Monday, 6 June 2016

குறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்


என் செல்வராஜ்

              சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது, நல்ல சிறுகதைகள் ஒரு பட்டியல் என்ற கட்டுரைகளில்  முன்னூறுக்கு மேற்பட்ட  கதைகளைப் பார்த்தோம். அடுத்து இரண்டு பரிந்துரை அல்லது  தொகுப்புக்களில் இடம் பெற்ற சிறுகதைகள்   எவை என்பதைப் பார்ப்போம்தமிழ் ஸ்டோரி  என்ற தொகுப்பை  திலீப்குமார் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தொகுப்பு ஏப்ரல் 2016ல் வெளிவந்துள்ளது. இந்த தொகுப்பின் மூலம் இரண்டு பரிந்துரை () தொகுப்பில் இடம் பெறும்  கதைகளை முதலில் பார்க்கலாம்.

  1. மாறுதல் - மௌனி,            2. பறவை - கோகுலக்கண்ணன்
 3. சிதறல்கள் - விழி பா இதயவேந்தன் 
 4. கிணற்றில் குதித்தவர்கள் - என் ஸ்ரீராம்
 5. இருட்டு - கோணங்கி            6. கிட்டுணன் - மா காமுத்துரை
 7. இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில் - சுப்ர பாரதி மணியன்
 8.சரோஜாதேவியின் கதைசெண்பகம் ராமசாமி
 9. மிதப்புகள் முறியும் - பாலகுமாரன்  
 10. வாக்கு பொறுக்கிகள் - நாஞ்சில் நாடன்
 11. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் - பிரபஞ்சன்
 12. கண்ணன் என் தோழன் - க நா சுப்ரமண்யம் 
 13. பதி பசி பாசம் - இந்திரா பார்த்தசாரதி       14. பயணம் - வாஸந்தி
 15. அவளிடம் சொல்லப்போகிறேன் -ராமகிருஷ்ணன் ( கோணல்கள்)
                         
                     மற்ற கதைகளை இப்போது பார்க்கலாம்.

