Monday 7 November 2016

சிறந்த பழைய திரைப் பாடல்கள்

என் செல்வராஜ்


              தமிழில் முதல் திரைப்படம்  " கீசக வதம் " 1917 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தை எடுத்தவர் நடராஜ முதலியார். இது தான் தமிழில்
வந்த முதல் மௌனப்படம். தமிழில் வந்த முதல் பேசும் படம் காளிதாஸ் 21.10.1931 ல் வெளிவந்தது. இந்த படத்தை இயக்கியவர் எச்.எம்.ரெட்டி. ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட படங்கள் மிக அதிகமான பாடல்களைக் கொண்டிருந்தன. பாடல்களைப் பாடக்கூடிய நடிகர்களே கதாநாயகர்களாகவும்  நடித்தனர். எம்.கே.டி. பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், பி யூ சின்னப்பா ஆகியோர் புகழ் பெற்றவர்கள். 1944 ல் வெளிவந்த எம் கே டி பாகவதர் நடித்த  "ஹரிதாஸ் " வரலாறு காணாத மூன்று தீபாவளிகளைக் கண்டது. 1945ல் வெளிவந்த  டி ஆர் மகாலிங்கம் நடித்த" ஸ்ரீ வள்ளி " 365 நாட்கள் ஓடி சாதனை  படைத்ததுபல இசை அமைப்பாளர்களால் தமிழ்ப் படங்களின் பாடல்கள் இசையமைக்கப்பட்டு வெளியாயின. எஸ் வி வெங்கட் ராமன்ஆர்.சுதர்சனம்,   ஜி ராமநாதன், கே.வி.மகாதேவன், சி ஆர் சுப்பராமன், எஸ் எம் சுப்பையா நாயுடு, விஸ்வநாதன் ராமமூர்த்தி, டி ஆர் பாப்பாஎம் எஸ் விஸ்வநாதன், வி.குமார் போன்ற இசை அமைப்பாளர்கள் மெல்லிசையை நமக்கு தந்தனர். பல பாடல்கள் இன்றும் நமது காதுகளில்  ஒலித்துக்கொண்டிருப்பதன் காரணமே இவர்களின் அருமையான இசையும் தெளிவான வரிகளும் தான் என்றால் அது மிகையல்ல. இதன் பின்  இளையராஜா, சங்கர் கணேஷ் இசை அமைக்க வந்தனர்.இளையராஜா இசை அமைத்த அன்னக்கிளிக்கு பிறகு திரை இசை பழைய மெல்லிசையிலிருந்து   மாறிவிட்டது. 1977 ஆம்  வருடம் வரையிலான படங்களின் பாடல்களில் இருந்து 200 பாடல்களை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு  இருக்கிறேன்மெல்லிசைப் பாடல்கள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலுக்கு வாமனன் எழுதிய "திரை இசைக் களஞ்சியம்", சிவன் எழுதிய "நமது சினிமா", யூ டியூப் இணைய தளம்  ஆகியவை பெரிதும் உதவின. இந்த கால கட்டத்தில் பல சோகப் பாடல்கள் வந்திருந்தாலும் ஒரு சில பாடல்களையே இதில் சேர்த்திருக்கிறேன். தத்துவப் பாடல்கள்  சில சேர்க்கப்பட்டுள்ளனஅனைத்துப் பாடல்களும் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. பாட்டு இடம் பெற்ற  படங்கள், படம் வெளியான ஆண்டு ஆகியவற்றையும்  குறிப்பிட்டு இருக்கிறேன்.  



1. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே - களத்தூர் கண்ணம்மா ( 1960)

2. அம்மம்மா தம்பி என்று நம்பி - ராஜபார்ட் ரங்கதுரை ( 1973 )

3. அமுதை பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம் ( 1957 )

4. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - பட்டணத்தில் பூதம் ( 1967 )

5. அமைதியான நதியினிலே ஓடம் - ஆண்டவன் கட்டளை ( 1964 )

6. அழகிய மிதிலை நகரினிலே - அன்னை ( 1962 )

7. அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா ( 1962 )

8. அத்தைமடி மெத்தையடி - கற்பகம் ( 1963 )

9. அழகான பொண்ணு நான் - அலிபாபாவும் 40 திருடர்களும் ( 1956 )

