Monday 23 February 2015

சிறந்த சிறுகதைகள் - ஒரு பார்வை-1





என்.செல்வராஜ்

    சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. வாரந்தோறும் பல வார இதழ்களும், நாளிதழின் வார  இணைப்புக்களும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன. பெரும்பான்மை மாத இதழ்களும் சிறுகதைகளை  வெளியிட்டு வருகின்றன. இலக்கியச் சிந்தனை அமைப்பு தமிழில் வெளிவரும்  சிறுகதைகளில் சிறந்தவற்றை  மாதாமாதம் தேர்ந்தெடுத்து வருகின்றது. வருட முடிவில் அந்த ஆண்டுக்கான சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கிறது.  12 மாதங்களுக்கான சிறந்த  கதைகளை வானதி பதிப்பகம் ஆண்டுக்கான கதையின் தலைப்பில் புத்தகமாக  வெளியிடுகிறது.

                         2000 வரையான கதைகளில் சிறந்த கதைகளைத் தொகுத்து சில பதிப்பகங்கள் சிறுகதைத் தொகுப்புகளை   வெளியிட்டுள்ளன. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் பாகம் 1 முதல் பாகம் 3 வரை விட்டல் ராவ் தொகுத்த   கதைகளை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் பாகம் 4 முதல் பாகம் 6  வரை  விட்டல் ராவ் மற்றும் அழகியசிங்கர் இணைந்து தொகுத்த கதைகளை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சா கந்தசாமி ஐம்பதாண்டு தமிழ்ச் சிறுகதைகள்தொகுதி 1 மற்றும் 2 என்ற பெயரில் 
தொகுத்துள்ளார். இந்த இரண்டு தொகுதிகளையும் கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டு  புதுவைக்   கதைகள் இரண்டு தொகுதிகளை பிரபஞ்சனும் பாரதி வசந்தனும் இணைந்து தொகுத்து கவிதா    பதிப்பகம்   வெளியிட்டுள்ளது. காவ்யா பதிப்பகம் நெல்லைச் சிறுகதைகள்,தஞ்சைச் சிறுகதைகள், கொங்குச் சிறுகதைகள்  சென்னைச் சிறுகதைகள், பெண்ணியச் சிறுகதைகள், தலித் மையச் சிறுகதைகள், ஆகிய சிறுகதைத் தொகுதிகளை  வெளியிட்டுள்ளது.  சாகித்ய அகாடமி அகிலனைக்கொண்டு ஒரு தொகுதியையும் சா கந்தசாமியைக் கொண்டு ஒரு தொகுதியையும் தொகுத்து வெளியிட்டுள்ளது. பெண்மையச் சிறுகதைகள் என்ற தொகுப்பையும் வெளியிட்டுள்ளது. என்பிடி புதிய தமிழ்ச் சிறுகதைகள் என்ற  அசோகமித்திரன் தொகுத்த  ஒரு தொகுப்பையும் வல்லிக்கண்ணன் தொகுத்த
 சமீபத்திய தமிழ்ச் சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பையும் வெளியிட்டுள்ளது. வானதி பதிப்பகம்  சிவசங்கரியின் 60 ஆவது பிறந்த நாளையொட்டி நெஞ்சில் நிற்பவை என்ற இரு தொகுதிகளை வெளியிட்டுள்ளது. மீனாட்சி பதிப்பகம் கதை அரங்கம் -மணிக்கதைகள் என்ற தலைப்பில் 6 நூல்களை   வெளியிட்டுள்ளது. கரிசல்  கதைகள் என்ற தொகுப்பு நூலை கி ராஜநாராயணன் தொகுத்து அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.குங்குமம் தோழி இணைய தளம் காலத்தை வென்ற கதைகள் என்ற தலைப்பில் 35 பெண்  எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை வெளியிட்டு இருக்கிறது. மீதமிருக்கும் சொற்கள் என்ற தொகுப்பு   நூலை  .வெண்ணிலா தொகுத்து அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் 1930 முதல் 2014 வரை பெண்    எழுத்தாளர்களின்   சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

             எஸ் ராமகிருஷ்ணன் 100 சிறந்த சிறுகதைகளை தொகுத்து அந்த புத்தகத்தை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டு இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு என்ற தலைப்பில் வீ அரசு நூறு சிறுகதைகளை  தொகுத்து  அதை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.   ஜெயமோகன் சிறந்த கதைகள் என 250 க்கு  மேற்பட்ட கதைகளை  தனது இணய தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