  1. அக்னி - அனுராதா ரமணன்          2. ஆளவந்தான் - தொ மு சி ரகுநாதன்
  3. அலையும் சிறகுகள் - சுரேஷ்குமார் இந்திரஜித்
  4. அம்மாவின் அந்தரங்கம் - ஜோதிர்லதா கிரிஜா
  5. அநுபவ நாடகம்கல்கி,     6. வீணை பவானி -கல்கி
  7. ஆறுமுகசாமியின் ஆடுகள் - சா கந்தசாமி
  8. அக்னி நட்சத்திரம் - பா செயப்பிரகாசம்
  9. அச்சு வெல்லம் - ஐராவதம்           10. அடிமைகள் - பா விசாலம்
  11. அவள் - ஜெயந்தன்                        
  12. அவன் ஒரு இனவாதி - ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
  13. ஆயிரம் கண்ணுடையாள் - தனுஷ்கோடி ராமசாமி
  14. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி      15. ஆழ்வார் - இரா முருகன் 
   16. டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல் -உதயஷங்கர்
   17. ஈரம் - மேலாண்மை பொன்னுச்சாமி    18. ஈரம் - பொன்னீலன்
   19. ஆண்மை - எஸ் பொன்னுத்துரை       20. எல்லைகள் - சாந்தா தத்
   21. எருதுக்கட்டு - வேல ராமமூர்த்தி     22. ஏடு தொடங்கல் - மா அரங்கநாதன்
   23. ஹார்மோனியம் - செழியன்              24. ஹிம்சை - தளவாய் சுந்தரம்
   25. என்று வருவானோ -சிதம்பர சுப்ரமணியம் 
   26. இடம் - சுப்ர பாரதி மணியன்
   27. கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப்பாண்டியன்
   28. கலக்க மறுத்த கண்கள் - கோபி கிருஷ்ணன்
   29. களவு போகும் புரவிகள் - சு வேணு கோபால்
   30. காளீ - அனுராதா                   31. காளியமர்த்தனம் - நீல பத்மநாபன்
   32. கல்லத்தி மரம் - சுந்தர பாண்டியன்   33. கண் திறந்தது - வசுமதி ராமசாமி
   34. கன்யாகுமாரி - த நா குமாரஸ்வாமி  
   35. கார்ல் மார்க்ஸும் தானு ஆசாரியும் - தமிழவன்
   36. கர்ணமகராசா - தூரன் குணா
   37.  கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும் - ஆதவன் தீட்சண்யா
   38.  சொல்லவே முடியாதகதைகளின் கதை  - ஆதவன் தீட்சண்யா
   39. கூட்ஸ் வண்டியின் கடைசி பெட்டி - அஜயன் பாலா
   40. கோட்டு - கலாஸ்ரீ                          41. குருத்து - இந்துமதி
   42. குழந்தையின் கேள்வி - கி சந்திரசேகரன்
   43. லட்சுமி ஓடிப் போகிறாள் - வீர வேலுச்சாமி
   44. மனமகிழ்ச்சி - திரிலோக சீத்தாராம்           45. மண்பாரம் - இமையம்
   46. மண்குடம் - மாதவராஜ்
   47. மார்டின் ஹைடேக்கரும் மத்தியான சோறும் - உதய சங்கர்
   48. மறு ஜன்மம் - பி எம் கண்ணன்              49. மறுமணம் - விந்தன்
   50. மாயக்கிளிகள் - ஜீ முருகன் 51. மழையின் குரல் தனிமை - பா வெங்கடேசன்
   52. மீன் சாமியார் - எம் எஸ் கல்யாணசுந்தரம்
   53. மொழிக்கு அப்பால் - ம ந ராமசாமி       54. காசி - பாதசாரி                 
   55. ஏழாம் திருநாள் - ச தமிழ்ச்செல்வன்
   56. முதல் கடிதம் - சரோஜா ராமமூர்த்தி          57. முடிவு - இந்திரா
   58. முட்டர் பாஸ் - பொ கருணாகரமூர்த்தி   59. கற்பனை அரண்- ந முத்துசாமி    
   60. நான் அவன் அது - கவிதா சொர்ணவல்லி
   61. நாலு அவுன்ஸ் பிராந்தி - அ ந சிவராமன்
   62. நஞ்சு - வாஸந்தி                     63. நந்துவின் தம்பி - குமுதினி
   64. நாரணம்மா - தனுஷ்கோடி ராமசாமி 
   65. கடற்கரை கிளிஞ்சல் - இலங்கையர்கோன் 66. கூரை - வேல ராமமூர்த்தி
   67. நதியில் மிதக்கும் கனல் - சந்திரா         68. நாற்று - க சீ சிவக்குமார்
   69. நீர் ஊற்று - கௌரி அம்மாள்   
   70. நிஜத்தை மீறிய நிழல்கள் - தேவக்கோட்டை வா மூர்த்தி
   71. நிகழ மறுத்த அற்புதம் - திலீப் குமார்  72. நிலம் நீர் ஆகாயம் - ஐராவதம்
73. நியாயங்கள் மாறும் - ஜோதிர்லதா கிரிஜா
74. நொண்டிக்குழந்தை - சி சு செல்லப்பா
    75. ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் - பவா செல்லதுரை
    76.ஊமைச்சி காதல் றாலி         77. ஊமங்காடை - லட்சுமணப்பெருமாள்
78. ஒரு ஜோடி காளை - தி ஜ ரங்கநாதன்
79. ஒரு பூனையும் லெதர் பை வைத்திருப்பவர்களும் -தமிழவன்
80. ஒரு புதிய ஆயுதம் - நா பார்த்தசாரதி
81. ஒரு தாத்தாவும் எருமையும் - பாமா
82.ஒற்றைச்சிறகு - சூத்ர தாரி
83. கூரை மேலேறி கோண சுரைக்காயை ..... சிவசங்கரா
    84. பைத்தியக்காரி - தி ஜ ரங்கநாதன்      85.பகல் உறவுகள் - ஜெயந்தன்
    86. பலி - தேவி பாரதி             87. பள்ளத்தெரு - விழி பா இதயவேந்தன்
    88. பால்மணம் - கோமகள்   89. பாம்பும் பிற கனவுகளும் - கோகுலக்கண்ணன்
90. பணம் பிழைத்ததுபூச்சூட்டல் - பி எஸ் ராமையா
91. பங்கீடுகள் - வீர வேலுச்சாமி
92. கோட்டை - மு  தளையசிங்கம்    93. கோவில் பூனை - சிற்பி
94. பறக்கும் திருடனுக்குள் - சுரேஷ்குமார் இந்திரஜித்
95. பச்சை மோதிரம் குகப்ரியை    96. பட்டா - ம ராஜேந்திரன்       
97. பட்டாளக்காரன் - தி சா ராஜு   98. பட்டித்தெரு - கால பைரவன்              
99. லிபரல் பாளையத்தில் தேர்தல் - ஆதவன் தீட்சண்யா
