007
65. நெருப்புக்கு ஏது உறக்கம் எஸ்ஸார்சி (எஸ்
ராமச்சந்திரன்) 2008
66. ஏழரைப் பங்காளி வகையறா எஸ் அர்ஷியா 2009
67. தோல் டி
செல்வராஜ் 2010
68. மூனுவேட்டி அரு மருத்துரை 2011
தமிழ் பல்கலைக் கழக (இராஜ ராஜன் விருது ) பெற்ற நாவல்கள்
1. சுந்தரகாண்டம் ஜெயகாந்தன் 1986
2. வேங்கை வனம் கோவி மணிசேகரன் 1988
3. தென்பாண்டிச் சிங்கம் மு கருணாநிதி 1990
திருப்பூர் தமிழ் சங்கம் இலக்கிய விருதுகள்
திருப்பூர் தமிழ் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் நாவல், கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும்
பல துறைகளில் சிறந்த படைப்புகளுக்கு பரிசு
வழங்கி வருகிறது. தமிழகத்தில் இதுவரை வேறு எந்த அமைப்பும் இவ்வளவு
பரிசுகள்
வழங்குவதில்லை.இலக்கிய விருதுகள் 1994 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்ற்றுள் நாவலுக்காக விருது பெற்ற படைப்புகளைப் பார்ப்போம்.
நாவல் எழுத்தாளர் ஆண்டு
1. விசாரணைக் கமிஷன் சா கந்தசாமி 1994
2. மஞ்சுவெளி சி ஆர் ரவீந்திரன் 1994
3. குற்றவாளி ம ராஜேந்திரன்
1994
4. கூண்டினுள் பட்சிகள் நீல பத்மநாபன் 1995
5. பாய்மரக் கப்பல் பாவண்ணன் 1995
6. வரப்புகள் பூமணி 1995
7. தூர்வை சோ தர்மன் 1996
8. யானை குதிரை ஒட்டகம் ஞானசேகரன் ஐ ஏ எஸ்
1996
9. ஒன்பது ரூபாய் நோட்டு தங்கர் பச்சான் 1996
10. நுண்வெளி கிரணங்கள் சு வேணுகோபால் 1997
11. பூக்கள் நாளையும் மலரும் பிரபஞ்சன் 1997
12. ஆத்தங்கரை ஓரம் வெ இறையன்பு ஐ ஏ எஸ் 1997
13. எட்டுத் திக்கும் மத யானை நாஞ்சில் நாடன் 1998
14. நல்ல நிலம்
பாவை சந்திரன் 1998
15. செவ்வந்தி பாரதி பாலன் 1998
16. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் எம் ஜி சுரேஷ் 1999
17. ஆறுமுகம் இமையம் 1999
18. எனக்கென்றொரு முகம் சுப்ரா( சுப்புலட்சுமி
நடராஜன்) 1999
19. பொழுதுக்கால் மின்னல் கா சு வேலாயுதம் 2000
20. தொட்ட அலை தொடாத அலை எஸ் சங்கர நாராயணன் 2000
21. ரத்த உறவு யூமா வாசுகி
2000
22. பொட்டல் எஸ் கணேசராஜ் 2001
23. காரணங்களுக்கு அப்பால் ஐசக் அருமைராஜன் 2001
24. கனவு மெய்ப்படும்
எஸ்ஸார்சி 2001
25. கோரை கண்மனி குணசேகரன்
2002
26. பொதுகோ தேவதை ஜோசப் அதிரியின் ஆண்ட்டோ
2002
27. நாளைய மனிதர்கள் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன் 2003
28. மின்சார வேர்கள் சி குழந்தைவேலு 2003
29. சோளகர் தொட்டி ச பாலமுருகன் 2004
30. அரசூர் வம்சம் இரா முருகன் 2004
31. மெல்லினம் பா ராகவன் 2004
32. காதல் பூட்டு எஸ் உதயசெல்வன் 2005
33. நஞ்சை மனிதர்கள் சோலை சுந்தர பெருமாள்
2006
34. வட்டத்துள் வத்ஸலா 2006
35. மெல்லக் கனவாய் பழங்கதையாய் பா விசாலம் 2007
36. கீழைத்தீ பாட்டாளி 2007
37. படுகளம் முனைவர் ப க பொன்னுசாமி 2008
38. பனையண்ணன் ஆர் எஸ் ஜேக்கப் 2009
39. மலைசாமி வளவதுரையன் 2009
40. மறுபக்கம் பொன்னீலன் 2010
41. உருள் பெருந்தேர் கலாப்ரியா 2011
42.