10. அவளுக்கென்ன அழகிய முகம் - சர்வர் சுந்தரம் ( 1964 )

11. அன்னையும் தந்தையும் தானே - ஹரிதாஸ் ( 1944 )

12. அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை - அன்னையின் ஆணை ( 1958 )

13. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா - மஞ்சள் மகிமை ( 1959 )

14. ஆடாத மனமும் ஆடுதே - களத்தூர் கண்ணம்மா ( 1960 )

15. ஆடி அடங்கும் வாழ்க்கையடா - நீர்க்குமிழி ( 1965 )

16. ஆசையே அலை போலே - தை பிறந்தால் வழி பிறக்கும் ( 1958 )

17. ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண் ( 1969 )

18. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ - கை கொடுத்த தெய்வம்  ( 1964 )

19. ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - தங்கப் பதுமை ( 1959 )

20. ஆறோடும் மண்ணில் இங்கு நீரோடும் - பழனி  (1965 )

21. ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை ( 1964 )

22. ஆஹா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் ( 1957)

23. இந்திய நாடு என் வீடு - பாரத விலாஸ் ( 1973 )

24. இந்த மன்றத்தில் ஓடி வரும் - போலீஸ்காரன் மகள் ( 1962 )

25. இயற்கை என்னும் இளைய கன்னி - சாந்தி நிலையம் ( 1969 )

26. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப்புதல்வன் ( 1972 )

27. இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - திருவிளையாடல் ( 1965 )

28. இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா - இருவர் உள்ளம் ( 1963 )

29. இது மாலை நேரத்து மயக்கம் - தரிசனம் ( 1970 )

30. இரவும் நிலவும் வளரட்டுமே - கர்ணன் ( 1964 )

31. இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே- வீரபாண்டிய கட்டபொம்மன் ( 1959 )

32. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் ( 1964 )

33. உனக்காக எல்லாம் உனக்காக - புதையல் ( 1957 )

34. உன் கண்ணில் நீர் வழிந்தால் - வியட்நாம் வீடு ( 1970 )

35. உன்னை சொல்லி குற்றமில்லை - குலமகள் ராதை ( 1963 )

36. உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல -இதயக்கமலம் ( 1965 )

37. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - அவளுக்கென்று ஓர் மனம் ( 1971 )

38. எங்குமே ஆனந்தம் ஆனந்தமே - பலே ராமன் ( 1957 )

39. எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ - கணவனே கண்கண்ட  
    தெய்வம் ( 1955 )

40. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் - மலைக் கள்ளன் ( 1954 )

41. என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - எல்லோரும் இந்நாட்டு மன்னர்  
     ( 1960 )

42. என்னருகே நீ இருந்தால் - திருடாதே ( 1961 )

43. ஏடு தந்தானடி தில்லையிலே - ராஜ ராஜ சோழன் ( 1973 )

44. ஏரிக்கரையின் மேலே போறவளே - முதலாளி ( 1957 )

45. ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே - பிள்ளைக் கனியமுது ( 1958 )

46. ஏன் பிறந்தாய் மகனே - பாகப் பிரிவினை ( 1959 )

47. ஒண்ணுமே புரியலே உலத்திலே - குமார ராஜா  ( 1961 )

48. ஒரு நாள் யாரோ - மேஜர் சந்திரகாந்த் ( 1966 )

49. ஒரு நாள் போதுமா - திருவிளையாடல் ( 1965 )

50. ஒளி மயமான எதிர்காலம் என் - பச்சை விளக்கு ( 1964 )

51. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா - மக்களைப் பெற்ற மகராசி (1957)

52. ஓ ரசிக்கும் சீமானே - பராசக்தி (1952 )

53. ஓராயிரம் பார்வையிலே - வல்லவனுக்கு வல்லவன் ( 1965 )

54. ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா - ராணி சம்யுக்தா ( 1962 )

55. கடவுள் அமைத்து வைத்த மேடை - அவள் ஒரு தொடர்கதை (1974)

56. கண்ணும் கண்ணும் - வஞ்சிக்கோட்டை வாலிபன் ( 1958 )

