Monday, 9 April 2018

சிறந்த தமிழ் திரைப்படங்கள் 150

என் செல்வராஜ்

1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் படம் 87 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் 50 பாடல்கள் வரை இருந்த படங்கள்
இப்போது 5 பாடல்களுடன் வெளிவருகின்றன. வருடத்துக்கு 200 படங்கள் வரை இப்போது வெளிவருகின்றன. அவற்றில் வெற்றி
பெறும் படங்கள் மிகச் சிலவே. 1931ல் இருந்து இதுவரை வெளிவந்த படங்களின் சிறந்த   பட்டியல்கள் இணையத்தில் பலரால் வெளியிடப்பட்டுள்ளன. பல திரைப்பட நூல்களும் சிறந்த திரைப்படங்களைப்பற்றி எழுதியுள்ளன.எனக்கு பிடித்த படங்கள், டாப் 10 படங்கள், சிறந்த படங்கள்அவசியம் பார்க்கவேண்டிய படங்கள் என்கிற தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள
பட்டியல்களில் இருந்து அதிக பட்டியல்களில் இடம்பெற்ற படங்களின் பட்டியலை சிறந்த தமிழ் திரைப்படங்கள் பட்டியலாக திரைப்பட ஆர்வலர்களுக்காக  அளிக்கிறேன்.வெள்ளிவிழா கண்ட படங்கள்சிறந்த திரைப்பட விருது பெற்ற படங்களின் பட்டியல், முக நூலில் வந்த பட்டியல்கள் ஆகியவையும் இந்த தேர்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.



சிறந்த தமிழ் திரைப்படங்கள்

1. நாயகன்          79 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

2.தேவர் மகன்       51 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

3.16 வயதினிலே     49 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

4. மூன்றாம் பிறை   48 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

5.அன்பே சிவம்       46 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

6.மௌனராகம்        43 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

7.உதிரிப்பூக்கள்        42 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

8.முள்ளும் மலரும்    40 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

9.முதல் மரியாதை    40 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

10.தளபதி              37 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

11.கன்னத்தில் முத்தமிட்டால் 36 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

12.காதல்                36 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

13.ரோஜா               34 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

14.பாட்ஷா              34 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

15.தில்லானா மோகனாம்பாள்   33 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

16.தில்லு முல்லு  (ரஜினி)      31 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

17.சேது                     33 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

18.பருத்தி வீரன்            32 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

19.அழகி                    29  பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

20.ரத்தக்கண்ணீர்           28 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

21.பராசக்தி                 28 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

22.அந்த நாள்               28 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

23.அலைபாயுதே            28 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

24.வீடு                      27 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

25.மகாநதி                  27 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

26. இந்தியன்               27 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

27.காதலிக்க நேரமில்லை   26 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

28.அபூர்வ சகோதரர்கள் (கமல்)  26 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

29.பம்பாய்                   26 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

30.திருவிளையாடல்          25 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

31.மைக்கேல் மதன காமராஜன் 25 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

32.அஞ்சலி                  25 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

33.சந்திரலேகா               24  பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

34.வீரபாண்டிய கட்டபொம்மன் 24  பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

35.அவள் அப்படித்தான்         24 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

36.குணா                      24 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

37.பிதாமகன்                24 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

38.தண்ணீர் தண்ணீர்        23 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

39.காதலுக்கு மரியாதை     23 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

40.இருவர்                  23 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

41.ஆடுகளம்                23 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

42.சிகப்பு ரோஜாக்கள்       22 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

43.ஆட்டோகிராப்           22 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

44.கல்யாண பரிசு          21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

45.நெஞ்சில் ஓர் ஆலயம்   21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

46.அபூர்வ ராகங்கள்        21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

47.சிந்து பைரவி            21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

48.மொழி                   21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

49.சுப்ரமண்யபுரம்           21 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

50.சம்சாரம் அது மின்சாரம்  20 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

51.விண்ணைத்தாண்டிவருவாயா 20 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

52.குருதிப்புனல்              19 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

53. ஆறிலிருந்து அறுபது வரை 19  பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

54.முதல்வன்                  19 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

55. ஆரண்ய காண்டம்          19 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

56. கர்ணன்                    18 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

57. பாசமலர்                   18 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

58.ஒரு தலை ராகம்            18 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

59. வறுமையின் நிறம் சிவப்பு   18 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

60.ஆண்பாவம்                  18 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

61. வெயில்                     18 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

62. எங்க வீட்டுப் பிள்ளை       17 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

63. ஹே ராம்                  17 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

64.காதல் கோட்டை            17 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

65. காக்க காக்க                17 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

66. புதுப்பேட்டை               17 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

67. நாடோடி மன்னன்          16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

68.அன்பே வா                 16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

69.ஆயிரத்தில் ஒருவன்        16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

70. அந்த 7 நாட்கள்            16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

71.ரமணா                     16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

72. அவ்வை சண்முகி         16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

73.விருமாண்டி                16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

74.அந்நியன்                   16 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

75. சந்தியா ராகம்             15 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

76.வேதம் புதிது               15 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

77.அக்னி நட்சத்திரம்          15 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

78. 7ஜி ரெயின்போ காலணி   15 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

79. அங்காடித்தெரு            15 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

80.மைனா                    15 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

81.வாரணம் ஆயிரம்           15 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

82, புன்னகை மன்னன்         14 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

83.அமைதிப்படை              14 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

84.கிழக்குச்சீமையிலே          14 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

85.கரகாட்டக்காரன்             14 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

86.ஜெண்டில்மேன்              14 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

87. ஹரிதாஸ்                 13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

88.அலைகள் ஓய்வதில்லை     13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

89. சலங்கை ஒலி              13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
   
90.படையப்பா                  13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

91.பஞ்ச தந்திரம்                13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

92. சின்ன தம்பி                13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

93.கேளடி கண்மணி          13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

94.காக்கா முட்டை          13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

95. பசங்க                      13 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

96. பாகப்பிரிவினை             12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

97. நாடோடி மன்னன்           12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

98. சர்வர் சுந்தரம்          12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

99.நெஞ்சம் மறப்பதில்லை      12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

100. அவள் ஒரு தொடர்கதை   12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

101. பசி                        12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

102.முந்தானை முடிச்சு         12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

103. கருத்தம்மா                12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

104.கஜினி                      12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

105.வழக்கு எண் 18/9           12 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

106.மலைக்கள்ளன்              11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

107.பாமா விஜயம்               11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

108.எதிர் நீச்சல்                 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

109.சில நேரங்களில் சில மனிதர்கள்- 11பட்டியல்களில்இடம் பெற்றுள்ளது

110.நாட்டாமை               -  11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

111.அழியாத கோலங்கள்       - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

112. நெஞ்சத்தைக் கிள்ளாதே   - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

113 பூவே பூச்சூடவா - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது                  

114.இதயம்                    - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

115 தவமாய் தவமிருந்து       - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

116 கற்றது தமிழ்              - 11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

117 . வேட்டையாடு விளையாடு -11 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

118. மனோகரா        -  10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது          

119. கப்பலோட்டிய தமிழன்  -  10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

120. புதிய பறவை           -  10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

121. ஊமை விழிகள்          -  10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

122. வாலி                  -  10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
                                    
 123.காதல் கொண்டேன்     -  10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

 124. அஞ்சாதே             -  10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

125. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி -10 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

126. தேவதாஸ்              -  9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
           
127. சபாபதி                 - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

128. சிந்தாமணி              -9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

129.அலிபாபாவும் 40 திருடர்களும் - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது
                
130. அவர்கள்             - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

131. வசந்த மாளிகை      - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

 132. வாழ்வே மாயம்      -9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

133. புதிய பாதை         - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது 

134. ஜானி               - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

135. வானமே எல்லை     -9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது    

136.பூவே உனக்காக      - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

137. உள்ளத்தை அள்ளித்தா - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

138. சந்திரமுகி            - 9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

139. தெய்வத்திருமகள்      -9 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

140. அன்னக்கிளி          - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

141. மண்வாசனை         - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

142. ரோசாப்பூ ரவிக்கைக்காரி - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

143. மௌன கீதங்கள்        - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

144. புது வசந்தம்            - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

145. சூர்ய வம்சம்            -8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

146.துள்ளாத மனமும் துள்ளும் - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

147. கோ                    - 8 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

148.பயணங்கள் முடிவதில்லை -7 பட்டியல்களில்இடம் பெற்றுள்ளது

149.  பாலைவனச்சோலை    -7 பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

150. உன்னால் முடியும் தம்பி -7  பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது

முக்கியமான பட்டியல்கள்  மற்றும் நூல்கள்

1. Best of Tamil movies ever made – Ranker.com

2. 50 best tamil movies to watch before you die – filmibeat.com

3. Best tamil movies of all time – Quora.com

4. 20 Best tamil movies of all time – Times of India.com

5. Top 50 must watch tamil movies – saravananmoviecrow.blogspot.in

6. Top 50 tamil movies  to be watched before you die – IMDB list by cityville008

7. Top 100 tamil movies of all time – fatimajax

8.100 best tamil movies – IMDB.com list by kickyoubuddy

9.Best tamil movies  top 100 (1990-2017) IMDB.com by sal1991

10.Gratest tamil movies of all time best – aaqil003.blogspot.in

11. 50 tamil movies to watch before you die by sylvianism

12. 100 must see tamil movies – i-n-d-i-a-n.com

13. All time best tamil movies de-beta.imdb.com

14.Sirantha 100 padangal    dreamstore.blogspot.in

15. Top 100 tamil movies   - movie crow.com

16.Best of Tamil Cinema ( 1931-2010) Book -  2 Volumes by G.Dhananjayan

17.  Top 100 movies (2001-2010  that you must watch   – behindwoods.com

18. Best of Tamil cinema since 2000   - Top 20 films – flickside.com

19. Some great tamil movies of 1980s and 1990 s – Quara.com

20.Filmibeat.com  lists of tamil cinema category wise

1.திருப்புமுனை திரைப்படங்கள் - ஞாநி

2.சிறந்த 50 தமிழ் படங்கள் - சுரேஷ்

3.கமல் தேர்ந்தெடுத்த 70 படங்கள்

4.திருப்புமுனை திரைப்படங்கள் - குமுதம் செல்லப்பா

5.தமிழ் சினிமா 50 முக்கிய திரைப்படங்கள் என் பார்வையில்

6.காலத்தால் அழியாத காதல் திரைப் படங்கள் - குங்குமம் தோழி இணைய தளம்

7.டாப் 10 தமிழ் படங்கள் - ஆர் வி

8.டாப் 10 படங்கள் - போஸ்டன் ஸ்ரீராம்

9.வை கோவுக்கு பிடித்த படங்கள் - ராணி தீபாவளி மலர் 2017

10.ஃபிலிம்பேர் விருது  சிறந்த படம் - பட்டியல்

11.சிறந்த படத்துக்கான தேசிய விருது - பட்டியல்

12.சிறந்த படத்துக்கான் சினிமா எக்ஸ்பிரஸ் - பட்டியல்

13.சிறந்த படம் ஆனந்த விகடன் விருது - பட்டியல்

14. 75 வருஷத்தில் வந்த டாப் 10 தமிழ் படங்கள் - குமுதம் 2007

15. தமிழக அரசின் சிறந்த படங்கள் விருது - பட்டியல் (1967-2014)

16.மனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள் - அந்திமழை பதிப்பகம்

17.சரித்திரம் படைத்த திரைப்படங்கள் - திரையோகி

18.பயாஸ்கோப் (1940-1960) - கிருஷ்ணன் வெங்கடாசலம் - சந்தியா பதிப்பகம்

19.தமிழ் சினிமா சில பார்வைகளும் சில பதிவுகளும் - ஆ சந்திரபோஸ்

20.காலத்தை வென்ற காதல் கிளாசிக்குகள் - விகடன்.காம்

21.அந்திமழை சிறந்த படங்கள் - அந்திமழை மாத இதழ்

22.வசூலில் சாதித்த 100 தமிழ் படங்கள் - அந்திமழை மாத இதழ்

23.நடிகர் சூர்யாவுக்கு பிடித்த 10 படங்கள்

24.ரசனை மிகுந்த திரைப்படங்கள் 75 - தினத்தந்தி பவளவிழா மலர்

25.தமிழ் சினிமாவின் மைல்கற்கள் - (1912-2012) - நமது சினிமா - கவிதா வெளியீடு

26.தமிழ் சினிமா 80 - பால பாரதி - நக்கீரன் வெளியீடு

27.கட்டாயம் பார்க்க வேண்டிய 100 திரைப்படங்கள் rasekan.blogspot.in
28.திரையில் மண்வாசம் - தி இந்து பொங்கல் மலர் -2014

29.சிறந்த நடனப்படங்கள் - கலாப்ரியா - தி இந்து பொங்கல் மலர் 2017

30.தமிழ் சினிமா (1930 -1960) பயணத்தில் பளிச்சிடும் திரைப்படங்கள் - தி இந்து

பொங்கல் மலர் 2015

31.  60 களின் அற்புதங்கள் - தி இந்து சித்திரை மலர் 2015

32.  70 களின் தமிழ் சினிமா - தி இந்து தீபாவளி மலர் 2015

33.  80 களின் தமிழ் சினிமா - கருந்தேள் ராஜேஷ்

34. சினிமா சிற்பிகள் - ரவீந்திர தாஸ் - என் சி பி ஹெச்

35.  90 களின் தமிழ் சினிமா - ஆர் அபிலாஷ் - கிழக்கு பதிப்பகம்


 Email:- enselvaraju@gmail.com

Tuesday, 6 February 2018

புத்தக பரிந்துரைகள் 2018


   என் செல்வராஜ்
  சென்னை புத்தககண்காட்சியின் போது தி இந்து பத்திரிக்கை வெளியிட்ட புத்தக பரிந்துரைகளையும், விகடன்.காமில் வெளியான
  புத்தக பரிந்துரைகளையும் தொகுத்து அளித்துள்ளேன். தீவிர வாசகர்களுக்கு இது புத்தகங்களை தேடி வாங்க உதவும்.
தமிழ் ஹிந்துவில் வெளிவந்த புத்தக பரிந்துரைகள்
   கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்
1.கொம்மை (மறு குரலில் மகாபாரதம்),
    பூமணி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ. 555
2.மௌனியின் இலக்கியாண்மை,
    ஜமாலன், காலக்குறி பதிப்பகம், விலை ரூ.140
3.ராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள்),
    ராகுல் சாங்கிருத்யாயன்,தமிழாக்கம்: ஏ.ஜி.எத்திராஜுலு,
    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை ரூ.1,100
4.செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன்,
    சூரியன் பதிப்பகம், விலை ரூ.200
5. கடல் பயணங்கள், மருதன்,
     கிழக்குப் பதிப்பகம், விலைரூ.130.
கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

1. கங்கை கொண்ட சோழபுரம் கல்வெட்டுக்கள்

   இல. தியாகராஜன், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழுமம், விலை ரூ 550/

2. இதுவரை

   கவிதைகள் சி மணி , க்ரியா விலை ரூ 250/

3. சோதிடமும் கடைசிப்பக்கம் கிழிபட்ட நாவலும் சமகால அரசியல் ( ஒரு கூர் நோக்கு)

4. மடவெளி

   நாவல்  - கவிப்பித்தன் - நூல்வனம், விலை ரூ 320/

5. நான் தேவதூதன் அல்ல , சிறிய ஊழியன்

    உத்தமர் வாழ்க்கையில் உணர்வூட்டும் நிகழ்ச்சிகள், விஷ்னுபிரபாகர் தமிழில் எம் வி துளசிராம்
    காந்தி இலக்கிய சங்கம் விலை ரூ 120/  


கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

   1. இந்திய பொருளாதாரம் கட்டுக்கதைகள்
        ஜெ ஜெயரஞ்சன், மின்னம்பலம் பதிப்பகம் விலை ரூ 100/

   2. பேட்டை
       நாவல்-  தமிழ்பிரபா, காலச்சுவடு பதிப்பகம் ரூ 390/

  3. தோர்கல் - கடவுளரின் தேசம்
      ஷான் வேன் ஹாம் , ஓவியங்கள் : ரோசின்ஸ்கி
      தமிழில்  எஸ் விஜயன் , முத்து காமிக்ஸ் விலை ரூ 300/

 4. தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் ( பொது ஆண்டு 800-1500)
     நொபொரு கராஷிமா எ.சுப்பராயலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்  விலை ரூ 70/

  5. கதையின் கரு
       ஜெயகாந்தன் , தொகுப்பு -ஜெயஸிம்ஹன், செல்லப்பா பதிப்பகம்,விலை ரூ 140/

   கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

   1.  தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்
        ஏ சண்முகானந்தன் , சா செயக்குமார், எதிர் வெளியீடு விலை ரூ 500/

   2. உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக்கவிதைகள்)
        தமிழில் ப கல்பனா, பரிசல் விலை ரூ 150/
 
  3. குஜராத் - திரைக்குப்பின்னால்
        ஆர் பி ஸ்ரீகுமார், தமிழில் ச வீரமணி,தஞ்சை ரமேஷ்,
         பாரதி புத்தகாலயம், விலை ரூ 190/
 
  4. பிராமண போஜனமும் சட்டிச்சோறும் (இடைக்கால தமிழகத்தில்   வைதீகமும் சாதி உருவாக்கமும்
       ஆ சிவசுப்ரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்  விலை ரூ 75/

  5. வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
        நாவல் - தமிழ் மகன், உயிர்மை பதிப்பகம்  ரூ 190/



கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

1. போக்குவரத்துப் போராட்டத்தில் நீதித் துறை தலையீடு நியாயமா?
     நீதியரசர் அரிபரந்தாமன்,ரூ. 5,  பாரதி புத்தகாலயம்.
2. இந்தியாவின் இருண்ட காலம்
    சசி தரூர், தமிழில் ஜே.கே.இராஜசேகரன், ரூ.350, கிழக்குப் பதிப்பகம்.
3. நூறு பௌணர்மிகளின் வெளிச்சம்
     மனுஷ்ய புத்திரன், ரூ.800, உயிர்மை பதிப்பகம்.
4. இஸ்மத் சுக்தாய் கதைகள்
    இஸ்மத் சுக்தாய், தமிழில்: ஜி.விஜயபத்மா, ரூ.400, எதிர் வெளியீடு.
5. மெரினா கூட்டுணர்வும் தமிழக அரசியலும்
    வே.மீனாட்சி சுந்தரம், ரூ.150, புலம் வெளியீடு

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்
1. கடவுள் என்னும் மாயை
    தருமி, எதிர் வெளியீடு, விலை ரூ.350
2. உனது பேரரசும் எனது மக்களும்
    கோர்கோ சாட்டர்ஜி, ஆழி பதிப்பகம், விலை: ரூ.100
3. அச்சப்படத் தேவையில்லை
     சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ.100
4. சமூகநீதி
    க.நெடுஞ்செழியன், இரா.சக்குபாய், அகரம், ரூ.330
5. சுத்த அபத்தம்
     டாக்டர் ஜி.ராமானுஜம், பாரதி புத்தகாலயம், விலை ரூ.80
கவனிக்க வேண்டிய 5 புத்தங்கள்
 1. தை எழுச்சி - குடிமை சமூகமும் அதிகார அரசியலும்
    தொகுப்பு - செ.சண்முகசுந்தரம் ,இரா தமிழ்க்கனல், யமுனா ராஜேந்திரன்
   என் சி பி எச்        ரூ 450/
2. தமிழ் சிறுகதைக்களஞ்சியம்
     தமிழ்மகன் ,உயிர்மை பதிப்பகம் ரூ 240/
3. கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்
  தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள், மாத்ரி பதிப்பகம் ரூ 140/
4. நான் சர்வாதிகாரியானால் : உத்தமர் காந்தி வாழ்க்கையில் உணர்வூட்டும் நிகழ்ச்சிகள்
விஷ்னுபிரபாகர், தமிழில் சி துரைராஜன்
காந்தி இலக்கிய சங்கமம் ரூ 120/
5. தெலுங்கு நாவல்கள், சிறுகதைகள்
ராசபாளெம்  சந்திரசேகர ரெட்டி, தமிழில் ருத்ர துளசிதாஸ்
சாகித்ய அகாடமி   ரூ 135/


கவனிக்க வேண்டிய 5 புத்தங்கள்
1.கடைசி முகலாயன்
ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857, வில்லியம் டேல்ரிம்பிள், தமிழில் - இரா.செந்தில், எதிர் வெளியீடு, விலை ரூ.750
2.மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்
   கே.சங்கர நாராயணன், பாரதி புத்தகாலயம், விலை ரூ.80
3.ஐந்தாம் மலை
பவுலோ கோய்லா, தமிழில் - க.பூரணச்சந்திரன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை ரூ.100
4.வேதாந்தம் இனிது
எ.கொண்டல்ராஜ், சந்தியா பதிப்பகம், விலை ரூ.130
 5.ஜே.கிருஷ்ணமூர்த்தி, (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாந்தா இராமேஷ்வர் ராவ், தமிழில் - அக்களூர் ரவி, சாகித்ய அகாதெமி வெளியீடு, விலை ரூ.50

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2017
சீர்மை | க. அரவிந்த் | தமிழினி பதிப்பகம்
இளம் எழுத்தாளரான க.அரவிந்த் நம்பிக்கைக்குரிய புதுவரவு. தமிழில் இதுவரை அறிவியல் எழுத்தாளர்களால் கூட அவ்வளவாக எழுதப்படாத சீர்மை (symmetry) எனும் கருப்பொருளை வாழ்க்கையோடும் இந்திய, உலக தத்துவங்களோடும் பொருத்திப் பார்க்கும் படைப்பு!
 
இருமுனை | தூயன் | யாவரும் பதிப்பகம்
தூயனும் இளம் எழுத்தாளர்தான். தமிழ்ப் புனைகதையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்ளச் செய்வர்களில் ஒருவர். விளிம்புநிலை வாழ்க்கை, புலம்பெயர்ந்து வரும் வட இந்தியர்களின் நிலை, அதீத மனநிலை, தொன்மம் என்று நல்லதொரு புனைவு சாகசம் இந்தச் சிறுகதை தொகுப்பு!
விதானத்துச் சித்திரம் | ரவிசுப்பிரமணியன் | போதி வனம்
மனித உணர்வுகளோடு புராதனமும் இசையும் சிற்பங்களும் தொன்மங்களும் இழைத்தெடுக்கப்பட்ட நுட்பமான கவிதைகள். ராகங்கள் தரும் உணர்வுகளைச் சொற்களில் கொண்டுவர முடிந்திருப்பது ரவிசுப்பிரமணியன் பெற்றிருக்கும் பேறு!
பனை மரமே! பனை மரமே! | ஆ.சிவசுப்பிரமணியன் | காலச்சுவடு பதிப்பகம்
தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்த பனை மரத்தைப் பற்றிய விரிவான சமூக, பண்பாட்டு ஆய்வு நூல் இது. இலக்கியம், வரலாறு, அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம், அரசியல், உணவு, பண்பாடு என்று பல்வேறு தளங்களில் பனை மரம் குறித்து ஆய்வு செய்திருக்கிறார் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்.
தாகங்கொண்ட மீனொன்று ரூமி | தமிழில்: என்.சத்தியமூர்த்தி | லாஸ்ட் ரிசார்ட் வெளியீடு
பாரசீகக் கவிஞரும் சூஃபி ஞானியுமான ரூமியின் கவிதைகளை ஆங்கிலம் வழி தமிழில் ‘கவிதை’களாகவே நல்ல மொழிபெயர்ப்பில் தந்திருக்கிறார் சத்தியமூர்த்தி. துல்லியமும் கவித்துவமும் ஒருங்கே அமையப்பெற்றதோடு அட்டகாசமான வடிவமைப்பிலும் வந்திருக்கும் நூல்!
நிச்சயமற்ற பெருமை: இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் | ஜீன் டிரீஸ், அமர்த்தியா சென் - தமிழில்: பொன்னுராஜ் | பாரதி புத்தகாலயம் வெளியீடு
உண்மையான வளர்ச்சி எது, இந்தியாவின் சிக்கல்களுக்கான சிடுக்குகள் எங்கே இருக்கின்றன என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவும் முக்கியமான நூல். பொன்னுராஜின் இயல்பான தமிழில். தமிழ்நாட்டின் பெருமைகளைத் தெரிந்துகொள்வதற்காகவேனும் இதைப் படிக்க வேண்டும்!
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் | ஆ.திருநீலகண்டன் |காலச்சுவடு பதிப்பகம்
நீடாமங்கலத்தில் 1937-ல் நடந்த தென்தஞ்சை மாவட்ட காங்கிரஸ் மாநாட்டின் விருந்தில் கலந்துகொண்ட தலித் மக்களுக்கு நேரிட்ட கொடுமையையும் அதற்கெதிரான திராவிட இயக்கத்தின் போராட்டத்தையும் வரலாற்றின் இடுக்குகளிலிருந்து கொண்டுவந்திருக்கிறார் ஆ. திருநீலகண்டன். முக்கியமான வரவு.
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? | பெரியார் ஈ.வெ.ரா. -பதிப்பாசிரியர்: பசு.கவுதமன் | என்.சி.பி.ஹெச். வெளியீடு
பல விஷயங்களைப் பற்றியும் பெரியார் கூறியவற்றை அவற்றின் பின்புலத்தை விடுத்து ஒற்றை வரி மேற்கோள்களாக எடுத்தாண்டு பெரியாரின் கருத்துகளைத் திரிக்க முயற்சிகள் நடைபெற்றுவரும் சூழலில் மிகவும் முக்கியத்துவம் உடையதாகிறது இந்தப் பெருந்தொகுப்பு. பல்லாண்டு உழைப்பு!
பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும் | டக்ளஸ் எம்.நைட் - தமிழில்: அரவிந்தன் |க்ரியா பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பரதக் கலைஞர்களுள் ஒருவரான பாலசரஸ்வதியின் இந்த வாழ்க்கை வரலாறு அவருடையதும் அவருடைய சாதனைகளுமுடைய தொகுப்பு மட்டுமல்ல; தமிழகமும், இந்தியாவும் நவீனமடைந்த கதை இதில் உள்ளது. அரவிந்தனின் உயிரோட்டமான மொழிபெயர்ப்பில்!
ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள் | ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் -தமிழில்: லியோ ஜோசப் | எதிர் வெளியீடு.
ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் எழுதி, 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற, ‘தி ஆதிவாசி வில் நாட் டான்ஸ்’ சிறுகதைத் தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு. தேசிய அளவில் விவாதப்பொருளான தொகுப்பு இது!
K சவால்களை ஏற்கிறதா தமிழ் நாவல் உலகம்?
தமிழில் நாவல் இலக்கியம் தோன்றி 150 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். உலக நாவல் இலக்கியத்தில் பல்வேறு சாதனைகள் நடந்தேறியிருக்கின்றன. என்றாலும், தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமஸோவ் சகோதரர்கள்’, டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ ஆகியவைதான் நாவல் உலகில் இன்றளவும் உச்சமாக நிற்கின்றன. நவீன நாவல் காவியங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர்கள் முன் நாம் சிறு கல்போலக் கிடக்கிறோம்.
தமிழில் முன்னவர்களின் சாதனைகளை மெனக்கெடா மல் தனது கலை மனத்தால் ‘மோகமுள்’ நாவல் வழி முறியடித்தவர் தி.ஜானகிராமன். எதிர்பாராத துருவத்திலிருந்து ப.சிங்காரம் தனது ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் மூலம் பெருஞ்சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இந்தச் சாதனை யின் மரபை சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும் அடுத்தடுத்த காலகட்டங்களில் உருவாக்கியுள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளில் நிறைய இளைஞர்கள் நாவல்களைத் தந்துள்ளனர். ஆனால், இவர்களில் யாரும் அவர்களின் கண்முன் நிகழ்ந்திருக்கின்ற எளிய சாதனைகளைக் கூடத் தாண்ட முடியவில்லை. அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள்தான் இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். தேவிபாரதியின் ‘நிழலின் தனிமை’ சாதிய மேலாண்மையால் ஒடுக்கப்பட்ட இளைஞனின் உலகை ‘பரபரப்பு’ உத்தியை நிராகரித்துவிட்டு நிதானமாக முன்வைக்கிறது. அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘துருக்கித் தொப்பி’, நக்கீரனின் ‘காடோடி’, ஷோபா சக்தியின் ‘பாக்ஸ் - கதைப் புத்தகம்’, மீரான் மைதீனின் ‘அஜ்னபி’ கண்மணி குணசேகரனின் ‘வந்தாரங்குடி’, பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ ஆகிய நாவல்கள் பொருட்படுத்தத்தக்கவை. அதிகம் பேசப்படாத உலகை இவர்கள் ஓரளவு சிறப்பாகவே தங்களது ஆக்கங்களில் கொடுத்தனர். நாவல் மரபில் மூத்தோர் உண்டாக்கிய காலடித்தடங்களை இவர்கள் நுகர்ந்துவந்ததாலே இந்த எளிய விளைச்சல்கள் கிட்டின. தமிழ் நாவலில் நிகழ்த்தியுள்ள எழுத்தாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும், கனவும் பற்றிய காரியங்களை அறியாமல் எழுதிவந்த இளம் எழுத்தாளர்களின் படைப்பு கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.
அதேசமயம், புதியவர்கள் என்று பார்க்கும்போது அரவிந்த் கருணாகரனின் ‘சீர்மை’யைச் சொல்லலாம். குறுநாவல் என்றாலும் முக்கியமானது. கென்வில்லர், தத்துவத்தின் மீது ஆர்வம் கொண்டவர். அவரது மனைவி புற்றுநோயால் துன்பப்படுகிறவர். கென்வில்லர் பல்வேறு தத்துவங்களின் பொதுத்தன்மையை ஒரு சாரமாக மாற்றிவிட முடியுமா என்ற தேடலில் இருப்பவர். காகிதத்தில் கொண்டு வர முடியாத ஒருமையை அவரது மனைவி தனது ஓவியத்தில் வரைந்துவிடுகிறார். இந்த இரு நிஜ மனிதர்களின் மன வோட்டங்களைத் தன் கற்பனையின் துணைகொண்டு உண்மையை நாடிச் செல்கிறது.
குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ எதிராளியின் ராணுவ முகாமை அழிக்க ஒற்றறியச் சென்று திரும்பும் இரு இளைஞர்களைப் பற்றிய கதை. பல்வேறு தடங்கல்கள், சவால்களைத் துச்சமெனக் கடக்கிற நிகழ்விலே அவர்களது காதல் நினைவுகள், தளபதிகள் பற்றிய செயல்பாடு கள் எல்லாம் உருண்டு வர திரும்புகின்றனர். அந்த கேம்ப் தகர்க்கப்படுகிறது. ஒற்றறியும் செயலில் அவர்களின் மன உலகம் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது.
இந்திய ராணுவம் ஈழத்தில் இறங்கிய பின் ஈழத் தமிழர் எதிர்கொண்ட இன்னல்களைச் சொல்கிறது தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’. இன்றைய சமூக நடைமுறைகளில் எதிலும் ஒட்ட முடியாது திரியும் மனிதனின் அந்நியத்தன்மையைச் சொல்லும் குணா கந்தசாமியின் ‘உலகில் ஒருவன்’ வடசென்னையின் தனித்த வாழ்வைச் சொல்லும் கரன் கார்க்கியின் ‘கறுப்பர் நகரம்’, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டும் திட்டத்தில் நரிகளை வேட்டையாடி அழித்த ஆங்கிலேய வேடிக்கை மனிதர்களைச் சொல்லும் விநாயக முருகனின் ‘வலம்’ போன்றவற்றை நல்ல முயற்சிகளாகச் சொல்லலாம். இவற்றிலிருந்து தனித்துச் சொல்லப்பட வேண்டிய ஒரே நாவல், சயந்தனின் ‘ஆதிரை’. நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட படைப்பு. முப்பதாண்டுகால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ‘ஆதிரை’. இப்படி, இலக்கிய உணர்வுதான் நல்ல படைப்பை நம்மிடமிருந்து உருவாக்குமேயொழிய வெற்று ஆசைகளால் இது இயல்வதில்லை!
- சு. வேணுகோபால், எழுத்தாளர், ‘வெண்ணிலை’, ‘ஆட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,
சிந்திக்கவைக்கும் சித்திரக் கதைகள்

