தி இந்து நாளிதழ் புத்தக கண்காட்சி 2019 க்காக வெளியிட்ட புத்தக பரிந்துரைகள்
கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்
காவிரி வெறும் நீரல்ல
தங்க.ஜெயராமன்
{ க்ரியா)
கையிலிருக்கும் பூமி
தியோடர் பாஸ்கரன் ( உயிர்மை)
அறியப்படாத தமிழ் மொழி
கண்ணபிரான் இரவிசங்கர் { தடாகம்)
கெத்து
( இலட்சுமணப்பெருமாள் கதைகள்}
(பாரதி புத்தகாலயம்)
காலத்தை செதுக்குபவர்கள் 2.0
ராம் முரளி (யாவரும்)
ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?
ப திருமாவேலன் (நற்றிணை)
சிவப்பு மச்சம்
எஸ் ராமகிருஷ்ணன் ( தேசாந்திரி)
தமிழ் இன்று
இ அண்ணாமலை (அடையாளம்)
எம் எஸ் சுப்புலட்சுமி
டி ஜே எஸ் ஜார்ஜ்
தமிழில் சுப்பாராவ் (பாரதி புத்தகாலயம் )
சக்காரியாவின் கதைகள்
பால் சக்காரியா
தமிழில் கே வி ஜெயஸ்ரீ , சாகித்ய அகாதமி
இந்துத்துவாவா இந்திய சுயராஜ்யமா?
யு ஆர் அனந்தமூர்த்தி
தமிழில் வெ ஜீவானந்தம் (என்சிபிஹெச்)
போர்ப்பறவைகள்
வி டில்லிபாபு (முரண்களரி வெளியீடு)
நிலத்தில் படகுகள்
ஜேனிஸ் பரியத் (நற்றிணை வெளியீடு)
புனைவும் நினைவும்
சமயவேல் (மணல்வீடு
வெளியீடு)
ஆஹா
ஞானக்கூத்தன் கவிதைகள் (முழு தொகுப்பு)
காலச்சுவடு பதிப்பகம்
பிரபஞ்சன் கதைகள் ( மூன்று தொகுதிகள்)
டிஸ்கவரி புக் பேலஸ்
இந்திய ஓவியம் ஓர் அறிமுகம்
அரவக்கோன் ( கிழக்கு
பதிப்பகம்}
கவனிக்க வேண்டிய 5
புத்தகங்கள்
1) பெண்ணும் ஆணும் ஒண்ணு
ஓவியா - நிகர்மொழி வெளியீடு
உன் கழுத்தைச்
2) சுற்றிக்கொண்டு இருப்பது
சிமாமண்டா என்கோஜி அடிச்சீ
தமிழில்: வடகரை ரவிச்சந்திரன்
- பாரதி புத்தகாலயம் வெளியீடு
3) நோய் அரங்கம்
கு.கணேசன் - சூரியன் வெளியீடு
4) எஞ்சின்கள்
ஹாலாஸ்யன் - யாவரும் வெளியீடு
5) ழ என்ற பாதையில் நடப்பவன்
பெரு.விஷ்ணுகுமார்
- மணல்வீடு வெளியீடு
ஆஹா
மார்க்சியம் இன்றும் என்றும்
விடியல் பதிப்பகம்
விலை: ரூ.500
பெரியார், அம்பேத்கர்
நூல்கள் வரிசையில் இந்தப் புத்தகக்காட்சியைக் கலக்க விடியல் பதிப்பகம்
கொடுத்திருக்கும் நூல் வரிசை ‘மார்க்சியம் இன்றும் என்றும்’. மூன்று நூல்கள், கெட்டி அட்டை, ஏறக்குறைய ஆயிரம் பக்கம் கொண்ட தொகுப்பை வெறும் ரூ.500 விலையில் கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார்கள். மார்க்ஸியம் பற்றி அறிமுகம்
இல்லாதவர்களும்கூட அதைப் பற்றி புரிந்துகொள்வதற்கு எளிதாக கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு
பில் கஸ்பர் எழுதிய வழிகாட்டி நூல், மூலதனம்
நூலின் சாராம்சத்தை விளக்கும் டேவிட் ஸ்மித் எழுதிய சித்திரக் கதை இரண்டும்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பரிதியின் ‘மாந்தர்
கையில் பூவுலகு’ இன்றைய சுற்றுச்சூழல் சிக்கல்களை மார்க்ஸிய
நோக்கில் அணுகும் புதிய முயற்சி.
