Monday, 3 February 2020

கவனிக்க வேண்டிய புத்தகங்கள் 2020

இந்து தமிழ் நாளேடு  சென்னை 2020 புத்தக கண்காட்சி  நாட்களில் வெளியிட்ட பட்டியலின் தொகுப்பு இது.


கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் 11/1/2020

தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை
ஜெ.ஜெயரஞ்சன்
மின்னம்பலம் வெளியீடு
இராஜேந்திர சோழன்
குடவாயில் பாலசுப்பிரமணியன்
அன்னம் வெளியீடு
குதிப்பி
ம.காமுத்துரை
டிஸ்கவரி வெளியீடு
சுழலும் சக்கரங்கள்
ரியெனொசுகே அகுதாகவா
தமிழில்: கணேஷ்ராம்
நூல்வனம் வெளியீடு
ஒளி வித்தகர்கள்
தமிழில்: ஜா.தீபா
யாவரும் வெளியீடு

ஆஹா

கதைக் கோவை
(5 தொகுதிகள்)
அல்லயன்ஸ்
கம்பெனி வெளியீடு
மொத்த விலை: ரூ. 2,600
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பதிப்பகமான அல்லயன்ஸ் கம்பெனி, 1942 தொடங்கி 1946 வரைக்கும் ‘கதைக் கோவை’ என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுவந்தது. பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டு, பரிசீலனைக்கு வந்த கதைகளைச் சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு தேர்ந்தெடுத்து இத்தொகுதிகள் வெளிவந்தன. நான்கு தொகுதிகள் வெளிவந்து, ஐந்தாவது தொகுதிக்குக் கதைகள் பெறப்பட்டிருந்த நிலையில், அல்லயன்ஸ் நிறுவனர் வி.குப்புஸ்வாமி ஐயரின் மரணத்தால் அதன் வெளியீடு நின்றுபோனது. 117 கதைகள் அடங்கிய ஐந்தாவது தொகுப்பையும், 14 நெடுங்கதைகள் கொண்ட நெடுங்கதைக் கோவையையும் உள்ளடக்கியதாக ‘கதைக் கோவை’யை மீண்டும் பதிப்பித்துள்ளார் அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன். நாற்பதுகளில் எழுதப்பட்ட 356 கதைகளின் பெருந்தொகுப்பு இது. கதைகளின் வழியே கால இயந்திரத்தில் பயணிக்கும் அனுபவம்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

வியத்தகு இந்தியா
ஏ.எல். பசாம்
தமிழில்:
செ. வேலாயுதபிள்ளை, மகேசுவரி பாலகிருட்டிணன்
விடியல் வெளியீடு
விலை: ரூ. 900
இந்தியவியல் அறிஞரான ஏ.எல்.பசாம் எழுதிய இந்த நூல் இந்திய வரலாற்றின் மேல் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது. இந்தியாவின் வரலாறு, சிற்பக் கலை, இலக்கியம் போன்றவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் தமிழுக்கும் சிறப்பானதொரு இடம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசின் கல்வித் துறை வெளியிட்ட மொழிபெயர்ப்பை இந்தியாவில் விடியல் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்  12/1/2020

மொழி எங்கள் உயிருக்கு நேர்
ஆழி செந்தில்நாதன்
ஆழி பதிப்பகம்
அபராதிகளின் காலம்
ரவிக்குமார்
மணற்கேணி வெளியீடு
தமிழகத் தடங்கள்
மணா
அந்திமழை வெளியீடு
நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்
டாக்டர் கு.கணேசன்
காவ்யா பதிப்பகம்
கூண்டுக்குள் பெண்கள்
விலாஸ் சாரங்
தமிழில்: ஆனந்த் ஸ்ரீனிவாசன்
நற்றிணை பதிப்பகம்

ஆஹா

சுருக்கமான தென் இந்திய வரலாறு
பிரச்சினைகளும் விளக்கங்களும்
தொகுப்பு: நொபோரு கராஷிமா
தமிழில்: ப.சண்முகம்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
விலை: ரூ.700
தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களின் துணையோடு ஆய்வுக்குட்படுத்தியவர் நொபோரு கராஷிமா. தமிழக வரலாற்று அறிஞர்களின் பங்களிப்போடு அவர் தொகுத்த ‘தென் இந்திய வரலாறு’ இருபதாம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாற்றை நவீன ஆய்வுக் கண்ணோட்டத்தோடு விரிவாகப் பேசும் நூல். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்று நூல் விஜயநகரப் பேரரசின் காலத்துடனே நிறைவுபெற்றுவிடுகிறது. சாஸ்திரிக்குப் பிறகு கிடைத்த வரலாற்று ஆதாரங்களையும் ஒப்புநோக்கி எழுதியிருப்பது நொபோரு கராஷிமாவின் புத்தகத்தின் தனிச்சிறப்பு.
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
குறுந்தொகை மூலமும் உரையும்
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
விலை: ரூ.500
உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு
தமிழர்கள் பண்பாட்டின் முக்கியமான விளைச்சல் குறுந்தொகை. அந்த நூலை 1937-ல் உ.வே.சாமி நாதையர் பதிப்பித்தார். அதற்கான காலத்துக்கேற்ற செம்பதிப்பை சமீபத்தில் உ.வே.சா. நூல் நிலையம் கொண்டுவந்திருக்கிறது. காதலைப் பாடும் சங்கப் பாடல்கள் ஊடாக, தமிழரின் வாழ்க்கை முறையையும் இந்த நூலில் உணர முடிகிறது. குறிப்பாக, இலக்கியத்தோடும் வாழ்க்கையோடும் இயற்கை எந்த அளவுக்கு ஊடாடுகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள் 13/1/2020

பாலம்மாள்: முதல் பெண் இதழாசிரியர்
தொகுப்பாசிரியர்: கோ.ரகுபதி
தடாகம் வெளியீடு
செவஸ்தபோல் கதைகள்
லியோ டால்ஸ்டாய்
தமிழில்: நா.தர்மராஜன்
விடியல் வெளியீடு
குமரப்பாவிடம் கேட்போம்
தமிழில்: அமரந்த்தா
பரிசல் வெளியீடு
கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்
இவான் இல்லிச்
தமிழில்: ச.வின்சென்ட்
எதிர் வெளியீடு
மேலைநோக்கில் தமிழ் நாவல்கள்
ப.மருதநாயகம்
எழிலினி பதிப்பகம்

பளிச்!
 அமோகம்.. அண்ணா!
2020 சென்னை புத்தகக்காட்சியில் விற்பனையில் கலக்கும் புத்தகமாகியிருக்கிறது ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல். அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் வெளியீடான இந்நூல் சென்னையில் முதல் முறையாக இந்தப் புத்தகக்காட்சிக்குத்தான் வந்திருக்கிறது என்பதும், வந்த வேகத்தில் விற்பதால், எப்போதுமே விற்பனையில் தட்டுப்பாடோடு இருந்த நூல்
இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல அண்ணா தொடர்பாக ஏராளமான புதிய நூல்களையும் இப்புத்தகக்காட்சியில் பார்க்க முடிந்தது.