சித்திரக் கதைகள் பார்க்கவும் படிக்கவும் மட்டுமல்ல, சிந்தனைக்கும் ஏற்றவை. வரலாற்றையும் தத்துவங்களையும் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு சித்திரக் கதைகள் உதவுகின்றன. இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியில், வாங்க வேண்டிய சித்திரக்கதைப் புத்தகங்களாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம்.
1. இயந்திரத் தலை மனிதர்கள் - முல்லை தங்கராசன் - முத்து காமிக்ஸ்
               
. தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகன் முல்லை தங்கராசனின் கை வண்ணத்தில், மூத்த பத்திரிகையாளர் காமராஜின் மொழிபெயர்ப்பில், சௌந்தரபாண்டியன் உருவாக்கிய முத்து காமிக்ஸ் இதழின் மறுபதிப்பு இது. இரும்புக் கை மாயாவியின் சாகசங்கள் மறுபதிப்பு செய்யும்போது, கொஞ்சம் கிளாசிக் தன்மையை இழந்திருந்தாலும் பழைய வாசகர்களின்  பாலைவனச் சொர்க்கம் அதுதான்.
2. ஜென் வெளிச்சம் - பூ சுன் ஜியாங் - கண்ணதாசன் பதிப்பகம்
அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பல ஜென் தத்துவங்களை, எளிமையாகப் புரியும்படி காமிக்ஸ் வடிவில், தெளிவான மொழிநடையில், சரியாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட புத்தகம் இது. தத்துவங்கள் என்றில்லாமல், கதையாகப் படித்தாலும், ஒரு அழகான சிறுகதைத் தொகுப்பாக இருக்கும். அனைத்துக் கதைகளுமே ஓரிரண்டு பக்கங்களில் இருப்பதால், வாசிக்க எளிமையாக இருக்கிறது.
3. அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாறு - பயணி பதிப்பகம்
அமெரிக்க அரசாங்கத்தின் இரட்டை வேடத்தையும், அரசாங்கத்துக்கான எதிர்ப்பு, எப்படி நாட்டுக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் கிளம்புகிறது என்பதைத் துல்லியமான அரசியல் பார்வையோடு சொன்ன கிராஃபிக் நாவல் இது. ‘வூண்டட் நீ’ சம்பவம் என்ற செவ்விந்தியப் பழங்குடியினரை அமெரிக்க ராணுவம் அழித்ததை விவரிக்கும் காட்சிகள் இதன் சிறப்பு. போருக்கு எதிரான ஒரு கிராபிஃக் நாவல்.


4. ஈரான் (குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்) 2 புத்தகங்கள் - விடியல் பதிப்பகம்
உலகப் புகழ்பெற்ற படைப்பாளி யான மர்ஜானே சத்ரபியின் கிராஃபிக் நாவல்களான இந்த இரண்டுமே திரைப்படங்களாகவும் வந்துள்ளன. மொழிபெயர்ப்பில் ஓரிரு இடர்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமான கலைப் படைப்பு என்ற பார்வையில், தமிழில் நீங்கா இடம்பிடிக்கும் புத்தகங்கள் இவை.
5. புலி வளர்த்த பிள்ளை - வாண்டுமாமா - கங்கை புத்தக நிலையம்
தமிழ் சிறுவர் இலக்கியத்தின் ‘சூப்பர் ஸ்டா’ரான வாண்டுமாமாவின் அமரத்துவம் வாய்ந்த படைப்பு இது. முதலிரண்டு பாகங்கள் சிறுவர் இலக்கியப் பாணியிலும் மூன்றாம் பாகம் ஓவியச் சக்ரவர்த்தி செல்லத்தின் அட்டகாசமான ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ராஜா காலத்துக் கதையையும், தற்காலத்தையும் ஒரு மந்திரப் புள்ளியில் இணைக்கும் அற்புதமான படைப்பு இது.
6. கிமுவில் சோமு - சிம்புதேவன் - நர்மதா புத்தக நிலையம்
இம்சை அரசன் படத்தை இயக்குவதற்கு முன்பாக, சிம்புதேவன் ஒரு கைதேர்ந்த ஓவியராக, படைப்பாளி யாக இருந்தபோது உருவாக்கிய ஒரு காமிக்ஸ் தொடர் இது. அறிவியல், சாகசம், வேடிக்கை, விளையாட்டு என்று ஒரு அற்புதமான படைப்பாக அமைந்தது. கதை சொல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ற துணைவன்.
7. திரும்பி வரவில்லை - தமிழ்வாணன் - மணிமேகலைப் பிரசுரம்
ஒரிஜினலாக முதன்முதலில் வந்த காமிக்ஸ் கதையின் மூலம் எதுவும் கிடைக்காமல் போக, மறுபடியும் ஓவியர் ராமுவால் வரையப்பட்ட காமிக்ஸ் கதை இது. தமிழ்வாணனின் அட்டகாசமான கதை நகர்த்தலுக்கு மிகச்சிறந்த உதாரணமாக இதைச் சொல்லலாம். ஒரு குறுநாவலை அழகாக சித்திரங்களால் நிரப்பியிருக்கிறார் ஓவியர் ராமு.
8. சே வாழ்க்கை வரலாறு - படக்கதை வடிவில் - பயணி பதிப்பகம்
‘அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ்’ படைப்பாளிகளில் ஒருவரான ஸ்பெய்ன் ராட்ரீகஸின் கிராஃபிக் நாவல் இது. ஆஸ்துமாவால் அவதிப்படும் மருத்துவ மாணவராக இருந்து, உலகமே வியக்கும் ஒரு போராளி யாக மாறிய சே குவேராவின் அந்தப் பயணத்தை மிகவும் தீர்க்கமாகச் சொல்லும் படைப்பு இது.
9. மர்ம மாளிகையில் பலே பாலு - வாண்டுமாமா - திருவரசு புத்தக நிலையம்
தமிழ் சிறுவர் இலக்கியத்தின் மாமேதையான வாண்டுமாமாவின் அதியற்புத திரட்டு இது. அவரது ஆரம்ப காலப் படைப்பு (1957) முதல் அவரது படைப்புலகப் பயணத்தின் இறுதிக் கட்டம் வரையிலான 10 சிறந்த படைப்புகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் 7 படக்கதைகள் இருக்கின்றன. தமிழ் காமிக்ஸ் உலகின் ஓவியச் சக்ரவர்த்தி செல்லம் வரைந்த காமிக்ஸ் கதைகளும் இதில் உண்டு.
10. கன்ஃபூஷியஸின் கருத்துப் பெட்டகம் - கண்ணதாசன் பதிப்பகம்
கன்ஃபூஷியஸின் தத்துவங்களை எளிமையாக, மிகச்சிறப்பான படங்களுடன் இந்த காமிக்ஸை, அழகுத் தமிழில் வழங்கியிருக்கிறார் காந்தி கண்ணதாசன். தத்துவ போதனை கள் என்பதைக் கடந்து, ரசிக்கும் வகையிலான ஒரு தொகுப்பாகவும் இருப்பது பாமர ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர்,
திராவிட இயக்கத்தை அறிந்துகொள்ள என்னென்ன நூல்கள் படிக்கலாம்?
திராவிட இயக்கத் தலைவர்களில் பெரும்பாலானோர் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்தார்கள். அவர்களைப் பட்டியலிட்டால் 300-க்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள். ஆகவே, திராவிட இயக்கத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முதற்கட்டமாகப் படிக்க வேண்டிய நூல்களை இங்கே பரிந்துரை செய்கிறேன்.
பெரியாரின் குடியரசுத் தொகுப்புகள் (42), அறிஞர் அண்ணாவின் தம்பிக்குக் கடிதங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்- 316), கலைஞரின் கடிதங்கள் (3,517), முரசொலி மாறனின் திராவிட இயக்க வரலாறு, க.திருநாவுக்கரசு எழுதிய நீதிக் கட்சி வரலாறு, திமுக வரலாறு ஆகியவை மிகவும் அடிப்படை நூல்கள்.
நம்பி ஆரூரானின் ஆங்கில நூலை நானும் பி.ஆர்.முத்துகிருஷ்ணனும் ‘திராவிட தேசியமும் தமிழ் மறுமலர்ச்சியும்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளோம். இருபதாம் நூற்றாண்டில் திராவிட தேசியம் எப்படி தமிழ் மலர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை விளக்கும் முக்கியமான நூல் இது. அடுத்ததாக, பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு’. 1965 ஆண்டு காலம் என்பது நான்காவது இந்தி எதிர்ப்புப் போராட்டம். அந்த உச்சகட்ட போராட்டத்தைப் பற்றி அவர் சிறப்பாக விளக்கியிருப்பார். பலரையும் பேட்டி எடுத்து நூலில் சேர்த்திருக்கிறார். அப்போது முதலமைச்சராக இருந்த பக்தவத்சலத்தின் பேட்டியையும் அந்த நூலில் இணைத்திருப்பார். அடுத்ததாக, ,பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் எழுதிய ‘திராவிட நாடு’ புத்தகம். திராவிட நாடு என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான் என்பதை நிறைய சான்றுகளுடன் நிறுவியிருப்பார்.
திராவிட இயக்கத்துக்கு இலக்கியம் இல்லை என்றெல்லாம் பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால் 1940-களிலிருந்து நிறைய நாவல்கள், சிறுகதைகளை எல்லாம் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக, தில்லை மறைமுதல்வன், தில்லை வெள்ளாளன், ராம அரங்கண்ணல். பி.கே.சீனிவாசன், அண்ணா, கருணாநிதி, கே.ஜே.ராதாமணாளன் போன்றோரின் சிறுகதைகள் ப.புகழேந்தியால் தொகுக்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் படைப்புகள் மிக முக்கியமானவை. அவருடைய படைப்புகள் அனைத்தும் திராவிட இயக்க சிந்தனைகளை கவிதை வடிவில் தரக்கூடியவை. அதே போல் சுரதா, முடியரசன், வாணிதாசன், பொன்னி வளவன், த.மி.பழனியப்பன் என்று பாரதிதாசன் பரம்பரை என்று சொல்லக்கூடிய 42 கவிஞர்களுடைய படைப்புகள் இருக்கின்றன. புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ திராவிட இயக்கத்தின் இலக்கிய உணர்ச்சியின் வெளிப்பாடு, காவியப் படைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.
முரசொலி மாறனின் ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’என்ற நூல் முக்கியமானது. அதேபோல் மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ என்கிற நூலில் மாநில சுயாட்சி என்றால் என்ன, அதன் தேவை என்ன, அதிகாரம் மத்தியில் குவிக்கப்படுவதன் நோக்கம் என்ன, மாநில சுயாட்சி இருந்தால் என்னென்ன அதிகாரங்களை நாம் வைத்துக்கொள்ள முடியும் என்பதையெல்லாம் விளக்குகிறது. மாநில சுயாட்சி பற்றி வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன் எழுதி சமீபத்தில் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கும் நூல், அரசியல் சட்டத்தை ஆய்வுபூர்வமாக அலசுகிறது. 1950-களில் பேராசிரியர் க.அன்பழகன் எழுதிய ‘வகுப்புரிமைப் போராட்டம்’ என்ற நூல் தற்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது. க.நெடுஞ்செழியன், சக்குபாய் எழுதிய ‘சமூக நீதி’ நூலில் இட ஒதுக்கீட்டின் வரலாறு விளக்கப்பட்டிருக்கிறது.
பொருளாதாரம் தொடர்பாகப் படிக்க விரும்புபவர்கள் அறிஞர் அண்ணாவின் ‘பணத்தோட்டம்’ படிக்கலாம். 1940-களில் இருந்த நிலைமைகளை எடுத்துச் சொல்லும் நூல் அது. இன எழுச்சி தொடர்பாக அண்ணா எழுதிய கட்டுரை, ‘ஆரியமாயை’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. அடுத்து, கருணாநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ நூலைப் படிக்க வேண்டும். ஆறு தொகுதிகளாக இது வந்துள்ளது. ஏ.எஸ்.வேணு எழுதிய ‘பெரியார் ஒரு சகாப்தம்’, பெரியாரைப் பற்றி, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி, திராவிட இயக்கத்தைப் பற்றி கீ.வீரமணி எழுதிய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ போன்றவை அவசியம் படிக்க வேண்டியவை. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா இணைந்து எழுதிய ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ புத்தகம் பெரியாருடைய பொதுவாழ்க்கைப் பங்களிப்பை விளக்குகிறது.
20-ம் நூற்றாண்டின் வரலாறு, காங்கிரஸ், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம் அந்தக் காலத்துத் தலைவர்களைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள கோவை அய்யாமுத்து எழுதிய ‘நினைவுகள்’ என்ற நாவலைப் போன்ற புத்தகத்தைப் படிக்கலாம். நெ.து.சுந்தரவடிவேலுவின் எழுதிய ‘நினைவலைகள்’, திமுகவைப் பற்றி ராம அரங்கண்ணல் எழுதிய ‘நினைவுகள்’ ஆகிய நூல்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை. அமைச்சராக இருந்த க.ராஜாராம் எழுதிய ‘ஒரு சாமானியனின் கதை’ நூலில் நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திமுக பற்றிச் சொல்லியிருப்பார்.
குத்தூசி கட்டுரைகள் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டியவை. குத்தூசி குருசாமியின் வாழ்க்கை வரலாறை குருவிக்கரம்பை வேலு எழுதியிருக்கிறார். திராவிடர் கழகத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் துல்லியமாக அவர் எழுதியிருப்பார். பி.எஸ். இளங்கோவின் ‘பிட்டி தியாகராயர் முதல் கலைஞர்வரை’, டி.எம். பார்த்தசாரதியின் ‘திமுக வரலாறு’, கே.ஜி.ராதாமணாளனின் ’திராவிட இயக்க வரலாறு’ போன்ற புத்தகங்களும் முக்கியமானவை.
இந்தப் புத்தகங்களையெல்லாம் படித்தால் திராவிட இயக்கத்தைப் பற்றி அடிப்படையான புரிதலும் உணர்வும் கிடைக்கும்.
- க.திருநாவுக்கரசு,
திராவிட இயக்க வரலாற்றாசிரியர்.
பார்வையை விரிவாக்கும் மொழிபெயர்ப்புகள்!
மொழிபெயர்ப்புகளை மட்டும் தேடித்தேடி வாசிக்கும் வாசகர்கள் எல்லா தலைமுறைகளிலும் இருந்துவருகிறார்கள். சொந்த மொழியின் படைப்பெல்லைகளை அயல்மொழி இலக்கியங்களால் விரிவுப்படுத்திக்கொள்ளும் முயற்சிதான் அது. எனக்கும் அந்த மோகம் எனது கல்லூரி தினங்களில் பீடித்திருந்தது. ரஷ்ய மொழி இலக்கியங்களை ராதுகா பதிப்பகம் மூலம் கண்டடைந்தேன்.
ரஷ்ய மொழி இலக்கியங்களில் தமிழுக்குக் கிடைத்த அற்புதமான படைப்புகள் என விளாதீமிர் கொரலேன்காவின் ‘கண் தெரியாத இசைஞன்’, லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ இரண்டையும் சொல்வேன். இவ்விரு நூல்களையும் மொழிபெயர்த்த ரா. கிருஷ்ணையாவின் எழுத்துத் திறன் மீது அந்த வயதில் எனக்கு உண்டான கவர்ச்சிதான் மொழிபெயர்ப்புத் துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
‘கண் தெரியாத இசைஞன்’ ஒரு மிகச் சிறிய நாவல். பிறவியிலேயே பார்வையில்லாத பியோத்தரின் அகவுலகத்தில் இசை உண்டாக்கும் மாற்றம் அவனைப் பெரும் இசைக்கலைஞனாக உருவாக்குகிறது. யதேச்சையாக சூரியனை அண்ணாந்து பார்க்கும்போது அந்தக் குருட்டுக் கண்களுக்குள் நிகழும் சலனங்கள், தோழியுடன் ஏற்படும் கோபம் என்று மறக்க முடியாத மகத்தான படைப்பு அந்நாவல். இன்று வரை நான் வாசித்த நாவல்களில் முதலிடத்தை வகித்திருப்பது ‘புத்துயிர்ப்பு’. காந்திக்கும் பிடித்தமான நாவல் இது. இளவரசன் நெஹ்லூதவ் மூலமாக டால்ஸ்டாய் தனது வாழ்வின் ஆன்மீகத் தேடலை விரிவாக நிகழ்த்திச் சொல்கிறார். இந்நாவலை விஞ்சக்கூடிய கலைப்படைப்பு எந்நாளும் சாத்தியமில்லை என்பேன்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரெஞ்சு மொழியில் அந்த்வான் து செந்த் எக்சுபெரியால் எழுதப்பட்ட ‘குட்டி இளவரசன்’ இன்றளவும் உலகின் மகத்தான நாவல்களில் ஒன்று. க்ரியா பதிப்பக வெளியீடாக வெ.ஸ்ரீராம், ச. மதனகல்யாணி ஆகியோரின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. குட்டி இளவரசன் ஒவ்வொரு கிரகமாகச் செல்கிறான். அங்கே பூ, பாம்பு, நரி போன்றவற்றோடு உரையாடுவதுதான் நாவல். குழந்தைகளுக்கான புத்தகத்தைப் போலிருந்தாலும் ‘அற்புத உலகில் ஆலி’ஸைப் போலவே ஆழமான தத்துவங்களையும், வாழ்வின் புதிர்த்தன்மையையும் சொல்லும் நாவலாக இருக்கிறது.
ஃபிரான்ஸ் காஃப்காவின் ‘உருமாற்றம்’ என்ற குறுநாவலைப் பற்றி புதுமைப்பித்தனே கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார். கிரிகோர் சாம்சா என்று விற்பனைப் பிரதிநிதி கடுமையான மன அழுத்தத்தில் வாழ்கிறான். அவனைச் சுற்றிலும் சுயநலக்காரர்கள். திடீரென ஒருநாள் தூங்கியெழும்போது அவன் ஒரு மிகப்பெரிய அசிங்கமான பூச்சியாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறான். இந்நாவலின் தொடர்ச்சியாக முரகாமி ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ருஷ்டியின் நாவல் ஒன்றில் இப்பாத்திரம் இடம்பெறுகிறது. காஃப்காவைப் படிப்பதும், தூக்கத்தில் துர்சொப்பனத்தில் ஓர் உலகத்தைக் காண்பதும் ஒன்றுதான் என்று க.நா.சு எழுதுகிறார். தமிழில் மிக அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நூல்களில் இந்நாவலும் ஒன்று. இம்மொழிபெயர்ப்பை பலமுறை செப்பனிட்டு வழங்கியிருக்கிறார் ஆர்.சிவக்குமார் (தமிழினி பதிப்பகம்).
சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட துருக்கிய நாவலான ‘அஸிஸ் பே சம்பவம்’ (அய்ஃபர் டுன்ஷ்) கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது. இசைக்கலைஞன் ஒருவனின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என வெவ்வேறு தளங்களில் விரியும் நுட்பமான கதையாடல்; தேர்ந்தெடுத்த சொற்கள், நேர்த்தியான வாக்கிய அமைப்புகளால் ஆன நூல் இது.
என் வாசிப்பில் முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்கள் எனப் பட்டியலிட்டால் அது நீளமாகச் செல்லும் . குறிப்பிட்டு சொல்வதென்றால் வெ.ஸ்ரீராம் பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துள்ள ஆல்பெர் காம்யுவின் ’முதல் மனிதன்’, ‘அந்நியன்’, பியரெத் ஃப்லுசியோவின் ‘சின்ன சின்ன வாக்கியங்கள்’, எக்சுபெரியின் ‘காற்று, மணல், நட்சத்திரங்கள்’ ஆகிய நூல்களையும் கீழ்வரும் சில புத்தகங்களையும் சொல்லலாம். போர்ச்சுகீஸ் எழுத்தாளர் ஹொஸே ஸரமாகோ எழுதிய ‘அறியப்படாத தீவின் கதை’ ஆனந்தால் தமிழில் அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
உலகில் மிக அதிகமாக விற்பனையான ‘ சோஃபியின் உலகம்’ இளம் வாசகர்களுக்கான நாவல். யொஸ்டைன் கார்டெர் எழுதிய இந்நாவல், உலகின் பல்வேறு சிந்தனை மரபுகளை ஓர் இளம்பெண்ணுக்கு சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்வதுபோல் அமைந்தது. ஆர்.சிவக்குமாரின் மொழிபெயர்ப்பு (காலச்சுவடு). இது கடந்த நாற்பதாண்டுகளாக எல்லா நாடுகளிலும் மிகவிருப்பத்துடன் வாசிக்கப் படுகிற நாவல் காப்ரியேல் மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’. தமிழில் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியிட்ட நாவல்.
இந்திய மொழி நாவல்களில் குர் அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி’, அதீன் பந்தியோபாத்யாயவின் ‘நீலகண்ட பறவையைத் தேடி’, விபூதிபூஷணின் ‘பதேர் பாஞ்சாலி’, ஓ.வி விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ ஆகியவை தமிழில் வந்திருக்கும் நல்ல மொழிபெயர்ப்புகளில் சில.
-ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்,
ஆய்வுகளின் வழியே ஒரு வரலாற்றுப் பயணம்