என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- ராஜுமுருகன், இயக்குநர்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
மொழியாக்கம்: எஸ்.வி.ராஜதுரை
இளம்பருவத்து தோழி
வைக்கம் முகம்மது பஷீர்
கலைக்க முடியாத ஒப்பனைகள்
வண்ணதாசன்
பளிச்
இந்த இவள்
கி.ராஜநாராயணன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.175
நாம் வாழும் காலத்தின் மாபெரும் கதைசொல்லி யான
கி.ராஜநாராயணனின் வாசகர்களைக் குஷிப்படுத்துவதற்காக, அவரது
புதிய குறுநாவலான ‘இந்த இவள்’ புத்தகத்தின்
இடப்பக்கத்தில் கி.ராவின் கையெழுத்து வடிவம், வலப்பக்கத்தில்
அவர் எழுதிய பாணியிலேயே அச்சு வடிவம் எனப் பதிப்பித்திருக்கிறார்கள். “இதை ஒரு பொக்கிஷம்போல வைத்திருப்போம்” என்கிறார்கள்
கி.ரா வாசகர்கள். அட்டகாசம்!
கவனிக்க வேண்டிய 5
புத்தகங்கள்
1) பாஜக எப்படி வெல்கிறது?
பிரசாந்த் ஜா
தமிழில்: சசிகலா பாபு
எதிர் வெளியீடு
2) கதைகள் செல்லும் பாதை
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி வெளியீடு
3) நிலநடுக் கோடு
விட்டல் ராவ்
பாரதி புத்தகாலயம் வெளியீடு
4) அன்னா ஸ்விர் கவிதைகள்
தமிழில்: சமயவேல்
தமிழ்வெளி வெளியீடு
5) நடுகல்
தீபச்செல்வன்
டிஸ்கவரி வெளியீடு
ஆஹா
போர்ஹெஸ் கதைகள்
தமிழில்: பிரம்மராஜன்
யாவரும் வெளியீடு
விலை: ரூ.550
20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானிய
எழுத்தாளர்களில் ஒருவரான போர்ஹெஸ், உலகம் முழுக்க எழுத்தாளர்களையும்
வாசகர்களையும் பாதித்தவர். தன் வாழ்நாளில் நாவலே எழுதாத இவர் லத்தீன் அமெரிக்க
நாவல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். ஐநூறு பக்க நாவல் தரும்
பிரம்மாண்டத்தையும் திகைப்பையும் தனது சிறுகதைகளில் உருவாக்கிவிடக் கூடியவர்.
அனுபவங்கள், தத்துவங்கள், கருத்தியல்கள், வரலாறு எல்லாமும் ஒரு புனைவுதானோ என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடிய போர்ஹெஸின்
சிறந்த கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான பிரம்மராஜனின்
பல ஆண்டு கால உழைப்பில் உருவான மொழிபெயர்ப்பு இது.