57. கண்கள் இரண்டும் இன்று - மன்னாதி மன்னன் ( 1960 )

58. கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - பஞ்சவர்ணக்கிளி ( 1965 )

59. கண்ணன் பிறந்தான் - பெற்றால் தான் பிள்ளையா ( 1965 )

60. கண்ணில் தோன்றும் காட்சியாவும் - சுகம் எங்கே ( 1954 )

61. கனிய கனிய மழலை பேசும் - மன்னாதி மன்னன் ( 1960 )

62. கங்கை கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் - வானம்பாடி ( 1963 )

63. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா - ஆலயமணி ( 1962 )

64. கல்யாண சமையல் சாதம் - மாயா பஜார் ( 1957 )

65. கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் - மீண்ட சொர்க்கம் ( 1960 )

66. காலங்களில் அவள் வசந்தம் - பாவ மன்னிப்பு ( 1961 )

67. காலமிது காலமிது - சித்தி ( 1966 )

68. காற்றினிலே வரும் கீதம் - மீரா ( 1945 )

69. காசேதான் கடவுளப்பா - சக்கரம் ( 1968 )

70. காற்றுவெளியிடை கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன் ( 1961 )

71. காதலின் பொன்வீதியில் - பூக்காரி ( 1973 )

72. காத்திருந்த கண்களே - மோட்டார் சுந்தரம் பிள்ளை ( 1966 )

73. காகித ஓடம் கடலலை மீது - மறக்க முடியுமா ( 1966 )

74. காவியமா நெஞ்சில் ஓவியமா - பாவை விளக்கு ( 1960 )

75. காதோடு தான் நான் பாடுவேன் - வெள்ளி விழா ( 1972 )

76. கிருஷ்ணா முகுந்தா முராரே - ஹரிதாஸ் ( 1944 )

77. குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே - மரகதம்  ( 1959 )

78. குங்குமப் பொட்டு குலுங்குதடி - இது சத்தியம் ( 1963 )

79. குயிலாக நான் இருந்தென்ன - செல்வமகள் ( 1967 )

80. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று - குழந்தையும் தெய்வமும் ( 1965 )

81. குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் - ரத்தக்கண்ணீர் ( 1954 )

82. கூவாமல் கூவும் கோகிலம் - வைரமாலை ( 1954 )

83. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா -தெய்வ மகன் ( 1969 )

84.கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் - கைதி கண்ணாயிரம் ( 1960 )

85. கொடி அசைந்ததும் காற்று வந்ததா - பார்த்தால் பசி தீரும் ( 1962 )

86. சட்டி சுட்டதடா கை விட்டதடா  - ஆலயமணி ( 1962 )

87. சத்தியமே லட்சியமாய் கொள்ளடா - நீலமலைத்  திருடன் ( 1957 )

88. சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம் ( 1966 )

89. சமரசம் உலாவும் இடமே - ரம்பையின் காதல் ( 1939 )

90. சரவணப் பொய்கையில் நீராடி - இது சத்தியம் ( 1963 )

91. சிங்கார வேலனே தேவா - கொஞ்சும் சலங்கை ( 1962 )

92. சித்தாடை கட்டிகிட்டு - வண்ணக்கிளி ( 1959 )

93. சின்னஞ் சிறிய வண்ணப் பறவை - குங்குமம் ( 1963 )

94. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து - புதிய பறவை ( 1964 )

95. சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி - சபாஷ் மீனா ( 1958 )

96. சிலை எடுத்தான் ஒரு சின்ன பொண்ணுக்கு- சர்வர் சுந்தரம் ( 1964 )

97. செந்தமிழ் தேன் மொழியாள் - மாலையிட்ட மங்கை ( 1958 )

98. செல்லக்கிளியே மெல்லப்பேசு - பெற்றால் தான் பிள்ளையா ( 1966 )

99. சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சிவகவி ( 1943 )

100. சோதனை மேல் சோதனை - தங்கபதக்கம் ( 1974 )

101. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் - பாகப்பிரிவினை ( 1959 )

102. தனிமையிலே இனிமை காண முடியுமா - ஆடிப்பெருக்கு ( 1962 )

103. தாமரை கன்னங்கள் - எதிர் நீச்சல் ( 1968 )