தமிழ்ச் சமூக வரலாறு உருவாக்கத்துக்கும் பண்பாடு குறித்த அக்கறைக்கும் அடிப்படை வகுப்பவை நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த படைப்புகள். சமீபத்தில் வெளியான சில புத்தகங்கள், இவ்வகையில் கவனத்துக்குரியவை.
நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் ஆய்வுப்புலங்களின் முன்னோடி ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியிருக்கும் ‘பனை மரமே! பனை மரமே! - பனையும் தமிழ்ச் சமூகமும்’ (காலச்சுவடு பதிப்பகம்). புழங்கு பொருட்கள் பற்றிய பண்பாட்டு ஆய்வு இந்நூல். பனைக்கு நூற்றுக்கும் அதிகமான பெயர்கள்; வாய்மொழி வழக்காறுகளுடன் செவ்வியல் இலக்கிய, இலக்கணங்கள், கல்வெட்டுகள் என்று பல்துறைக் கூட்டாய்வாக இந்நூல் மலர்ந்துள்ளது. சிந்துச் சமவெளி குறித்த புதிய வெளிச்சம் தரும் அரிய நூல், ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ (பாரதி புத்தகாலயம்). மொழியியலையும், நிலவியலையும் இணைத்துப் பார்க்கிறது இவரது முறையியல். திராவிட இடப்பெயர்கள் - சங்க இலக்கியங்களில் காணலாகும் கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகியன சிந்துவெளியில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளதை உரிய தரவுகளின் வழி மெய்ப்பிக்கிறார்.
தமிழ் நாட்டுப்புறவியலின் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கிய நூல் ஆறு. இராமநாதன் எழுதிய ‘தமிழர் கலை இலக்கிய மரபுகள் -நாட்டுப்புறவியல் ஆய்வு’ (மெய்யப்பன் பதிப்பகம்). நாட்டுப்புறவியல் அறிமுகம் தொடங்கி நாட்டுப்புறவியல் ஆய்வுகள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள், கதைப் பாடல்கள், கள ஆய்வு, கோட்பாடுகள், கோட்பாட்டாய்வுகள் ஆகியன பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 1937-ல் நீடாமங்கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நடந்த சமபந்திபோஜனத்தில் பங்கேற்றதற்காக 20 தலித்துகள் தாக்கப்பட்டனர். பெரியாரும் அவரின் சுயமரியாதை இயக்கமும் இக்கொடுமைக்கு எதிராகப் போராடினர். இது குறித்த கள ஆய்வு, ஆவணங்கள், பத்திரிகைச் செய்திகள் வழி ஆ.திருநீலகண்டன் எழுதியிருக்கும் நூல் ‘நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’ (காலச்சுவடு பதிப்பகம்). நீடாமங்கலம் நிகழ்வு, தமிழ்ச் சமூக சாதித் தழும்பாக வரலாற்றில் பதிவானதன் சான்று இந்நூல். தமிழில் கலை வரலாறு குறித்த ஆக்கங்களின் தொகுப்பு, சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘கல் மேல் நடந்த காலம்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்). சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் வழியே பண்பாட்டு எழுதியலாக இக்கட்டுரைகள் அமைகின்றன. ஆர்மாமலை குகை ஓவியங்கள், தமிழ் அரச பரம்பரையின் உருவச் சிற்பங்கள், இருக்குவேளிர் கலைப் பாரம்பரியம், தஞ்சை பெரிய கோயில் புத்த சிற்பம் போன்ற கட்டுரைகள் தமிழுக்குப் புதியவை.
சி.மீனாட்சி, வித்யா தெஹிஜியா, தர்மாகுமார், ரொமிலா தாப்பர், குமாரி ஜெயவர்த்தனெ ஆகிய ஐந்து வரலாற்று அறிஞர்களை அறிமுகப்படுத்துவதுடன், அவர்களின் சிறந்த ஆய்வுகளில் ஒன்றையும் அறிமுகப்படுத்தும் நூல், தேன்மொழி தொகுத்திருக்கும் ‘வரலாற்றை எழுதும் பெண்கள்’ (மணற்கேணி பதிப்பகம்) வரலாற்றை வாசிப்பதிலும், உருவாக்குவதிலும் பெண்ணிலைப் பார்வையை விரிவாக்கிட இந்நூல் உந்துதல் தரும்.
சமகால சமூக நிகழ்வுகளை முன்வைத்து விவாதித்திக்கும் கட்டுரைகளின் தொகுப்பு, டி.தருமராஜ் எழுதிய ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ (கிழக்குப் பதிப்பகம்). நாட்டுப்புறவியல், மானுடவியல், சமூகவியல், பின்நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகளின் ஊடே விமர்சனங்களை முன்வைக்கிறது இந்நுல். “நான் ஏன் தலித் அல்ல என்ற பதிலைச் சுமந்தபடி தலித்தாகவே இருக்கும்படி நான் மீண்டும் மீண்டும் சபிக்கப்படுகிறேன்” என்கிறார் ஆசிரியர். பக்தவச்சல பாரதி, ஓ.முத்தையா தொகுத்திருக்கும் ‘பொதினி நாட்டுப்புறவியல் ஆய்வுகள்’, தமிழக நாட்டுப்புறவியல் அறிஞர் பெ.சுப்பிரமணியன் பணிப்பாராட்டு தொகை நூல் (காவ்யா பதிப்பகம்). வாய்மொழி வரலாறு, வாய்மொழி வழக்காறுகள், வழிபாடும் சடங்குகளும், கலைகளும் கலைஞர்களும், கோட்பாடுகளும் அணுகுமுறைகளும், வாய்மொழி மரபு அறிவு ஆகிய பகுப்புகளில் 41 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அரை நூற்றாண்டு தமிழ் நாட்டுப்புறவியலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கட்டியம் கூறும் நூலாக அமைகின்றது.
தமிழின் தொல்லிலக்கியங்கள் குறித்த ஆய்வில் இலக்கிய மானிடவியல், இனவரைவியல் போன்ற அறிவுத் துறைகளைக் கருவிகளாக்கி ஆராயும் போக்கை அறிமுகப்படுத்துகிறது ஞா.ஸ்டீபன் எழுதியிருக்கும் ‘இலக்கிய இனவரைவியல்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்). இலக்கிய இனவரைவியல் என்பது இலக்கியத்தை மானிடவியல் அடிப்படையில் ஆய்வுசெய்யும் முறையியல் எனக் கூறுகிறார் நூலாசிரியர்.
கொங்கு வட்டாரத்தில் நாட்டுப்புறத் திருவிழாக்கள், குலதெய்வ விழாக்களில் இசைக்கப்பெறும் இசைக் கருவிகள் குறித்து விரிவாக ஆராய்கிறது பெ.சுப்பிரமணியன் எழுதிய ‘கொங்கு நாட்டுப்புற இசைக் கருவிகள்’ (ராம்குமார் பதிப்பகம்). உடுக்கை, பம்பை, உறுமி, திடும், நகார், தப்பு, பேரிகை முதலிய தோல்கருவிகள், நாதசுரம், சங்கு, சந்தக்குழல், கொம்பு, தாரை முதலான துளைக் கருவிகள் பற்றி இந்நூல் நுட்பமான தகவல்களைத் தருகிறது.
- இரா.காமராசு, எழுத்தாளர்,
உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