என்னைச் செதுக்கிய 3 நூல்கள் -அறிவழகன், இயக்குநர்
ஜெயகாந்தன் சிறுகதைகள்
ஜெயகாந்தன்
சுஜாதா சிறுகதைகள்
சுஜாதா
அர்த்தமுள்ள இந்துமதம்
கண்ணதாசன்
பளிச்
மேற்கத்திய ஓவியங்கள்
பி.ஏ.கிருஷ்ணன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.975
கலைகளில் ஈடுபாடுகொள்ளும்போது வாழ்க்கை இன்னும்
அழகாகிறது. புரிதலின்மை காரணமாக ஓவியத்திலிருந்து விலகிவிடும் கலை ரசிகர்களை
இன்னும் இணக்கமாக ஓவியத்தை அணுகும்பொருட்டு ‘மேற்கத்திய ஓவியங்கள்’ நூல் வரிசையில் நவீன ஓவியங்களை பி.ஏ.கிருஷ்ணன் அறிமுகப்படுத்துகிறார். இப்போது
இரண்டாம் நூல் அழகான வடிவமைப்பில் வெளிவந்திருக்கிறது. சுமார் 250 வண்ண ஓவியங்களுடன் 336 வண்ணப் பக்கங்கள். ஓவியத்தின் பின்புலம், வரலாறு, பேசுபொருள் என பிரெஞ்சுப் புரட்சி
ஆண்டுகளிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரையிலான நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்தும்
நூல் இது.
கவனிக்க வேண்டிய 5
புத்தகங்கள்
அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு:
கீழ்வெண்மணிக் குறிப்புகள்
செ.சண்முகசுந்தரம்
அன்னம் வெளியீடு
வசைமண்
மார்ட்டீன் ஓ’ கைன்
தமிழில்: ஆர்.சிவகுமார்
காலச்சுவடு வெளியீடு
அன்புள்ள ஏவாளுக்கு
ஆலிஸ் வாக்கர், தமிழில்:
ஷஹிதா
எதிர் வெளியீடு
தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி
சு.வேணுகோபால்
தியாகு நூலகம் வெளியீடு
புனைவு என்னும் புதிர்: ஷோபாசக்தியின் 12 கதைகள்
விமலாதித்த மாமல்லன்
சத்ரபதி வெளியீடு
ஆஹா
ராஜ் கௌதமன் நூல்கள் வரிசை
என்சிபிஹெச் வெளியீடு
விலை: ரூ.1,670
சங்க இலக்கியங்கள், புதுமைப்பித்தன், வள்ளலார் என்று வெவ்வேறு ஆய்வுத்
தளங்களைத் தனித்த பார்வையோடு அணுகியவர் ராஜ் கௌதமன். புனைவாகவும் தன்வரலாறாகவும்
அமைந்த அவரது சிலுவைராஜ் தொடர் வரிசை நூல்கள் அவரது இலக்கிய எழுத்தாளுமைக்கு
உதாரணங்கள். ஏற்கெனவே வெளிவந்து பதிப்பில் இல்லாத புத்தகங்களையும், புதிய புத்தகங்களையும் (9 புத்தகங்கள் - ஆய்வு நூல்கள் மற்றும் ‘காலச்சுமை’ நாவல் உட்பட) என்சிபிஹெச் பதிப்பகம்
கொண்டுவந்திருக்கிறது.
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்
தென்னாட்டுப் போர்க்களங்கள்
கா.அப்பாத்துரை
பூம்புகார் பதிப்பகம்
விலை: ரூ.200
சங்ககாலம் தொடங்கி இந்திய சுதந்திரப்
போராட்டக்காலம் வரையிலான தமிழர் வரலாற்றை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல் இது.
போர்களை மைய இழையாகக் கொண்டு கால வரிசைப்படி அதைத் தொகுத்துத் தந்திருக்கிறார்
தமிழறிஞரும் பன்மொழிப் புலவருமான கா.அப்பாத்துரை.
என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- ஜீ.வி.பிரகாஷ், நடிகர், இசையமைப்பாளர்
கற்றதும் பெற்றதும்
சுஜாதா
வந்தார்கள் வென்றார்கள்
மதன்
கிருஷ்ணா
ஓஷோ
நச்
இலக்கிய வாசிப்பாளராகவும் எழுத்தாளராகவும்
திரையுலகுக்குள் அடியெடுத்துவைத்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். தங்கர் பச்சானின்
முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி 25 ஆண்டுகள்
ஆகின்றன. அதைக் கொண்டாடும் விதமாக ‘வெள்ளை மாடு’ தொகுப்பு இப்போது சிறப்புப் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இந்தத்
தொகுப்பிலுள்ள ‘கல்வெட்டு’ கதைதான்
‘அழகி’ என்ற திரைப்படமாகியது. கூடவே, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவலின் புதிய பதிப்பும்
வெளியாகியிருக்கிறது.