104. தில்லையம்பல நடராஜா - சௌபாக்கியவதி ( 1957 )

105. தீன கருணாகரனே நடராஜா - திருநீலகண்டர் ( 1939 )

106. துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாண பரிசு ( 1959 )

107. தூங்காத கண்ணென்று ஒன்று - குங்குமம் ( 1963 )

108. தெய்வம் தந்த வீடு - அவள் ஒரு தொடர்கதை ( 1974 )

109. தென்றல் உறங்கிய போதும் - பெற்ற மகனை விற்ற அன்னை ( 1958 )

110. தேன் உண்ணும் வண்டு - அமர தீபம் ( 1956 )

111. நலந்தானா நலந்தானா - தில்லானா மோகனாம்பாள் ( 1968 )

112. நல்ல மனம் வாழ்க - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது ( 1976 )

113. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் - தங்கப்பதக்கம் ( 1974 )

114. நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் - நூற்றுக்கு நூறு ( 1971 )

115. நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன் ( 1956 )

116. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் - பாலும் பழமும் ( 1961 )

117. நான் மலரோடு தனியாக - இரு வல்லவர்கள்  ( 1966 )

118.நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா- ஆனந்த ஜோதி ( 1963 )

119. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஓர் ஆலயம் ( 1962 )

120. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - போலீஸ்காரன் மகள் ( 1962 )

121. நினைத்தேன் வந்தாய் நூறு வயது - காவல்காரன் ( 1967 )

122.நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் - நெஞ்சில் ஓர் ஆலயம்  ( 1962 )

123. நீ இல்லாத உலகத்திலே - தெய்வத்தின் தெய்வம் ( 1962 )

124. நீ எங்கே என் நினைவுகள் அங்கே - மன்னிப்பு ( 1969 )

125. நீ தானா என்னை நினைத்தது  - மாயா பஜார் ( 1957 )

126. நீரோடும் வைகையிலே நின்றாடும் மானே - பார் மகளே பார் ( 1963 )

127. நீலக் கடலின் ஓரத்தில் - அன்னை வேளாங்கன்னி ( 1971 )

128. நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை ( 1963 )

129. பசுமை நிறைந்த நினைவுகளே -இரத்த திலகம் ( 1963 )

130. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - சூர்யகாந்தி  ( 1973)

131. பனியில்லாத மார்கழியா - ஆனந்த ஜோதி  ( 1963 )

132. பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை - படகோட்டி ( 1964 )

133. பாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல் ( 1965 )

134. பாட்டு பாடவா - தேன் நிலவு ( 1961 )

135. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் - வீரத்திருமகன் ( 1962 )

136. பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் - வீர அபிமன்யு ( 1965 )

137. பால் வண்ணம் பருவம் கண்டு - பாசம் ( 1962 )

138. பாலக்காட்டு பக்கத்திலே - வியட்நாம் வீடு ( 1970 )

139. பாலூட்டி வளர்த்த கிளி - கௌரவம் ( 1973 )

140. பார்த்த ஞாபகம் இல்லையோ - புதிய பறவை ( 1964 )

141. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா - நிச்சய தாம்பூலம்  ( 1962 )

142. பிறக்கும் போதும் அழுகின்றாய் - கவலை இல்லாத மனிதன் ( 1960 )

143. புத்தி உள்ள மனிதரெல்லாம் - அன்னை ( 1962 )

144. புன்னகை மன்னன் பூ விழி கண்ணன் - இரு கோடுகள் ( 1969 )

145. பூஞ்சிட்டு கன்னங்கள் - துலாபாரம் ( 1969 )

146. பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டிவரை உறவு ( 1967 )

147. பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த - நினைத்ததை முடிப்பவன் ( 1975 )

148. பூமியில் மானிட ஜென்மமடைந்து - அசோக்குமார் ( 1941 )

149. பூவாகி கனியாகி கனிந்த மரம் - அன்னை (1962 )

150. பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா - பணத்தோட்டம் ( 1963 )

151. பொன் ஒன்று கண்டேன் - படித்தால் மட்டும் போதுமா ( 1962 )

152. போனால் போகட்டும் போடா - பாலும் பழமும் ( 1961 )