    100. பெற்றோர்கள் - புரசு பாலகிருஷ்ணன் 101. பேய்க்கவிதை - தஞ்சை ப்ரகாஷ்
    102. பிம்பங்கள்சுரேஷ்குமார் இந்திரஜித்     103. பிற்பகல் - ந முத்துசாமி
    104. போணி - சிவசங்கரி                     105. பூமாலை - ஆர் சூடாமணி
    106. பொறி - சல்மா           107. பொருதகர் - செண்பகம் ராமசாமி
108. புலிப்பாணி ஜோதிடர் - காலபைரவன் 
109. புதிய ஏவாள் - சூ இ குழந்தை
    110. புயல் ஓய்ந்தது - கு ப சேதுஅம்மாள்  111. ராஜதந்திரிகள் - நா பார்த்தசாரதி
    112. ராக்கம்மா - நஞ்சுண்டன்             113. ரணகள்ளி - உமா மகேஸ்வரி
    114. நைவேத்தியம் - கிருஷ்ணன் நம்பி  115. சகோ"டி" - பிரதிபா ஜெயச்சந்திரன்
116. சக்ரவாகம் - ந சிதம்பர சுப்ரமணியம்
117.நாடக வாத்தியார் தங்கசாமி - சி எம் முத்து
    118. சங்கை - இரா முருகன்                119. சராசரிகள் - சி ஆர் ரவீந்திரன்
    120. சரஸ்வதி பூஜை - தனுஷ்கோடி ராமசாமி  121. சர்டிஃபிகேட் - அன்பாதவன்
    122. சசாங்கனின் ஆவி - ந சிதம்பர சுப்ரமணியம்
    123. சாஸ்தா ப்ரீதி - அ மாதவையா      124. சாது மிரண்டால் - டி செல்வராஜ்
    125. சாட்டை - கண்மணி குணசேகரன்    126. சீவன் - கந்தர்வன்
127. சின்னம்மிணி - திருப்பூர் கிருஷ்ணன்
128. சிபிகள் - மேலாண்மை பொன்னுச்சாமி
   129. சிறை - அ பிரேமா                130. சிதறியபடி ரூபங்கள் - தமிழவன்
   131. சொத்துக்குடையவன் - கி ரா   132.சுருட்டுப்பா - தோப்பில் முகம்மது மீரான்
   133. சுதந்திரப்போர் - குமுதினி     134. நூறுகள் - கரிச்சான் குஞ்சு   
   135. டண் டணக்கு - தய் கந்தசாமி
   136. தமயந்தி - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
   137.ஒரு சம்சாரியின் பஞ்சங்கள்- அ முத்தானந்தம்                           
   138. தார் குளிர்ந்த நதிக்கரையில் - அறிவுமதி
   139. தர்மம் தலை காக்கும் - உ வே சாமிநாதய்யர்
   140. தாசில்தாரின் நாற்காலி - விமலாதித்த மாமல்லன்
   141. தாயம்மா பாட்டி சொன்ன 41 கதைகள் - யுவன் சந்திரசேகர் 
   142. தயவு செய்து - களந்தை பீர் முகம்மது 
   143. தேடல் - இந்துமதி                              144. தீனி  -  பாரவி
   145. தீராத ஏக்கம் - தி நா சுப்ரமணியம்       146. தேனீக்கள்- ஜி காசிராஜன்
   147. தேன்சிட்டு - பொன்னீலன்                 148. தெரு - அழகிய சிங்கர்
   149. தேவகி - குகப்ரியை         150. திறந்த ஜன்னல் - கமலா விருத்தாசலம்
   151. திரிசங்கு நரகம் - சு சமுத்திரம் 
   152. தூங்கு பனிநீரே - எஸ் ஷங்கர நாராயணன்
   153. ஒரு நாள் - நகுலன்       154. தோஷம் - ஆண்டாள் பிரியதர்ஷிணி
   155. த்ரில் - உஷா சுப்ரமண்யம்                 156.துணி - இந்துமதி
   157. பறவைகளும் ரேஷன் கார்டும்  -செண்பகம் ராமசாமி                             158. டிராக்டர் - வையவன்
   159. உஞ்சவிருத்தி - கோபுல்ஸ்ரீ         160. உண்ணிகள் - பெருமாள் முருகன்
   161. உபய களத்திரம் - கமலா பத்மநாபன்      162. உதயகுமாரி - மீ ப சோமு
   163. வனம்மாள் - அழகிய பெரியவன்           164. வருகை - விட்டல் ராவ்
   165. வருகை - உமா மகேஸ்வரி        166. வருஷபிறப்பு - எஸ் விசாலாட்சி
   167. வாசுதேவ மிஸ்ராவின் மனைவி - ப கிருஷ்ணசாமி 
   168. வீடு - காஞ்சனா தமோதரன்
   169. வீடு பேறு - மா அரங்கநாதன் 
   170.வெள்ளை யானையும் குளிர்பதன பெட்டியும் - க்ருஷாங்கிணி
   171. வெள்ளி மீன்கள் - பெருமாள் முருகன்
   172. வென்றிலன் என்ற போதும் - ரகுநாதன்
   173. விபத்து - யூமா வாசுகி                   174. விவேகம் - எஸ் வி வி
   175. யாரை நம்பி வந்தாய் ? - ஜி கே பொன்னம்மாள்
   176. யாருக்கு பிரதிநிதி - விந்தன்
   177. உத்தரீயம், யானையின் சாவு - சார்வாகன்,
   178. தனுஷ்கோடி - கோணங்கி
   179. ஈரம் - ஜெயந்தி சங்கர்
   180. சீதாவின் சுயம்வரம் - மகாலிங்க சாஸ்திரி
   181. அன்னையும் பிதாவும் - ராஜாஜி    182. அன்னய்யா - ஆதவன் தீட்சண்யா
   183. அற்ப ஜீவிகள் - மலர் மன்னன்  184. காக்காய் பார்லிமெண்ட் - பாரதியார்
   185.  சோகம் - ம ராஜேந்திரன்         186. கோட்டை வீடு - வ ரா
   187. மற்றொன்று - க்ருஷாங்கிணி      188. மாடும் மனிதனும் - விந்தன்
   189. முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன - ரமேஷ் ப்ரேம்
   190. நீல ரதம் - சம்பத்   191. ஒரு திருணையின் பூர்வீகம் - மு சுயம்புலிங்கம்
   192. செம்பனார் கோயிலுக்கு போவது எப்படி - ந முத்துசாமி
   193. அமிர்தம் - கா ஸ்ரீ ஸ்ரீ      194. அந்தி மந்தாரை - பெ கோ சுந்தரராஜன்
   195. அப்புச்சியும் பேரனும் - கோவிந்தராஜ்                                   
   196. இங்கேயும் ஒரு கங்கை - பாவை
   197. இது தான் வாழ்க்கை -சரஸ்வதி ராம்நாத்                              
   198. யாதும் ஊரே - பஞ்சாட்சரம் செல்வராஜ்
   199.. கோகிலா நைட்டிங்கேல் - ருக்மிணி பார்த்தசாரதி

        மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதைகள்

     1. ரெ கார்த்திகேசுஒரு சுமாரான கணவன்
     2. ஐந்தடியில் ஓர் உலகம் - ப கு சண்முகம்
     3. கம்பத்து மக்கள் - முகம்மது இப்ராஹிம்  
     4. நேர்க்கோடுகள் - சாமி மூர்த்தி
     5. பாசத்தின் பரிசு - சி அன்பானந்தம்     
     6. புள்ளிகள் - அரு சு ஜீவானந்தன்
     7. சத்து ரிங்கிட் - பாரி

               முக்கியமான எழுத்தாளர்களின் கதைகள் இந்த பட்டியலில் பல இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.

1. அசோகமித்திரன் - காந்தி, காத்திருத்தல், குகை ஓவியங்கள், அம்மாவுக்காக
ஒரு நாள், முறைப்பெண், சார் சார்விமோசனம், விடிவதற்குள்,
பறவை வேட்டை,

2. நாஞ்சில் நாடன் - ஐந்தில் நான்கு, எண்ணப்படும், மொகித்தே, ஊதுபத்தி,
பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர், சாலப்பரிந்து, சுரப்பு,
மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்

3. புதுமைப்பித்தன் - அகலிகை, அன்றிரவு, நாசகார கும்பல், பால்வண்ணம்
பிள்ளை, பிரம்ம ராக்ஷஸ், சுப்பையா பிள்ளையின் காதல்கள், துன்பக்கேணி,
வாடா மல்லிகை, வேதாளம் சொன்ன கதை