கவனிக்க வேண்டிய 5
புத்தகங்கள்
தமிழ்நாட்டின் மணற்கொள்ளை அரசியல்
ஜெ.ஜெயரஞ்சன்
மின்னம்பலம் பதிப்பகம்
போருழல் காதை
குணா கவியழகன்
அகல் வெளியீடு
கங்காபுரம்
அ.வெண்ணிலா
அகநி வெளியீடு
சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்
பக்தவத்சல பாரதி
பாரதி புத்தகாலயம்
தமிழகப் பண்பாடு
அ.கா.பெருமாள்
என்சிபிஹெச் வெளியீடு
ஆஹா
தொ.பரமசிவன் நூல்கள் வரிசை
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ.620
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் மகத்தான
பங்களிப்பு செய்தவர் தொ.பரமசிவன். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த இவரது ஆய்வுகள், அழிந்துவரும்
பண்பாட்டுக்கூறுகளின் அவசியத்தை முன்வைப்பவை. ‘பாளையங்கோட்டை’, ‘மரபும் புதுமையும்’, ‘இதுவே சனநாயகம்’, ‘மஞ்சள் மகிமை’, ‘தொ.பரமசிவன் நேர்காணல்கள்’ என தொ.பரமசிவனின் ஐந்து புதிய நூல்களைக் கொண்டுவந்திருக்கிறது காலச்சுவடு
பதிப்பகம்.
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
நெஞ்சொடு கிளத்தல்
பாதசாரி
தமிழினி பதிப்பகம்
விலை: ரூ.70
‘மீனுக்குள் கடல்’ தொகுப்புக்குப்
பிறகு நீள்மௌனத்தில் ஆழ்ந்திருந்த பாதசாரி புதிய உற்சாகத்துடன் மீண்டும் எழுத
ஆரம்பித்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை
என்று எந்த வகைக்குள்ளும் அடங்காத பாதசாரியின் மனநிழல் குறிப்புகள் வரிசையில்
சமீபத்திய வரவு இது.
என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- பொன்வண்ணன், நடிகர்
நீலகண்டப் பறவையைத் தேடி
அதீன் பந்த்யோபாத்யாய
செம்மணி வளையல்
அலெக்சாந்தர் குப்ரின்
இரண்டாம் இடம்
எம்.டி.வாசுதேவன் நாயர்
கவனிக்க வேண்டிய 5
புத்தகங்கள்
கால்டுவெல்லின் தமிழ்க்கொடை
இரா.காமராசு
சாகித்ய அகாதமி வெளியீடு
தெருவோர ஜென் குரு
பெர்னி கிளாஸ்மேன்
தமிழில்: அமலன் ஸ்டேன்லி
தமிழினி வெளியீடு
அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்
கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா
தமிழில்: பூ.கொ.சரவணன்
கிழக்கு வெளியீடு
கடவுள் சந்தை
மீரா நந்தா
அடையாளம் வெளியீடு
அலைகடலின் அசுரர்கள்
லயன் காமிக்ஸ் வெளியீடு
ஆஹா
100 சிறந்த சிறுகதைகள்
(2 பாகம்)
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
விலை: ரூ.1000
எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்துக்குச்
செய்த மகத்தான பணிகளுள் ஒன்று இந்தத் தொகுப்பு. தமிழின் தலைசிறந்த 100 சிறுகதைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இது. அங்கிருந்து புதிதாகப் பல
எழுத்தாளர்களைக் கண்டடைவதற்கான வாசலையும் திறந்துவிடுகிறது. நவீன இலக்கிய
வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம்.
