Monday 18 January 2016

சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது.  அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறைந்தது நான்கு பரிந்துரைகள் பெற்ற கதைகள் 150 சிறுகதைகள்  பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்பு மற்றும் பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டு
பட்டியல் தயார் செய்து இருக்கிறேன். தொகுப்பு மற்றும் பரிந்துரைகளை ஒன்றாக பரிந்துரை என்றே எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை செய்து இருக்கிறேன். இந்த ஆய்வு 5550 கதைகளின் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. ஒரே எண்ணிக்கையில் பரிந்துரை பெற்ற கதைகள் அகர வரிசையில் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. இனி ஆய்வின் முடிவை காணலாம்.

1. தனுமை   - வண்ணதாசன்                     -  16 பரிந்துரைகள்

2. விடியுமா? - கு ப ராஜகோபாலன்                 - 16 பரிந்துரைகள்

3.கடவுளும் கந்தசாமி பிள்ளையும்  - புதுமைப்பித்தன்   - 15 பரிந்துரைகள்

4. அம்மா ஒரு கொலை செய்தாள்அம்பை            - 14  பரிந்துரைகள்

5. அழியாச்சுடர்மௌனி                             - 14

6. எஸ்தர்           - வண்ண நிலவன்                  -14

7.புலிக்கலைஞன்  - அசோகமித்திரன்                    -14

8. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி                  -14

9. நகரம்          - சுஜாதா                               -14

10. சிலிர்ப்பு         - தி ஜானகிராமன்                     -13

11. நட்சத்திரக் குழந்தைகள் - பி எஸ் ராமையா            - 12

12. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி              -12

13. அக்னிப்பிரவேசம் - ஜெயகாந்தன்                   -11

14. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு ஐயர்          - 11

15. நாயனம்     - ஆ மாதவன்                        -10

16. சாப விமோசனம்      - புதுமைப்பித்தன்          - 10

17. வெயிலோடு போய்  - ச தமிழ் செல்வன்           - 10

18. அப்பாவின் வேஷ்டி  - பிரபஞ்சன்                 -  9

19. கன்னிமை   - கி ராஜநாராயணன்                   - 9

20. கோயில் காளையும் உழவு மாடும்  - சுந்தர ராமசாமி    - 9

21. சாசனம்        - கந்தர்வன்                        - 9

22. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி     - 9

23. தோணி - வ அ இராச ரத்தினம்                    - 9

24. பல்லக்கு தூக்கிகள்சுந்தர ராமசாமி               -9

25. புற்றில் உறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன்   -9

26. மூங்கில் குருத்து  - திலீப் குமார்                    -9

27. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி            -9

28. விகாசம்      - சுந்தர ராமசாமி                     -9

29. ஆற்றாமை  - கு ப ராஜகோபாலன்                   -8

30. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும்  - வேல ராமமூர்த்தி -8

31. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்              -8

32. கடிதம்     -   திலீப் குமார்                           -8

33. கதவு       - கி ராஜநாராயனன்                       -8

34. பாயசம்  -  தி ஜானகிராமன்                          -8

35. பிரசாதம் - சுந்தர ராமசாமி                            -8

36. மதினிமார்களின் கதை - கோணங்கி                    -8

37. ஒரு ஜெருசலேம் - பா செயப்பிரகாசம்                  -7

38. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம்  - ஆதவன்      -7

39. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்                        -7

40.  திசைகளின் நடுவே - ஜெயமோகன்                    -7

41. நாற்காலி - கி ராஜநாராயணன்                          -7

42. நிலை - வண்ணதாசன்                                 -7

43. பத்ம வியூகம் - ஜெயமோகன்                          -7

44. பாற்கடல்  - லா ச ராமாமிர்தம்                        -7

45. பிரபஞ்ச கானம் - மௌனி                             -7

46. பிரயாணம்   -அசோகமித்திரன்                         -7

47. மீன்         - பிரபஞ்சன்                             -7

48. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை       -7

49. வெள்ளிப்பாதரசம் - இலங்கையர்கோன்                 -7

50. அம்பலக்காரர் வீடு - பா செயப்பிரகாசம்                -6

51. அன்பளிப்பு  - கு அழகிரிசாமி                           -6

52. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மனியன்   - 6

53. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி                  -6

54.கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்                      -6