      எஸ் ராமகிருஷ்ணன் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள்


    1 காஞ்சனை- புதுமைப்பித்தன்  2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்
     புதுமைப்பித்தன்               3. செல்லம்மாள்-   புதுமைப்பித்தன் 
    4. அழியாச்சுடர்      - மௌனி  5. பிரபஞ்ச கானம் -  மௌனி   
    6. விடியுமா       - கு பா ரா
    7. கனகாம்பரம்   -  கு பா ரா   8. நட்சத்திர குழந்தைகள் -  பி எஸ் ராமையா
    9. ஞானப்பால்    --பிச்சமூர்த்தி  10. பஞ்சத்து ஆண்டி    - தி ஜானகிராமன்
    11. பாயசம்    -  தி ஜானகிராமன்   12. ராஜா வந்திருக்கார்    - கு அழகிரிசாமி
    13. அன்பளிப்பு-  கு அழகிரிசாமி  14. இருவர் கண்ட ஒரே கனவு
       கு அழகிரிசாமி                15.கோமதி  - கி ராஜநாராயணன்                
    16. கன்னிமை      -  கி ராஜநாராயணன்   17.கதவு   - கி ராஜநாராயணன்                  
    18. பிரசாதம்  - சுந்தர ராமசாமி  19. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி    
    20. விகாசம் - சுந்தர ராமசாமி   21. பச்சைக்கனவு - லா சா ராமாமிருதம்           
    22. பாற்கடல்    -  லா சா ராமாமிருதம்  23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்                 
    24. புலிக்கலைஞன்  -  அசோகமித்திரன்  25. காலமும் ஐந்து குழந்தைகளும்   
    -அசோகமித்திரன்  26. பிரயாணம்-  அசோகமித்திரன் 27. குருபீடம்-   
     ஜெயகாந்தன் 28. முன்நிலவும் பின்பனியும் -  ஜெயகாந்தன்                               
    29. அக்னிபிரவேசம் -  ஜெயகாந்தன்  30. தாலியில் பூச்சூடியவர்கள்-
        பா ஜெயப்பிரகாசம்      31. காடன் கண்டது --பிரமிள்                         
    32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் --ஆதவன்
    33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்-  ஆதவன்
    34. பைத்தியக்கார பிள்ளை -  எம் வி வெங்கட்ராம்
    35. மகாராஜாவின் ரயில் வண்டி -  அ முத்துலிங்கம்  
    36. நீர்மை  -  ந முத்துசாமி
    37. அம்மா ஒரு கொலை செய்தாள் -  அம்பை  
    38. காட்டிலே ஒரு மான்  -  அம்பை
    39. எஸ்தர் -   வண்ணநிலவன்      40. மிருகம் -   வண்ணநிலவன்
    41. பலாப்பழம்    வண்ணநிலவன்  42. சாமியார் ஜூவிற்கு போகிறார்-   சம்பத்
    43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திர சோழன்   44. தனுமை  -
        வண்ணதாசன்   45. நிலை  - வண்ணதாசன்   46. நாயனம்-  ஆ மாதவன்
    47. நகரம்    - சுஜாதா    48. பிலிமோத்ஸவ்  -  சுஜாதா
    49. தக்கையின் மீது நான்கு கண்கள் -  சா கந்தசாமி
    50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழ வேஷ்டி அணிந்த மனிதரும் --  ஜி நாகராஜன்
    51.ஓடிய கால்கள்      - ஜி நாகராஜன்   52. தங்க ஒரு   -  கிருஷ்ணன் நம்பி
    53. மருமகள் வாக்கு    -   கிருஷ்ணன் நம்பி    54. ரீதி      - பூமணி
    55. இந்நாட்டு மன்னர்  -  நாஞ்சில் நாடன் 56.அப்பாவின் வேஷ்டி  - பிரபஞ்சன்     
    57. மரி என்னும் ஆட்டுக்குட்டி  -  பிரபஞ்சன்  58.சோகவனம்  -  சோ தர்மன்
    59. இறகுகளும் பாறைகளும்   - மாலன் 60. ஒரு கப் காப்பி-- 
       இந்திரா பார்த்தசாரதி   61. மூங்கில் குருத்து       -  திலீப் குமார்  
    62. கடிதம்      - திலீப் குமார்   63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார்
       இந்திரஜித்   64. சாசனம்  -  கந்தர்வன்  65. மேபல்     - தஞ்சை பிரகாஷ்                      
    66. அரசனின் வருகை - உமா வரதராஜன்  67. நுகம்  -  எக்பர்ட் சச்சிதானந்தம்                   
    68. முள்   -   சாரு நிவேதிதா    69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்  -
       சுப்ரபாரதி மணியன்  70. வனம்மாள்-  அழகிய பெரியவன்
     71. கனவுக்கதை   -  சார்வாகனன்   72. ஆண்மை -   எஸ் பொன்னுத்துரை
     73. நீக்கல்கள் -  சாந்தன்    74. மூன்று நகரங்களின் கதை - கலாமோகன்
     75. அந்நியர்கள் -  சூடாமணி          76. சித்தி  -   மா அரங்கநாதன்
     77. புயல்   -  கோபி கிருஷ்ணன்  78. மதினிமார்கள் கதை     - கோணங்கி
     79. கறுப்பு ரயில்  -  கோணங்கி 80. வெயிலோடு போய்   - ச தமிழ்ச்செல்வன்
     81. பத்மவியூகம்     - ஜெயமோகன்  82. பாடலிபுத்திரம்        -ஜெயமோகன்
     83. ராஜன் மகள்     -  பா வெங்கடேசன்      84. தவரங்களின் உரையாடல்
         எஸ் ராமகிருஷ்ணன்  85. புலிக்கட்டம்       -  எஸ் ராமகிருஷ்ணன்  
    86. இருளப்பசாமியும் 21 ஆட்டு கிடாய்களும் - வேல ராமமூர்த்தி
    87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்பு லிங்கம்      88. காலத்தின் விளிம்பில்
         -  பாவண்ணன்    89. காசி  -  பாதசாரி  90. சிறுமி கொண்டு வந்த மலர் 
        - விமலாதித்த மாமல்லன்    91. மூன்று பெர்நார்கள்  - பிரேம் ரமேஷ்         
   92. மரப்பாச்சி    -  உமா மகேஸ்வரி   93. வேட்டை   - யூமா வாசுகி            
   94. நீர் விளையாட்டு     -  பெருமாள் முருகன்     95. அழகர்சாமியின் குதிரை      
       பாஸ்கர் சக்தி   96.  கண்ணியத்தின் காவலர்கள் -  திசேரா
   97. ஹார்மோனியம்  -   செழியன்     98. தம்பி-   கௌதம சித்தார்த்தன்
   99. ஆண்களின் படித்துறை      -  ஜே பி சாணக்யா      100. பூனைகள்
        இல்லாத வீடு  -   சந்திரா


                 இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு  - பதிப்பாசிரியர்   வீ அரசு  , அடையாளம்  பதிப்பகம். இந்த நூல் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 20 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

                        

  பகுதி 1  
 1. செல்லம்மாள்- புதுமைப்பித்தன்     2. விடியுமா?      -  கு ப ராஜகோபாலன்
 3. விஜய தசமி  - ந பிச்சமூர்த்தி   4. நக்ஷத்திரக் குழந்தைகள் - பி எஸ் ராமையா
 5.ஒரு ஜோடிக் காளை -  தி ஜ ர  6. சசாங்கனின் ஆவி  - ந சிதம்பர சுப்ரமணியன்
 7. கோட்டை வீடு   -  வா ரா  8 சாவித்திரி                - க நா சுப்ரமணியம்
 9. பட்டுவின் கல்யணம் - கா சி வேங்கடரமணி   10.செம்படவச் சிறுமி - சங்கு
    சுப்ரமணியம்   11. நாகசுரம் -   த ந குமாரசாமி 12. அநுபவ நாடகம்    -  கல்கி
 13. அமிர்தம் -  கா ஸ்ரீ ஸ்ரீ         14. குழந்தையின் கேள்வி -   கி சந்திரசேகரன்
 15. பலாச்சுளை-  ரஸிகன்        16. மனமகிழ்ச்சி - திருலோக சீதாராமன்
 17. காலச்சக்கரம்  -  வை மு கோதை நாயகி அம்மாள்  18. குலவதி   -  கு ப
    சேது அம்மாள்       19. வருஷப்பிறப்பு  -  எஸ் விசாலாக்ஷி
 20. நொண்டிக்குழந்தை - சி சு செல்லப்பா
                        பகுதி  2
 21. அழியாச்சுடர்  - மௌனி      22. மீன் சாமியார் -  எம் எஸ் கல்யாணசுந்தரம்
 23. விவேகம்       - எஸ் வி வி     24. கடைசி வேட்டை-  சங்கர ராம்
 25. பிரதிவாதி பயங்கரம் - நாரண துரைக்கண்ணன்   26. தெளிவு  -
     வல்லிக்கண்ணன்       27. தொடரும் நிழல் - எம் வி வெங்கட் ராம் 
 28. தேவகி  -  குகப்ரியை   29. சுதந்திரப்போர்  -  குமுதினி                         
 30. உத்தராயணம்  - லா சா ராமாமிர்தம்     31. காற்று  - கு அழகிரிசாமி                            
 32. சிலிர்ப்பு-     தி ஜானகிராமன்     33. கண்ணம்மா -  விந்தன்                               
 34. ஆனைத்தீ   -  ரகுநாதன்             35. துன்பக்கதை -  டி கே சீனிவாசன்             
 36. சட்டை     -  கிருஷ்ணன் நம்பி     37. மிஸ் பாக்கியம்    -   ஜி நாகராஜன்            
 38. நான் இருக்கிறேன்   -ஜெயகாந்தன்   39.நாற்காலி   - கி ராஜநாராயணன்                
 40. பள்ளம்  -  சுந்தரராமசாமி