கவனத்தை ஈர்த்த கவிதைத் தொகுப்புகள்
ஒரு பண்பாட்டின் ஆரோக்கியத்தைக் கணிக்க உதவும் நாடித்துடிப்பு என்று அதன் மொழியில் எழுதப்படும் கவிதைகளைக் கூறலாம். தமிழின் கவிதை மொழிக்கு அவ்விதத்தில் ஆழமான தொன்மையும் அறுபடாததொரு தொடர்ச்சியும் உண்டு. இன்றும் உரைநடைப் புனைவுகளைக் காட்டிலும் அதிகமாகக் கவிதைகள் எழுதப்படுகிற மொழியாக தமிழ் இருப்பதைக் காண்கிறோம்.
சமீப காலத்தில் வெளியான கவிதை நூல்களில் தமக்கேயுரிய தனித்துவமான நோக்கு மற்றும் விவரணை மொழியோடு பலரின் கவனத்தையும் கருத்தை யும் ஒருங்கே ஈர்த்த தொகுப்புகளென்று சபரிநாதனின் ‘வால்’ (மணல் வீடு பதிப்பகம்), பெருந்தேவியின் ‘வாயாடிக் கவிதைகள்’ (சஹானா வெளியீடு), குணா கந்தசாமியின் ‘மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்’ (காலச்சுவடு பதிப்பகம்), ரவிசுப்ரமணியனின் ‘விதானத்துச் சித்திரம்’ (போதிவனம் வெளியீடு), கண்டராதித்தனின் ‘திருச்சாழல்’ (புது எழுத்து பதிப்பகம்), வெயிலின் ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃபிராய்டு’ (மணல் வீடு பதிப்பகம்), இசையின் ‘ஆட்டுதி அமுதே’(காலச்சுவடு பதிப்பகம்), போகன் சங்கரின் ‘தடித்த கண்ணாடி அணிந்த பூனை’ (உயிர்மை பதிப்பகம்) ஆகியவற்றைக் கூறலாம்.
இவற்றுக்கு அப்பால், நாளும் கூர்மையடைந்துவரும் சமூக முரண்களை, கலாச்சார நெருக்கடிகளை, அவற்றின் உள்ளார்ந்த அரசியலைப் பேசுபவையென்ற விதத்தில் மனுஷ்ய புத்திரனின் ‘இருளில் நகரும் யானை’ ( உயிர்மை பதிப்பகம்), பெருமாள் முருகனின் ‘கோழையின் பாடல்கள்’ ( காலச்சுவடு பதிப்பகம்), யவனிகா ஸ்ரீராமின் ‘அலெக்ஸாண்டரின் காலனி’ (மேகா பதிப்பகம்), நரனின் ‘லாகிரி’ (சால்ட் பதிப்பகம்), கரிகாலனின் ‘தாமரை மழை’ (நான்காவது கோணம்)ஆகிய தொகுதிகளைக் குறிப்பிட வேண்டும். தொடர்ந்து கவிதையில் இயங்கிவரும் முன்னோடிகளான வண்ணதாசனுக்கும் கலாப்ரியாவுக்கும் சென்ற வருடமும் ‘மூன்றாவது முள்’ (சந்தியா பதிப்பகம்), ‘தூண்டில் மிதவை யின் குற்ற உணர்ச்சி’ (டிஸ்கவரி பதிப்பகம்) ஆகிய தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மற்றொரு தொகுப்பு மகுடேசுவரனின் ‘புலிப்பறழ்’ (தமிழினி பதிப்பகம்) இம்மூன்றுமே அவற்றினுடைய மொழி ஆளுமைக்காகத் தனித்துக் கவனம் கொள்ளப்பட வேண்டியவை. இவைதவிர, சில கவிஞர்களின் முழுக் கவிதைகளும் மொத்தத் தொகுப்பாக வெளிவந்துள்ளன. தேவதச்சனின் ‘மர்ம நபர்’ (உயிர்மை பதிப்பகம்), எஸ். வைதீஸ்வரனின் ‘மனக்குருவி’ (அனாமிகா வெளியீடு), யுவனின் ‘தீராப்பகல்’ ( காலச்சுவடு பதிப்பகம்), ஆகியவை அவ்விதத்தில் முக்கியமானவை. ஒரு மொழிக்குள் முனைந்து புதிய போக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பவை மொழியாக்கங்கள். பிரம்மராஜனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘மிரோஸ்லாவ் ஹோலூப் கவிதைகள்’ (யாவரும் வெளியீடு), சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான ரூமியின் ‘தாகங்கொண்ட மீனொன்று’ தொகுப்பு (லாஸ்ட் ரிசார்ட்ஸ்) ஆகியன முக்கியமான மொழிபெயர்ப்புகள்.
இவையன்றி சுய அனுபவம், பார்வைக் கோணம், கூறு மொழி, வெளிப்பாட்டு உத்தி ஆகியவற்றில் தனக்கான தனி அடையாளத்தைக் கைக்கொள்ளும் முயற்சியாக எழுதிவருகிற புதியவர்களின் சில தொகுப்புகளும் கவனத்துக்கு உரியவை. பிரதாப ருத்ரனின் ‘கடலாடும் கல் ஓவியம்’, ‘சூரர்பதி கவிதைகள்’, ஜீவன் பென்னியின் ‘அளவில் சிறியவை அக்கருப்பு மீன்கள்’, நா. பெரியசாமியின் ‘குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்’, யாளியின் ‘கேவல் நதி’, சுவாதி முகிலின் ‘எலெட்க்ரா’ முதலியவற்றோடு பாயிஸா அலியின் ‘கடல் முற்றம்’ இமாம் அத்தனானின் ‘மொழியின் மீது சத்தியமாக’ என்ற இரு ஈழத் தமிழ்த் தொகுப்புகளையும் குறிப்பிடலாம்.
ஓலைச்சுவடியிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் காகிதத்துக்குள் நுழைந்த தமிழ்க் கவிதை இப்போதைய கணினி யுகத்தில் மின் பதிப்புகளாகவும் கிடைக்கிறது. பேயோனின் ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’, பாலா கருப்பசாமியின் ‘ஓரிரு வரிகளில் என்ன இருக்கிறது’ ஆகியவற்றோடு பிரமிளின் ‘மேல் நோக்கிய பயணம்’, ‘கைப்பிடியளவு கடல்’ ஆகியவையும் கிண்டில் பதிப்புகளாகக் கிடைக்கின்றன.
தமிழ் பேசுவோரின் நிலவெளி, கண்டங்கள் கடந்தும் விரிந்து கிடக்கிற சூழலில், காலத்தை ஒட்டிய அவர்தம் அனுபவங்களுக்கும் கணக்கில்லை. இவற்றையெல்லாம் மொழிக்குள் உணர்வாக, நினைவாக கொண்டுவந்து சேர்க்கப் புதிய சொற்களை வேண்டி நிற்கிறது இன்றைய கவிதை.
- க.மோகனரங்கன், கவிஞர், இலக்கிய விமர்சகர்

விகடன்.காம் இணைய தளத்தில் வெளியான புத்தக பரிந்துரைகள்

எழுத்தாளர் இமையம் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள் ( விகடன்.காம்)
 “மனித மனங்களுக்கிடையே இருந்து எண்ணங்களைக் கொண்டுவந்து குவிக்கும் தேனீக்கள், புத்தகங்கள்"- ஜேம்ஸ் ரசல்.
வாசிப்பு குறித்தும் புத்தகங்களின் அவசியம் குறித்தும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பேசியுள்ளனர். வாசிப்பின் வழியே தங்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை பலரும் பல தருணங்களில் நினைவுகூர்ந்துள்ளனர். பள்ளிகளில், கல்லூரிகளில் நாம் கற்கும் கல்விக்கு நிகராக நம்மைச் செம்மைப்படுத்தும் பணியை, புத்தகங்கள் மேற்கொள்கின்றன.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்கள் மட்டுமன்றி பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களும் இலக்கிய நூல்களும் வைத்திருப்பதன் காரணம், வாசிப்பின் வாசலைத் திறப்பதற்காகவே. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூலகங்கள் அமைந்திருப்பதன் நோக்கமும் மக்களை வாசிப்பாளர்களாக உருவாக்கவே. பல்வேறு பதிப்பகங்கள் பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பதிப்பித்து வெளிக்கொண்டு வந்துள்ளன. இணையவழிச் சமூகமாக இன்றைய தலைமுறை மாறிவிட்டபோதிலும் அச்சு ஊடகத்தின் மீதான நேசம் பலருக்கும் குறையவில்லை. இணையத்தில் படிப்பதற்கு நிகராக புத்தகம் வாங்கி படிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இமையம், தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்.  மனித வாழ்வின் அவலங்களை, நேர்மையான முகங்களை, எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வை தன் எழுத்துகளின் வழியே கடத்துவதில் கைதேர்ந்தவர். சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை வார்த்தை வடிவமாக்குவதிலும், கற்பனைக் கதாபாத்திரங்களை கதை வழியே கொண்டுவருவதிலும் வாசகர்களின் வாஞ்சையான எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவரின் படைப்புகளை இளையோருக்கு மட்டுமல்லாமல் எழுத்தை வாசிக்கும் வல்லமையுடைய அத்துணை மனங்களிலும் ஆழப் பதித்திருக்கும் அற்புதப் படைப்பாளி. `கோவேறு கழுதைகள்', `செடல்', `பெத்தவன்' போன்ற முக்கியமான படைப்புகள், இவரின் எழுத்தாற்றல்களில் சில.
சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழின் முக்கியமான எழுத்தாளர் இமையத்திடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் குறித்தும் கேட்டோம்..!
“ஒருவன் ஏன் வாசிக்க வேண்டும்... அதன் தேவை என்ன?''
“இலக்கியத்தின் வழியாகத்தான் ஒருவர் சமூகத்தையும் மொழியையும் புரிந்துகொள்ள முடியும். விஞ்ஞானத்தைப் படிப்பதைவிட, மருத்துவத்தைப் படிப்பதைவிட முக்கியமானது வாழ்க்கையைப் படிப்பது. அதற்கு இலக்கியம் வகைசெய்யும். இலக்கியத்தின் மூலம்தான் ஒரு மனிதன் தான் வாழும் சமூகத்தையும், தான் வாழ்ந்த சமூகத்தின் முந்தைய காலத்தையும் அறிந்துகொள்ள முடியும். சகமனிதன் மீதும், தான் வாழும் சமூகத்தின் மீதும் மனிதன் அக்கறைகொள்ள, அன்பு செலுத்த இலக்கியமே வழிவகை செய்யும். தன் மொழியின், சமூத்தின் தொன்மைகுறித்த ஆவணங்களே, ஆகவேதான் மனிதன் இலக்கியத்தைப் படிக்க வேண்டும்.''

“சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு, நீங்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் எவை?”
1) அமைதி என்பது நாமே -  திக் நியட் ஹான்.
தமிழில்: ஆசை. க்ரியா பதிப்பகம்.
2) போதியின் நிழல் - தமிழ் நாவல்
எழுத்தாளர்: அசோகன் நாகமுத்து, அந்திமழை பதிப்பகம்.
3) பெருவலி - தமிழ் நாவல்
எழுத்தாளர்: சுகுமாரன் , காலச்சுவடு பதிப்பகம்.
4) பனைமரமே... பனைமரமே! - கட்டுரைகள்
எழுத்தாளர்- ஆ.சிவசுப்ரமணியன் - காலச்சுவடு பதிப்பகம்.
5) அரசியல் பழகு - கட்டுரைகள்    -எழுத்தாளர்: சமஸ்.
என் பரிந்துரை இந்த 5 புத்தகங்கள்!’’ - எஸ்.ராமகிருஷ்ணன் (விகடன்.காம்)
``நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்த்த ஒரு பகுதியே நான்" - தியோடர் ரூஸ்வெல்ட். புத்தகங்கள், மனிதகுலத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவருபவை. ஒரு புத்தகத்தை நாம் படிப்பதன் மூலம் நாம் பார்க்காத, உணராத விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். பெரும் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் இவர்கள் எல்லோரையும் ஏதாவது ஒரு புத்தகம் அவர்களின் இலக்கை நோக்கி உந்தித் தள்ளியிருக்கும். வாழ்வில் பெருந்தோல்வியிலிருந்து மீண்ட பலருக்கும் ஒரு புத்தகம் உடன் இருந்திருக்கும். நம் அறையில் நம்முடனே இருக்கும் நண்பன்தான் புத்தகம். நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிப்பது ஒரு கலை. சென்னையில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியையொட்டி  தமிழின் முக்கியமான எழுத்தாளர்களிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்களையும் கேட்டிருந்தோம். வாருங்கள் வாசிப்போம்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழின் மிக முக்கியமான கதைசொல்லி. மனித மனங்களின் அன்பை, துயரை, பரிதவிப்பை தன் எழுத்துகளின் வழியே கடத்தும் தேசாந்திரி. இந்தியா முழுவதும் சுற்றியலைந்து தான் பெற்ற அனுபவங்களை, பரவசத்தை வாசகனுக்குக் கடத்துவதில் வல்லவர். வாசகர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கிவருபவரைச் சந்தித்தோம்.
ஒருவன் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தோம். அதற்கான அவரது பதில்...
``வாழ்க்கை நம் ஒவ்வொருவரையும் குறிப்பிட்ட ஒரு சூழலில் குறிப்பிட்ட கால, இனம், குடும்பத்துக்குள் வாழ மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால், புத்தகங்கள் ஒருவனை எல்லா காலங்களுக்குள் சென்று வரவும், பல்வேறு மனிதர்களை, நிலவெளியை, அனுபவங்களை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. அந்த வகையில் புத்தகங்களே உண்மையான கால இயந்திரம். புத்தகங்களை வாசிப்பதன் வழியே உலகைத் தெரிந்துகொள்வதுடன் நம்மைப் பற்றியும் அறிந்துகொள்கிறோம். நம்மிடம் உருவாகும் மாற்றங்கள் சமூகத்திலும் எதிரொலிக்கும் என்பதே நிஜம்.
`நீங்கள் என்ன புத்தகம் வாசிக்கிறீர்கள் எனக் கூறுங்கள், நீங்கள் யார் எனச் சொல்லிவிடுவேன்' என்று எப்போதும் கூறுவேன். அது உண்மை. புத்தகங்கள் ஒரு மனிதனின் அகத்தை வெளிப்படுத்திக் காட்டக்கூடியவை. சொற்கள், வெறும் அச்சிடப்பட்ட வார்த்தைகள் அல்ல. அவை நம் ஒவ்வொருவருக்குமான வாழ்க்கை வழிகாட்டி. ஆகவே, நிறைய வாசியுங்கள். வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களை வாசிக்கவையுங்கள். அதுவே உங்கள் வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் அவசியம்"  என்றார்.
எஸ்.ரா பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள்:
1) புதுமைப்பித்தன் சிறுகதைகள்:
புதுமைப்பித்தன், தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியர். எளியவர்களின் வாழ்வை தன் எழுத்துகளின் வழியே சொன்னவர். 1948-ம் ஆண்டு புதுமைப்பித்தன் மறைந்தாலும்    அவரது எழுத்துக்களோ இன்று வரையிலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவருகின்றன.
2) கு.அழகிரிசாமியின் சிறுகதைகள்:
தமிழில் குழந்தைகளின் உலகம் சார்ந்த கதைகள் எழுதியவர் கு.அழகிரிசாமி. `இருவர் கண்ட ஒரே கனவு' சிறுகதை மிகவும் பிரபலம்.
3) தி.ஜானகிராமன் சிறுகதைகள்:
`தி.ஜா' என அழைக்கப்படும் தி.ஜானகிராமன், மனித மனதின் உறவு சார்ந்த, உணர்வுநிலை சார்ந்த கதைகளை எழுதியவர்.
4) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன் : (நாவல்)
தமிழ் இலக்கிய உலகில் மிகவும் கொண்டாடப்பட்ட விமர்சிக்கப்பட்ட ஆளுமை ஜெயகாந்தன். தான் எழுதுவதை நிறுத்திக்கொண்ட பிறகும் தொடர்ந்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். இவரது நாவல்களில் மிக முக்கியமானதாக பலராலும் பரிந்துரை செய்யப்படும் நாவல் `ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்'.
5) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா: (நாவல்) முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல். சி.சு.செல்லப்பா தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர். `எழுத்து' என்ற சிறுபத்திரிகையை நடத்தி தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமான முன்னெடுப்பைச் செய்தவர்.