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
அக்னி நதி
குல் அதுல்ஜன் ஹைதர்
தமிழில்: சௌரி
என்பிடி வெளியீடு
‘அக்னி நதி’யை வாசித்துவிட்டு
அந்நாவலில் வரும் கதாபாத்திரமான கௌதம நீலாம்பரனாகத் தன்னை நினைத்துக்கொண்டுத்
திரிந்தவர்கள் ஏராளம் பேர். இந்த நாவல், உருது
இலக்கியத்துக்குப் புதிய பாணியை அளித்தது. தலைசிறந்த நாவலாசிரியாக ஹைதர்
கருதப்பட்டதற்கு இந்நாவலின் படைப்பாற்றல் மிக முக்கியமான காரணம். பல காலமாகப்
பதிப்பில் இல்லாத இந்தப் புத்தகத்தை இப்போது மறுபதிப்பு செய்திருக்கிறது ‘நேஷனல் புக் ட்ரஸ்ட்’.
என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- ராம், இயக்குநர்
பாப்லோ நெருதா கவிதைகள்
நெருதா
பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை
ஆங்க் ஸ்வீ சாய்
பேர்ட் காட்டேஜ்
எவா மெய்யர்
கவனிக்க வேண்டிய 5
நூல்கள்
ராஜேஷ் குமார் சிறந்த சிறுகதைகள்
உயிர்மை
கருஞ்சட்டைப் பெண்கள்
ஓவியா
கருஞ்சட்டைப் பதிப்பகம்
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
வே.மு.பொதியவெற்பன்
அன்னம் வெளியீடு
சிலைத் திருடன்
எஸ்.விஜய் குமார்
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்
சுளுந்தி
இரா.முத்துநாகு
ஆதி பதிப்பகம்
பளிச்
செம்மொழிச் சிற்பிகள்
பரிதி இளம்வழுதி
ஆப்ரா மீடியா நெட்வொர்க்ஸ்
விலை: ரூ.1,200
பரிதி இளம்வழுதியின் இன்னொரு பக்கத்தைக்
காட்டும் நூல் இது. பரிதிமாற் கலைஞர், பாரதி, மனோன்மணீயம் சுந்தரனார், மறைமலை அடிகள் தொடங்கி
ச.வே.சுப்பிரமணியம், மணவை முஸ்தபா வரை நீளும் இந்நூல் தமிழ்
ஆளுமைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் பட்டியலில் கருணாநிதியின் பெயர் முதல்
பக்கத்தில் இருப்பதுதான் முகத்தில் அடிப்பதுபோல இருக்கிறது. பரிதியின்
எண்ணங்களுக்கு எழுத்துவடிவம் தந்திருக்கிறார் அஜயன் பாலா. நல்ல அறிமுகம்!
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
திராவிடம் தமிழ்த் தேசியம் கதையாடல்
தமிழவன்
அடையாளம் வெளியீடு
விலை: ரூ.180
நவீன வரலாற்றில் தமிழ் அரசியல்
கடந்துவந்திருக்கும் பாதையை விவரிக்கும் இந்த நூல், இருபதாம்
நூற்றாண்டில் தமிழகத்தில் ஒன்றோடு ஒன்று கலந்தும் முரண்பட்டும் ஊடாடிய சிந்தனைகளை
இன்றைய பார்வையிலிருந்து அர்த்தப்படுத்துகிறது. அண்ணா எவ்வளவு பெரிய ஆளுமை
என்பதையும், பாரதிதாசனுக்குத் தமிழ்க் கவிதையில் உள்ள உயரிய
இடத்தையும் சுட்டுகிறது. தமிழ்த் தேசியம் பொருண்மையில் மிகவும் முக்கியமான நூல்!