                      பகுதி 3

  41. அம்மா ஒரு கொலை செய்தாள்-- அம்பை  42. புவனாவும் வியாழக் கிரகமும்
      -ஆர் சூடாமணி                43. அச்சுவெல்லம் -  ஐராவதம்              
  44. அவள் அறியாள்    - என் ஆர் தாசன்    45. தக்கையின் மீது நான்கு கண்கள்- 
      சா கந்தசாமி  46. கனவுக்கதை -  சார்வாகன் 47. நீர்மை-  ந முத்துசாமி                    
  48. புலிக்கலைஞன்  - அசோகமித்திரன்    49. நாயணம் -    ஆ மாதவன்                 
  50. மனச்சாய்வு    - ஜெயந்தன்          51. தொலைவு -- பூமணி                      
  52. எஸ்தர்  -   வண்ணநிலவன்    53. தோப்பிற்குள் சில தனிமரங்கள் - லிங்கன்      
  54. சாசனம்    -  கந்தர்வன்     55. கோணல் வடிவங்கள்  -  ராஜேந்திர சோழன்  
  56.பேய்க்கவிதை -  தஞ்சை ப்ரகாஷ் 57. ஒரு கிராமத்து ராத்திரிகள்
     பா செயப்பிரகாசம் 58. நிறங்கள்-  வீர வேலுச்சாமி  59. சமவெளி   -
     வண்ணதாசன்      60. கிழிசல்  -நாஞ்சில் நாடன்
                   
                  பகுதி 4

 61. கடிதம் -   திலீப்குமார்          62. புயல்   -  கோபிகிருஷ்ணன்
 63. ஹோமம்  -  எஸ் எம் ஏ ராம்   64. கோடரி -  பிரமிள்
 65.அப்பாவின் வேஷ்டி -பிரபஞ்சன்   66. மறைந்து திரியும் கிழவன்  - சுரேஷ்குமார்  
    இந்திரஜித்                       67.கடல்  - தோப்பில் முகமது மீரான்       68. சாம்ராஜ்யம்  - களந்தை பீர்முகம்மது                                       69.நைந்த ஆடையும் நாற்சந்தியும்  - காவேரி    70. ()ஹிம்சை   - சோ தர்மன்
71. சேதாரம்    தனுஷ்கோடி ராமசாமி      72. பாவனைகள்  -  ச தமிழ்ச்செல்வன்
73. சிபிகள்  -  மேலாண்மை பொன்னுசாமி   74. ஏழு முனிக்கும் இளைய முனி - சி எம் முத்து   75. எருது கட்டு  - வேல ராமமூர்த்தி   76. பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப்பொழுது உதயசங்கர்       77. ஒரு சம்சாரியின் பஞ்சங்கள்  - அ முத்தானந்தம்   78. ரகசிய வேட்கை -  சி மோகன்                                     79. காரல் மார்க்சும் தானு ஆசாரியும்  - தமிழவன்     80. காவடியாட்டம் -  யூமா வாஸுகி
                       
                                 பகுதி  5

81. மதினிமார்கள் கதை  -  கோணங்கி   82. உயிர்த்தெழுதல்  - விமலாதித்த     மாமல்லன்            83. மனவெளி நாடகம்  -ரமேஷ் பிரேம்               84. மைத்ரேயி -எம் டி முத்துகுமாரசாமி    85. ஆறாம் நாள்  - டி கண்ணன்  86. தம்பி  -   கௌதம சித்தார்த்தன்   87. உண்ணிகள்    - பெருமாள் முருகன்    88. சாயும் காலம்    -  ஜீ முருகன்   89. குருவனைப் பிடிக்க பெண் தெய்வம் கூறிய யோசனை ஜனகப்பிரியா     90. பஞ்சாயத்து   -   தமயந்தி  91. வருகை -  உமா மகேஸ்வரி  92. பொன்னுத் தாயி-பாமா     93. உக்கிலு     - குமாரசெல்வா      94. விளக்குப்பூச்சி  -  கண்மணி குணசேகரன்   95. கோவம்   -  உஞ்சை ராசன்   96. ஒரு பொங்கலும் சில எச்சில் பருக்கைகளும் -  அபிமானி      97. பலி  -  தேவி பாரதி                98. கிளுக்கி    -பாப்லோ அறிவுக்குயில்    99. கறியும் சோறும்  - விழி பா இதயவேந்தன் 100. இலைகள் சிரித்தன  -  பாதசாரி


  தமிழ்ச் சிறுகதை : விமரிசகனின் சிபாரிசு ( ஜெயமோகன்) நவீன தமிழ் இலக்கிய    அறிமுகம்     என்ற நூலில் ஜெயமோகன்  பரிந்துரைக்கும் சிறுகதைகளின்
   பட்டியல்

     1. கண்ணன் பெருந்தூது  -  அ மாதவையா
     2. ரயில்வே ஸ்தானம்    -  சுப்ரமணிய பாரதி
     3.புதுமைப்பித்தன் -   1. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்    2. கயிற்றரவு   3.
   செல்லம்மாள்  4. சிற்பியின் நகரம் 5. கபாடபுரம்  6. ஒரு நாள் கழிந்தது  7.
   அன்றிரவு     8. சாமியாரும் குழந்தையும் சீடையும் 9. காலனும் கிழவியும் 10.
    சாபவிமோசனம்  11. வேதாளம் சொன்ன கதை  12. பால்வண்ணம் பிள்ளை
   4. மௌனி        1. அழியாச்சுடர்        2. பிரபஞ்ச கானம்    3. மாறுதல்
   5. கு ப ராஜகோபாலன்  1.சிறிது வெளிச்சம்    2. விடியுமா 3.ஆற்றாமை 
                           4. பண்ணைச்செங்கான்
   6. ந பிச்சமூர்த்தி           1. காவல்  2. அடகு  3.விதைநெல் 4.ஒரு நாள்
                              5. தாய்  6. ஞானப்பால்
   7. பி எஸ் ராமையா      1. நட்சத்திரக் குழந்தைகள்
   8. எம் எஸ் கல்யாணசுந்தரம்  1.மீன் சாமியார்   2. பொன்மணல்
   9. ரஸிகன்                  1.ஊருக்குப் பெரியமனிதர்
   10. சி சு செல்லப்பா        1. சரசாவின் பொம்மை  2. வெள்ளை
   11. க நா சுப்ரமணியம்   1.தெய்வ ஜனனம்
   12. லா சா ராமாமிர்தம்    1. பாற்கடல்  2. பச்சைக்கனவு 3.ஜனனி 4. புற்று
                             5. ராஜகுமாரி 6.அபூர்வராகம்
   13. எஸ் பொன்னுத்துரை   1. அணி  2. ஆண்மை
   14. கு அழகிரிசாமி       1.அன்பளிப்பு  2. ராஜா வந்திருக்கார் 3. அழகம்மாள்  
                           4.இருவர் கண்ட ஒரே கனவு        5.பெரிய மனுஷி 
                           6. பாலம்மாள் கதை  7. சிரிக்கவில்லை 8. தரிசனம்
   15. தி ஜானகிராமன்   1. தீர்மானம்  2. சிலிர்ப்பு 3. பாயசம்  4. பரதேசி வந்தான்
                        5. கடன் தீர்ந்தது 6. கோதாவரிகுண்டு  7. தாத்தாவும்
                        பேரனும்  8. மாப்பிள்ளைத்தோழன்   9.பஞ்சத்து ஆண்டி
   16. கி ராஜநாராயணன்    1. கன்னிமை  2. பேதை 3. கோமதி 
                           4. கறிவேப்பிலைகள் 5. நாற்காலி  6. புவனம் 7. அரும்பு 
                           8. நிலை நிறுத்தல்
   17. சுந்தர ராமசாமி      1.ஜன்னல் 2. வாழ்வும் வசந்தமும் 3. பிரசாதம் 
                           4.பல்லக்குத்தூக்கிகள்     5. ரத்னாபாயின் ஆங்கிலம் 
                           6. கோயில் காளையும் உழவு மாடும்    7. காகங்கள்  
                           8. கொந்தளிப்பு
   18. அசோகமித்திரன்      1. விமோசனம் 2. காத்திருத்தல்  3. காட்சி 
                           4. பறவை வேட்டை 5. குழந்தைகள்  6. காலமும் ஐந்து
                           குழந்தைகளும் 7. புலிக்கலைஞன் 8.காந்தி 9. பிரயாணம்
                           10.பார்வை  11.மாறுதல்   12. குகை ஓவியங்கள் 
   19. பிரமிள்                       1. காடன் கண்டது    2. நீலம்
   20. தெளிவத்தை ஜோசப்   1.  மீன்கள்
   21. சார்வாகன்              1.யானையின் சாவு
   22. வல்லிக்கண்ணன்          1.சிவப்புக்கல் மூக்குத்தி
   23.எம் வி வெங்கட் ராம்     1.பைத்தியக்காரப் பிள்ளை