55. கயிற்றரவு - புதுமைப்பித்தன்                           -6

56. காஞ்சனை - புதுமைப்பித்தன் -                        - 6

57. காற்று - கு அழகிரிசாமி                                -6

58. கேதாரியின் தாயார் - கல்கி                             -6

59. சரஸாவின் பொம்மை - சி சு செல்லப்பா                -6

60. சாமியார் ஜூவுக்கு போகிறார் - சம்பத்                  -6

61. சுயரூபம் - கு அழகிரிசாமி                             -6

62. திரை - கு ப ராஜகோபாலன்                           -6

63. தேர்எஸ் பொன்னுதுரை                            -6

64. நசுக்கம் - சோ தர்மன்                                 -6

65. பற்றி எரிந்த தென்னை மரம் - தஞ்சை ப்ரகாஷ்         -6

66. பாற்கஞ்சி - சி வைத்திலிங்கம்                         -6

67. பிரும்மம் - பிரபஞ்சன்                                 -6

68 பைத்தியக்கார பிள்ளை - எம் வி வெங்கட் ராம்          -6

69. அரசனின் வருகை - உமா வரதராஜன்                  -5

70. ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா              -5

71. இழப்புந முத்துசாமி                                 -5

72. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்                        -5

73. ஒரு நாள் கழிந்தது       - புதுமைப்பித்தன்             -5

74. ஒரு பிடி சோறு - கனக செந்திநாதன்                   -5

75. கடிகாரம் - நீல பத்மநாபன்                             -5

76. கரையும் உருவங்கள் - வண்ணநிலவன்                 -5

77. கனவுக்கதை - சார்வாகன்                              -5

78. கற்பு -    வரதர்                                       -5

79. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்       -5

80. சன்னல் - சுந்தர ராமசாமி                             -5

81. சாவித்திரி - க நா சுப்ரமணியம்                        -5

82. சாவில் பிறந்த சிருஷ்டி - மௌனி                     -5

83. ஞானப்பால் - ந பிச்சமூர்த்தி                           -5

84. திரிவேணி - கு அழகிரிசாமி                            -5

85. தேடல் - வாஸந்தி                                   -5

86. நீர்மை - ந முத்துசாமி                               -5

87. நூருன்னிசா - கு ப ராஜகோபாலன்                    -5

88. பள்ளம் - சுந்தர ராமசாமி                             -5

89. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா                    -5

90.மரப்பாச்சிஉமா மகேஸ்வரி                        -5

91. மேபல் - தஞ்சை ப்ரகாஷ்                            -5

92.யுகசந்தி - ஜெயகாந்தன்                              -5

93. விஜயதசமி - ந பிச்சமூர்த்தி                        -5

94. ஜன்னல் - சுஜாதா                                  -5

95.அண்ணாச்சி     - பாமா                             -4

96. அந்நியர்கள் - ஆர் சூடாமணி                        - 4

97. அப்பாவின் பள்ளிக்கூடம் - ந முத்துசாமி              -4

98. அரும்பு   - மேலாண்மை பொன்னுச்சாமி              -4

99. ஆண்மை - ஜி நாகராஜன்                             -4

100. ஆனைத்தீ  - ரகுநாதன்                               -4

101. இருட்டில் நின்ற ...  சுப்ரமண்ய ராஜு                  -4