எழுத்தாளர் சோ.தர்மன் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் (விகடன்.காம்)

``கடைசிப் பக்கத்தை வாசித்து முடிக்கிறபோது, நண்பனை இழந்துவிட்ட கணம் நமக்கு ஏற்படுவது நல்ல புத்தகத்தின் அடையாளம்'' - பால் ஸ்வீனி.
சென்னைப் புத்தகக் கண்காட்சி களைகட்டத் தொடங்கிவிட்டது. தினமும் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உரை என ஒவ்வொரு நாளின் இலக்கிய மாலையும் மிக இனிமையாகக் கழிந்துவருகிறது. தத்துவம் சார்ந்த புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சிறுவர் இலக்கியங்கள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் என நிறைய நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நம் மொழிக்குப் பெருமைசேர்க்கும்விதமாக திருவள்ளுவரின் சிலை ஒன்று, புத்தகக் கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. மலையென குவிந்துகிடக்கும் புத்தகங்களில் எந்தப் புத்தகம் வாங்கலாம் என்ற எண்ணம் வாசகர்களுக்கு எழலாம்.  `கூகை' என்ற நாவலின் வழியே தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்த சோ.தர்மன், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவரிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும்
    வாசகர்கள் வாங்கி படிக்கவேண்டிய முக்கிய நூல்கள்  குறித்தும் பேசினோம்.
``இன்றைய காலகட்டத்தில் ஊடகத்தினுடைய தாக்கம் என்பது அதிகம் உள்ளது. மக்களுக்கான பெரும்பான்மையான நேரத்தை, அலைபேசியும் தொலைக்காட்சியுமே எடுத்துக்கொள்கின்றன. அவற்றை மீறித்தான் ஒருவன் வாசகனாக உருவாகவேண்டியுள்ளது. நுண்கலைகள் எனப்படும் நாட்டியம், சங்கீதம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள, பிறரின் பங்களிப்பு அவசியம். ஆனால், பிறருடைய பங்களிப்பு இல்லாமல் நாம் கற்றுக்கொள்ள முடிவது `இலக்கியம் படைப்பது' மட்டும்தான். அதற்கு வாசிப்பு, மிக முக்கியமான ஒன்று.
`வாசகன் எதற்காக வாசிக்க வேண்டும்?' என்ற கேள்வி எழலாம். இன்றுதான் எல்லா தகவல்களும் இணையத்திலேயே கிடைக்கின்றனவே என்ற எண்ணம் தோன்றலாம். தகவல்கள் இணையம் மூலம் கிடைக்கலாம். ஆனால், அந்தத் தகவல் சார்ந்த ஆழமான சுவடுகள் தெரிய இலக்கியம்தான் வழிவகை செய்யும். இதை உணரும்போது, வாசகர்கள் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்துவிடுவர். வாசிப்பு, மனிதனை பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லும். வாசிப்பின் ருசியை உணர்ந்த வாசகர்கள், வாசிப்பைத் தொடர ஆரம்பித்துவிடுவர்.
அப்படி வாசிப்பவர்களுக்கு, இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்க குறிப்பிட்ட சில நூல்களைப் பரிந்துரைக்கிறேன்.
1) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன் ( நாவல்)
நாவல் என்ற வகையில், நான் பரிந்துரை செய்வது `யாமம்'தான். சமகாலத்தில் வெளிவந்த நாவல்களில் முக்கியமான ஒன்று.
2) ஆண் பிரதியும் பெண் பிரதியும் - சமயவேல் (கட்டுரை)
கட்டுரைத் தொகுப்பில் சமயவேலின் `ஆண் பிரதியும் பெண் பிரதியும்' குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று. வாசகர்கள் அதை வாங்கிப் படிப்பதன் வழியே அவர்களுக்கு வேறோர் எண்ண மாற்றம் நிகழ வாய்ப்புண்டு.
3) மர்ம நபர் - தேவதச்சன் (கவிதை)
தேவதச்சனுடைய கவிதை நூலான `மர்ம நபர்' மிக முக்கியமான ஒரு பிரதி. வாசகனை மிக எளிய முறையில் சென்று சேரும் வகையில் கவிதைகள் இருக்கும். இது அவரது முழுக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு.
4) கடவுள் சந்தை - மீரா நந்தா (கட்டுரை)
உலகமயமாக்கலைப் பற்றி வந்த மிக முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. பூரணச்சந்திரனின் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.
5)  தியோடர் பாஸ்கரனுடைய சூழலியல் சார்ந்த அத்தனை புத்தகங்களும்.''


எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள் (விகடன்.காம்)

எனது பிறப்புரிமைக்கான விடுதலை நோக்கிய நுழைவுச் சீட்டு புத்தக வாசிப்பு" - பெடரிக் டக்லஸ். புத்தகம் என்பது பொழுதுபோக்கிற்காக வாசித்து இன்புறுவது மட்டுமல்ல. வாசிப்பின் வழியே மனித வாழ்வின் திறக்கப்படாத பக்கங்களை நாம் அறிய முடியும். மனித வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை, சமூக வாழ்வை சரிநிகராக கட்டமைக்கவும் புத்தகங்கள் முன்னெடுப்பு செய்துள்ளன.  பல்வேறு ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வின் வழியே கண்டறிந்தவற்றை புத்தகங்களாக தொகுத்துள்ளனர். அவை காலத்திற்கும் அழியாத தகவல் புதையல்களாக உள்ளன. உலக நாடுகள் பலவற்றில் நடந்த மக்கள் புரட்சிகளுக்கெல்லாம் புத்தகங்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன.
கதைகள், நாவல்கள் போன்ற புனைவுகள் மட்டுமின்றி ,கட்டுரைகள் , ஆய்வுகள் போன்ற புனைவுகளும் காலம் கடந்து நிற்பவையாக உள்ளன. மனித குலத்தின் வளர்ச்சிக்கான மிக முக்கியமான காரணியாக புத்தகங்கள் உள்ளன. உலகெங்கும் இதன் பொருட்டே நிறைய புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழின் முக்கியமான கவிஞர், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் குறித்தும் கேட்டிருந்தோம்... வாருங்கள் வாசிப்போம்!


ஆதவன் தீட்சண்யா எளிய மனிதன் மனதில் கிடக்கும் ரணங்களை, ஆறாத வடுக்களை தன்   கவிதைகளின் வழியே வெளி கொணர்பவர். "மீசை என்பது வெறும் மயிர்" என்ற இவரது நூல் மிக முக்கியமானதொரு பதிவாக இலக்கிய ஆளுமைகள் பலரால் முன்வைக்கப்படுகிறது. இந்த சமூகத்தின் மூலம் முன்வைக்கப்படும் பழமைவாதத்தை எதிர்த்து தன் எழுத்தின் வழியே குரல் கொடுக்கும் ஆதவன் தீட்சண்யாவிடம் பேசினோம்.

`ஒருவர் ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்?''
தம்மைத்தாமே சுயதணிக்கைக்கு ஆட்படுத்தி அடங்கிப் போகாமல் உண்மையைப் பேசுகிறவர்களையும் மாற்றுக்கருத்தாளர்களையும் சகிப்பின்மையினாலும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான வெறுப்பினாலும் கொன்றொழிக்கும் காலமிது. நூலை, நூலகங்ளை எரிப்பது, வெளியிட்ட நூலைத்  திரும்பப் பெற்று அரைத்து காகிதக்கூழாக்கும் படியாக பதிப்பாளர்களை நிர்ப்பந்திப்பது என அச்சுறுத்தல் மூர்க்கமடையும் காலமாகவும் இருக்கிறது. ஆனால், படித்து என் நினைவில் தங்கிவிட்ட ஒரு விஷயத்தை எவராலும் அழித்துவிட முடியாது. அதனாலேயே நான் வாசிக்க முடிந்தவற்றையெல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
வெவ்வேறு தட்பவெப்பங்களில், நில அமைப்புகளில், கோடானுகோடி உயிர்க்கூட்டத்திற்கிடையே வாழ்கிற மனிதர்கள், தங்களது வாழ்வனுபவங்களில் பகிரத்தக்க விஷயங்களை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். எழுத்து வழியான அத்தகைய பகிர்வுகளை வாசித்தறிய நேரும்போது, நான் எனது காலத்திற்கேற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கின்றேனா, இல்லையா என்றும், அதற்கான காரணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் வாசகர்களுக்கு எந்தப் புத்தகங்களைப் பரிந்துரை செய்வீர்கள்?.
1.  கொம்மை
பூமணியின் புதிய நாவல்

2. என் தந்தை பாலய்யா
ஒய்.பி. சத்தியநாராயணா தமிழில்- அ.ஜெனி டாலி

3. குஜராத் - திரைக்குப் பின்னால்
ஆர்.பி. ஸ்ரீகுமார் தமிழில் - ச.வீரமணி, தஞ்சை ரமேஷ்

4.இந்தியா என்கிற கருத்தாக்கம்
சுனில் கில்நானி தமிழில் - அக்களூர் இரவி

5. கினோ - ஹருகி முரகாமி சிறுகதைகள்

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்
``வேறு எங்கோ ஓர் அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே" - மார்க் ட்வெய்ன். சென்னை புத்தகக் கண்காட்சி, இன்று தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்வில் மிக முக்கியமான நிகழ்வாக இந்தப் புத்தகக் கண்காட்சியைச் சொல்லலாம். இது, வெறுமனே புத்தகச் சந்தையாக மட்டுமே அல்லாமல் வாசகனையும் படைப்பாளியையும் ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக உள்ளது. நல்ல புத்தகங்கள் ஒருவரைச் சென்றடையும்போது அதன் வழியே அவரைச் சார்ந்தவர்களும் பயனடைவது உறுதி. புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழின் முக்கியமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் குறித்தும் கேட்டிருந்தோம்... வாருங்கள் வாசிப்போம்!
ச.தமிழ்ச்செல்வன், கரிசல் மண்ணின் வெக்கை தாங்கிய மனங்களின் கதைகளைச் சொன்னவர். இவரது `வெயிலோடு போயி' சிறுகதை, தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றில் ஒன்று. இவரது  `அரசியல் எனக்குப் பிடிக்கும்' என்ற கட்டுரைத் தொகுப்பு, பரவலான வாசகர்களை ஈர்த்தது. எழுத்து மட்டுமன்றி, இயக்கங்கள் சார்ந்தும் இயங்கிவருகிறார்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகச் செயலாற்றிவருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...
``ஒருவர் ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்?''
``இந்த வாழ்வை வாசிப்பதற்காகத்தான் புத்தகம் வாசிக்க வேண்டும். நாம் பிறந்ததிலிருந்து நாம் பெற்ற வாழ்வனுபவம் ஒன்றை மட்டும் வைத்து, இந்த உலகையும் நம் சமூகத்தையும் நாம் வாழும் சமகாலத்தையும் புரிந்துகொள்ளப் போராடுகிறோம். வாசிப்பு என்பது, பலருடைய வாழ்வனுபவத்துடனும் பல்வேறு கண்ணோட்டங்களினுடனும் இந்த வாழ்வைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. நான் என்பதற்கு, வெளியில் உள்ள மற்றமைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு நம் வாழ்வைச் செப்பமாக வாழ வாசிப்பு மிகவும் அவசியம். பிற ஜீவராசிகளுக்கு வாசிக்கத் தெரியாது. ஆகவே, அவர்களுக்காகவும் சேர்த்து அவர்களை நீதியுடன் வாழவைப்பதற்காகவும் சேர்த்து நாம் வாசிக்க வேண்டும்'' என்றார்.
``நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள்...''
``1) மார்க்ஸிய மெய்ஞ்ஞானம் - ஜார்ஜ் பொலிட்சர் (தமிழில்: ஆர்.கே.கண்ணன்) என்.சி.பி.ஹெச்
மார்க்ஸியத்தை, இதைவிட எளிமையாகப் புரியவைக்கும் இன்னொரு நூல் இன்று வரை வரவில்லை. மார்க்ஸியத்தின் அடிப்படைகளான இயக்கவியல் பொருள் முதல்வாதத்தையும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தையும் புரிந்துகொள்ள விழையும் இளம் வாசகர்களுக்கு மிகப் பொருத்தமான நூல்.
2) துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு - ஜாரெட் டைமண்ட் - தமிழில் - ப்ரவாஹன் - பாரதி புத்தகாலயம்
இந்த உலகில் ஒருசில நாடுகள் வளமாகவும் மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடிய பயணமாக இந்த நூல் அமைகிறது. மனிதகுலத்தின் 13,000 ஆண்டுகால வரலாற்றின் ஊடாக இந்த நூல் பயணிக்கிறது. மனிதச் சமூகங்களின் நிலையைத் தீர்மானித்த காரணிகள் பலவற்றையும் ஆய்கிற இந்த நூல், புவியியலின் பங்கை அழுத்தமாகப் பேசுகிறது.
3) சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு - முனைவர் தே.வீரராகவன் - தமிழில் - ச.சீ.கண்ணன், புதுவை ஞானம் - அலைகள் வெளியீட்டகம்.
1918-க்கும் 1939-க்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிற்சங்க இயக்கம் வேரூன்றி கிளை பரப்பிய வரலாற்றைச் சொல்லும் நூல். அத்தோடு நில்லாமல் பாகிஸ்தான் பிரிந்து போயிராத அந்தக்கால இந்தியாவின் தொழிற்சங்க வரலாற்றின் பின்னணியில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பார்வையில்லாதவரான தே.வீர்ராகவன் கடும் உழைப்பைச் செலுத்தி உருவாக்கிய இந்த நுலை அப்படியே மொழிபெயர்க்காமல், மூல ஆவணங்களையும் வாசித்தும் விவரித்தும் தமிழில் வடித்திருக்கிறார் ச.சீ.கண்ணன்.
4) எழுக நீ புலவன் - ஆ.இரா.வேங்கடாசலபதி - காலச்சுவடு பதிப்பகம்
பாரதி பற்றி இதுவரை வெளிவராத பல உண்மைகள், தகவல்கள், நிகழ்வுகளின் சேகரமாக விளங்குகிறது இந்த நூல். பாரம்பர்ய வரலாற்றுப் போக்குகளையும் வரலாற்றின் வெளிச்சம்படாத இண்டு இடுக்குகளையும் ஒரே சட்டகத்துக்குள் கையாளும் முயற்சியாக இந்த நூல் அமைகிறது. `நம்ம பாரதியா இப்படி இருந்தான்!' என்று நம்மை அதிர்ச்சியடையவைக்கும் சில நிகழ்வுகள் இந்த நூலில் முதன்முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
5) பெரியார் - சுயமரியாதை சமதர்மம் - எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா - விடியல் பதிப்பகம்



கவிஞர் சுகுமாரன் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்   (விகடன்.காம்)

“ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, உலகை நோக்கிய ஒரு ஜன்னலைத் திறக்கிறோம்.” - தோழர் சிங்காரவேலர்.
இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் சமூகப் புரட்சிகளுக்கும், புத்தகங்களே மிக முக்கியக் காரணங்களாக இருந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதச்சமூகம் தன் வாழ்வை, தன் தொன்மையை புத்தகங்களின் வழியே அடுத்த தலைமுறைக்குக் கடத்திச்செல்கின்றன. புனைவு இலக்கியங்களான சிறுகதை, நாவல், கவிதை எனக் கற்பனை உலகில் சஞ்சரிக்கவும், அபுனைவுகளான கட்டுரைகள், ஆய்வு நூல்கள் என அறிவை விசாலப்படுத்திக்கொள்ளவும் புத்தகங்கள் உடன் இருக்கின்றன.
பெரும் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் எல்லோரையும் ஏதேனும் ஒரு புத்தகம் அவர்களின் இலக்கை நோக்கி உந்தித் தள்ளியிருக்கும். வாழ்வில் பெருந்தோல்வியிலிருந்து மீண்ட பலருக்கும் ஒரு புத்தகம் உடன் இருந்திருக்கும். நம் அறையில் நம்முடனே இருக்கும் நண்பன்தான் புத்தகம். நல்ல புத்தகங்களைத் தேர்வுசெய்து படிப்பது ஒரு கலை. அப்படிப்பட்ட நூல்களைப் படைக்கும் ஏராளமான எழுத்தாளர்களின் உள்ளத்தில் ஊறித்திளைத்திருக்கும் புத்தகங்களையும் அதன் வீரியத்தையும் வார்த்தைகளின் வழியே வழிமொழியும் வரிசையில் இன்று... கவிஞர்.சுகுமாரன்.
இவர், தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்     நவீன கவிதை  உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளவர்; மனித மனத்தின் ஆறாத துயர்களை, தனிமையில் கதவடைத்து அழும் எளிய மனங்களின் அழுகுறல்களை தன் கவிதைகளில் தோழமையோடு சேர்த்துக்கொண்டவர்; கவிதை மட்டுமன்றி கட்டுரைகள், நாவல், மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் கவனிக்கத்தக்க படைப்புகளைக் கொடுத்தவர். இவரது `தனிமையின் வழி' கட்டுரைத் தொகுப்பு, `வெல்லிங்டன்' நாவல், கோடைக்கால குறிப்புகள், `பூமியை வாசிக்கும் சிறுமி' போன்ற கவிதை நூல்களும் மிகவும் கவனம் பெற்றவை.
சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியையொட்டி, கவிஞர் சுகுமாரனிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், அவர் பரிந்துரைக்கும் புத்தகங்கள் குறித்தும் கேட்டோம்...
“ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும்... வாசிப்பின் அவசியம் என்ன?''
“விரிவான பொருளில் சொல்வதானால் வாசிப்பில்லாமல் வாழ்க்கை இல்லை. வாசிப்பின் வழியேதான் மனிதன் சிந்திக்கிறான். அந்தச் சிந்தனையின் மூலமே முன்னேறுகிறான். அறிவியலும், மதங்களும், கண்டுபிடிப்புகளும் வாசிப்பின் விளைவாகவே நிகழ்ந்தன; நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வாசிப்பு இல்லாமல் இவை எதுவுமே நிகழ்ந்திடாது. வாசிப்பு, ஒருவன் என்னவாக இருக்கிறான், என்னவாக ஆகிறான், எந்த வகையில் தான் வாழும் உலகத்தைப் புரிந்துகொள்கிறான், தன் சக மனிதர்களுடன் எவ்வாறு உறவுகொள்கிறான் என்பதை உயிரோட்டமாக உணர்த்தக்கூடியது. வாசிப்பு இல்லாத ஒருவன் வெளிச்சம் இல்லாத இடத்தில் முடங்கிவிடும் தாவரம். வளர்ச்சியை விரும்புகிறவனே வாசிப்பவனாகிறான்.''
“நீங்கள் பரிந்துரைக்கும்  ஐந்து புத்தகங்கள்..?''
1) பெரியார் - இன்றும் என்றும் (கட்டுரைத் திரட்டு)
விடியல் பதிப்பகம்

2) எழுக நீ புலவன் (பாரதி இயல் ஆய்வுகள்)
ஆ.இரா.வேங்கடாசலபதி
காலச்சுவடு பதிப்பகம்

3) செல்லாத பணம் (நாவல்)
இமையம்
க்ரியா வெளியீடு

4) எழுதித் தீராத பக்கங்கள் (அனுபவக் கட்டுரைகள்)
செல்வம் அருளானந்தம்
தமிழினி

5) கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் (தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள்)

Friday, 20 October 2017

விவாகரத்து?


 என்.செல்வராஜ்

"வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு. அப்பா ஊருக்கு வரச்சொல்றாரு " என்றான் நடராஜன். எதுக்கு என்று கேட்டான் குமார். எல்லாம் என் பொண்டாட்டி பண்ற வேலைதான்.அவளுக்கு விவாகரத்து வேணுமாம்" பதில் சொன்ன நடராஜன் வார்த்தையில்  கோபம் கொப்பளித்தது. கேட்டா நீ கொடுக்கணுமா. "அவங்க கேட்கட்டும் நீ முடியாதுன்னு சொல்லிடு" என்றான் குமார். "இல்ல, அப்பா கோர்டில விவாகரத்து கேஸ் ஃபைல் பண்ண வரச்சொல்றாரு" என்றான் நடராஜன்.

    நீ வரமுடியாதுன்னு உங்க அப்பா கிட்ட தெளிவா சொல்லிடு. இப்போதைக்கு ஆறப் போடு. ஆறு மாசம் போனா தானா உன் மனைவி வீட்டுக்கு வருவா. அவங்க பிடிவாதமா விவாகரத்து கேஸை தொடர்ந்தா அப்புறமா என்ன பண்றதுன்னு யோசிக்கலாம் "என்றான் குமார்.

கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகியும் மனைவி சீதா  கரு தரிக்கவில்லையே என்று மனக்கவலையில் இருந்தான் நடராஜன்.இருவரும் ஒரே ஊர்.தெருமட்டும் தான் வேறு வேறு. நடராஜன் வீடு இருந்த தெருவின் ஆரம்பத்திலேயே ஒரு அழகிய பெருமாள் கோயில் இருக்கிறது. மன நிம்மதிக்காக அங்கே போய் அமருவான் நடராஜன். பல நாட்கள் சீதாவை அந்த கோயிலிலே பார்த்திருக்கிறான். சீதா பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறாள். நடராஜன் பட்டப்படிப்பு முடித்துவிட்டான். ஒரே ஊர் என்பதால் அவ்வப்போது இருவரும் பேசிக்கொள்வதுண்டு. வேலை கிடைத்து வெளியூர் கிளம்பியபோது அவளின் கண்களை பார்க்க அவன் சிரமப்பட்டான்.அவன் அவளை மனைவியாக்கிக்கொள்ள விரும்பினான். ஆனால் அதை அவன் அவளிடம் சொன்னதில்லை. வேலையில் சேர்ந்தவுடன் பெற்றோரிடம் சொன்னான்.அவர்களும் அந்த பெண்ணையே பேசி முடித்து அவனின் மனைவியாக்கினர்.

 அவன்  மனைவி மிகவும் நல்லவளாக இருந்தாள். இல்லற வாழ்க்கையும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் குழந்தை இல்லை என்ற குறை மட்டும் மனதில் இருந்துகொண்டே இருந்தது. நகரின் பிரபல மருத்துவமனைக்கு சென்று வந்தான். குறை எதுவும் இல்லை என்று சொன்ன மருத்துவர் சில மாத்திரைகள் எடுத்துக்கொள்ள சொல்லி அறிவுறுத்தினார். அதன்படி மருந்து சாப்பிட்டு வந்த சில மாதங்களில் மனைவி கற்பமானாள்கற்பமான மனைவியை சைக்கிளில் வைத்து நண்பணின் வீட்டுக்கு அழைத்து சென்றான்.செல்லும் வழியில் திடீரென ஒரு சைக்கிள் வந்து மோத மனைவியுடன் கீழே விழுந்துவிட்டான். அந்த இடத்தில் சாலை மிகவும் சுத்தமானதாக இருந்ததால் அடி அதிகம் இல்லை. இருந்தாலும் மனைவிக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற பயம் அவ்னுக்கு வந்து விட்டது. உடனே மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்றான். கூட்டம் மிக அதிகமாக இருந்தது.அவனுடைய தவிப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. நெஞ்சில் ஒரு பயம். ஏதேனும் ஆகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே இருந்தான்.குமார் டாக்டரின் உதவியாளரிடம் சென்று நடந்த விபத்தை சொல்லி உடனே டாக்டரை பார்க்க அனுமதிக்குமாறு கேட்டான் உதவியாளர் உடனே மருத்துவரை பார்க்க அனுமதித்தார். டாக்டரம்மா  நடராஜனின் மனைவியை பரிசோதனை செய்தபிறகு பிரச்னை  எதுவும் இல்லை என்றார்.

 எப்படியாவது உடனே ஒரு ஸ்கூட்டர்  வாங்கவேண்டும் என்று நினைத்தான். அப்போது வெஸ்பா ஸ்கூட்டர் பிரபலமாக இருந்தது.அவனுக்கு பிடித்த நீல நிற ஸ்கூட்டரை  கடன் வாங்கி உடனே வாங்கினான். அதில் மனைவியை உட்காரவைத்து அழகு பார்த்தான்.சீதாவுக்கும் பெருமைதான். கணவன்  ஸ்கூட்டர் வாங்கியதை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக்கொண்டாள்.

      எதைச்செய்தாலும் அதை சிறப்பாக பலரும் பாராட்டும்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் நடராஜனுக்கு. வீட்டுக்கு வரும் நண்பர்களை நன்றாக உபசரிப்பான். எந்த நேரத்தில் போனாலும் சாப்பிடச்சொல்வான்.குமார் அவன் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் சாப்பிடச் சொல்வான். ஆனால் குமாரின் பழக்கம் வேறு. நண்பர்கள் வீட்டுக்கு முன்பே முடிவுசெய்து அவனுக்காகவும்  சமையல் செய்யப்பட்டால் தான் சாப்பிட ஒத்துக்கொள்வான். இல்லை என்றால் ஏதேனும் காரணம் சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குப் போய்விடுவான்.எப்போது போனாலும் நடராஜனின் மனைவியும் சாப்பிடச் சொல்வார். அவனது பழக்கத்தை அவன் மாற்றிக்கொள்ளமாட்டான். எனவே நடராஜனும் அவன் மனைவியும் குமார் வந்தால் வீட்டில் இருக்கும் காரவகையில் கொஞ்சம் வைத்து காப்பி அல்லது டீ சாப்பிட சொல்வார்கள். அவனும் அவர்களின் நலம் விசாரித்துவிட்டு கிளம்பி விடுவான்.
 
    நடராஜனின் சில நண்பர்கள் அவனின் வற்புறுத்தலுக்கு இணங்கி சாப்பிடுவார்கள். அவன் தப்பாக நினைத்து விடக்கூடாதே என்று சாப்பிடுவார்கள். ஆனால் அவன் மனைவிக்கு சாப்பிட மிஞ்சுகிறதா என்பதை அவன் பார்க்காமல் விட்டுவிடுவான். பல நாட்களில் அவன் மனைவி சாப்பாடு இன்றி அசதியில் படுத்து விடுவாள். அவளுக்கு எரிச்சலாக இருக்கும். என்ன மனிதர் இவர். மனைவி சாப்பிட இருக்கிறதா என்றுகூட பார்க்காமல் வரும் நண்பர்களுக்கு உபசரிக்கச் சொல்கிறாரே என்று நினைப்பாள்.இந்த மாதிரியான எரிச்சல்கள் அவள் பார்வையில் கணவன் மீது கோபத்தை வரவழைத்தன. ஐந்து மாதம் நெருங்கி விட்டது.அவளது அண்ணன், அண்ணி இருவரும் ஒரு நாள் வந்தனர். விருந்து தடபுடலாக நடந்தது. மனைவியின் அண்ணனாச்சே. தங்கை குறை வைப்பாளா? அவர்கள் எதற்கு வந்திருப்பார்கள் என்பது நடராஜனுக்கு நன்றாகப் புரிந்தது. நடராஜனுக்கோ அவளது பிரசவத்தை தான் வேலை செய்யும் இடத்திலேயே வைத்துக்கொள்ளலாம் என்று ஆசை.

       மனைவியைப் பிரிந்திருப்பது மிகவும் கஷ்டம் என்று அவனுக்குத் தோன்றியது.மனைவியின் அண்ணன் " நடராஜன் என் தங்கச்சியை ஊருக்கு அழைச்சிகிட்டு போகலாம்னு வந்திருக்கேன். என்னைக்கு அழைச்சுட்டு  போகலாம் ? என்றார். அம்மாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன் என்றான் நடராஜன்.ஊரில் இருக்கும் அப்பா, அம்மாவுடன் தொலைபேசியில் பேசினான். அவன் அம்மா " தலைப்பிரசவம் , அவங்க அம்மா வூட்டில தான் வச்சுக்கணும்.அது தான் முறை. நீ அனுப்பிடு . ஒரே ஊரு தானே. நான் பாத்துக்கிறேன். வந்து நம்ம வூட்டில ஏழாம் மாசம் வரைக்கும் இருக்கட்டும். வளைகாப்பிட்ட பிறகு அவங்க வூட்டுக்கு அனுப்பலாம் என்றார் அம்மா. நடராஜனும் சம்மதித்தான். இன்னும் இரண்டு மாசம் நம்ம வூட்டில தான இருப்பாள். அம்மாவுக்கு தெரிஞ்ச பெரிய டாக்டர் கிட்ட காட்டலாம். அந்த டாக்டர் கிட்டேயே பிரசவத்தையும் வச்சுக்க சொல்லலாம் என நினைத்தான்.

   மறுநாள் மச்சானிடம் பதில் எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். மனைவி சீதாவிடம் கலந்து பேசுவது நல்லது என அவனுக்குத் தோன்றியது. மனைவியிடம் "உங்க அண்ணன் என்ன சொல்றாரு. இப்பவே ஊருக்குப் போகனுமா " எனக் கேட்டான். எனக்கு ஒண்ணும் இல்லீங்க. அம்மா அழைச்சிட்டு வரச் சொன்னதா அண்ணன் சொல்றாரு. நீங்க தான் சொல்லனும். நான் ஊருக்குப் போனா வர எப்படியும் ஒரு வருஷம் ஆயிடும். அதுவரைக்கும் நீங்க தனியா இங்க இருக்கணும்.அதான் ஒங்க கிட்ட கேட்க சொன்னேன்" என்றாள். "சரி அம்மாகிட்ட கேட்டேன். அவங்க உன்னை அனுப்ப சொல்லிட்டாங்க.ஆனா வளைகாப்பு  வரைக்கும் எங்க வீட்டுல தான் இருக்கனும். அப்புறமா உங்க அம்மா வீட்டுல இருக்கலாம். டாக்டர் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க. அவங்க கிட்ட காட்டிக்கலாம். எல்லா செலவையும் நானே பாத்துக்குறேன். நீ நல்லா இருந்தா எனக்கு போதும் . அப்புறம் உன் இஷ்டம் " என்றான் நடராஜன். ஊருக்குப் போக கணவன் சம்மதம் சொன்னதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள் சீதா. அம்மாவைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டன. கர்ப்பமாக இருப்பவள்  மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். கருவில் இருக்கும் காலத்திலேயே அபிமன்யு சக்கரவியூகததை உடைத்து உள்ளே நுழையும் வித்தையை அறிந்தான் என்கிறது மகாபாரதம். பிரகலாதன் கருவில் இருக்கும்போது நாரதரின் உபதேசத்தால் நாராயணனின் பக்தனானான். எனவே அவளை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்றே நடராஜன் விரும்பினான்,

         மனைவி ஊருக்குப் புறப்பட்டாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. முந்தானையை எடுத்து துடைத்துக்கொண்டாள். நடராஜன் அதை கவனித்துவிட்டு
'சீதா நீ நம்ம வீட்டுக்குத்தானே போற, அதுக்குப்போயி கண் கலங்குறியே " என்றான். "இல்லீங்க உங்களை நெனச்சா கஷ்டமா இருக்கு. நான் இல்லாம எப்படி கஷ்டப்படுவீங்களோன்னு நெனச்சேன். அதான் கண் கலங்கிட்டுது " என்றாள். ஊருக்கு போனதும் அவளும் அண்ணனும் முதலில் அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டுக்கு போனதும் அம்மா " ஏண்டி ஒன் வீட்டுக்கு போகப்போறீயா " என்றாள்." ஆமாம்மா. என் வீட்டுக்காரரு அப்படித்தான் சொல்லி அனுப்புனாரு" "அதெல்லாம் சரி. ஆனா உன்னோட மாமியார் உன்ன விடாம திட்டிகிட்டே இருப்பாங்களே.அத எப்படி சமாளிப்ப"  "எப்படியும் பொறுத்து தான் போகனும் . ரொம்ப முடியாம போச்சுன்னா நா இங்க வந்துடுறன்"  "சரி அவங்க கிட்ட மரியாதை கொடுத்து பேசு . ஏதாவது சொன்னாலும் மரியாதை இல்லாம பேசிடாதே "  "அதெல்லாம் எனக்குத் தெரியும். நான் பாத்துக்கறன்."   அம்மாவிடம்  சொல்லிவிட்டு மாமியார் வீட்டுக்குப் போனாள் சீதா.