ஆஹா!

தாண்டவராயன் கதை
பா.வெங்கடேசன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.1,390
தமிழ் நவீன இலக்கியத்தின் சாதனைப் படைப்புகளுள் ஒன்றான பா.வெங்கடேசன் எழுதிய ‘தாண்டவராயன் கதை’ நாவல் இப்போது 12 ஆண்டுகள் கழித்து மறுபதிப்பு கண்டிருக்கிறது. அடர்த்தியான மொழி, அசாத்தியமான கற்பனை என வாசகரை மிகப் பெரும் கதைப்பரப்புக்குள் இழுத்துச்செல்லும் நாவல்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

தமிழக வரலாறு
மக்களும் பண்பாடும்
கே.கே.பிள்ளை
உலகத் தமிழாராய்ச்சி
நிறுவன வெளியீடு
விலை ரூ.275
கால வரிசையின் அடிப்படையில் தமிழகத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை விவரிக்கும் நூல். தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களில் தொடங்கி, 20-ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றை இருபது அத்தியாயங்களில் விளக்குகிறது. தமிழ் இலக்கிய மாணவர்களும் வரலாற்று மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1972-ல் இந்நூலின் முதல் பதிப்பை வெளியிட்டது. நூலின் முக்கியத்துவம் கருதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்  14/1/2020

காஷ்மீர் என்ன நடக்குது அங்கே?
அ.மார்க்ஸ்
புலம் வெளியீடு
விலை: ரூ.240
மகாத்மா அய்யன்காளி
நிர்மால்யா
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ.350
ஆண்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்
தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
தடாகம் வெளியீடு
விலை: ரூ.100
தொல்குடித் தழும்புகள்
செம்பேன் உஸ்மான்
தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ்
கலப்பை வெளியீடு
விலை: ரூ.180
மெக்ஸிகோ
இளங்கோ
டிஸ்கவரி வெளியீடு
விலை: ரூ.200

அடடே!

அம்மை & பதுங்குகுழி நாட்கள்
பா.அகிலன்
பரிசல் வெளியீடு
விலை: ரூ.170
தொடர்புக்கு: 93828 53646
ஒரு பக்கத்தில் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும், இன்னொரு பக்கம் திருப்பினால் ‘பதுங்குகுழி நாட்கள்’ கவிதைத் தொகுப்பும் என யாழ்ப்பாணக் கவிஞர் பா.அகிலனின் இரண்டு கவிதைப் பிரதிகளை ஒரே புத்தகமாகத் தலைகீழ் வடிவில் அச்சிட்டுக் கொண்டுவந்திருக்கிறது ‘பரிசல்’ பதிப்பகம். இரண்டு பிரதிகள், இரண்டு காலங்கள், இரண்டு அட்டைப்படங்கள், ஒரே புத்தகம்! இந்த வடிவமைப்பு உத்திக்காக ஒரு சபாஷ்!

ஆஹா!

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்...
பசு.கவுதமன்
ரிவோல்ட் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98406 03499
கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவம் தொடர்பான விவாதங்களில் ஏகப்பட்ட திரிபுகளும் உண்டு. அந்தச் சம்பவத்தின் பின்னுள்ள உண்மையான கள நிலவரத்தை அப்பட்டமாக முன்வைக்கும் முக்கியமான நூல்களுள் ஒன்று பசு.கவுதமன் எழுதிய
‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்...’ நூல். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

பிரமிள் படைப்புகள்
(6 தொகுதிகள்)
லயம் - பிரமிள் அறக்கட்டளை வெளியீடு
மொத்த விலை: ரூ.3,400
தொடர்புக்கு: 94426 80619
படைப்பூக்கம், விமர்சனம் இரண்டிலும் தமிழில் உச்சம் தொட்ட மேதைகளுள் ஒருவர் பிரமிள். கவிதைகள், கதைகள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள், பேட்டிகள், உரையாடல்கள், தமிழாக்கங்கள் என பிரமிளின் பங்களிப்புகள் முழுவதையும் ஆறு தொகுதிகளாகத் தொகுத்திருந்தார் கால சுப்ரமணியம். இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய தொகுப்புகள் இவை.

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்  15/1/2020

என் குருநாதர் பாரதியார்
ரா.கனகலிங்கம்
தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
விலை: ரூ.120
தண்டோராக்காரர்கள்
சு.தியடோர் பாஸ்கரன்
தமிழில்: அ.மங்கை
அகநி வெளியீடு
விலை: ரூ.220
ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்...
ஸான்ட்ரா கால்னியடே
தமிழில்: அம்பை
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ.390
சங்கீத வித்துவான்கள் சரித்திரம்
பதிப்பாசிரியர்: வே.சிவசுப்பிரமணியன், கோ.உத்திராடம்
உ.வே.சா. நூல்நிலையம்
விலை: ரூ.80
தமிழ் மண்ணே வணக்கம்
த.செ.ஞானவேல்
வம்சி வெளியீடு
விலை: ரூ.280

ஆஹா!

கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்
தொல்லியல் துறை வெளியீடு
விலை: ரூ.50
‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ நூலைத் தமிழ்நாடு பாடல்நூல் நிறுவனத்தின் நிதி பெற்று தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இந்த நூலின் விலை ரூ.50 மட்டுமே. எல்லோருக்கும் புரியும்வண்ணம் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபு உள்ளிட்ட 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பளிச்!

தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்
பிரணாய் ராய், தொராய்
ஆர்.சொபாரிவாலா
தமிழில்: ச.வின்சென்ட்
எதிர் வெளியீடு
விலை: ரூ.399
தொடர்புக்கு: 99425 11302
ஊடகவியலாளர், பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலாவுடன் இணைந்து எழுதிய புத்தகம்
‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக் ஷன்ஸ்’. 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வு நூல் இது. பல்வேறு தரப்பினரது கவனம் ஈர்த்த இப்புத்தகம் இப்போது தமிழில் வெளிவந்திருக்கிறது.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

சமூக நீதிக்கான அறப்போர்
பி.எஸ்.கிருஷ்ணனுடன் உரையாடல்:
வே.வசந்தி தேவி
சவுத் விஷன் புக்ஸ் வெளியீடு
விலை: ரூ.350
தொடர்புக்கு: 94453 18520
தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் இந்திய அரசின் முன்னாள் செயலாளரான வே.வசந்தி தேவி நிகழ்த்திய மிக நீண்ட உரையாடல் இது. 70 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதோடு ஒடுக்கப்பட்டோர் மீள்வதற்கான மகத்தான சிந்தனைகளையும் முன்வைக்கும் முக்கியமான நூல்.