153. மனம் படைத்தேன் உன்னை - கந்தன் கருணை ( 1967 )

154. மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ் ( 1944 )

155. மன்னவனே அழலாமா - கற்பகம் ( 1963 )

156. மனைவி அமைவதெல்லாம் - மன்மத லீலை ( 1976 )

157. மதுரையில் பிறந்த மீன் கொடியை - பூவா தலையா  ( 1969 )

158. மண்ணுக்கு மரம் பாரமா - தை பிறந்தால் வழி பிறக்கும் ( 1958 )

159. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன - தில்லானா மோகனாம்பாள் ( 1968 )

160. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - பாசமலர் ( 1961 )

161. மல்லிகை என் மன்னன் மயங்கும் - தீர்க்க சுமங்கலி ( 1974 )

162. மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமை தாங்கி ( 1962 )

163. மயக்கும் மாலை பொழுதே - குலேபகாவலி ( 1955 )

164. மன்னவன் வந்தானடி தோழி - திருவருட் செல்வர் ( 1967 )

165. மடிமீது தலை வைத்து - அன்னை இல்லம் ( 1963 )

166. மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மகளே பார் ( 1963 )

167. மணமகளே மருமகளே வா வா - சாரதா ( 1962 )

168. மணப்பாறை மாடு கட்டி - மக்களைப் பெற்ற மகராசி ( 1957 )

169. மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் -பாக்யலக்ஷ்மி ( 1961 )

170. மாசிலா உண்மை காதலே - அலிபாபாவும் 40 திருடர்களும் ( 1956 )

171. மாம்பழத்து வண்டு  வாசமலர் செண்டு - சுமை தாங்கி ( 1962 )

172.  மாமா மாமா மாமா - குமுதம்  ( 1961 )

173. மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் - இரு மலர்கள் ( 1967 )

174. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு  - உத்தம புத்திரன் ( 1958)

175. முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும் வரை ( 1967)

176. முத்தாரமே உன் ஊடல் என்னவோ - ரங்கராட்டினம் ( 1971 )

177. முத்து சிப்பி மெல்ல மெல்ல - ராமு ( 1966 )

178. முத்துக்கு முத்தாக - அன்பு சகோதரர்கள் ( 1973 )

179. மூன்று தமிழ் தோன்றியதும் - பிள்ளையோ பிள்ளை ( 1972 )

180. யாருக்காக இது யாருக்காக - வசந்த மாளிகை ( 1972 )

181. யார் தருவார் இந்த அரியாசனம் - மகாகவி காளிதாஸ் ( 1966 )

182. ராதையின் நெஞ்சமே - கனிமுத்து பாப்பா (1972 )

183. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - அன்பே வா ( 1966 )

184. ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன் ( 1962 )

185. வசந்த முல்லை போலே வந்து - சாரங்கதாரா ( 1958 )

186. வளர்ந்த கலை மறந்துவிட்டால் - காத்திருந்த கண்கள் ( 1962 )

187. வனமேவும் ராஜகுமாரா - ராஜா தேசிங்கு ( 1960 )

188. வண்ண தமிழ் பெண்ணொருத்தி  - பாவை விளக்கு ( 1960 )

189. வணக்கம் பலமுறை சொன்னேன் - அவன் ஒரு சரித்திரம் ( 1977 )

190. வருவேன் நான் உனது மாளிகையின் - மல்லிகா ( 1957 )

191. வளர்ந்த கலை மறந்து விட்டால் - காத்திருந்த கண்கள் ( 1962 )

192. வாராய் நீ வாராய் - மந்திரி குமாரி ( 1950 )

193. வான்மீதிலே இன்ப தேன்மாரி பெய்யுதே - சண்டிராணி ( 1953 )

194. வாழ்க்கை என்னும் ஓடம் - பூம்புகார் ( 1964 )

195. வாழ நினைத்தால் வாழலாம் - பலே பாண்டியா ( 1962 )

196. வாராயென் தோழி வாராயோ - பாசமலர் ( 1961 )

197. வாராயோ வெண்ணிலாவே - மிஸ்ஸியம்மா ( 1955 )

198. விண்ணோடும் முகிலோடும் - புதையல் ( 1957 )

199. வீடுவரை உறவு வீதிவரை மனைவி - பாதகாணிக்கை ( 1962 )

200. வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன் - அகத்தியர் ( 1972 )



E mail :- enselvaraju @ gmail.com

Monday 26 September 2016

சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் - 1

என். செல்வராஜ்

 தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம்  காளிதாஸ் 1931ல் வெளிவந்தது. அந்த படத்தில் இருந்தே தமிழ் சினிமா பாடல்கள்  நிறைந்ததாகவே  இருந்துள்ளது. அவை அந்தப் படங்களை பிரபலப்படுத்த உதவியுள்ளன. பெரும்பான்மையான வெற்றிபெற்ற தமிழ்ப் படங்களின் வெற்றியில் திரைப்பாடலுக்கு மிக முக்கிய பங்கு இருந்து வருகிறது. பாடல்களுக்காகவே பல நாள் ஓடிய படங்களும் இருக்கின்றன. பாடல்களே இல்லாத படங்கள் சில வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. அவை விதி விலக்குகளே. 1975 க்கு பிறகு வெளிவந்த படங்களில் மக்களின் மனதைக் கவர்ந்த பாடல்களை இதில் தொகுத்து இருக்கிறேன். 1975 க்கு முந்தைய பாடல்களை  தனியாக தொகுக்க இருக்கிறேன். இதில் பெரும்பாலும் ஒரு படத்தில் ஒரு பாடலை மட்டும் சேர்த்திருக்கிறேன். ஒரு சில படங்களில் மட்டும் இரண்டு பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளனஎம் எஸ் வி தொடங்கி இளையராஜா , ஏ ஆர் ரஹ்மான், மற்றும் இன்றைய பல புதிய இசை அமைப்பாளர்களின் படங்கள் வரை இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய பாடல்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியுள்ளது. அவற்றை அடுத்த பட்டியலில் சேர்க்கிறேன். அதுவரை இந்த பட்டியலில் இருக்கும் பாடல்களைக் கேட்டு இன்பமடையுங்கள். பட்டியலில் சேர்க்கவேண்டிய அல்லது நீக்க வேண்டிய பாடல்களைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.
இந்த பட்டியலை தயாரிக்க தனஞ்செயன் ஆங்கிலத்தில் எழுதிய பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா  மற்றும் ப்ரைட் ஆப் தமிழ் சினிமா ஆகிய நூல்களும் யூ டியூப் இணைய தளமும் மிகவும் உதவின.