102. உயிர்கள் - சா கந்தசாமி                              -4

103. எதிர்பார்ப்புகள் - இராஜேந்திர சோழன்                  -4

104. ஏழு முனிக்கும் இளைய முனி - சி எம் முத்து           -4

105. கரிசலின் இருள்கள் - ப செயப்பிரகாசம்                  -4

106. காணி நிலம் வேண்டும் - கோபி கிருஷ்ணன்              -4

107. காசு மரம்    - அகிலன்                                 -4

108. காடன் கண்டது - பிரமிள்                               -4

109. காட்டில் ஒரு மான் - அம்பை                            -4

110. கோணல் வடிவங்கள் - இராஜேந்திர சோழன்              -4

111.  கோமதி -   கி ராஜநாரயணன்                           -4

112. சட்டை - கிருஷ்ணன் நம்பி                              -4

113. சித்தி - மா அரங்கநாதன்                                -4

114. சிறகுகள் முறியும் - அம்பை                            -4

115. சிறிது வெளிச்சம் - கு ப ராஜகோபாலன்                 -4

116. செவ்வாழை - அண்ணாதுரை                           -4

117. சேதாரம் - தனுஷ்கோடி ராமசாமி                       -4

118. தண்ணீர்த் தாகம்  - ஆனந்தன்                          -4

119. தத்துப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம்                   -4

120. துறவு - சம்பந்தர்                                      -4

121. தொலைவு - இந்திரா பார்த்தசாரதி                       -4

122. நதி - ஜெயமோகன் -                                  -4

123. நான் இருக்கிறேன் - ஜெயகாந்தன்                      -4

124. நிலவிலே பேசுவோம் - என் கே ரகுநாதன்                -4

125. நீர் விளையாட்டு    - பெருமாள் முருகன்                 -4

126. பலாப்பழம் - வண்ணநிலவன்                             -4

127. பறிமுதல்ஆ மாதவன்                                 -4

128.பதினெட்டாம் பெருக்கு - ந பிச்சமூர்த்தி                     -4

129. புனர்அம்பை                                          -4

130. புயல் - கோபி கிருஷ்ணன்                                -4

131. புவனாவும் வியாழக்கிரகமும் - ஆர் சூடாமணி               -4

132. பொன்னகரம் - புதுமைப்பித்தன்                            -4

133. மரி என்கிற ஆட்டுக்குட்டி -பிரபஞ்சன்                        -4

134. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித்          -4

135. மிருகம் - வண்னநிலவன்                                   -4

136. மீன்கள்  - தெளிவத்தை ஜோசப்                            -4

137. முள் - பாவண்ணன்                                        -4

138. முள்முடி - தி ஜானகிராமன்                                -4

139.  ரீதி  - பூமணி                                            -4

140. வண்டிற்சவாரி  - அ செ முருகானந்தம்                     -4

141. வாழ்வும் வசந்தமும் - சுந்தர ராமசாமி                      -4

142. விதை நெல் - ந பிச்சமூர்த்தி                               -4

143. விரித்த கூந்தல் - சுரேஷ்குமார் இந்திரஜித்                 -4

144. வெறுப்பை தந்த வினாடி - வத்ஸலா                      -4

145. வேட்டை - யூமா வாசுகி                                  -4

146. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன்                      -4