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்  17/1/2020

வாய்மொழிக் கதைகள்
ஆ.சிவசுப்பிரமணியன்
என்சிபிஹெச் வெளியீடு
விலை: ரூ.145
எதிர்புரட்சியின் காலம்
ராஜன் குறை
உயிர்மை வெளியீடு
விலை: ரூ.425
அது இங்கே நடக்காது
சின்க்ளேர் லூயிஸ்
தமிழில்: கி.இலக்குவன்
பாரதி புத்தகாலயம் வெளியீடு
விலை: ரூ.440
கடல் ஒரு நீலச்சொல்
மாலதி மைத்ரி
அணங்கு பதிப்பகம்
விலை: ரூ.100
காலமற்ற வெளி
மருதன் பசுபதி
டிஸ்கவரி வெளியீடு
விலை: ரூ.250

ஆஹா!

நேசமணி தத்துவங்கள்
சுரேகா
வானவில் புத்தகாலயம்
விலை: ரூ.105
தொடர்புக்கு:
72000 50073
வைகைப்புயல் வடிவேலு பேசும் வசனங்களெல்லாம் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல, சமூகத்திலும்கூட இரண்டறக் கலந்துவிட்டன. வடிவேலுவின் வசனங்களை நம் அன்றாட வாழ்க்கையில் எங்கெல்லாம் பயன்படுத்துகிறோம், அதற்குள் பொதிருந்திருக்கும் அர்த்தங்கள் என்னென்ன என்று விவரிக்கிறார் சுரேகா. இப்படி ஒரு சிந்தனை அவருக்குத் தோன்றியதற்காகவே ஒரு சபாஷ் போட்டுவிடலாம்.

பளிச்!

அழகிய நதி & அழகிய மரம்
தரம்பால்
கிழக்குப் பதிப்பகம்
தமிழில்:
பி.ஆர்.மகாதேவன்
மொத்த விலை: ரூ.900
தொடர்புக்கு: 044-42009603
இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பாலின் இரண்டு புத்தகங்களை இப்போது கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி என்னவாக இருந்தது என்பதை ‘அழகிய மரம்’ புத்தகமும், இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை ‘அழகிய நதி’ புத்தகமும் விரிவாக விவரிக்கின்றன

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

அருங்கலைச்சொல் அகரமுதலி
(ஆங்கிலம்-தமிழ்)
முதன்மைப் பதிப்பாசிரியர்: ப.அருளி
விலை: ரூ.1,200
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
புதுப்புதுக் கலைச்சொற்களின் உருவாக்கத்துக்குத் தமிழ் மொழி எப்படியெல்லாம் வளைந்துகொடுக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தப் புத்தகம். ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் உருவாக்கப்பட்ட இந்த அகராதியில் 135 துறைகளுக்குரிய ஒரு லட்சத்து இரு பதினாயிரத்துக்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சொல்லின் பொருளும் வரலாறும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள் 18/1/2020

திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?
விடுதலை இராசேந்திரன்
நிமிர்வோம் வெளியீடு
விலை: ரூ.120
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
சசி தரூர்
தமிழில்: சத்யானந்தன்
கிழக்கு வெளியீடு
விலை: ரூ.350
பௌத்த வரலாற்றில் காஞ்சீவரம்
ஏழுமலை.கலைக்கோவன்
நீலம் வெளியீடு
விலை: ரூ.180
முதல் பெண்கள்
நிவேதிதா லூயிஸ்
மைத்ரி வெளியீடு
விலை: ரூ.200
குழந்தைகள் கலைக்களஞ்சியம்
10 தொகுதிகள்
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு
மொத்த விலை: ரூ.840

ஆஹா!

வாழும் மூதாதையர்கள்
அ.பகத்சிங்
உயிர் பதிப்பகம்
விலை: ரூ.600
தொடர்புக்கு: 90929 01393
இருளர்கள், காடர்கள், தோடர்கள் உள்ளிட்ட 13 தமிழகப் பழங்குடிகளின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலை, இலக்கியம், சடங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் விரிவாகப் பேசும் நூல் இது. கதை பேசும் வண்ணப் படங்களுடன் வெளியாகியிருக்கும் இந்தப் புத்தகம் நல்ல ஆவணம்.

பளிச்!

உயிர்மை வெளியீடு, மொத்த விலை: ரூ.480
தொடர்புக்கு: 044-48586727
மனநல மருத்துவரும் எழுத்தாளருமான சிவபாலன் இளங்கோவன் நான்கு புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார். குழந்தை வளர்ப்பு தொடர்பான ‘நம் காலத்தின் குழந்தைகள்’, மருத்துவத் துறையின் கடந்த காலம், இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகள், எதிர்காலத் திட்டங்களைப் பேசும் ‘மருத்துவம்: நேற்று, இன்று, நாளை’, மனரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள உதவும் ‘எனக்குள் என்ன நடக்கிறது?’, சமூகப் பிரச்சினைகள் எவ்வாறு ஒரு தனிநபரைப் பாதிக்கிறது என்பதை விவாதிக்கும் ‘மனம், மனிதன், சமூகம்’.
உங்களிடம் இருக்கின்றனவா இந்நூல்கள்?
தமிழ் அறிவோம்
மகுடேசுவரன்
தமிழினி வெளியீடு
மொத்த விலை: ரூ.765 (7 நூல்கள்)
தொடர்புக்கு: 86672 55103
ஒரு சொல் கேளீர்!
அரவிந்தன்
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ.225
தொடர்புக்கு: 96777 78863
தமிழ் இலக்கணத்தை மிக எளிமையாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு ‘தமிழ் அறிவோம்’ என்ற தலைப்பில் தொடர் புத்தக வரிசையைக் கொண்டுவருகிறார் மகுடேசுவரன். தமிழ் இலக்கண அடிப்படைகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வரப்பிரசாதம். தமிழைக் கோளாறு இல்லாமல் பிழை தவிர்த்துப் பயன்படுத்த வழிசொல்கிறது அரவிந்தன் எழுதிய ‘ஒரு சொல் கேளீர்!’. உரைநடைக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் பயன்படும்.