            மாமியார் வாசலிலேயே வரவேற்றார்." என்னக்கி வந்தவளுக்கு இன்னக்கி தான் வழி தெரிஞ்சுதா. ஒன்ன சொல்லி குத்தமில்ல. எல்லாம் எம் மவன் கொடுக்கிற தைரியம். ஊருக்கு வந்து ரெண்டு நாள் கழிச்சு வரே. என் மவன் என்னடான்னா பொண்டாட்டி ஊட்டுக்கு வந்துட்டாளா.. வந்துட்டாளான்னு தெனம் போன் போட்டு கேட்டுகிட்டு இருக்கான். நான் என்னத்த சொல்ல ... " என்றவாறே " சரி உள்ளே போ" என்றாள். "என்ன மருமவளே துணி மணியெல்லாம் எங்கே ?சும்மா வந்திருக்க " என்றார் மாமியார். "அத்தே நான் எங்க அம்மா வீட்டிலேயே தங்கிக்கிறனே, தெனம் இங்க வந்துட்டுப் போறேன் " என்றாள் அவள். " மவன் கிட்ட பேசிட்டுதான் சொல்ல முடியும் " என்றார் அவர் மாமியார்.

    அன்னக்கி சாயங்காலம் மகனின் போன் வந்தததாக போஸ்ட் ஆபீசில் இருந்து தகவல் வந்தது. மாமியார் மருமகளையும் அழைத்துக்கொண்டு போஸ்ட் ஆபீஸ் போனார். மகனின் போன் வந்ததும் " தம்பி இன்னிக்குத் தான் மருமவ நம்ம வூட்டுக்கு வந்தா. அவங்க வூட்டிலேயே தங்கிக்கறேன்றா, என்னடா சொல்றே "என்றார் அவனின் அம்மா. மறுமுனை சற்று அமைதியானது." சரி போன என் பொண்டாட்டிகிட்ட கொடும்மா நான் பேசிக்கிறன் "என்றான் நடராஜன்.போனை மருமகளிடம் கொடுத்தார். மறுமுனையில் இருந்த சீதாவின் கணவன் எடுத்த எடுப்பிலேயே திட்ட ஆரம்பித்தான். சீதா பதிலேதும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து "ஏன் எங்க வூட்டில இருக்க மாட்டியா" " இல்லீங்க ஒங்க வீடு நீங்க இல்லாம எனக்கு சரிப்பட்டு வராது. அதான் எங்க வீட்டிலேயே இருக்கலாம்னு நெனைக்கிறன்"  "அதை ஊருக்கு கிளம்பும்போதே சொல்லி இருக்கலாம்ல. ஊருக்கு போயிட்டு இப்படி பண்றியே" "அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க தெனம் நம்ம வூட்டுக்கு வந்துட்டு போறேன். அடுத்த தெரு தானே எங்க வூடு "  " ஏதாவது பண்ணித்தொல . அம்மா வூட்டுக்கு போயிட்டா பொண்ணுகள புடிக்க முடியாது. அங்க ஏதாவது பிரச்னை வந்ததுன்னா நான் உன்னை பார்க்ககூட வரமாட்டேன், அம்மா கிட்ட போன கொடு" போனை மாமியாரிடம் கொடுத்தாள். " அம்மா அவ அவங்க வூட்டுல இருந்துட்டு போகட்டும்.நீ ஒன்னும் கேக்க வேணாம்"  "எக்கேடாவது கெட்டுப்போங்க எனக்கென்ன " என்றபடி போனை வைத்த அம்மா தன் மருமகளிடம் ஏதும் பேசாமல் வீடு திரும்பினாள்.

      தினம் வீட்டுக்கு வருவதாக சொன்ன மருமகள் வாரத்துக்கு ஒரு நாள் கூட வரவில்லை. மகனுடன் பேசும்போது மருமகளைப் பற்றிய வருத்தத்தை அம்மா தெரிவித்தாள். ஊருக்கு வந்ததிலிருந்தே சீதா எதிர் வீட்டில் குடியிருக்கும்  சதீஷுடன் அடிக்கடி பேசப் போய்விடுவதாகவும் வீட்டுக்கு இரவில் கூட நேரமாகித்தான் வருவதாகவும்  செய்திகள் அம்மாவுக்கு வந்துகொண்டே இருந்தன. செய்திகளைக் கொண்டு வந்து தந்தவள் அவள் சிறிய மகள். தினம் அவள் அண்ணியைப் பார்க்கப் போவாள். அப்படியே அங்கு கிடைக்கும் செய்திகளை அம்மாவிடம் வந்து சொல்லிவிடுவாள். அண்ணியைப் பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண்கள் கேலியாக பேசுவதை அம்மாவிடம் சொல்லிய அவள் மகள் செல்வி " அம்மா அண்ணி இங்க வந்தால் இத கேளும்மா" என்றாள். எப்படி கேட்பது என்று தயங்கியபடி இருந்த அம்மா ஒரு நாள் சம்மந்தி வீட்டுக்கு போனார். அவர் போனபோதும் சீதா எதிர் வீட்டுக்கு போயிருந்தாள். சம்மந்தியம்மாவிடம் மருமகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்ட அம்மா எங்கே என் மருமவ எனக்கேட்டாள். சீதா எதிர்வீட்டுக்கு போயிருப்பதாக சொன்னால் பிரச்னை  வரும் என்று நினைத்த அவள் அம்மா " அண்ணன் வீட்டுக்கு போனாள்.எப்ப வருவாளோ தெரியாது " என்றாள். அம்மாவின் கண் எதிர்வீட்டிலேயே இருந்தது. தன் மகள் சொல்வது உண்மையா என பார்க்கவே அவள் அன்று அங்கே வந்தார். இரவு எட்டுமணிக்கு மேல் சீதா எதிர் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். அவள் பின்னாலேயே சதீசும் வீட்டைவிட்டு வெளியே வருவது தெரிந்தது. அதைப் பற்றி எதுவும் கேட்காத சீதாவின் மாமியார் சம்மந்தி அம்மாவிடம் விடைபெற்று கிளம்பினாள்.

எதுவும் கேட்காமல் வீடு திரும்பிய நடராஜனின் அம்மா தன் கணவரிடம் " சீதா பண்றது ஒண்ணும் சரியில்லீங்க. எப்ப பாத்தாலும் எதிர் வீட்டுல போய் உக்காந்துகிட்டு சதீசுடன் பேசிக்கொண்டே இருக்கிறாள். நாளக்கி பையன் பேசுனான்னா அவன்கிட்ட சொல்லிடுறன். அவனே அவ கிட்ட கேட்கட்டும். நாம பேசுனா நாம அவ மேல தப்பா சொல்றோம்னு சொல்லிடுவாங்க.வயித்தில புள்ளய சுமந்துகிட்டு இருக்கிறவள நாமளும் ஒன்னும் கேட்க முடியாது " என்றார். அவரும் சரி என்றார். மறுநாள் நடராஜனின் அழைப்பு வந்தது. அம்மா மட்டும் போன் பேசப் போனார். " எப்படிம்மா இருக்கே? அப்பா நல்லா இருக்காரா. என் சீதா எப்படி இருக்கா " என்று கேட்ட நடராஜனிடம் " எல்லாரும் நல்லாதான் இருக்காங்க. ஆனா உன் பொண்டாட்டி பண்றது தான் இப்போ ஊரே பேச்சா கிடக்கு.எப்ப பாத்தாலும் எதிர் வீட்டு சதீசு வீட்டிலேயே கிடக்கிறாள். அவளை கண்டிச்சி வை. இல்லேன்னா அவ கத இங்க நாறிப்போயிடும். நா அம்புட்டுதான் சொல்லமுடியும்" என்றார் அம்மா.

நடராஜனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. சீதா பேசும்போது கேட்டுவிடத் துடித்தான். இருந்தாலும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவள் மீது குற்றம் சுமத்த முடியாமல் தவித்தான்.அவன் அம்மா சொல்வதை நம்புவான் என்றாலும் சீதாவின் விஷயத்தில் நம்பமுடியவில்லை.அம்மா அவ இப்ப எங்க? என்ற மகனிடம் அவள் வரவில்லை என்று பதில் சொன்னார் அம்மா. சீதாவிடம் பேசவேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு போய்விட்டது.வெறுத்துப்போய் போனை வைத்துவிட்டான்.சில நாட்கள் மனைவி அழைத்துப் பேசுவாள் என்று பொறுத்துப் பார்த்தான் நடராஜன். ஆனால் அவள் பேசவில்லை. அவள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. கடைசியில் அவளிடம்  பேசிவிட முடிவு செய்து அவன் ஊர் போஸ்ட் ஆபிஸை அழைத்தான்.போஸ்ட் மாஸ்டரிடம் சீதாவை வரச்சொல்லுங்கள் என்றான். அவரும் சீதாவை அழைத்துவர ஆள் அனுப்பிவிட்டு சற்று நேரம் கழித்து மீண்டும் கூப்பிடச்சொன்னார். கொஞ்ச நேரம் கழித்து நடராஜன் போஸ்ட் ஆபீஸ் எண்ணுக்கு அழைத்தான். போஸ்ட் மாஸ்டர் சீதாவிடம் போனைக்கொடுத்தார்.யாரு சீதாவா? என்ற நடராஜனுக்கு பதிலாக ஆமாங்க, எப்படி இருக்கீங்க ? என்றாள் சீதா.

      " ஏண்டி எத்தனை நாளாவுது. என்னைக் கூப்பிட்டு பேசனும்னு உனக்கு தெரியாதா?"  நீங்க கூப்பிடுவிங்கன்னு இருந்தேன்.இன்னிக்கு தான் பேசத்தோணுச்சா உங்களுக்கு " உன்னை என் ஊட்டுக்குத்தானே போவச்சொன்னேன். ஒங்கம்மா ஊட்டுக்கு போய் தங்கிகிட்டு எதிர்வீட்டுக்காரனோட கூத்தடிக்கிறியா? "  எப்பவும் பேசற அவன் கிட்ட பேசறத எப்படி தப்பா பேசுறீங்க? " நீ அவங்கிட்ட பேசக்கூடாது. ஒடனே எங்க வூட்டுக்கு போய் தங்கிக்க. ஒங்க அம்மா வூட்டுக்கு நான் வர்ரப்ப போய்க்கலாம் " யாரோ சொல்றதுக்கெல்லாம் என் பேர்ல தப்பு சொல்றீங்க. நான் ஒரு தப்பும் பண்ணல. நான் ஒங்க வூட்டுக்கு போவ முடியாது. நீங்க வரப்ப  நான் ஒங்க வூட்டுக்கு வரேன் " ஒங்க அம்மா இருக்கிறவரைக்கும் நீ உருப்படமாட்டே, சொன்னா கேளு,. எங்க ஊட்டுக்கு போ. நான் ஒரு மாசத்துல வரேன்.அப்ப எல்லாத்தையும் பேசிக்கலாம்." ஏன் ஒங்கம்மா யோக்யமா ? அவங்களால தான் பிரச்னையே. எங்க ஊட்டுக்கு ஆள் அனுப்பி வேவு பாக்குறாங்க" ஏண்டி நீ எதுத்த வூட்டுல இருக்கும்போது ஒங்கம்மா நீ உன் அண்ணன் வூட்டுக்கு போயிருக்கிறதா எங்கம்மாகிட்ட பொய் சொன்னாங்க? "ஓ அதான் பிரச்னையா. நான் அங்கே போனதுல என்ன தப்பை கண்டுபிடிச்சுட்டீங்க? " ஊர்ல ஒன்னபத்தி யாரும் தப்பா பேசிட்டா என்ன செய்றது " யார் பேசுறா ? ஒங்கம்மாதான் வூடு வூடா போய் என்னப்பத்தி பேசிட்டு இருக்காங்க. நான் உத்தமி இல்லேங்குறாங்க.அப்புறம் அங்க நான் எப்படி போகமுடியும். என்னால முடியாது.நீங்களாச்சு ஒங்கம்மாவாச்சு, எப்படியாவது போங்க. நான் பத்தினி இல்லேனே வச்சுக்கிங்க. கெட்டபேரு வாங்கிகிட்டு ஒங்க வூட்டுல என்னால இருக்கமுடியாது. இதுக்கு மேல நான் என்ன சொல்ல. போன வச்சுடுங்க" அவள் பேச்சை முடித்துக்கொண்டாள். அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை.

       சீதாவுக்கு ஆண்  குழந்தை பிறந்துவிட்ட செய்தியை நடராஜனின் அம்மா தெரிவித்த போது அவன் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். அம்மாவிடம் எங்கிட்ட பேசாத அவள் பெத்த என் புள்ளய எப்படிம்மா நான் பாக்குறது? என்றான். அம்மாவின் குரலில் கோபம் எதுவும் இல்லை. ஆசுபத்திரியில தான் இப்ப இருக்கா. அங்க போய் பாத்துட்டு வா. பாவம் உனக்காக காத்துட்டு இருப்பா. உடனே வா" என்றார் தாய். மறுநாள் ஊருக்கு வந்த நடராஜன் தன் மனைவியையும், குழந்தையையும் மருத்துவமனையில் சென்றுபார்த்தான். அம்மாவும் கூடவே வந்தார்கள். அங்கேயும் சீதாவின் அம்மா தன் மருமகனிடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்." ஒங்கம்மா எப்படி என் பொண்ண தப்பானவள்னு சொன்னாங்க.அதுக்கு ஒரு பதில் தெரியற வரைக்கும் என் பொண்ணு ஒன் வூட்டுக்கு  வரமாட்டா" என்றார். இங்க பாருங்க, என் பொண்டாட்டிய என்னெக்கு என் வூட்டுக்கு அனுப்ப தோணுதோ அப்ப சொல்லுங்க. அதுவரைக்கும் வாய மூடிக்கிட்டு இருங்க .வீணா பிரச்னையை வளக்காதீங்க" என்றவன்  அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு  சென்றான். ஊருக்கு போனவனுக்கு சில நாட்கள் கழித்து வக்கீல் நோட்டீஸ் தான் வந்தது. இனி வாழ்வு வேதனையானது தான்  என்று அவன் நினைத்தபோது தான் அவன் நண்பனின் வார்த்தைகள் சரி எனப்பட்டன.ஆனாலும் சமாதானம் செய்வது யார் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. ஒரு நாள் முழுவதும் அவன் மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. குமார் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று மனம் முடிவு செய்ய, அவன் தந்தைக்கு போன் செய்து தன் தந்தையிடம்  விவாகரத்தில் தனக்கு விருப்பமில்லை என்று பதில் சொல்லி போனை வைத்துவிட்டான்..


Email:- enselvaraju@gmail.com