   24. ந முத்துசாமி      1. நீர்மை    2. செம்பொனார் கோயிலுக்கு போவது எப்படி
                         3.படுகளம் 4. பிற்பகல்
   25. அ முத்துலிங்கம்  1.கறுப்பு அணில் 2. ரி 3. கொழுத்தாடு பிடிப்பேன்
                        4. ஒட்டகம் 5. ராகுகாலம்  6.பூமாதேவி
   26. சா கந்தசாமி      1.தக்கையின் மீது நான்கு கண்கள்  2. ஹிரண்யவதம்
                        3. சாந்தகுமாரி
   27. ஆதவன்         1. முதலில் இரவு வரும்  2. ஒரு பழய கிழவரும் புதிய
                 உலகமும்   3. சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்   4. லேடி
   28. ஜி நாகராஜன்  1. டெரிலின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த  மனிதர்
                     2. யாரோ முட்டாள் சொன்ன கதை
   29. கிருஷ்ணன் நம்பி  1. மருமகள் வாக்கு 2. தங்க ஒரு..... 3. சத்திரத்து வாசலில்
   30. ஆர் சூடாமணி        1. டாக்டரம்மா அறை
   31. இந்திரா பார்த்தசாரதி   1. குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
                             2. இளஞ்செழியன் கொடுத்த பேட்டி  3. ஒரு கப் காபி
   32. ஆ மாதவன்  1. நாயனம்   2. பூனை  3. பதினாலு முறி  4. புறா முட்டை
                    5. தண்ணீர் 6. அன்னக்கிளி
   33. சுஜாதா         1. நகரம்   2. குதிரை  3. மாஞ்சு  4. ஓர் உத்தம தினம்
                      5. நிபந்தனை 6. விலை 7. எல்டொரோடா
   34. ஜெயகாந்தன்    1.யாருக்காக அழுதான் 2. குருபீடம்  3. எங்கோ யாரோ
                       யாருக்காகவோ  4.நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ  
                       5. நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் 5. முன் நிலவும்
                       பின் பனியும் 7. அக்கினிப் பிரவேசம் 8.இறந்த காலங்கள்
   35.சு சமுத்திரம்     1. திரிசங்கு நரகம் 2. மானுடத்தின் நாணயங்கள்
                       3. பனையேறி குடும்பத்தில்  பிறந்தவன்

   36. தோப்பில் முகம்மது மீரான் - 1.வட்டக்கண்ணாடி 2. சுருட்டுப்பா
                                   3. அனந்தசயனம் காலனி 
   37. மா அரங்கநாதான்    1.சித்தி  2. மெய்கண்டார் நிலையம்
   38. வண்ணதாசன்    1.தனுமை 2.நிலை 3. சமவெளி 4. தோட்டத்துக்கு
                        வெளியிலும் பூக்கள்    5. போய்க்கொண்டிருப்பவள்
                        6. வடிகால்
   39. வண்ணநிலவன்       1. எஸ்தர்  2. பலாப்பழம் 3.துன்பக்கேணி  4. மிருகம்
   40. நாஞ்சில் நாடன்       1. பாம்பு  2. வனம் 3. மனகாவலப்பெருமாள் பிள்ளை
                             பேத்தி மறுவீடும்  வெஜிடபிள்  பிரியாணியும் 4.பாலம்  
                             5. சாலப்பரிந்து
                              