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள் 19/1/2020

ஆசீவகமும் ஐயனார் வரலாறும்
க. நெடுஞ்செழியன், ஜெயம் வெளியீடு ரூ 700/

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
நீவேதிதா லூயிஸ்
கிழக்கு வெளியீடு ரூ 225/

எம் சி ராஜா சிந்தனைகள்
வே அலெக்ஸ்
நீலம் வெளியீடு ரூ 350/

தமிழகக் கடல்சார் பொருளாதாரமும் போர்ச்சுகீசிய காலனியமயமாக்கமும்
எஸ் ஜெயசீல ஸ்டீபன்
தமிழில் க.ஐயப்பன்
என்சிபிஹெச்வெளியீடு ரூ 375/

தமிழக  வெகுஜன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்
இரா பிரபாகர்
கருத்து = பட்டறை வெளியீடு ரூ 250

ஆஹா!

 அபிதான சிந்தாமணி
ஆ சிங்காரவேலு முதலியார்,
தி ஏஷியன் பப்ளிகேஷன்ஸ் ரூ 1495/

தமிழ்ச்சமூகத்துக்கு கிருஷ்ணாம்பேட்டை ஆ.சிங்காரவேலு முதலியார் வழங்கிய கொடையான
அபிதான சிந்தாமணி நூல் வெளியாகி 120 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.பல வகையான புராண்
இதிகாசப் பாத்திரங்கள்,பொருட்கள், விளக்கங்கள், தத்துவம், வரலாறு, பூகோளம்,என 1600 பக்கங்களுக்கு
மேற்பட்ட இந்த அகராதி உண்மையில் ஒரு பொக்கிஷம். தரமான தயாரிப்பில் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது.

பளிச்!

கவிதையின் கையசைப்பு
எஸ் ராமகிருஷ்ணன்
தேசாந்திரி வெளியீடு ரூ 160

உலகின் வெவ்வேறு தேசங்கள், கலாச்சாரம்,அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும்
அறிமுகம் செய்யும் புத்தகம்.இதில் 12 கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

இந்திய தத்துவ ஞானம்
கி லக்ஷ்மணன்
பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு ரூ 190

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள் 20/1/2020

சுதந்திரத்தின் நிறம்
லாரா கோப்பா
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்
தன்னறம் வெளியீடு
விலை: ரூ.500
தமிழர் மானிடவியல்
பக்தவத்சல பாரதி
அடையாளம் வெளியீடு
விலை: ரூ.450
பீஃப் கவிதைகள்
பச்சோந்தி
நீலம் வெளியீடு
விலை: ரூ.150
பெண்கள் துகிலுரிந்தால்
பேரண்டம் அழியாதோ
அ.கா.பெருமாள்
என்சிபிஹெச் வெளியீடு
விலை: ரூ.135
ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
தாஸ்தோயேவ்ஸ்கி
தமிழில்: சா.தேவதாஸ்
நூல்வனம் வெளியீடு
விலை: ரூ.700

பளிச்!

புத்தரும் அவரது தம்மமும்
பி.ஆர்.அம்பேத்கர்
கருத்து=பட்டறை வெளியீடு
விலை: ரூ.600
98422 65884
அம்பேத்கர் அவரது மரணத் தறுவாயில் எழுதிய புத்தகம். பௌத்தம் பற்றி எளிமையாகவும் விரிவாகவும் எழுதப்பட்ட புத்தகம். விவிலியத்தைப் போல அத்தியாயப் பிரிப்பும் வாக்கிய அமைப்பும் கொண்டு புத்தரையும் அவரது கருத்துகளையும் தொகுத்தளித்த புத்தகம். பௌத்த அமைப்புகளும், அம்பேத்கர் பவுண்டேஷனும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுவருகின்றன. ‘கருத்து=பட்டறை’ கொண்டுவந்திருக்கும் இந்தப் பதிப்பு தரமான தாளில், ராயில் சைஸில், கெட்டி அட்டைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது.

ஆஹா!

சிராப்பள்ளி மாவட்டக் கோயில் வரிசை நூல்கள்
மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
மொத்த விலை: ரூ.1,300
0431-2740302
திருச்சிராப்பள்ளியை மையமாகக் கொண்டு இயங்கும் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகள் முக்கியமானவை. சமீபத்தில், இந்த வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் அர.அகிலா, மு.நளினி, இரா.கலைக்கோவன் ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளியின் முக்கியமான கோயில்களினுடைய வரலாற்றையும் கலைச் சிறப்புகளையும் கல்வெட்டுச் சான்றாதாரங்களோடு ஐந்து தொகுப்புகளாக வெளியிட்டுள்ளனர். அவை ‘சோளர் தளிகள் ஏழு’, ‘சோழர் தளிகள் நான்கு’, ‘எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள்’, ‘பாச்சிள் கோயில்கள்’, ‘தவத்துறையும் கற்குடியும்’. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியையும் மையப்படுத்தி இத்தகு ஆய்வு நூல்கள் வந்தால் எப்படி இருக்கும் என்ற பேராவலுக்கு வித்திடும் ஆவணம்
.
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

டிராகன்: புதிய வல்லரசு சீனா
ஆழி செந்தில்நாதன்
ஆழி பதிப்பக வெளியீடு
விலை: ரூ.500
044-4860 0010

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள் 21/1/2020

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
வு மிங் - யி
தமிழில்: யுவன் சந்திரசேகர்
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ. 395
ஓவியம்: தேடல்கள், புரிதல்கள்
கணபதி சுப்பிரமணியம்
யாவரும் வெளியீடு
விலை: ரூ.350
இந்தியா ஏமாற்றப்படுகிறது
தொகுப்பு: பிரதீக் சின்ஹா, சுமையா ஷேக், அர்ஜுன் சித்தார்த்
தமிழில்: இ.பா.சிந்தன்
எதிர் வெளியீடு
விலை: ரூ.320
அயல் பெண்களின் கதைகள்
சிங்களத்திலிருந்து தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்
வம்சி வெளியீடு
விலை: ரூ.160
பெரியார்-அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு (தொகுப்பு) கி.வீரமணி
விலை ரூ. 220
திராவிடர் கழக வெளியீடு
ஆஹா!
உலகத் தமிழ்க் களஞ்சியம்
(3 தொகுதிகள்)
உமா பதிப்பக வெளியீடு
விலை: ரூ.3,000
98410 68832
தமிழ், தமிழர்களை முதன்மைப்படுத்தி தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம், ஆளுமை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் கலைக்களஞ்சியம் இது. 900 இலக்கணக் குறிப்புகள், 700 தாவரங்களைப் பற்றிய குறிப்புகள், 100 ஆறுகளைப் பற்றிய விவரங்கள், 800 இதழ்களைப் பற்றிய குறிப்புகள் என 39 பிரிவுகளில் 16,000-க்கும் மேற்பட்ட செய்திகளை உள்ளடக்கியிருக்கும் இந்நூல் 2,500 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது.