4. பூமணிஅடி, மாற்றம், நேரம், நொறுங்கல், பசை, தகனம்,
உரிமைத்தாகம்,

5. பிரபஞ்சன் - ஆண்களும் பெண்களும், கருணையினால் தான், மனுஷி,
பாயம்மா, விழுது

6.. வண்ணநிலவன் - ஞாயிற்றுக்கிழமை, குடும்பச்சித்திரம்,
மயானகாண்டம், மழை, மெஹருன்னிசா, தேடித்தேடி,

7. தி ஜானகிராமன் - கடன் தீர்ந்தது, குழந்தைக்கு ஜுரம், முள்கிரீடம்,
பஞ்சத்து ஆண்டி, சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்,
தாத்தாவும் பேரனும்,

8. அ முத்துலிங்கம் - கறுப்பு அணில், ஒட்டகம், பக்குவம், பூமாதேவி,
ராகு காலம், ரி,

9. கு ப ராஜகோபாலன் - பண்ணைச்செங்கான், வீரம்மாளின் காளை

10. கு அழகிரிசாமி - அழகம்மாள், சிரிக்கவில்லை, தன்னையறிந்தவர்,

11. எம் வி வெங்கட் ராம் - ஏழை, ஊஞ்சல், பெட்கி,

12.  ந பிச்சமூர்த்தி - காவல், கவலை மாடு, மோகினி,வானம்பாடி,
முள்ளும் ரோஜாவும்

13. சுஜாதா - எல்டொராடோ, குதிரை , நிபந்தனை, பார்வை , தாஜ்மஹால்,
தனிமை கொண்டு

14. ஆதவன் - கணபதி ஒரு கடை நிலை ஊழியன், கத்தி,
முதலில் இரவு வரும் ,சினிமா முடிந்த போது,
சிவப்பா உயரமா மீசை வச்சுக்காம

15. வண்ணதாசன் - கூறல், போர்த்திக்கொள்ளுதல்

16. லா ச ராமாமிர்தம் - ஈ ஜெகமுலோ திக்கவரம்பா, கொட்டு மேளம் ,
ராஜகுமாரி , யோகம்

17. மௌனி - அத்துவான வெளி, குடும்பத்தேர், உறவு பந்தம் பாசம்,

18. கி ராஜநாராயணன்  - மாயமான், தாவைப்பார்த்து, மின்னல்

19. இந்திரா பார்த்தசாரதி - அற்றது பற்றெனில்,
குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்,

20. ஜெயமோகன் - ஹம்பி, நதிக்கரையில், பல்லக்கு, வலை

21. எஸ் ராமகிருஷ்ணன் - ஹசர் தினார், மழை சார்ந்த வீடு,
ரகசிய ஆண்கள், பி விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்

22. அம்பை - மல்லுக்கட்டு, மிலேச்சன், திரிசங்கு, சூரியன்

23. ஜி நாகராஜன் - கிழவனின் வருகை, மிஸ் பாக்கியம்ஓடிய கால்கள்

24. சுந்தர ராமசாமி - நாடார் சார், மேல் பார்வை

25. ஜெயகாந்தன் - தாம்பத்யம், யாருக்காக அழுதான்,
முன் நிலவும் பின் பனியும்

26.  கந்தர்வன்துண்டுகதை தேசம், மைதானத்து மரங்கள்

27.  சா கந்தசாமி - தேஜ்பூரிலிருந்துபாய்ச்சல், மூன்றாவது பிரார்த்தனை

28. அகிலன் - புயல், பூச்சாண்டி, எரிமலை,

29. ராஜம் கிருஷ்ணன் - ஊசியும் உணர்வும்திங்கள் கிழமை , ஏக்கம் ,
தனிமை

30. பாவண்ணன்ஆறு, அடி, துரோகம்வேஷம், சம்மதங்கள் ஏன் ?,
பயணம்

31. ஆர் சூடாமணி - இறுக மூடிய கதவுகள்நாகலிங்க மரம்,
நடன விநாயகர், ரயில், டாக்டரம்மா அறை,பெருமையின் முடிவில்