6174 க சுதாகர் 2012
திருமதி ரங்கம்மாள் பரிசு
கஸ்தூரி
சீனுவாசன் அறக்கட்டளை திருமதி ரங்கம்மாள் பரிசை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சிறந்த நாவலுக்கு வழங்கி வருகிறது. 1983 ல் பரிசுத் தொகை ரூ 10000/
இப்போது பரிசுத் தொகை ரூ 25000/ .
பரிசு பெற்ற நாவல்களின்
பட்டியல்.
நாவல் எழுத்தாளர் ஆண்டு
1. நம்பிக்கைகள் ர சு நல்லபெருமாள் 1983
2. பாலங்கள் சிவசங்கரி
1985
3. செம்பியர் திலகம் ஜி ஏ வடிவேலு 1987
4. ஏசுவின் தோழர்கள் இந்திரா பார்த்தசாரதி
1989
5. மகாநதி பிரபஞ்சன் 1991
6. ஈரம் கசிந்த நிலம் சி ஆர் ரவீந்திரன் 1993
7. சதுரங்க குதிரை நாஞ்சில் நாடன்
1995
8. ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது
வே சபாநாயகம்
1995
9. சின்ன சின்ன முற்றங்கள்
மோகனன் 1997
10. நல்ல நிலம் பாவை சந்திரன் 1999
11. பிணங்களின் முகங்கள் சுப்ர பாரதி மணியன் 2001
12. போகிற வழி முகிலை ராச பாண்டியன் 2005
13. இலையுதிர் காலம் நீல பத்மநாபன் 2007
14. மரக்கால் சோலை சுந்தர பெருமாள் 2009
15. வெட்டுப் புலி தமிழ் மகன் 2011
16. ஆளண்டா பட்சி பெருமாள் முருகன்
2013
தமிழ் இலக்கிய தோட்டம் (கனடா ) நாவலுக்கு 2005 முதல் பரிசு வழங்கி வருகிறது.
பரிசு பெற்ற நாவல்கள்.
நாவல் எழுத்தாளர் ஆண்டு
1. கூகை சோ தர்மன் 2005
2. ஆழி சூழ் உலகு ஜோ டி குரூஸ் 2006
3. யாமம் எஸ் ராமகிருஷ்ணன் 2007
4. வார்ஸாவில் ஒரு கடவுள் தமிழவன் 2008
5. கொற்றவை ஜெயமோகன் 2009
6. காவல் கோட்டம் சு வெங்கடேசன் 2010
7. பயணக்கதை யுவன் சந்திரசேகர் 2011
8. அஞ்சலை கண்மனி குணசேகரன் 2012
9. ஜின்னாவின் டைரி கீரனூர் ஜாகிர் ராஜா 2013.
ஆனந்த விகடன்
விருதுகள்
ஆனந்த விகடன் நாவல்,
சிறுகதை, கவிதை, கட்டுரை
மற்றும் பல
விருதுகளை 2007 முதல் வழங்கி வருகிறது. அதில் நாவலுக்காக விருது பெற்ற
நாவல்களைப்
பார்க்கலாம்.
நாவல் எழுத்தாளர் ஆண்டு
1. கன்னி ஜெ பிரான்சிஸ் கிருபா 2007
2. காவல்கோட்டம் சு வெங்கடேசன்
2008
3. துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா
2009
4. மில் ம காமுத்துரை
2010
5. ஆண்பால் பெண்பால் தமிழ் மகன் 2011
6. அஞ்ஞாடி பூமணி 2012
7. குன்னிமுத்து குமாரசெல்வா 2013
8. மிளிர்கல் இரா முருகவேள் 2014
சுஜாதா விருதுகள்
சுஜாதா அறக்கட்டளையும்
உயிர்மை மாத இதழும் இணைந்து
வழங்கும் விருது. இதில் விருது
பெற்ற நாவல்கள்.