என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- லிங்குசாமி, இயக்குநர்
வாங்க சினிமா பற்றி பேசலாம்
கே.பாக்யராஜ்
கோபல்லபுரத்து மக்கள்
கி.ராஜநாராயணன்
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
சுஜாதா
நச்
சிட்டுக்குருவி, தேனீ, கருநாகம், பங்குனி ஆமை, குறிஞ்சி
மலர்,
செந்நாய், கரடி, ஆசிய
யானை,
சிறுத்தை, சோலை மந்தி, புலி, வரையாடு என அருகிவரும் தமிழக உயிரினங்களைப்
பற்றிய குறிப்பு களோடு சென்னை புத்தகக்காட்சியின் சிறப்பு வெளியீடாக நாட்காட்டியை
வெளியிட்டிருக்கிறார்கள் ‘பூவுலகின் நண்பர்கள்’. ஒயாசிஸ் புக்ஸ் (290) அரங்கில் ரூ.500-க்குப் புத்தகங்கள் வாங்கும் வாசகர்களுக்கு இந்நாட்காட்டியை விலையில்லாமல்
வழங்குகிறார்கள்.
கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்
தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?
கி.வீரமணி
திராவிடர் கழக வெளியீடு
சேரியில் பூனை
ராக்மில் பிரிக்ஸ்
தமிழில்: அரியநாச்சி
அடையாளம் வெளியீடு
தெருவோர ஜென் குரு
பெர்னி கிளாஸ்மேன்
தமிழில்: அமலன் ஸ்டேன்லி
தமிழினி வெளியீடு
சிவப்புக்கூடை திருடர்கள்
எஸ்.செந்தில்குமார்
உயிர்மை வெளியீடு
காப்பு
தொகுப்பு: ஈழவாணி
பூவரசி வெளியீடு
ஆஹா
கசார்களின் அகராதி (ஆண் பிரதி, பெண் பிரதி இரண்டும் சேர்த்து)
மிலோராத் பாவிச்
தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்
எதிர் பதிப்பகம்
விலை: ரூ.1,000
சர்வதேச அளவில் மிகப் பெரும் கவனம் பெற்ற ‘கசார்களின் அகராதி’ நாவல், இந்திய
மொழிகளில் முதல் முறையாகத் தமிழில் வெளியாகியிருக்கிறது. ஆண் பிரதி, பெண் பிரதி என இரண்டு விதமாக வெளியாகியிருக்கும் இந்நாவலில் ஒரு முக்கியமான
பத்தி மட்டுமே வித்தியாசம். வாசகருக்கு சவால்விடும் இந்நாவலை நீங்கள் எங்கிருந்து
வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற அனுகூலம் உண்டு. அலாதியான வாசிப்பின்பத்துக்குத்
தயாராகுங்கள்!
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
அவன் காட்டை வென்றான்
கேசவ ரெட்டி
தமிழில்:
ஏ.ஜி.எத்திராஜுலு
என்பிடி வெளியீடு
விலை: ரூ.105
கேசவ ரெட்டியின் மிகப் புகழ்பெற்ற புத்தகம்.
காட்டை நன்கறிந்த கிழவனின் சுவாரசியமான அனுபவங்களால் கட்டமைக்கப்பட்ட புத்தகம்
இது. காட்டுக்கு வழிதவறிச் சென்று குட்டிகளை ஈன்ற பன்றியைக் காட்டிலிருந்து
எப்படித் தனது தள்ளாத வயதில் மீட்டுவருகிறார் எனும் அனுபவத்தை
வாசித்துப்பாருங்கள். பிரமித்துப்போவீர்கள்!