32. சோ தர்மன் - மருந்து, சருகுகள்

33. விட்டல் ராவ் - தூரதேசம், பன்றி, பந்து பொறுக்கி, சின்னவாடு

34. விந்தன் - முல்லைக்கொடியாள், முதல் தேதி, கண்ணம்மா

இந்த பட்டியலில் 375 கதைகள் இடம் பிடித்திருக்கின்றன. 200 க்கு மேற்பட்ட எழுத்தாளர்களையும் அவர்களின் சிறந்த கதைகளில்  சிலவற்றையும் பார்க்க முடிகிறது. இந்த கட்டுரைத் தொடர் ஆரம்பிக்கும் போது சில எழுத்தாளர்களே எனக்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள்.   இப்போது பல எழுத்தாளர்களையும் அவர்களின் சிறந்த கதைகளையும் வாசிக்க முடிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
இந்த கட்டுரையை  எழுத கவிஞர் மகுடேஸ்வரன் ஒரு காரணம் என்று சொல்லலாம். அவருடைய வலைப்பூவில்  தமிழில் நல்ல சிறுகதைகள் 1000 இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு ஒரு வாசகர் அந்த கதைகளின் பெயரை குறிப்பிடுங்கள் எனக் கேட்டு இருந்தார். அவரின் கட்டுரையில்  உள்ள வரிகளை அப்படியே இங்கு தருகிறேன்.
            " என்னதான் அகலமான அளவுகோல்களை வைத்து அளந்தாலும் தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் என ஓராயிரம் (1000) மட்டுமே  இருக்கின்றன. அவற்றைத் தேடுவதற்கோ கண்டடையவோ யாருக்கும் யாதொரு சிரமமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லாச் சிறுகதைகளும் அந்தந்த ஆசிரியர்களின் பெயரில் முழுத்தொகுதியாக வந்திருக்கின்றன. வந்துகொண்டுமிருக்கின்றனசிறந்த சிறுகதைகளின் தேர்ந்த தொகுப்புகளும் வந்திருக்கின்றன. விட்டல்ராவ் (இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்), மாலன் (அன்று), தீபம் சிறுகதைகள், கணையாழி கதைகள் என அவை கிடைக்கின்றன. அவற்றின் வழிச் சென்றாலே போதும். தமிழ்ச் சிறுகதை உலகைக் கடைந்து எண்ணெய்
 எடுத்துவிடலாம்."  -கவிஞர் மகுடேஸ்வரன்.
               
               அவர் அந்த கட்டுரையில் சொல்லி இருப்பது போல் 1000 சிறந்த சிறுகதைகளை கண்டடைவதே மிகச்சிரமமான வேலை என்பது சிறுகதை தொகுப்புக்களை தேடும் போது தான் தெரிந்தது. நூற்றுக்கணக்கான தொகுப்புக்கள் இதுவரை வெளிவந்திக்கின்றன என்பது தேடும் போது தான் தெரிந்தது. அந்த தொகுப்புக்களின் வழியாக மற்றும் பல எழுத்தாளர்களின் கட்டுரைகள் வழியாக சிறந்த கதைகளாக இரண்டு அல்லது அதற்கு மேல் குறிப்பிடப்பட்ட கதைகள் சுமார் 700 கதைகள்அவற்றையே  1.சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது  2. நல்ல சிறுகதைகள் - ஒரு பட்டியல் மற்றும் இந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
              

Email : enselvaraju@ gmail.com

Monday, 9 May 2016

இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

என் செல்வராஜ்

         இலக்கிய சிந்தனை அமைப்பு ஆண்டு தோறும் வார, மாத மற்றும் தீபாவளி மலர்களில் வரும் சிறுகதைகளில் இருந்து பன்னிரண்டு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை  ஒரு எழுத்தாளரிடம்  தந்து அவரது தேர்வில் முதல் இடத்தை பிடிக்கும் சிறுகதையின் தலைப்பில் வானதி பதிப்பகம் மூலம்   சிறுகதை தொகுப்பாக வெளியிட்டு வருகிறதுஅந்த தொகுப்பை ஏப்ரல் 14 அன்று வெளியிட்டு சிறந்த கதைகளின் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி வருகிறது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்.

        1. புத்தருக்கும் அடி சறுக்கும் - வைரமுத்து - குமுதம்

        2. மேன் மக்கள்- அய்க்கண்நமது செட்டி நாடு

        3. தந்தை - பா சந்திரசேகர் - தினமணி கதிர்

        4. எதிர்பாராத உதவி - க சங்கர் -    கல்கி

        5, கானல் நீர் கனவுகள்- எஸ் செல்வசுந்தரி - கணையாழி

        6. ஊர்மிளை - எஸ்.எம்..ராம்   -  கணையாழி

        7. அது தான் பரிசு - இ வில்சன் - தினமணி கதிர்

        8. விழல் - கீதா சீனிவாசன் - தினமணி கதிர்

        9. அவரவர் தர்மம்  - பா சந்திரசேகர் - தினமணி கதிர்

       10. அழுக்கு - பொன்னீலன் - ஓம் சக்தி தீபாவளி மலர்

       11. இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள - ஹரணி - தினமணி கதிர்