நாவல் எழுத்தாளர் ஆண்டு
1. மில் ம காமுத்துரை 2010
2. கொற்கை ஜோ டி குரூஸ் 2011
3. உப்பு நாய்கள் லக்ஷ்மி சரவணக்குமார் 2012
4. வனசாட்சி தமிழ் மகன் 2013
5. விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம் சி மோகன் 2014
இலக்கியச் சிந்தனை விருது பெற்ற நாவல்கள்
1. மூன்றாம் உலகப் போர் வைரமுத்து
2. வண்ணமுகங்கள் விட்டல் ராவ்
3. கரிப்பு மணிகள் ராஜம் கிருஷ்ணன்
4. மானுடம் வெல்லும் பிரபஞ்சன்
5. கடல்புரத்தில் வண்ணநிலவன்
6. மெர்க்குரிப் பூக்கள் பாலகுமாரன்
7. பிறகு பூமணி
8. போக்கிடம் விட்டல்
ராவ்
9. மானாவாரி மனிதர்கள் சூர்யகாந்தன்
10. துறைமுகம்
தோப்பில் முகம்மது மீரான்
11. 18 ஆவது அட்சக்கோடு அசோகமித்திரன்
12. சேற்றில் மனிதர்கள் ராஜம் கிருஷ்ணன்
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளைப் பரிசு பெற்ற நாவல்கள்
1. எங்கே போகிறோம் அகிலன்
2. துளசி மாடம் நா பார்த்த சாரதி
3.
யாகசாலை கோவி மணிசேகரன்
4. இரும்புக் குதிரைகள் பாலகுமாரன்
5. மணிக்கொடி ஜோதிர்லதா கிரிஜா
6. உணர்வுகள் உறங்குவதில்லை ர சு நல்லபெருமாள்
மற்ற பரிசுகள் பெற்ற நாவல்கள்
1. பெண்குரல் - ராஜம் கிருஷ்ணன் கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது
2. மனத்துக்கு இனியவள் - ஆர் சூடாமணி கலைமகள் நாராயணசாமி ஐயர்
விருது
3. மணல் வீடு - அநுத்தமா கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது
4. ஆதார ஸ்ருதி - ரஸவாதி கலைமகள் நாராயணசாமி
ஐயர் விருது
5. பெண் - அகிலன் கலைமகள் நாவல் போட்டி முதல் பரிசு
6. கடலுக்கு அப்பால்- ப சிங்காரம் கலைமகள் நாவல் போட்டி முதல் பரிசு
7. அந்திமாலை - அம்பை கலைமகள் நாவல் போட்டி இரண்டாம் பரிசு
8. அழகின் யாத்திரை - ரஸவாதி அமுதசுரபி நாவல் பரிசு
9. திருச்சிற்றம்பலம் ஜெகசிற்பியன் ஆனந்த விகடன் வரலாற்று நாவல்
போட்டி பரிசு
10. மனிதன் ஏ எஸ் ராகவன் விகடன் வெள்ளி விழா நாவல்
போட்டி பரிசு
11. சோழ நிலா மு மேத்தா விகடன் பொன்விழா முதல் பரிசு
12. முள்ளும் மலரும் -
உமா சந்திரன் - கல்கி நாவல் போட்டியில் முதல் பரிசு
13. கல்லுக்குள் ஈரம்-
ர சு நல்லபெருமாள் கல்கி வெள்ளி விழா இரண்டாம்
பரிசு
14. மணக்கோலம் பி வி ஆர் கல்கி
வெள்ளி விழா மூன்றாம் பரிசு
15. மணிக்கொடி ஜோதிர்லதா கிரிஜா கல்கி பொன் விழா முதல் பரிசு
16. உப்பு வயல் ஸ்ரீதர கணேசன் நியூ செஞ்சுரி பதிப்பகமும்
கலை
இலக்கிய பெருமன்றமும் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற
நாவல்.
இந்த பட்டியலில்
இடம்பெறாத சில பரிசுகள் , விருதுகள் விடுபட்டிருக்கலாம்.
அவற்றை தெரிவித்தால்
அவற்றை பட்டியலில் சேர்த்துக் கொள்ளமுடியும்.
E mail :-
enselvaraju@gmail.com