 1. சின்ன சின்ன ஆசைரோஜா

 2. ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராப்

 3. ஏழு ஸ்வரங்களுக்குள்அபூர்வ ராகங்கள்

 4. செந்தூரப்பூவே  - 16 வயதினிலே

 5. ஆனந்த யாழை - தங்கமீன்கள்

 6. கண்கள் இரண்டால் - சுப்ரமண்யபுரம்

 7.நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை  - வாரணம் ஆயிரம்

 8. பாடறியேன் படிப்பறியேன் - சிந்து பைரவி

9. ஆயிரம் தாமரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை

10. சிப்பி இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு

11. சின்னஞ் சிறுவயதில் - மீண்டும் கோகிலா

12. செந்தாழம் பூவில் - முள்ளும் மலரும்

13. காற்றில் எந்தன் கீதம் - ஜானி

14. சங்கீத ஜாதி முல்லை - காதல் ஓவியம்

15. கண்ணே கலைமானே - மூன்றாம் பிறை

16.நினைவோ ஒரு பறவை - சிகப்பு ரோஜாக்கள்

17. பூங்கதவே தாழ் திறவாய் - நிழல்கள்

18. வெட்டி வேரு வாசம் - முதல் மரியாதை

19. குழலூதும் கண்ணனுக்கு - மெல்ல திறந்தது கதவு

20. செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்

21. ஆயிரம் மலர்களே மலருங்கள் - நிறம் மாறாத பூக்கள்

22. மான்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்

23. மழைத்துளி மழைத்துளி - சங்கமம்

24. ராக தீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை

25. செந்தூரப்பூவே இங்கே தேன் சிந்த - செந்தூரப்பூவே

26. மூக்குத்திப்பூ மேலே - மௌனகீதங்கள்

27. ஓடுகிற தண்ணியில - அச்சமில்லை அச்சமில்லை

28. பட்டு வண்ண ரோசாவாம் - கன்னிப்பருவத்திலே

29. உச்சி வகிடெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி

30. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் - நீயா

31. அன்னக்கிளியே உன்னைத்தேடுதே - அன்னக்கிளி

32. கண்ணன் ஒரு கைக்குழந்தை -பத்ரகாளி

33. வேறு இடம் தேடிப்போவாளோ - சில நேரங்களில் சில மனிதர்கள்

34. என்னடி மீனாட்சி - இளமை ஊஞ்சலாடுகிறது

35. மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில்

36. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்

37. ஆகா வந்திருச்சி - கல்யாண ராமன்

38. அழகிய கண்ணே - உதிரிப்பூக்கள்

39. பூ வண்ணம் போல நெஞ்சம் - அழியாத கோலங்கள்

40. என் இனிய பொன் நிலாவே - மூடுபனி

41. பருவமே புதிய பாடல் - நெஞ்சத்தை கிள்ளாதே

42. மேகமே மேகமே - பாலைவன சோலை

43. கவிதை அரங்கேறும் நேரம் - அந்த 7 நாட்கள்

44. அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு

45. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - மண்வாசனை

46. சின்னக்குயில் பாடும் பாட்டு - பூவே பூச்சூடவா

47. தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்

48. நிலாவே வா - மௌனராகம்

49. தென்பாண்டி சீமையிலே - நாயகன்

50.  வா வா அன்பே  - அக்னி நட்சத்திரம் 

51. ஓண்ண நினைச்சு பாட்டு படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள்

52.  பாட்டு ஒண்ணு பாடட்டுமா - புது வசந்தம்

53. மண்ணில் இந்த காதல் இன்றி - கேளடி கண்மணி

54. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் - மைக்கேல் மதன காமராஜன்

55. ஆட்டமா .. தேரோட்டமா ..    -கேப்டன் பிரபாகரன்

56. தூளியிலே ஆடவந்தசின்ன தம்பி

57. ராக்கம்மா கையை தட்டுதளபதி

58. கண்மனி அன்போட காதலன் - குணா

59. இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன்

60. மானூத்து மந்தயிலகிழக்கு சீமையிலே

61.  கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல - நாட்டாமை

62. ஸ்ரீரங்க ரங்கநாதனின் - மகா நதி

63. அந்த அரபிக் கடலோரம் - பம்பாய்

64. கண்ணாளனே எனது கண்ணை - பம்பாய்

65. கொஞ்ச நாள் பொறு தலைவா - ஆசை

66. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ - சூர்யவம்சம்

67. குருக்கு சிறுத்தவளேமுதல்வன்

68. அழகான ராட்சசியேமுதல்வன்

69. எங்கே செல்லும் இந்த பாதை - சேது

70. கான கருங்குயிலே கச்சேரிக்கு - சேது

71. பல்லாங்குழியில் வட்டம்ஆனந்தம்

72. யார் யார் சிவம் - அன்பே சிவம்

73. கனா கண்டேனடி தோழி - பார்த்திபன் கனவு

74. பாட்டு சொல்லி பாட சொல்லி - அழகி

75. ஒளியிலே தெரிவது தேவதையா - அழகி

76. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி

77. காலமெல்லாம் காதல் வாழ்ககாதல் கோட்டை

78. பச்சைக்கிளிகள் தோளோடு  - இந்தியன்

79. ஆனந்தம் ஆனந்தம் பாடும் - பூவே உனக்காக

80. என்னை தாலாட்ட வருவாளா - காதலுக்கு மரியாதை

81.அந்திமழை பொழிகிறது - ராஜபார்வை

82.  சுட்டும் விழிச்சுடரே - கஜினி

83. கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்

84. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடி தெரு

85. பூக்கள் பூக்கும் தருணம் - மதராச பட்டிணம்

86. இது ஒரு பொன் மாலைப்பொழுது - நிழல்கள்

87. கண்ணோடு காண்பதெல்லாம் - ஜீன்ஸ்

88. வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் - சித்திரம் பேசுதடி

89. வானில் வெண்னிலா வந்து சேருமா - வானத்தைப் போல

90. என்ன சொல்லப் போகிறாய் - கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