147. வைராக்கியம் - சிவசங்கரி                                 -4

148. ஜனனி - லா ச ராமாமிர்தம்                                -4

149. ஜின்னின் மணம் - நீல பத்மநாபன்                          -4

150. ஹிரண்ய வதம் - சா கந்தசாமி                              -4
 
  
இந்த ஆய்வுக்கு உதவிய தொகுப்புகள், மற்றும் நூல்கள் பட்டியல்

1. 100 சிறந்த சிறுகதைகள் - எஸ் ராமகிருஷ்ணன் - டிஸ்கவரி புக் பேலஸ்
2. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு - வீ அரசு  - அடையாளம்
3. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் - ஜெயமோகன் - கிழக்கு பதிப்பகம்
4. தமிழ் சிறுகதை களஞ்சியம்  தொகுதி 1 - அ சிதம்பரநாத செட்டியார் - சாகித்ய அக்காடமி
5. தமிழ் சிறுகதைகள் தொகுதி 2 - அகிலன்  - சாகித்ய அக்காடமி
6. நவீன தமிழ் சிறுகதைகள் - சா கந்தசாமி - சாகித்ய அக்காடமி
7. பெண் மைய சிறுகதைகள் - இரா பிரேமா - சாகித்ய அக்காடமி
8. எனக்கு பிடித்த கதைகள் - பாவண்ணன் - திண்ணை இணைய  இதழ்
9.குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை - கீரனூர் ஜாகிர் ராஜா
10. ஐம்பதாண்டு தமிழ் சிறுகதைகள் 1, 2  - சா கந்தசாமி - கவிதா
11. புதிய தமிழ் சிறுகதைகள் - அசோகமித்திரன் - நேஷனல் புக் ட்ரஸ்ட்
12. சமீபத்திய தமிழ் சிறுகதைகள் - வல்லிக்கண்ணன், ஆ சிவசுப்ரமணியம் -நேஷனல் புக் ட்ரஸ்ட்
13. நெல்லை சிறுகதைகள் - சு சண்முகசுந்தரம் - காவ்யா
14. கொங்கு சிறுகதைகள் - பெருமாள் முருகன் - காவ்யா
15. தஞ்சை சிறுகதைகள் - சோலை சுந்தர பெருமாள் - காவ்யா
16. சென்னை சிறுகதைகள் - காவ்யா சண்முக சுந்தரம் - காவ்யா
17. தில்லி சிறுகதைகள்சீனுவாசன்காவ்யா
18. பெங்களூர் சிறுகதைகள் - காவ்யா சண்முக சுந்தரம் - காவ்யா
19. மும்பை சிறுகதைகள் - அன்பாதவன், மதியழகன் சுப்பையா- ராஜம் வெளியீடு
20. கதைக்கோவை 1 முதல் கதைக்கோவை -4 வரை - அல்லையன்ஸ்
21. ஒரு நந்தவனத் தென்றல் - இ எஸ் தெய்வசிகாமணி- விஜயா பதிப்பகம்
22. தலை வாழை - இ எஸ் தெய்வசிகாமணி - அன்னம் பதிப்பகம்
23. ஆகாயப்பந்தல் - எஸ் சங்கரநாராயணன் - உதயகண்ணன் வெளியீடு
24. பரிவாரம் - எஸ் சங்கர நாராயணன் - உதய்கண்ணன் வெளியீடு
25. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் -1 முதல் 3 வரை - விட்டல் ராவ் - கலைஞன் பதிப்பகம்
26. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் -4 முதல் 6 வரை - விட்டல் ராவ், அழகிய சிங்கர் -கலைஞன் பதிப்பகம்
27. கதை அரங்கம் -மணிக்கதைகள் 1 முதல் 6 தொகுப்புகள் - மீனாட்சி புத்தக நிலையம்
28.நெஞ்சில் நிற்பவை 1, 2   - சிவசங்கரி - வானதி பதிப்பகம்
29. கரிசல் கதைகள் - கி ராஜநாராயணன் - அன்னம் பதிப்பகம்