   41. பூமணி              1.நொறுங்கல்  2.தகனம்    3. கரு 
  

 42.பிரபஞ்சன்         1. மனசு  2. கருணையினால்தான்  3. அப்பாவின் வேஷ்டி 
 43. ராஜேந்திரசோழன்    1. பாசிகள்  2. புற்றில் உறையும் பாம்புகள்
                         3. வெளிப்பாடுகள்
 44. திலீப்குமார்               1. தீர்வு  2.மூங்கில் குருத்து  3. கடிதம்
                              4. அக்ரஹாரத்தில் பூனை
 45. சுரேஷ்குமார் இந்திரஜித்   1. விரித்த கூந்தல்  2. பிம்பங்கள்
 46. விமலாதித்த மாமல்லன்   1. சிறுமி கொண்டுவந்த மலர்
 47. அம்பை         1. அம்மா ஒரு கொலை செய்தாள்  2. வீட்டின் மூலையில்
                     ஒரு   சமையல் அறை  3. கறுப்புக் குதிரைச் சதுக்கம்
 48. கந்தர்வன்           1. சாசனம்  2. காளிப்புள்ளே  3. கதைதேசம் 4.பத்தினி
                         5. உயிர்  6. மங்களநாதர்
 49. கோபி கிருஷ்ணன்  - 1. மொழி அதிர்ச்சி  2. காணி நிலம் வேண்டும்
 50. ச தமிழ்ச்செல்வன்    1. வெயிலோடு போய்   2. வாளின் தனிமை
 51. விக்ரமாதித்யன்         1. திரிபு
 52. எக்பர்ட் சச்சிதானந்தம்    1. நுகம்  2. பிலிப்பு
 53. பாவண்ணன்            1. பேசுதல்   2. முள்
 54. சுப்ரபாரதி மணியன்        1. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்
                               2. உறைவிடங்கள்
 55.கோணங்கி       1. மதினிமார்கள் கதை  2. கோப்பம்மாள்  3. கம்மங்கருது
                    4.கருப்பன் போன பாதை 5.கறுத்த பசு  6.தாத்தாவின் பேனா
                     7. ம்லையின் நிழல்  8. கருப்பு ரயில்
 56. ஜெயமோகன்     1. திசைகளின் நடுவே 2. போதி  3. படுகை
                      4. மாடன் மோட்சம்  5. கடைசி முகம்  6. முடிவின்மைக்கு
                      அப்பால்
 57. எஸ் ராமகிருஷ்ணன் -  1. தாவரங்களின் உரையாடல் 2. வேனல் தெரு
                            3. பறவைகளின் சாலை
 58. யுவன் சந்திரசேகர்  -1. தாயம்மா பாட்டி சொன்ன 41 கதைகள் 2. ஒளி விலகல்
                         3. ஊர் சுற்றிக் கலைஞன்   4. அவரவர் கதை 5. நார்ட்டன்
                         துரையின் மாற்றம் 6. கடல் கொண்ட நிலம்
 59. பிரேம் ரமேஷ்      -1. கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக்குறிப்புகள்
                         2. மூன்று பெர்நார்கள்
 60. பவா செல்லதுரை    -  1. ஏழுமலை ஜமா  2. ஓணான் கொடி சுற்றிய  
                              ராஜாம்பாள் நினைவுகள்
 61. சு வேணுகோபால்   1. மறைந்த சுவடுகள் 2. மீதமிருக்கும் கோதும் காற்று
                       3. களவு போகும் புரவிகள்   4. தங்கமணல்
 62. உமா மகேஸ்வரி         1. மரணத்தடம்    2.மரப்பாச்சி
 63. யூமா வாசுகி             1. வேட்டை 2. உயிர்த்திருத்தல்  3. ஜனனம்
 64. வேல ராமமூர்த்தி      1. அன்னமயில் 2.இருளப்பசாமியும் 21 கிடாய்களும்
  
 65. பெருமாள் முருகன்     1. நீர் விளையாட்டு   2. திருச்செங்கோடு
 66. எம்.கோபாலகிருஷ்ணன்  1.ஒற்றைச் சிறகு 2.வலியின் நிறம்
 67. கண்மணி குணசேகரன்     1. வண்ணம் 2. ஆதண்டார் கோயில் குதிரை
 68. அழகிய பெரியவன்         1.விலங்கு   2. வனம்மாள்
 69. இமையம்                1. மாடுகள்
 70. லட்சுமணப் பெருமாள்       1. கதை சொல்லியின் கதை 2. நீதம்

 
                         தமிழ்ச் சிறுகதைகள் தொகுதி 2,  இந்த தொகுப்பு நூலை அகிலன் தொகுத்து சாகித்ய அக்காதெமி  1993 ல்    வெளியிட்டு இருக்கிறது. இதில் 18 கதைகள் உள்ளன. கதைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.
                        
  1. தேங்காய்த் துண்டுகள் - மு வரதராசன்     2. காற்று  -   கு அழகிரிசாமி
  3. கதவு   -  கி ராஜநாராயணன்            4. நரிக்குறத்தி -  ஜெகசிற்பியன்
  5. ராஜ தரங்கினி  -  கோவி மணிசேகரன்  6. நாசகாரக்கும்பல் - இந்திரா    பார்த்த்சாரதி       
  7. விடிவதற்குள்  -  அசோகமித்திரன்                      
  8. நீல ரிப்பனும் வானவில்லும் -  ஆர் சூடாமணி
  9. புதிய பாலம்     - நா பார்த்தசாரதி     10. நீலச்சிலுவை  -   என் ஆர் தாசன்
  11. யுகசந்தி   - ஜெயகாந்தன்              12.  இவன் -  ஜெயந்தன்
  13. அரிசி        - நீல பத்மநாபன்         14.உயிர்கள் -  சா கந்தசாமி
  15. மிதப்புகள் முறியும்- பாலகுமாரன் 16. ஓர் உல்லாசப் பயணம்-  வண்ணதாசன்
  17. ரீதி      -  பூமணி              18. கரையும் உருவங்கள் - வண்ணநிலவன்

                       நவீன தமிழ்ச் சிறுகதைகள்  (1960-1995)  இந்த தொகுப்பு நூலை சா கந்தசாமி தொகுத்து சாகித்ய அக்காதெமி    2000ல் வெளியிட்டு இருக்கிறது. இதில் 35 கதைகள் உள்ளன. கதைகளின் பட்டியலைப் பார்ப்போம்.
  1.அப்பாவிடம் என்ன சொல்வது  - அசோகமித்திரன்    2. சீசர்-  ஜெயகாந்தன்
  3. ஒரு நாள்  -  நகுலன்                   4. ஜன்னல் -  சுஜாதா
  5. பக்கத்தில் வந்த அப்பா - சுந்தர ராமசாமி  6. கடிகாரம் - நீல பத்மநாபன்
  7.தீராக்குறை  -  ஜி நாகராஜன்            8. காவல்  - ஆ மாதவன்
  9. சட்டை    - கிருஷ்ணன் நம்பி  10. அப்பாவின் பள்ளிக்கூடம்  - ந முத்துசாமி
  11. பயணம்   -   வாஸந்தி     12. மூன்றாவது பிரார்த்தனை - சா கந்தசாமி
  13. அம்பலகாரர் வீடு  - பா செயப்பிரகாசம் 14. பலாப்பழம்      -  வண்ணநிலவன்
  15. மீன்          - பிரபஞ்சன்            16. ம்ருத்யு           - அம்பை
  17. மைலாப்பூர்  -  மா அரங்கநாதன்      18. மன்னி     -   ஐராவதம்
  19. சின்னவாடு    - விட்டல் ராவ்        20. வருகை  - வண்ணதாசன்
  21. கிழிசல்   - நாஞ்சில் நாடன்       22. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் 
     - திலகவதி 23. சாசனம்     -  கந்தர்வன் 24. சிலிர்ப்புகள் -- சி ஆர் ரவீந்திரன்
  25. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன் 26. கடிதம் -திலீப்குமார்
    27. தனுஷ்கோடி  -  கோணங்கி    28. காலத்தின் ஆவர்த்தனம் -  தோப்பில்
        முகம்மது மீரான்   29. நாதம்  -  சுப்ரபாரதி மணியன்    30. மரங்களின்
         கதை  -  பாவண்ணன்
    31. நதி        - ஜெயமோகன்     32. காலாட்படை பற்றிய குற்றப்பத்திரம் - 
        எஸ் ராமகிருஷ்ணன்          33. சருகுகள் -  சோ தர்மன்            
    34. திருட்டு     ம ராஜேந்திரன்    35. சிதறல்கள்  -  விழி பா இதயவேந்தன்

                பெண் மையச் சிறுகதைகள்  என்ற தொகுப்பு நூலை இரா பிரேமா தொகுத்து சாகித்திய அகாதெமி 2007 ல்  வெளியிட்டுள்ளது. பெண்களைப் பற்றிப் பல்வேறு எழுத்தாளர்களால் பல்வேறு காலக்கட்டங்களில்  படைக்கப்பட்ட   சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் உள்ள கதைகள்
                              