பளிச்!

புத்துயிர்ப்பு
லியோ டால்ஸ்டாய்
விலை: ரூ.395
என் சரித்திரம்
உ.வே.சாமிநாதையர்
விலை: ரூ.400
அடையாளம் வெளியீடு
04332-273444
டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்றான ‘புத்துயிர்ப்பு’ நாவல், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தன்வரலாற்று நூலான ‘என் சரித்திரம்’ என இரண்டு முக்கியமான புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது ‘அடையாளம்’ பதிப்பகம். விலை குறைவு என்பதற்காகத் தயாரிப்பில் ஏதும் சமரசம் இல்லை. சுமார் 800 பக்கங்கள் கொண்ட இரண்டு புத்தகங்களுக்கும் தலா ரூ.400 என்பதாக விலை நிர்ணயித்திருக்கிறார்கள்.
உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
மஸ்னவி
ஜலாலுத்தீன் ரூமி
தமிழில்: நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம்
மொத்த விலை: ரூ. 3,700 (7 தொகுதிகள்)
ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் வெளியீடு
98415 67213
உலகின் கவிதைப் பேரிலக்கியங்களுள் பாரசீக சூஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமியின் ‘மஸ்னவி’யும் ஒன்று. 27,000 வரிகளில் ஆறு பாகங்களாக வெளியான கவிதைப் பொக்கிஷம் இது. கி.பி. 1258-ல் எழுதத் தொடங்கி 1273-ம் ஆண்டு தனது மரணம் வரை எழுதிய நூல் ‘மஸ்னவி’. இந்த நூலை ஏழு தொகுதிகளாக நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம் மொழிபெயர்த்திருக்கிறார். ரூமியின் ‘மஸ்னவி’ பெருந்தொகுப்பு தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய முயற்சி!


அதிகம் விற்ற 10 புதிய புத்தகங்கள்

கீழடி: வைகை நதிக்கரையில்  சங்ககால நகர நாகரீகம்
தொல்லியல் துறை வெளியீடு

சூல் - சோ தர்மன்
அடையாளம் வெளியீடு

சுளுந்தீ- இரா. முத்துநாகு
ஆதி வெளியீடு

வைக்கம் போராட்டம் - பழ அதியமான்
காலச்சுவடு வெளியீடு

இச்சா - ஷோபாசக்தி
கருப்பு பிரதிகள் வெளியீடு

அயோத்திதாசர்  -டி தர்மராஜ்
கிழக்கு வெளியீடு

மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (11 புதிய தொகுப்புகள்)
உயிர்மை வெளியீடு

தீம்புனல் - ஜி கார்ல் மார்க்ஸ்
எதிர் வெளியீடு

பீஃப் கவிதைகள் - பச்சோந்தி
நீலம் வெளியீடு

குதிப்பி - மா காமுத்துரை
டிஸ்கவரி வெளியீடு







வாசிக்க வேண்டிய தமிழ் சிறுகதை தொகுப்புகள்

இரண்டாயிரத்துக்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைகளின் போக்கு என்ற கட்டுரையை அந்திமழை  ஜனவரி மாத இதழில் ந முருகேசபாண்டியன்
எழுதி இருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள்
1. துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

2.கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்

3. ஆகாச மாடன் - கருத்தடையான்

4. பிரதியின் நிர்வாணம் - லைலா எக்ஸ்

5. பாம்பு வால் பட்ட கதை - பாட்டாக்குளம் துர்கையாண்டி

6.தாழிடப்பட்ட கதவுகள் - அ கரீம்

7.நாம் ஏன் அந்த தேநீரைப் பருகவில்லை - உமா பார்வதி

8.பெர்ஃப்யூம் - ரமேஷ் ரக்‌ஷன்

9. இறுதி இரவு - சி சரவண கார்த்திகேயன்

10. கனாத்திறமுரைத்த காதைகள் - சித்ரன்

11.கேசம் - நரன்

12. இருமுனை - தூயன்

13. அம்புப் படுக்கை - சுனீல் கிருஷ்ணன்

14.டொரினோ - கார்த்திக் பாலசுப்ரமண்யன்

15.நந்தலாலா - நந்தன் ஸ்ரீதரன்

16.கண்ணம்மா - ஜீவ கரிகாலன்

17. கற்பனை கடவுள் - நாச்சியாள் சுகந்தி

18. லங்கூர் - லஷ்மி சிவக்குமார்

19.நீலம் பூக்கும் திருமடம்  - ஜா தீபா

20. பனி குல்லா - கவிதைக்காரன் இளங்கோ

Wednesday, 8 January 2020

சிறந்த நாவல்கள் பட்டியல்

எழுத்தாளர் ராம் தங்கம் முகநூலில் இட்டுள்ள பதிவு

உலகின் தலைசிறந்த நாவல்கள் பட்டியலை கொஞ்சம் கொஞ்சமாக 
வெளியிடலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் கீழே உள்ள 
பட்டியலில் உள்ள புத்தகங்களை பார்த்து நண்பர்கள் புத்தகக் 
கண்காட்சியில் வாங்கி உலகின் தலைசிறந்த நாவல்களை வாசித்து 
மகிழவும்.
1. நாஞ்சில்நாடனின் 'எட்டுத்திக்கும் மதயானை
2. ஆ மாதவனின் 'கிருஷ்ண பருந்து
3. நீல.பத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம்
4. சுந்தரராமசாமியின் 'ஜே ஜே சில குறிப்புகள்
5. ஹெப்சிபா ஜேசுதாசனின் 'புத்தம் வீடு
6. ஜெயமோகனின் 'காடு
7. எஸ் ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி
8. மனோஜ்குரூரின் நிலம்பூத்து மலர்ந்த நாள் 
9. வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்
10. பொன்னீலனின் 'கரிசல்
11. சு வேணுகோபாலின் 'நுண்வெளி கிரகணங்கள்
12. கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'துருக்கி தொப்பி
13. பி.எச். டேனியலின் 'எரியும் பனிக்காடு
14.எம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி
15.ச. பாலமுருகனின் 'சோளகர் தொட்டி
16. தோப்பில் முகமது மீரானின் 'ஒரு கடலோர கிராமத்தின் கதை
17.ஜி. நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே
18. சம்பத்தின் 'இடைவெளி
19. சோ தர்மனின் 'கூகை
20. பூமணியின் 'பிறகு
21. தி.ஜானகிராமனின் 'மரப்பசு
22. அழகிய நாயகி அம்மாளின் 'கவலை
23. சு. தமிழ்ச்செல்வியின் 'கீதாரி
24. ஏக் நாத்தின் 'கெடைகாடு
25. கி.ராவின் 'கோபல்லபுரத்து மக்கள்
26. ஜோ டி குரூஸின் 'ஆழிசூழ் உலகு

27. பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி


28. எஸ் ராமகிருஷ்ணனின் 'யாமம்


29. சு.தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை


30. இரா முருகவேளின் 'செம்புலம்


31. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்


32. வேல ராமமூர்த்தி 'குற்றப்பரம்பரை


33.காமுத்துரையின் 'மில்


34.ஜி நாகராஜன் 'குறத்தி முடுக்கு


35.சு.வெங்கடேசனின் 'காவல்கோட்டம்


36.எஸ் ராமகிருஷ்ணனின் இடக்கை


37.பா சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்


38.டி செல்வராஜின் 'தோல்


39.கண்மணி குணசேகரனின் 'நெடுஞ்சாலை


40.ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்


41.நக்கீரனின் 'காடோடி


42. சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை


43.வெங்கட்ராமின் 'காதுகள்


44.ஆதவனின் 'காகித மலர்கள்


45.ஜெயமோகனின் 'கொற்றவை


46.நாஞ்சில்நாடனின் 'என்பிலதனை வெயில் காயும்


47.அசோகமித்திரனின் '18வது அட்சக்கோடு


48.ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்


49 ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்


-
ராம் தங்கம்

Saturday, 14 December 2019

சிறந்த ஈழத்து சிறுகதைகள்

சிறந்த ஈழத்து சிறுகதைகள். ----ரியாஸ் குரானா


சிறந்த ஈழத்து சிறுகதைகள்.
----------------------------------------------------

1. தோணி - வ.அ.ச. இராசரத்தினம்
2. தொழுகை - மு.தளையசிங்கம்
3. ஆண்மை - எஸ்.பொ
4. மீன்கள் - தெளிவத்தை ஜோசப்
5. மக்கத்துச் சால்வை - எஸ்.எல்.எம்.ஹனிபா
6. கபறக்கொய்யா - ரஞ்சகுமார்
7. எலியம் - உமா வரதராஜன்
8. ஆற்றலல் மிகு கரத்தில் - கே.டாணியல்
9. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
10. தாவர இளவரசன் - ராகவன்
11. வண்டிச் சவாரி- அ செ முருகானந்தன்
12. கணிதவியலாளன் - அழகு சுப்ரமணியம்
13. அம்மாவின் பாவாடை - அ. முத்துலிங்கம்
14. எனக்கு வயது பதின்மூன்று - அ.ஸ.அப்துஸ் ஸமது
15. வெள்ளிவிரல் - ஆர்.எம். நௌசாத்
16. எண்ட அல்லா - சக்கரவர்த்தி
17. பிரண்டையாறு - மிலஞ்சி முத்தன்
18. தேனீக்கள் - மாத்தளை சோமு
19. சொக்கப்பனை - கோமகன்
20. கண்டி வீரன் - ஷோபா சக்தி
21. தேவதைகளின் தீட்டுத்துணி - யோ.கர்ணன்
22. சோனியனின் கதையின் தனிமை - மஜீத்
23. அசோகன் கொழும்பில் இருக்கிறான் - தேவமுகுந்தன்
24. ஹராங்குட்டி - முஸ்டீன்
25. நிலவிலே பேசுவோம் - என்.கே.ரகுநாதன்
26. நிராகரிக்கப்பட்டவன் - இளைய அப்துல்லாஹ்
27. காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – எம் ரிஷான் ஷெரீப்
28. மல்பிபில – ஷாஜஹான்
29. நெல்லிமரப் பள்ளிக்கூடம் – நந்தினி சேவியர்
30. வரவேற்பு – அ.யேசுராசா
31. கொட்டியா – இளங்கோ
32. எங்கோ ஒரு பிசகு – தி.ஞானசேகரன்
33. ஒரு நீண்ட நேர இறப்பு – சுமதிரூபன்
34. அவர் கண்ட முடிவு – மு.பொ
35. கற்பு – வரதர்
36. சாம்பவி – செங்கை ஆழியான்
37. திருப்தி – சாரல் நாடன்
38. எனக்கான வெளி – லறீனா அப்துல் ஹக்
39. இரும்புப் பறவைகள் – கௌரிபாலன்
40. மனிதக்குரங்கு – இலங்கையர்கோன்
41. இனியும் ஒரு சாவு – திருக்கோவில் கவியுவன்
42. பதுங்கு குழி – நந்தி
43. செங்க வெள்ளை – ஹஸீன்
44. மஞ்சள் வரி கறுப்பு வரி – த.மலர்ச்செல்வன்
45. மஞ்சள் சோறு - எம்.ஐ.எம்.றஊப்
46. ஜின் – ஓட்டமாவடி அறபாத்
47. மூன்று நகரங்களின் கதை – க.கலாமோகன்
48. ஏழாற்று கன்னிகள் –தமயந்தி
49. ஒரு பிடிச்சோறு – கனக செந்திநாதன்
50. சத்திய போதிமரம் – கே. கணேஷ்
51. பாதிக் குழந்தை – பித்தன்
52. கொத்தமல்லி குடிநீர் – இரா.சம்பந்தன்
53. கொக்குக் குஞ்சுகள் – அகளங்கன்
54. தொப்பி – எழுதியவர் தெரியாது
55. குளங்கள் – அம்ரிதா ஏயெம்
56. எழுதாத கடிதம் – ஐ.சாந்தன்
57. பாதாள மோகினி – அ.ந.கந்தசாமி
58. கொச்சிக்கடையும் கறுவாக்காடும் – டொமினிக் ஜீவா
59. மனவுரியும் மரவுரியும் – வடகோவை வரதராஜன்
60. வேட்கை – நீர்வைப் பொன்னையன்
61. பிஞ்சுப்பழம் – தெணியான்
62. கூத்து – நவம்
63. நிலவோ நெருப்போ – சோமகாந்தன்
64. இருவேறு உலகங்கள் – செ.யோகநாதன்
65. தண்ணீர் – முகைதீன்
66. மண்பூனைகளும் எலிபிடிக்கும் – மருதுார்கனி
67. அவன் ஒரு இனவாதி – ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
68. புளியங்கொம்பு – குறமகள்
69. வெள்ளாவி – விமல் குழந்தைவேல்.
70. சகபயணி – இரவி அருணாச்சலம்
71. மாயக்குதிரை – தமிழ்நதி
72. கருஞ்ஜூலையின் கொடும் நினைவுகள் – இரா.சடகோபன்
73. ஒரு தனித்த வனத்தில் – பொ கருணாகரமூர்த்தி
74. புலம்பெயர்தல் – வ.ந.கிரிதரன்
75. மழை – லெ.முருகபூபதி
76. இன்னும் மனிதனாக இருப்பதனால் – வேதாந்தி
77. மரையாம் மொக்கு – மருதுார்கொத்தன்
78. பூனைக் காய்ச்சல் – அஷ்ரப் சிஹாப்தீன்
79. ரோதைமுனி – ப.ஆப்டீன்
80. விடியும் வேளையில் – அக்கரையூரான்
81. எச்சில் மழை – எஸ்.நஸீறுத்தீன்
82. ஹனீபாவும் இரண்டு எருதுகளும் – குமார்மூர்த்தி
83. முள்வேலிகள் – வை. அஹ்மத்
84. ஆற்றங்கரை அப்பா – ஜுனைதா ஷெரீப்
85. கிண்ணஞ் சொட்டு – சொல்லன்பன்.நசுறுத்தீன்
86. பச்சிலை ஓணான் - கே. ஆர். டேவிட்
87. விடுபடல் – சுதர்ம மகாராஜன்
88. ஈ மொய்க்கும் பிணத்தின் மீது விளம்பரம் தேடும் மனிதர்கள் – அ.ச.பாய்வா
89. தலைமன்னார் ரெயில் – குப்பிழான் ஐ சண்முகம்
90. திருத்த வேண்டிய பிழை – சுபைர் இளங்கீரன்
91. தபாற்கார சாமியார் – சொக்கன்
92. ஆண்மையில்லாதவன் -செ கணேசலிங்கன்
93. கொக்கும் தவம் – எஸ் அகஸ்தியர்
94. பூர்ணிமா நெசவுக்கு போகிறாள் – அன்புமணி
95. எழுத்தாளன் நாடி -காவலூர் ராஜதுரை
96. வெளியேற்றப்பட்டான் – பிரேம்ஜி
97. பக்குவம் – க சட்டநாதன்
98. யோகம் இருக்கிறது – குந்தவை
99. சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும் – எம் எல் எம் மன்சூர்
100. விரக்தி – அல் அஸூமத்
101. ஒரு கோப்பைத்தேநீர் – மலைமகள்
102. தஞ்சம் தாருங்கோ –நிரூபா
103. திறப்புக்கோர்வை – சித்தார்த்த சே குவேரா
104. மாறுசாதி - திக்குவல்லை கமால்
105. அடையாள அட்டையும் ஐந்து ரூபாவும் - எஸ் எச் நிஃமத்
106. ஆலமரம் – தாழையடி சபாரத்தினம்
107. சடப்பொருள் என்றுதான் நினைப்போ – கோகிலா மகேந்திரன்
108. வட காற்று – கருணாகரன்
109. விலகல் – மு புஷ்பராஜன்
110. காடன் கண்டது –பிரமிள்
111. சதுரக் கள்ளி – தேவகாந்தன்.
112. கொத்தும் கொறயுமா – எஸ்.முத்துமீரான்
113. AB+ குருதியும் நீல நரியும் – இ.சு.முரளிதரன்.
114. மலடுகள் - என்.கே.மகாலிங்கம்.
115. ஆட்டுக் குட்டிகள். - சண்முகம் சிவலிங்கம்