       12. கைமாத்து - உஷா தீபன் - தினமணி கதிர்


                      இந்த பன்னிரண்டு கதைகளில் 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக "கானல் நீர் கனவுகள் " என்ற கதையை நெல்லை ஜெயந்தா தேர்வு
செய்துள்ளார். இந்த கதையின் தலைப்பில் வானதி பதிப்பகம் இந்த 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளதுஇந்த நூலில் நெல்லை ஜெயந்தா ஒவ்வொரு கதையையும் விமர்சித்து அதை ஒரு சிறு கவிதையால் நிறைவு செய்திருக்கிறார். கவிஞர் என்பதால் இது அவருக்கு சாத்தியமாகி இருக்கிறது.

                         இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகள்
மேன்மக்கள்- அய்க்கண், அதுதான் பரிசு - இ வில்சன் , கானல் நீர் கனவுகள் - எஸ்
செல்வ சுந்தரி. கைமாத்து - உஷா தீபன், அவரவர் தர்மம் - பா சந்திரசேகர்.


         மேன்மக்கள்- கதையில் பர்மாவில் சிறப்பாக வாழ்ந்து மற்றவர்களுக்கும் வாரிக்கொடுத்த தந்தை  அழகப்ப செட்டியார் மரணமடைந்ததாலும் இரண்டாம் உலகப்போரின் போது சொத்துக்கள் சூறையாடப்பட்டதாலும் நாடு திரும்பும் மெய்யப்ப செட்டியார் வறுமையில் வாடும் கதை தான். கோயிலில் நடக்கும் லட்சார்ச்சனைக்கு குருக்களிடம் பணம் தர தன் மகனின் பரீட்சைக்காக கட்ட வைத்திருந்த ஐந்து ரூபாயையும் எடுத்து கொடுத்து விடுகிறார். வயதுக்கு வந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறார்அப்போது மருத்துவன் சோலையன் அவரைப் பார்க்க வருகிறான். அவன் செட்டியாரின் தந்தையிடம் வேலை செய்தவன் என்று அறிமுகம் செய்து கொள்கிறான். அவனை சலூன் வச்சி பொழைச்சுக்கோ என்று சொல்லி அழகப்ப செட்டியார் ஆயிரம்  ரூபாய் பர்மாவில்  கொடுத்திருக்கிறார். இப்போது மிகவும் வசதியாக இருக்கிறான்மெய்யப்ப செட்டியார் பற்றி   கேள்விப்பட்டு அந்த பணத்தை   வட்டியும் முதலுமாக     சேர்த்து ஐயாயிரம் தர வந்திருப்பதாக சொல்கிறான். பர்மாவில்  தந்தை அழகப்ப செட்டியார் எழுதி வைத்திருக்கும்  கொடுக்கல் வாங்கல் கணக்கை மெய்யப்ப செட்டியார்  பார்க்கிறார். அந்த பேரேட்டில் சோலையன் பெயர் இல்லை. தனது தந்தை கடன் கொடுத்திருந்தால்  அதில் எழுதியிருப்பார் என்றும் தர்மம் கொடுப்பதை எழுதுவது வழக்கமில்லை என்றும், சோலையனுக்கு தன் தந்தை தர்மமாக கொடுத்ததை கடனாக எண்ணி திரும்ப வாங்கிக்கொள்ள முடியாதென்றும் மறுத்து விடுகிறார். வீட்டில் அவருக்காக இருந்த ஒரே குவளை மோரையும்  சோலையனுக்கு கொடுக்கிறார். இவர் போன்ற நல்ல மனிதர்கள்  இப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தக் கதையை அய்க்கண் எழுதி இருக்கிறார்.