என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- வசந்தபாலன், இயக்குநர்
மோகமுள்
தி.ஜானகிராமன்
நாளை மற்றுமொரு நாளே
ஜி.நாகராஜன்
காடு
ஜெயமோகன்
கவனிக்க வேண்டிய 5
புத்தகங்கள்
கறையான்
சீர்ஷேந்து முகோபாத்யாய
தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி
என்பிடி வெளியீடு
அஞ்ஞானச் சிறுகதைகள்
சந்தோஷ் நாராயணன்
உயிர்மை வெளியீடு
அன்பு என்னும் கலை
எரிக் ஃபிராம்
தமிழில்: ராஜ் கௌதமன்
அடையாளம் வெளியீடு
மீண்டு நிலைத்த நிழல்கள்
தொகுப்பு: ம.நவீன்
வல்லினம் வெளியீடு
வல்லபி
தேன்மொழி தாஸ்
ஸீரோ டிகிரி பதிப்பகம்
ஆஹா
வாராணசி
பா.வெங்கடேசன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.225
பா.வெங்கடேசன் தனது புதிய சிறுபுதினமான ‘வாராணசி’யில் கையாண்டிருக்கும் மாந்த்ரீக மொழியாலும்
மயக்கவைக்கும் கதைசொல்லல் முறையாலும் வாசகர்களை வசியப்படுத்தியிருக்கிறார்.
தமிழ்ச் சமூகம் சிறைப்பிடித்துவைத்திருக்கும் பெண்ணுடல் குறித்து தீவிரமான, சுவாரசியமான உரையாடலை நிகழ்த்துகிறது ‘வாராணசி’. தமிழின் முதல் ஒரு பத்தி நாவல்!
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
தந்தை பெரியார் (முழுமுதல் வாழ்க்கை வரலாறு)
கவிஞர் கருணானந்தம்
வேலா வெளியீட்டகம்
விலை: ரூ.500
பெரியார், அண்ணாவுடன்
நெருங்கிப் பழகியவர் கவிஞர் கருணானந்தம். பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை
முதலில் எழுதியவர். கருணானந்தத்தின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதை அடுத்து
அவர் எழுதிய பெரியார் வாழ்க்கை வரலாறுநூலைப் பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டு
வருகின்றன என்றாலும் தயாரிப்பில் இது எல்லாவற்றையும் மிஞ்சுகிறது. ராயல் சைஸ், 600 பக்கங்கள், கெட்டி அட்டையுடன் பதிப்பிக்கப்பட்டிருக்கும்
நூலின் விலை ரூ.500 மட்டுமே!
என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- கு.ஞானசம்பந்தன்,பேராசிரியர்
வால்கா முதல் கங்கை வரை
ராகுல் சாங்கிருத்யாயன்
என் சரித்திரம்
உ.வே.சா.
முதல் ஆசிரியர்
சிங்கிஸ் ஐத்மாத்தவ்
கவனிக்க வேண்டிய 5
புத்தகங்கள்
கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்
தமிழறிஞர்கள்
அ.கா.பெருமாள்
காலச்சுவடு வெளியீடு
எங்கே செல்கிறது இந்தியா
டியானே காஃபே, டீன்
ஸ்பியர்ஸ்
தமிழில்: செ.நடேசன்
எதிர் வெளியீடு
வால்வெள்ளி
எம்.கோபாலகிருஷ்ணன்
தமிழினி வெளியீடு
மரப்பாலம்
கரன் கார்க்கி
உயிர்மை வெளியீடு
செயலே சிறந்த சொல்
மு.ராஜேந்திரன்
அகநி வெளியீடு
பளிச்
நா மணக்கும் நாலாயிரம்
மை.பா.நாராயணன்
சூரியன் பதிப்பகம்
விலை: ரூ.150
தூய்மையான பக்தியால் எல்லாவற்றையும்
சாத்தியப்படுத்த முடியும் என்பதைச் சொல்லும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் கரைந்த
மை.பா.நாராயணன், வாழ்வின் நிலையாமை குறித்தும் இந்நூலில்
பேசுகிறார்.