Thursday, 12 December 2019

என்னை செதுக்கிய புத்தகங்கள்

மதுரைவாசகன் வலைப்பூவில் இருந்து 

என்னைச் செதுக்கிய புத்தகங்கள்


நான் வாசித்த நல்ல புத்தகங்கள் குறித்த பட்டியல்
நாவல்கள்
  1. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
  2. கம்பாநதி – வண்ணநிலவன்
  3. உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  4. உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன்
  5. யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  6. நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
  7. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
  8. கொற்றவை – ஜெயமோகன்
  9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  10. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
  11. கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்
  12. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
  13. குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
  14. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
  15. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
  16. நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்,
  17. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
  18. பார்த்திபன் கனவு – கல்கி
  19. பொன்னியின் செல்வன் – கல்கி
  20. ஆழி சூழ் உலகு – ஜோடி குரூஸ்
  21. நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
  22. கல்மரம் – திலகவதி
  23. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
  24. ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
  25. பொய்த்தேவு- க.நா.சு
  26. கானல் நதி – யுவன் சந்திரசேகர்
  27. அபிதா – லா.ச.ரா
  28. வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
  29. அலைவாய்கரையில் – ராஜம்கிருஷ்ணன்
  30. குறிஞ்சித்தேன் – ராஜம்கிருஷ்ணன்
  31. நளபாகம் – ஜானகிராமன்
  32. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
  33. நட்டுமை – ஆர்.எம்.நௌஸாத்
  34. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
  35. கன்னி மாடம் – சாண்டில்யன்
  36. கே.பி.டி. சிரிப்புராஜசோழன் – கிரேஸிமோகன்
  37. பாத்துமாவினுடைய ஆடும் இளம்பிராயத்து தோழியும் – பஷிர்
  38. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன்
  39. இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்
  40. ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்) –  சிங்கிஸ் ஜத்மதேவ்
  41. ஜமிலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
  42. அந்நியன் – ஆல்பெர் காம்யூ
  43. மோபிடிக் (திமிங்கல வேட்டை) – ஹெர்மன் மெல்வின்
கட்டுரைகள்
  1. பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவன்
  2. தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
  3. நாள் மலர்கள் – தொ.பரமசிவன்
  4. தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்,
  5. விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்,
  6. கோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்,
  7. வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்,
  8. காண் என்றது இயற்கை – எஸ்.ராமகிருஷ்ணன்,
  9. இலைகளை வியக்கும் மரம்– எஸ்.ராமகிருஷ்ணன்,
  10. காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்,
  11. சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  12. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  13. கிறிஸ்துவமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  14. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
  15. தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்
  16. என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேச பாண்டியன்
  17. உப்பிட்டவரை – ஆ.சிவசுப்பிரமணியன்
  18. கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும்- ஆ.சிவசுப்பிரமணியன்
  19. மந்திரங்களும் சடங்குகளும் – ஆ.சிவசுப்பிரமணியன்
  20. மணல் மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன்
  21. தமிழக பழங்குடிகள் – பக்தவத்சலபாரதி
  22. உழவுக்கும் உண்டு வரலாறு – கோ.நம்மாழ்வார்
  23. இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான்
  24. தூங்காமல் தூங்கி – மாணிக்கவாசகம்
  25. நகுலன் இலக்கியத்தடம் – தொகுப்பு. காவ்யா சண்முகசுந்தரம்
  26. இன்னும் பிறக்காத தலைமுறைக்கு – தியடோர் பாஸ்கரன்
  27. நிகழ்தல் – ஜெயமோகன்
  28. புத்தகங்களின் உலகில் – ந.முருகேசபாண்டியன்
  29. மீள்கோணம் – அழகிய பெரியவன்