  1.திரௌபதி கனவு   -  அ மாதவையா   2. காந்தாமணி     -  பாரதியார்
  3. கண்ணீரும் கடிதமும் கல்கி         4. திரை             -கு பா ரா
  5. சாபவிமோசனம் -  புதுமைப்பித்தன்   6.கௌரவ நாசம்       - சிட்டி
  7. மாட்டுத் தொழுவம்      - விந்தன்    8. ஏன் இந்த வேகம்   - லக்ஷ்மி
  9. எரிமலை    -  அகிலன்              10. நளாயினி      -  மு கருணாநிதி
 11. சூரியக் கதிர்கள் -  ராஜம் கிருஷ்ணன்  12. சாம்பலுக்குள்-   ஆர் சூடாமணி
 13. கணவன், மகள், மகன் அசோகமித்திரன் 14. மறுபடியும் ஒரு மஹிஷாசுர வதம்
    -நா பார்த்தசாரதி    15. அக்கினிப் பிரவேசம் -  ஜெயகாந்தன்   16. ஓர்
     அகலிகையின் மகள் அய்க்கண்      17. நான் ஒண்ணும் நளாயினி இல்லை-  
    ஜோதிர்லதா கிரிஜா 18. புதியன  - பா செயப்பிரகாசம்   19. நஞ்சு  -வாஸந்தி                20. முகம் தெரியாத மனுஷி -  சு சமுத்திரம்    21. ஒரு வார்த்தை  -  சிவசங்கரி                   22. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை அம்பை  
 23. நேற்று மனிதர்கள்-   பிரபஞ்சன் 24.  த்ரில் - உஷா சுப்ரமணியன்    25. இந்தியா கேட்  -  காவேரி        26. இரண்டு பெண்கள் -  வண்ணநிலவன்    27. போன்சாய் பெண்கள்-  திலகவதி  28. யுகசந்தி  -  சிவகாமி     29. தோஷம் - ஆண்டாள் பிரியதர்ஷினி               
 30. கரு-     உமா மகேஷ்வரி                        



               பாவண்ணன் திண்ணை இணைய தளத்தில் எனக்குப் பிடித்த கதைகள் என்ற ஒரு தொடர் எழுதி உள்ளார்.   இதில் 50 கதைகளைப் பற்றிய கட்டுரைகள் எனக்கு பிடித்த கதைகள் என்ற நூலாக வெளிவந்துள்ளது.   அவர்  தனக்கு பிடித்த 100 கதைகளைப் பற்றிய  கட்டுரைகள்   திண்ணையில்  எழுதி உள்ளார். இதில்  65 சிறந்த  தமிழ் சிறுகதைகள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.மற்ற கட்டுரைகள் பிற மொழிக் கதைகள்.


             அவர் இந்த கட்டுரைத் தொடரில் குறிப்பிடும் சிறுகதைகள்.
                                   
 1. மனித யந்திரம் -  புதுமைப்பித்தன்       2. தாய்  -  ந பிச்சமூர்த்தி
 3. சாவில் பிறந்த சிருஷ்டி  -  மௌனி    4. குருபீடம் -  ஜெயகாந்தன்
 5. கன்னிமை   -  கி ராஜநாராயணன்     6. பறிமுதல்  - ஆ மாதவன்
 7. பள்ளம்  -  சுந்தர ராமசாமி            8. பொறுப்பு  -  பூமணி
 9. இரண்டு பெண்கள்  -  கு அழகிரிசாமி  10. ஓடிய கால்கள் -  ஜி நாகராஜன்
 11. தேஜ்பூரிலிருந்து  -  சா கந்தசாமி     12. குருவிக் குஞ்சு   -  சி சு செல்லப்பா
 13. கண்ணன் என் தோழன்  - .நா. சு    14. அழைக்கிறவர்கள்-  வண்ணநிலவன்
 15. ஆற்றாமை -  கு ப ரா              16. இனி புதிதாய்  - எம் வி வெங்கட் ராம்
 17. அம்மாவுக்காக ஒரு நாள் -அசோகமித்திரன் 18. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
 19. தனுமை  - வண்ணதாசன்          20. கனவுக்கதை   -  சார்வாகன்
 21. ஸர்ப்பம் -  லா சா ரா             22. கண்டாமணி  -  தி ஜானகிராமன்
 23. நீல ரதம்      - சம்பத்              24. முரண்   - சுஜாதா
 25. தபால்கார அப்துல்காதர் - எம் எஸ் கல்யாணசுந்தரம்   26. காசுமரம்-  அகிலன்
 27. ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் - ஆதவன்  28. கோட்டை  -
     மு தளையசிங்கம்  29. சீமைப்பூ   -  த நா குமாரசாமி 30. தோணி -  வ அ
     இராசரத்தினம்  31. சித்தி  -  மா அரங்கநாதன் 32. அக்கா  -  அ முத்துலிங்கம்
 33. நட்சத்திரக் குழந்தைகள் - பி எஸ் ராமையா 34. அணி -  எஸ் பொன்னுத்துரை
 35. அஞ்ஞானம் -  து ராமமூர்த்தி 36. பழையதும் புதியதும்- அ செ முருகானந்தன்
 37. தீராத பிரச்சனை - கிருத்திகா  38. ஏணியேற்ற நிலையம்  -  அ மாதவையர்
 39. வேப்பம் பழம்  -  நா பார்த்த சாரதி    40. பிரும்மம்     -  பிரபஞ்சன்     
 41.ரயில்  - ஆர் சூடாமணி             42. மருமகள் வாக்கு  -  கிருஷ்ணன் நம்பி
 43. சராசரிகள் -  சி ஆர் ரவீந்திரன்     44. மீன்கள்  - தெளிவத்தை ஜோசப்
 45. நாசகாரக்கும்பல்  - இந்திரா பார்த்தசாரதி    46. எலியம்  -  உமா வரதராஜன்
 47. நூறுகள்  -  கரிச்சன் குஞ்சு    48. ஒரு இந்நாட்டு மன்னர்  -  நாஞ்சில் நாடன்
 49. அற்ப ஜீவிகள்  -  மலர் மன்னன்               50. அவள்   -ஜெயந்தன்
 51. அலையும் சிறகுகள் - சுரேஷ்குமார் இந்திரஜித் 52. விருந்து  -  ஜே வி நாதன்
 53. வைராக்கியம்          -  சிவசங்கரி       54. இழப்பு   -   ந முத்துசாமி
 55. பட்டாளக்காரன்        -  தி சா ராஜு     56. மாடும் மனிதனும்  -  விந்தன்
 57. ஒரு கூடைக் கொழுந்து  -  என் எஸ் எம் ராமையா  58. மூங்கில் குருத்து  -
     திலீப் குமார்      59. கோணல் வடிவங்கள் -  ஆர் ராஜேந்திர சோழன்       60. தேனீக்கல்-  மாத்தளை சோமு   61. நிலவிலே பேசுவோம்  - என் கே ரகுநாதன்               62. கேதாரியின் தாயார்  -  கல்கி  63. சசாங்கனின் ஆவி   -  ந் சிதம்பர சுப்ரமணியன்        64.  உதய குமாரி  -  மீ ப சோமு                                 65. பச்சைக்கிளி  -  கி சந்திர சேகர் 





 கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை என்ற கட்டுரையில்  அவர் குறிப்பிடும் சிறந்த சிறுகதைகள்
1.    பி எஸ் ராமையா -  மலரும் மணமும், பூச்சூட்டல், சித்ரகுப்தன், கணக்கு,
                                                          சாயவேட்டி, எதிர்க்கட்சி,சமாதானம், உள்ளூர் பம்பரம்
   2. ந பிச்சமூர்த்தி       - மாயமான், விஜயதசமி, பதினெட்டாம் பெருக்கு,
                           மீனலோசினி, காபூலிக்குழந்தைகள்

         3.கு பா ராஜகோபாலன்  - நூருன்னிஷா, ஆற்றாமை, வீரம்மாவின் காளை,
                       கனகாம்பரம், புனர்ஜென்மம், காணாமலே காதல்,
                       சிறிது வெளிச்சம்
   4. புதுமைப்பித்தன்     - மனித யந்திரம், துன்பக்கேணி, பிரம்ம ராக்ஷஸ்,
                           ஒரு நாள் கழிந்தது, காலனும் கிழவியும், கடவுளும்
                           கந்தசாமிப் பிள்ளையும், மகா மாசானம், அகலிகை,
                           நாசகாரக் கும்பல்
   5. மௌனி  -  பிரபஞ்ச கானம், எங்கிருந்தோ வந்தான், அழியா சுடர், சாவில்
                   பிறந்த சிருஷ்டி, குடும்பத்தேர், நினைவுச் சூழல்
   6. சி சு செல்லப்பா  -  ஸரஸாவின் பொம்மை, மூடி இருந்தது,
                           இணைப்புச் சங்கிலி  
   7. லா சா ராமாமிர்தம் -  இன்று நேற்று நாளை, ஜ்வாலாமுகி, பாற்கடல், த்வனி,
                            பச்சைக் கனவு, தாக்ஷாயினி,  ஜனனி, இதழ்கள்
   8. நகுலன்  -   ஒரு நாள், ஒரு ராத்தல் இறைச்சி, அயோத்தி, நிலக்கடலையும்
                   பீடித்துண்டுகளும், எட்டு வயதுப் பெண்ணும் நவீன மலையளக்  
                   கவிதையும், சாயைகள்
   9.சுந்தர ராமசாமி  -  பல்லக்குத் தூக்கிகள் , காகங்கள், கோயில் காளையும்
                        உழவு மாடும் , ரத்னாபாயின் ஆங்கிலம் , ஸ்டாம்பு ஆல்பம்                           
                        ஜன்னல், மேல்பார்வை, விகாசம்
   10. அசோகமித்திரன்  - புலிக்கலைஞன்
   11. நீல பத்மநாபன்  -  ஜின்னின் மனம்
   12. பா செயப்பிரகாசம் --  அம்பலகாரர் வீடு, இன்னொரு ஜெருசலேம்
   13. கிருஷ்ணன் நம்பி-   சட்டை,  நீலக்கடல்
   14. பிரபஞ்சன்   -  பிரும்மம், மனுஷி , மீன், அப்பாவி வேஷ்டி
   15. வண்ணநிலவன்  - மெஹருன்னிஷா, அயோத்தி
   16. சா கந்தசாமி  -  ஆறுமுகசாமியின் ஆடுகள், பாய்ச்சல், உயிர்கள்,
                       தக்கையின் மீது நான்கு கண்கள்
   17..வண்ணதாசன்  -  பாசஞ்சர் ரயிலும் ஆண்கள் பெட்டியும், அந்தப் பையனும்
                        ஜோதியும் நானும், நடுகை, விழமுடியாத படங்கள்

  18. பூமணி  - வயிறுகள், வெளிச்சம், நல்ல நாள், பெட்டை, தொலைவு

  19. அம்பை -  அம்மா ஒரு கொலை செய்தாள்
  20. தஞ்சை ப்ரகாஷ்   - மேபல், பற்றி எரிந்த தென்னை மரம், கடைசிக்கட்டி  
                          மாம்பழம், பேய்க்கவிதை
  21. சி எம் முத்து   - ஏழு முனிக்கு இளைய முனி, நாடக வாத்தியார் தங்கசாமி
  22. ச தமிழ்ச்செவன்   -  வெயிலோடு போய், வாளின் தனிமை, பாவனை,
                         கருப்பசாமியின் அய்யா, லங்கர் பாய்,
                         மங்கல் பாண்டேவின் நிழல், பிண்ணனி இசையின்றி
  23. ஜெயமொகன்  - திசைகளின் நடுவே, நதி, சோற்றுக்கணக்கு, யானை டாக்டர்
  24. எஸ் ராமகிருஷ்ணன் - வேனல் தெரு, புலிக்கட்டம், கடற்கரை ரயில்நிலையம்,
                             மழை சார்ந்த வீடு,   நட்சத்திரங்களோடு சூதடுபவர்கள்
  25. கோபி கிருஷ்ணன்  - உழைப்பாளிகள், இரு உலகங்கள், ஒரு பேட்டியின்  
                           விலை 35 ரூபாய், வயிறு உரிமை
  26. வேல ராமமூர்த்தி  - இருளப்பசாமியும் 21 கிடாயும், கோட்டைக் கிணறு,
                           கூரை, பிணம் வெட்டி
  27. சுரேஷ்குமார் இந்திரஜித் - மறைந்து திரியும் கிழவன்
  28. விமலாதித்த மாமல்லன் -  தாசில்தாரின் நாற்காலி
  29. இரா நடராஜன்  -   ஆயிஷா
  30. இராஜேந்திர சோழன்  -  புற்றில் உறையும் பாம்புகள்
  31. அஜயன் பாலா  -  கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி
  32. பாதசாரி  -   மீனுக்குள் கடல்
  33. ஆதவன் தீட்சண்யா -  சொல்லவே முடியாத கதைகளின் கதை, லிபரல் பாளையத்து கட்டப்  பஞ்சாயத்தாருக்கு கரவானோபா வழங்கிய தீர்ப்பு, கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும், இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை                                              
                               
 
ஐம்பதாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்    தொகுப்பாசிரியர்  சா கந்தசாமி    பதிப்பகம்  கவிதா.   2000 ஆண்டில் வெளிவந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ள கதைகள்