91. நீ வருவாய் என நான் இருந்தேன் - சுஜாதா

92. இன்னிசை பாடி வரும் - துள்ளாத மனமும் துள்ளும்

93. அதிகாலையில் சேவலை எழுப்பி - நீ வருவாய் என

94. மல்லிகையே மல்லிகையே - நினைத்தேன் வந்தாய்

95. அன்பே என் அன்பே - தாம் தூம்

96. முன்பே வா என் அன்பே வா - சில்லுனு ஒரு காதல்

97. ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்

98. கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு - வெற்றிக்கொடி கட்டு

99. கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது

100. அறியாத வயசு - பருத்தி வீரன்

101. கனா காணும் காலங்கள் - 7 ஜி ரெயின்போ காலணி

102. ரா ரா சரசுக்கு ரா ரா - சந்திரமுகி

103. கத்தாழ கண்ணால - அஞ்சாதே

104. மஞ்சள் வெயில்  மாலையிலே - வேட்டையாடு விளையாடு

105. மன்மத ராசா மன்மத ராசா - திருடா திருடி

106. ஆராரிராரோ - ராம்

107. உன்னை விட இந்த உலகத்தில் - விருமாண்டி

108. ஒரு பொய்யாவது சொல் கண்ணே - ஜோடி

109. உருகுதே மருகுதே - வெயில்

110.  அஞ்சலி அஞ்சலி - டூயட்

111. எங்கேயோ பார்த்த மயக்கம் - யாரடி நீ மோகினி

112.  வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி

113. அடடா மழைடா அட மழைடா - பையா

114. என்ன சத்தம் இந்த நேரம்புன்னகை மன்னன்

115. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி

116. தஞ்சாவூரு மண் எடுத்து - பொற்காலம்

117. அழகே அழகு - சைவம்

118.  காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு

119. ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து - இளமைக் காலங்கள்

120. பொய் சொல்லப் போறேன் - திருட்டுப் பயலே

121. காதல் வளர்த்தேன் - மன்மதன்

122.ஒரு பாதி கதவு  நீயடி - தாண்டவம்

123. வாராயோ வாராயோ - ஆதவன்

124. தேவதையை கண்டேன் - காதல் கொண்டேன்

 125. ஏதோ நினைக்கிறேன் - தலைநகரம்

 126. கிளிமாஞ்சாரோஎந்திரன்

 127. சொய் .. சொய்   - கும்கி

 128. கூகிள் .. கூகிள் - துப்பாக்கி

 129. செல்ஃபி புள்ளகத்தி

 130. வொய் திஸ் கொல வெறிடி -  3

 131. யார் இந்த பெண் தான் - பாஸ் () பாஸ்கரன்

 132. உசுரே போகுதே - ராவணன்

 133. பூக்களே சற்று ஓய்வெடுங்கள் -

 134. தங்கமே உன்ன தான் - நானும் ரௌடிதான்

 135. இறந்திடவா நீ பிறந்தாய் - மெட்ராஸ்

 136. பூமி என்ன சுத்துதே - எதிர் நீச்சல்

 137.  உனக்கென்ன வேணும் சொல்லு - என்னை அறிந்தால்

 138. அடி  கருப்பு நிறத்தழகி - கொம்பன்

 139. யாரோ இவன் - உதயம் என் ஹெச் 14

 140. விண்மீன் விதையில் - தெகிடி

 141. உன்னைக் காணாது நான் - விஸ்வரூபம்

 142. பார்க்காதே பார்க்காதே - வருத்தப்படாத வாலிபர் சங்கம்

 143.  மன்னிப்பாயா - விண்ணை தாண்டி வருவாயா

 144. மழையே மழையே - ஈரம்

 145. ஜல் ஜல் ஓசை - மனங்கொத்திப் பறவை

 146. ஜிங்கு ஜிக்கா - மைனா

 147. புத்தம் புது காலை  - மேகா

 148. ஒவ்வொன்றாய் திருடுகிறாய் - ஜீவா

 149. பற பற பறவை ஒன்று - (பெண்) - நீர்ப்பறவை


 150. அஸ்கு லஸ்கா - நண்பன்