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
நிரபராதிகளின் காலம்
ஸீக்ஃப்ரீட் லென்ஸ்
தமிழில்: ஜி.கிருஷ்ணமூர்த்தி
க்ரியா வெளியீடு
நாஜிக்களின் சர்வாதிகார ஆட்சிக்கு சாமானிய
ஜெர்மன் மக்களின் மௌனமும் எப்படி உடந்தையாக இருந்தது என்பதை விவரிக்கிறது
இந்நாடகம். பெரும்பான்மைகள் மௌன சாட்சிகளாக இருக்கும் சமகாலத்துக்கு மிகவும்
பொருத்தமாக இருக்கும் இந்த நாடகத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு
செய்திருக்கிறது ‘க்ரியா’ பதிப்பகம்.
வரலாற்றில் எல்லோருமே நியாய விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை அழுத்தமாகச்
சொல்லும் நாடகம்.
என்னைச் செதுக்கிய 3 நூல்கள்
சிம்பு, நடிகர்
சுஜாதா சிறுகதைகள்
சுஜாதா
ஒரு மனிதன் ஒரு வீடு
ஒரு உலகம்
ஜெயகாந்தன்
பெரியார் வாழ்க்கை வரலாறு
ஆஹா
சாமி.சிதம்பரனார்
படத்தொகுப்பு: கலையும் அழகியலும்
ஜீவா பொன்னுச்சாமி
விலை: ரூ.350
நிழல் - பதியம் பிலிம் அகாடமி வெளியீடு
படத்தொகுப்பு குறித்து தமிழில் வெளிவந்துள்ள
முதல் புத்தகம். திரைத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள், விஷுவல்
கம்யூனிகேஷன் மாணவர்கள், எடிட்டிங்கில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு
இந்நூல் புதிய பரிமாணங்களைத் திறந்துகாட்டும்.
கவனிக்க வேண்டிய 5
புத்தகங்கள்
இந்தியப் பொருளாதார மாற்றங்கள் 2018
ஜெ.ஜெயரஞ்சன்
மின்னம்பலம் வெளியீடு
பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்
ராம் சரண் சர்மா
தமிழில்: ப்ரவாஹன்
பாரதி புத்தகாலயம் வெளியீடு
அக்காளின் எலும்புகள்
வெய்யில்
கொம்பு வெளியீடு
மார்க்சியம் பயிலுவோம்
ந.முத்துமோகன்
என்சிபிஹெச் வெளியீடு
பனைமரச் சாலை
காட்சன் சாமுவேல்
நற்றிணை வெளியீடு
ஆஹா
புது வீடு புது உலகம்
கு.அழகிரிசாமி
புலம் வெளியீடு
விலை: ரூ.600
கு.அழகிரிசாமி சிறுகதை எழுத்தாளராகத்தான்
பெரும்பாலான தமிழ் வாசகர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். அவர் நாடகங்கள் மற்றும்
இலக்கியக் கட்டுரைகளிலும் தனித்து மிளிர்ந்தவர். அவர் எழுதிய ‘புது வீடு புது உலகம்’ நாவல் இரண்டு பெண்களின் அகவுலகச்
சித்தரிப்புகளின் வழியாக மானுட விழுமியங்களை விசாரணை செய்கிறது. நீண்ட
இடைவெளிக்குப் பிறகு இந்நாவல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
இரண்டாம் இடம்
எம்.டி.வாசுதேவன் நாயர்
தமிழில்: குறிஞ்சிவேலன்
சாகித்ய அகாடமி வெளியீடு
விலை: ரூ.190
பாரதக் கதைகளில் தர்மனும் அர்ஜுனனுமே
பெரும்பாலும் நாயகர்களாக இருப்பார்கள். எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாம் இடம்’ நாவலின் நாயகனோ பீமன். அவனது பார்வைக்
கோணத்திலிருந்து பாரதக் கதையை மறுவாசிப்பு செய்யவைக்கிறது இந்நாவல்.
என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- ப்ரியா பவானிசங்கர், நடிகை
பொன்னியின் செல்வன்
கல்கி
அர்த்தமுள்ள இந்து மதம்
கண்ணதாசன்
பெரியோர்களே தாய்மார்களே
ப.திருமாவேலன்