                           தொகுதி 1
                                 
1.பயணம் - இந்திரா பார்த்தசாரதி    2. நாடார் சார்  --சுந்தர ராமசாமி
3. நான் இருக்கிறேன்-  ஜெயகாந்தன் 4. சைக்கிள்  - விக்ரமாதித்யன்
5. நிலை  - திலீப் குமார்             6. ஆறு    - கோணங்கி  
7. சாவி   -  காவேரி                8. தழும்பு -  சோ தர்மன்
9. மாறுதல் - ஐராவதம்            10. செலுத்த முடியாத கடன்-  ப கிருஷ்ணசாமி
11. தெரு   - அழகிய சிங்கர்        12. திசைகளின் நடுவே - ஜெயமோகன்
 13. பொன்னுத்தாயி - பாமா  14. பிளாக் நம்பர் 27 திர்லோக்புரி  - சாரு நிவேதிதா
 15. கல்வெட்டு  - தங்கர் பச்சான்   16. மழையும் தொலைவும் -  தமயந்தி 
 17. வண்டல்  - சோலை சுந்தரப்பெருமாள் 18. ஏழாம் திருநாள் - ச தமிழ்ச்செல்வன்
 19. சோகம் -   ராஜேந்திரன        20. மருதாயிக் கிழவியின் காகிதப் பைகள்
    சி மோகன்                       21. குதிரைக்காரன்  -  பா ராகவன்               
 22. கடைசி அதிர்வு  - கண்மணி குணசேகரன்   23. பெஞ்சி  -  மீரான் மைதீன்                      
 24. திருவிழாவுக்குப் போன மயிலாத்தாள் - வா மு  கோமு
 25. விபத்து  -  யூமா வாஸுகி       26. மாறுதடம்   -  பாரதி பாலன்

                           தொகுதி 2
 1. காந்தி  - அசோகமித்திரன்        2. வீடுபேறு   -  மா அரங்கநாதன்
 3. கடைதேறினவன் காதல்- சார்வாகன்  4.  இரணியவதம்  -  சா கந்தசாமி 
 5. தேடித் தேடி -  வண்ணநிலவன்            6. அத்து  -  பிரபஞ்சன்
 7. பொருதகர்  - செண்பகம் ராமசுவாமி   8. மனிதர்கள்-  நா கிருஷ்ணமூர்த்தி
 9. காடு-  தமிழவன்                  10. விரித்த குடை  - ஆர் ராஜகோபாலன்
 11. காட்டேரி மதவு  - சி எம் முத்து        12. படம்  - கிருஷாங்கினி
 13. உரிமை  -கோபிகிருஷ்ணன்             14. சிதைவுகள் - அஸ்வகோஷ்
 15. தலைவர்  -  கந்தர்வன்              16. கல்லத்தி மரம்  - சுந்தர பாண்டியன்
 17. மேற்கு வீடு -  எஸ் ராமகிருஷ்ணன்  18. ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள்
     நினைவுகள் - பவா செல்லதுரை      19. பால்கட்டு   - சம்யுக்தா                        20. அன்மையில்  -  வேல ராமமூர்த்தி     21. சுவர்  - கௌதம சித்தார்த்தன்            22. பள்ளத்தெரு - விழி பா இதயவேந்தன்   23. இலைகள் சிரித்தன - பாதசாரி           24. வேட்கை -  பெருமாள் முருகன்        25. மாயக்கிளிகள்  -  ஜீ முருகன்              26.வீடு  - காஞ்சனா தாமோதரன்


  நேஷனல் புக் ட்ரஸ்ட் "புதிய தமிழ்ச் சிறுகதைகள் " என்ற தொகுப்பை 1984ல் வெளியிட்டுள்ளது.  இதை அசோகமித்திரன் தொகுத்து இருக்கிறார். 1960 முதல் 1980 வரையான காலத்தின் சிறந்த   சிறுகதைகளாக இவற்றை குறிப்பிடுகிறார். இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள்

 1. மருமகள் வாக்கு-   கிருஷ்ணன் நம்பி      2. மிலேச்சன்-  அம்பை
 3. நிழல்கள்  -  ஆதவன்                   4. எஸ்தர்   - வண்ணநிலவன்
 5. உத்தியோக ரேகை  -  சார்வாகன்        6. தொலைவு  -இந்திரா பார்த்தசாரதி
 7. சண்டையும் சமாதானமும் - நீல பத்மநாபன்  8.  நாயனம்  -  ஆ மாதவன்
 9. நகரம்   -  சுஜாதா                10. ஒரு வருடம் சென்றது -  சா கந்தசாமி
 11. ஒரு இந்நாட்டு மன்னர்  -  நாஞ்சில் நாடன்   12. தனுமை - வண்ணதாசன்
 13. நாற்காலி  -  கி ராஜநாராயணன்         14. அந்நியர்கள்  -  ஆர் சூடாமணி
 15. பகல் உறவுகள்  - ஜெயந்தன்          
16. காலமும் ஐந்து குழந்தைகளும் -அசோகமித்திரன்

                 நேஷனல் புக் ட்ரஸ்ட்  "சமீபத்திய தமிழ்ச் சிறுகதைகள் " என்ற தொகுப்பை 1996 ல் வெளியிட்டுள்ளது.  இதை வல்லிகண்ணன், ஆ சிவசுப்ரமணியம் இணைந்து தொகுத்து இருக்கிறார்கள். 18 எழுத்தாளர்கள்  அவர்களே சிறந்த கதையாக தேர்ந்து தந்த சிறுகதைகள் இவை.

 1.சித்தி  -  மா அரங்கநாதன்      2. சாசனம்  -  கந்தர்வன்
 3. இன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும்  - களந்தை பீர் முகம்மது
 4. பூ நாகம்  - சு சமுத்திரம்      5. அன்றும் இன்றும் கொல்லான்- சிவகாமி
 6. எதிர்ப் பதியம்  - சுப்ர பாரதி மணியன்   7. கந்தகக் கிடங்கிலே - 
    தனுஷ்கோடி  ராமசாமி                 8. சுய வதம்   -  என் ஆர் தாசன்               
  9. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் - திலகவதி
10. சுருட்டுப்பா -  தோப்பில் முகம்மது மீரான்  11. சம்மதங்கள் ஏன் ? - பாவண்ணன்
12. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்        13. தொலைவு  -  பூமணி
14. நாணயன்  - மேலாண்மை பொன்னுச்சாமி     15. சரண பாலாவின் பூனைக்குட்டி - செ யோகநாதன்      16. வழுக்கு மரம் -  சி ஆர் ரவீந்திரன்      17. கோடையில் வீழ்ந்த துளிகள் -  ராஜம் கிருஷ்ணன்                     18. திசைகளின் நடுவே  - ஜெயமோகன்
                             
                         
 இந்த கட்டுரையில் இதுவரை 808 சிறந்த சிறுகதைகளைக் குறிப்பிட்டுள்ளேன். இதில் குறிப்பிட்டுள்ள     தொகுப்பு நூல்கள்  அவற்றைப் பதிப்பித்த பதிப்பகங்களின் பெயருடன் குறிப்பிட்டுள்ளேன். பல  கதைகள்  சில தொகுப்புகளில் திரும்ப வருவதைக் காணலாம். அவற்றை  மிகச் சிறந்த கதைகளாக  எடுத்துக் கொள்ளலாம். இன்னும் பல தொகுப்புகளில் உள்ள சிறந்த சிறுகதைகளையும், சில இணைய எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும், சில விமர்சக எழுத்தாளர்களின் பதிவுகளையும்
இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த ஆண்டுச் சிறுகதைகளின்  பட்டியலையும் 
அடுத்த கட்டுரையில் காணலாம்.