30. கரிசல் கருதுகள் - உதய சங்கர், லட்சுமணபெருமாள்- அகரம் பதிப்பகம்
31. மீதமிருக்கும் சொற்கள் - அ வெண்ணிலா - அகநி பதிப்பகம்
32. தமிழ் சிறுகதைக் களஞ்சியம் - தமிழ்மகன் - விகடன்
33. கதா விலாசம் - எஸ் ராமகிருஷ்ணன் - விகடன்
34. கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா - உயிர்மை
35. காலத்தை வென்ற கதைகள் - குங்குமம் தோழி வலைத்தளம்
36. பெண்ணியக் கதைகள் - இரா பிரேமா - காவ்யா
37. தலித் சிறுகதைகள் - விழி பா இதயவேந்தன் - காவ்யா
38. தலித் சிறுகதை தொகுப்பு - ப சிவகாமி - சாகித்ய அக்காடமி
39. சிறுகதை மஞ்சரி - மீ ப சோமு
40. சில கதைகளும் நாவல்களும் - வெங்கட் சாமிநாதன்
41. க நா சுப்ரமணியம் கட்டுரைகள் - தொகுப்பு காவ்யா சண்முக சுந்தரம் - காவ்யா
42. 20 ஆம் நூற்றாண்டு புதுவை கதைகள் 1, 2 - பிரபஞ்சன், பாரதி வசந்தன்கவிதா
43. மதுரை சிறுகதைகள் - ஆ பூமிச்செல்வம் - அன்னம் பதிப்பகம்
44. யானைச்சவாரி - எஸ் சங்கர நாராயணன் - இருவாட்சி வெளியீடு
45. கோணல்கள் - சா கந்தசாமி - கவிதா
46. தஞ்சை கதைக் களஞ்சியம் - சோலை சுந்தர பெருமாள் -சிவசக்தி பதிப்பகம்
47. சிறந்த தமிழ் சிறுகதைகள்  - விட்டல் ராவ் - கலைஞன் பதிப்பகம்
48. 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதையாசிரியர்கள் 1, 2 - சா கந்தசாமிகவிதா
49. அன்று தொகுதி 1, 2  - மாலன்ஓரியண்ட் லாங்க்மென்
50. அன்புடன்  -  மாலன்  - இந்தியா டுடே
51. ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள் - மாலன்,அக்ரீஷ் - வாசகன் இதழ்
52. வானவில் கூட்டம் - உதயகண்ணன் - இருவாட்சி பதிப்பகம்
53. வேர்மூலம் - பொதியவெற்பன் - ருத்ரா பதிப்பகம்
54. கணையாழி கதைகள் - அசோகமித்திரன் - பூரம் பதிப்பகம்
55. மழை சார்ந்த வீடு - உத்தம சோழன்சத்யா பதிப்பகம்
56. சலாம் இசுலாம் - களந்தை பீர் முகம்மது - உதயகண்ணன் வெளியீடு
57. மலர்ச்சரங்கள், உயிர்ப்பு, சுடர்மணிகள் - சேதுராமன்பாவை பப்ளிகேஷன்ஸ்
58. ஜுகல் பந்தி - எஸ் சங்கர நாராயணன் - வடக்கு வாசல் வெளியீடு
59. அமிர்தம் - எஸ் சங்கர நாராயணன், சு வேணுகோபால் - நிவேதிதா புத்தக பூங்கா
60. காஃபிர்களின் கதைகள் - கீரனூர் ஜாகிர்ராஜா - எதிர் வெளியீடு
61. அழியாத கோலங்கள்- கீரனூர் ஜாகிர்ராஜா - ஆழி பதிப்பகம்
62. 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் - கீரனூர் ஜாகிர்ராஜா - ஆழி பதிப்பகம்
63.  இருள் விலகும் கதைகள் - விஜய மகேந்திரன் - தோழமை வெளியீடு
64. மெல்ல விலகும் பனித்திரை - லிவிங்க் ஸ்மைல் வித்யா - பாரதி புத்தகாலயம்
65. பாதரஸ ஓநாய்களின் தனிமை - ஆ பூமிச்செல்வம் - அன்னம் பதிப்பகம்
66. ஈழத்து சிறுகதைகள் - சிற்பி - பாரி நிலையம்
67. ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் - நீர்வை பொன்னையன் - பாலசிங்கம் பதிப்பகம்
68. முற்போக்கு கால கட்டத்து சிறுகதைகள் - செங்கை ஆழியான் - பூபால சிங்கம் பதிப்ப்கம்
69. ஈழத்து முன்னோடி சிறுகதைகள் - செங்கை ஆழியான் - பூபாலசிங்கம் பதிப்பகம்
70. ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் - தமிழர் தகவல் பத்திரிக்கை
71. மலேசிய தமிழ் உலக சிறுகதைகள் - மாத்தளை சோமு
72. வேரும் வாழ்வும் -1, 2, 3   - சை பீர்முகம்மதுமித்ர வெளியீடு
73. அயலகத் தமிழ் இலக்கியம் - சா கந்தசாமி - சாகித்ய அக்காடமி
74. கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் -மாலன் - சாகித்ய அக்காடமி
75. ஈழத்து இலக்கிய மலர் -தீபம் இதழ் - 1969
76. ஈழத் தமிழ் சிறுகதை மணிகள் - செம்பியன் செல்வன்
77. பனியும் பனையும் - இந்திரா பார்த்தசாரதி, எஸ் பொ
78. தமிழ்நேசன் பவுன் பரிசு பெற்ற கதைகள் - கணையாழி டிசம்பர் 2015
79. கலைகின்ற கருமேகங்கள்- பாரதிதாசன் நூற்றாண்டு போட்டி பரிசு கதைகள்  மலேசியா, 1993
80.வெள்ளிப்பாதரசம் - தொகுப்பு செ யோகநாதன் -1993
81. முகங்கள் - வி ஜீவகுமாரன்( புலம் பெயர் வாழ்வு பற்றிய உலக தமிழ் எழுத்தாளர்களின் கதைகள்) - 2011
82. கதையியல் - க பூரணசந்திரன் - அடையாளம்
83. சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் - ஜெகாதா - செண்பகா பதிப்பகம்
84. இருபதாம் நூற்றாண்டில் சில தமிழ் சிறுகதைகள் - சந்திரகாந்தன் - செண்பகா பதிப்பகம்
85. காலச்சுவடு கதைகள் - மனுஷ்யபுத்திரன் - காலச்சுவடு
86. புதியவர்களின் கதைகள் - ஜெயமோகன் - நற்றிணை
87. மீண்டும் புதியவர்களின் கதைகள்- ஜெயமோகன் - இணய தளம்
88. சிறப்பு சிறுகதைகள் - விகடன் - 2007
89. தலித் பற்றிய கொங்கு சிறுகதைகள் - பெருமாள் முருகன் - புதுமலர் பதிப்பகம்
90. விருட்சம் கதைகள் - அழகிய சிங்கர் - விருட்சம் வெளியீடு 1992
91. தீபம் கதைகள் - நா பார்த்தசாரதி
92. புதிய சலனங்கள் - அரவிந்தன் - காலச்சுவடு
93. கண்ணதாசன் இதழ் கதைகள்
94. உயிர் எழுத்து கதைகள் -க மோகனரங்கன் - உயிர் எழுத்து பதிப்பகம்
95. நடை இதழ் தொகுப்பு -கி அ சச்சிதானந்தம் - சந்தியா பதிப்பகம்
96. சிகரம் இதழ் தொகுப்பு - கமலாலயன்
97. மணிக்கொடி இதழ் தொகுப்பு - சிட்டி,அசோகமித்திரன், ப முத்துக்குமாரசுவாமி - கலைஞன் பதிப்பகம்
98. சரஸ்வதி களஞ்சியம் - விஜயபாஸ்கரன் - பரஞ்சோதி பதிப்பகம்
99. தீபம் இதழ் தொகுப்பு - வே சபாநாயகம் - கலைஞன் பதிப்பகம்
100. கலைமகள் இதழ் தொகுப்பு- கீழாம்பூர் - கலைஞன் பதிப்பகம்
101. கணையாழி களஞ்சியம் 1- வே சபாநாயகம் - பரஞ்சோதி பதிப்பகம்
102. கணையாழி களஞ்சியம் 2- இந்திரா பார்த்த்சாரதி - பரஞ்சோதி பதிப்பகம்