  30. பறவைகளும் வேடந்தாங்கலும் – மா.கிருஷ்ணன்
  31. பெண்மை என்றொரு கற்பிதம் – ச.தமிழ்ச்செல்வன்
சிறுகதைகள்
  1. நகரம் – சுஜாதா
  2. ஸ்ரீரங்கத்து தேவதைகள் – சுஜாதா
  3. நடந்து செல்லும் நீருற்று – எஸ்.ராமகிருஷ்ணன்
  4. மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச. தமிழ்ச்செல்வன்
  5. மதினிமார்கள் கதை – கோணங்கி
  6. உயரப்பறத்தல் – வண்ணதாசன்
  7. பெய்தலும் ஓய்தலும் – வண்ணதாசன்
  8. வண்ணதாசன் முத்துக்கள் பத்து
  9. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் – வண்ணதாசன்
  10. நடுகை – வண்ணதாசன்
  11. வண்ணநிலவன் முத்துக்கள் பத்து
  12. கான்சாகிப் – நாஞ்சில்நாடன்
  13. ஒளிவிலகல் – யுவன்சந்திரசேகர்
  14. திசைகளின் நடுவே – ஜெயமோகன்
  15. மாபெரும் சூதாட்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்
  16. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
  17. பீக்கதைகள் – பெருமாள் முருகன்
  18. வெண்ணிலை – சு.வேணுகோபால்
  19. மண்பூதம் – வா.மு.கோமு
  20. புலிப்பாணி சோதிடர் – காலபைரவன்
  21. வெளியேற்றப்பட்ட குதிரை – பாவண்ணன்
  22. அன்பின் ஐந்திணை – சு.மோகனரங்கன்
  23. ஓய்ந்திருக்கலாகாது – கல்வி குறித்த சிறுகதைகள்
ஆளுமைகள், நேர்காணல்கள், உரையாடல்கள்
  1. மாவீரர் உரைகள், நேர்காணல்கள்
  2. ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
  3. சமயம் – தொ.பரமசிவன், சுந்தர்காளி
  4. எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன்
  5. எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு – விக்ரமாதித்யன்
  6. பாலியல் – சாருநிவேதிதா, நளினிஜமிலா
  7. ஆளுமைகள் சந்திப்புகள் நேர்காணல்கள் – தொகுப்பு மணா
மதுரை
  1. காவல்கோட்டம் – சு.வெங்கடேசன்
  2. எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்
  3. அழகர் கோயில் – தொ.பரமசிவன்
  4. எண்பெருங்குன்றம் – வெ.வேதாச்சலம்
  5. மதுரை அன்றும் இன்றும் – குன்றில் குமார்
  6. கிராமத்து தெருக்களின் வழியே – ந.முருகேச பாண்டியன்
  7. மதுரை கோயில்களும் திருவிழாக்களும் – ஆறுமுகம்
கவிதைகள்
  1. விக்ரமாதித்யன் கவிதைகள் – விக்ரமாதித்யன்
  2. என் படுக்கையறையில் யாரோ ஒளிந்துஇருக்கிறார்கள்-மனுஷ்யபுத்திரன்
  3. மண்ணே மலர்ந்து மணக்கிறது – மகுடேஸ்வரன்
  4. நீரின்றி அமையாது – மாலதிமைத்ரி
  5. நட்பூக்காலம் – அறிவுமதி
  6. உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் – தாணு பிச்சையா
  7. இதற்கு முன்பும் இதற்கு பிறகும் – மனுஷ்யபுத்திரன்
  8. சுந்தரராமசாமி கவிதைகள் – சுந்தர ராமசாமி
  9. கலாப்ரியா கவிதைகள் – கலாப்ரியா
  10. தேவதைகளின் தேவதை – தபூசங்கர்
  11. விழியீர்ப்பு விசை – தபூசங்கர்
  12. அடுத்த பெண்கள் கல்லூரி ஐந்து கிலோமீட்டர் – தபூசங்கர்
  13. வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் – தபூசங்கர்
கதைகள்
  1. பஞ்சதந்திரகதைகள்
  2. தெனாலிராமன் கதைகள்
  3. பீர்பால்கதைகள்
  4. மரியாதைராமன் கதைகள்
  5. விக்ரமாதித்தன் கதைகள்
  6. ஜென் கதைகள் – புவியரசு
  7. திராவிடநாட்டுப்புறக்கதைகள்
  8. மதனகாமராசன் கதைகள்
  9. பரமார்த்த குரு கதைகள்
  10. மகாபாரதக்கதைகள்
  11. சூஃபி கதைகள்
  12. முல்லா கதைகள்
  13. ஆயிரத்தோரு அராபிய இரவுகள்
  14. கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  15. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்
  16. கால் முளைத்த கதைகள் – எஸ்.ராமகிருஷ்ணன்
  17. மரகத நாட்டு மந்திரவாதி – எல்.பிராங்க்போம். (யூமா வாசுகி)
  18. மறைவாய்ச் சொன்ன பழங்கதைகள் – கி.ரா, கழனியூரன்
மற்றவை
  1. திசைகாட்டிப்பறவை – பேயோன்
  2. நவீன ஓவியம் – இந்திரன்
  3. கோபுலு ஜோக்ஸ் – விகடன்
  4. ராஜூ ஜோக்ஸ் – விகடன்
  5. தாணு ஜோக்ஸ் – விகடன்
  6. தியானம் பரவசத்தின் கலை – ஓஷோ
  7. ஈரான் – மர்ஜானே சத்ரபி
  8. பாலியல் தொழிலாளியின் சுயசரிதை – நளினி ஜமிலா
நான் வாசித்த முக்கியமான புத்தகங்களை எல்லாம் தொகுத்திருக்கிறேன். பின்னாளில் திரும்பிப்பார்க்கும்போது நினைத்தாலே இனிக்கும் என்ற எண்ணம்தான். மேலும், இதில் அவ்வப்போது வாசிப்பவைகளை குறித்து வைத்து கொள்வதன் மூலம் மறந்து போனாலும் இப்பதிவு மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கைதான். இது போல ஒரு பதிவை நீங்களும் தொகுத்து வைத்து கொள்ளுங்கள்.
என்னுடைய கவலைகள், தீராத பிரச்சனைகள் எல்லாவற்றையும் புத்தகங்கள்தான் போக்கியது. மேலும் வாசிப்பின் மூலமாகத்தான் சாதி,மதம் எல்லாவற்றையும் கடந்து நல்ல மனிதனாக உணர முடிந்தது. இன்றும் நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளோடு கண்டதையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.