103. கணையாழி களஞ்சியம் 3, 4 -என் எஸ் ஜகந்நாதன் -கலைஞன் பதிப்பகம்
104. கசடதபற இதழ் தொகுப்பு - சா கந்தசாமி - கலைஞன் பதிப்பகம்
105. முல்லை இலக்கிய களஞ்சியம் - மு பழநியப்பன் - முல்லை பதிப்பகம்
106. கனவு இதழ் தொகுப்பு - சுப்ரபாரதி மணியன் - காவ்யா
107. முன்றில் இதழ் தொகுப்பு - காவ்யா சண்முக சுந்தரம் - காவ்யா
108.அமுதசுரபி இதழ் தொகுப்பு (தமிழ் சுரபி) -விக்கிரமன் -இலக்கியபீடம்
109. அன்னம் விடுதூது கதைகள் - கதிர் - அன்னம் பதிப்பகம்
110. சுபமங்களா இதழ் தொகுப்பு - இளைய பாரதி - கலைஞன் பதிப்பகம்
112. இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு - கி அ சச்சிதானந்தம் - சந்தியா
113.ஞானரதம் இதழ் தொகுப்பு - வே சபாநாயகம் - எனி இந்தியன் பதிப்பகம்
114.சொல்லில் அடங்காத வாழ்க்கை - தேவிபாரதி - காலச்சுவடு
115. தொப்புள் கொடி - திலகவதி - அம்ருதா பதிப்பகம்
116. சேரநாட்டு சிறுகதைகள் - திருவனந்தபுரம் தமிழ் சங்கம்
117. மனஓசை கதைகள் - சூரியதீபன் - தோழமை வெளியீடு
118. புதிய தமிழ் இலக்கிய வரலாறு - க சண்முகசுந்தரம் - சாகித்ய அக்காடமி
119. தமிழ் சிறுகதை பிறக்கிறது - சி சு செல்லப்பா - காலச்சுவடு
120. குருஷேத்திரம் தொகுப்பு நகுலன்
121. தென்னிந்திய சிறுகதைகள் - கே வி ஷைலஜா - வம்சி புக்ஸ்
122. வல்லமை சிறுகதைகள் - தாரினி பதிப்பகம்
123. சிறகிசைத்த காலம் - வே நெடுஞ்செழியன், பவா செல்லதுரை - வம்சி புக்ஸ்
124. பார்வைகள் - அசோகமித்திரன் - நற்றிணை பதிப்பகம்
125.சிக்கி முக்கி சிறுகதைகள் - தாரா கணேசன் - புதுமைபித்தன் நூலகம்
126. காக்கைகள் துரத்தி கொத்தும் தலைக்குரியவன் - மாதவராஜ் - வம்சி புக்ஸ்
127. ஆர்வி, கேசவமணி, நிலா ரசிகன், அ மு செய்யது, அருண் தமிழ் ஸ்டுடியோ, இமயம், சென்ஷி இவர்களின் இணய தள பதிவுகள்.
128. சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் வடக்கு வாசல் -அ இராஜசேகர் - ஸ்ரீ பாரதி புத்தகாலயம்
129. உலக தமிழ் இலக்கிய வரலாறு - (1851-2000 வரை) - இராம குருநாதன் கட்டுரை
130. தொடரும் வெளிச்சம் - குமரி பதிப்பகம் - 1995
131. வானதி சிறப்பு சிறுகதைகள் 1 - மகரம் - வானதி பதிப்பகம்
132. Selected Tamil Short stories  by Rajendira awasthi -
133. A Place to live – Edited by Dileepkumar – Tamil stories-  Penguin books
 
இந்த பட்டியல் சிறந்த சிறுகதைகள் எவை என்பதைக் காட்டுகிறது. சில எழுத்தாளர்களின் பல சிறுகதைகள் இதில் இடம் பிடித்துள்ளனஇன்னும் பல சிறுகதைகள் 3 பரிந்துரைகள் பெற்று இருக்கின்றன. பல சிறுகதைகள் 2 பரிந்துரைகள்
பெற்றுள்ளன. அவற்றை நல்ல கதைகள் என்ற தலைப்பில் அடுத்த கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.


E mail :- enselvaraju@gmail.com