            அது தான் பரிசு - இந்த சிறுகதையை இ.வில்சன் எழுதி இருக்கிறார். நூறு நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் ஏமாற்று வேலைகளையும்  அதில் மாற்றம் கொண்டு வரும் பஞ்சாயத்து தலைவி தமயந்தியின் திட்டங்களையும் விவரிக்கிறார். நூறு நாள் திட்டம் என்பது வேலை இல்லாத  நாட்களில் தொழிலாளர்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அது பெயரளவில் இலவசமாக சம்பளம் தரும் திட்டமாக மாறி விட்டது. வேலையே செய்ய முடியாதவர்கள் கூட இந்த திட்டத்தில் சேர்ந்து வேலையே செய்யாமல் பணம் பெறுவதை  மாற்ற முயலும் தலைவி தமயந்தி  மாற்று திட்டத்தை முன் வைக்கிறார். வேலை செய்ய முடியாதவர்களுக்கு பாதி சம்பளம் தரப்படும் என்றும் அந்த மீதி பாதி பணத்தை கிராமத்து விவசாயிகளின் வயலில்  வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கிறார். விவசாயிகளின் வயலில் வேலை செய்பவர்களுக்கு அந்த விவசாயி டீ, வடை வாங்கி கொடுத்தால் போதும் என்று அறிவித்து செயல்படுத்துகிறார்மிஷின் வைத்து செய்ய வேண்டிய வேலைகளை மிஷின் வைத்து செய்து கொள்ளலாம்  என்கிறார். நூறு நாள் திட்ட பணத்தில் அவற்றை செயல்படுத்துகிறார். கிராமம் முன்னேறுகிறது. அந்த தலைவிக்கு சிறந்த   சிறந்த கிராமத் தலைவர் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்து கிராமம் இருக்கும்போது  பொது திட்ட பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அந்த தலைவி   தண்டிக்கப்படுகிறார். தமயந்தியின் இந்த திட்டத்தை நாம் பாராட்டவேண்டும். அரசாங்கமும் விவசாயிகள் வேலையாட்கள் கிடைக்காமல் படும் அவதியை  கவனத்தில் கொண்டு நூறு நாள் வேலை திட்டத்தை விவசாயத்துக்கு உதவியாக மாற்றி அமைக்க வேண்டும்
 

          கானல் நீர் கனவுகள் - ஆண்டின் சிறந்த கதையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறதுஇந்த கதையை எஸ் செல்வசுந்தரி எழுதி இருக்கிறார்.
கல்யாணத்துக்கு தேவைப்படும் பணத்துக்காக திருப்பூருக்கு மூன்று வருட ஒப்பந்தத்தில் பஞ்சாலை  செல்லும் பதினாறு வயது பெண்ணின் கதை. அந்த பெண்கள்   முதலாளிகளால் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை விரிவாக விவரிக்கும் கதை. மாதவிடாயின் போது வரும் வலிக்காக அதைத்  தடுக்க  ஹார்மோன் இஞ்செக்க்ஷன் போடப்படுவதையும் அதனால் அவள் மூன்று வருடம் முடிந்து அறுபதினாயிரம் பணத்துடன் வீடு திரும்பியதும்  அவள் கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாவதையும் வேதனையுடன்  விவரிக்கிறது. கல்யாண கனவு கானல் நீராவது தான் கதை.   கொத்தடிமைகளாக சுமங்கலி திட்டம் என்ற பெயரில் பல பெண்களின் வாழ்வில் வலிகளைத் தரும் திருப்பூர் ஆலை அதிபர்களிடமிருந்து அரசாங்கம்  தான் இளம் பெண்களைக் காப்பாற்ற வேண்டும்.   


கானல் நீர் கனவுகள் என்ற இந்த தொகுப்பை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ . 90/  

Monday, 18 April 2016

நல்ல சிறுகதைகள் - ஒரு பட்டியல்

நான்கு  பரிந்துரை (தொகுப்புபரிந்துரை மற்றும் எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்ட) பெற்ற  சிறுகதைகளை சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்ற கட்டுரையில் பார்த்தோம். பால குமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் என்ற கதை 4 பரிந்துரை பெற்று அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறது. புதுமைப்பித்தனின் மகாமசானம் 5 பரிந்துரை பெற்றுள்ளது. இந்த கதை திலீப் குமார் தொகுத்து  ஏப்ரல் 13 ல்  வெளியான தி தமிழ் ஸ்டோரி என்ற ஆங்கில தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் 88 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றதன் மூலம்  சில கதைகள் 4 பரிந்துரை பெற்ற கதைகளாக முதல் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. அந்த கதைகள் .....

      1. சின்னூரில் கொடியேற்றம் - சார்வாகன்
      2. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் - திலகவதி
      3. சிலிர்ப்புகள் - சி ஆர் ரவீந்திரன்
      4. சிறுமி கொண்டு வந்த மலர் - விமலாதித்த மாமல்லன்
      5. தழும்பு - சோ தர்மன்
      6. அனல் மின் மனங்கள் - தமயந்தி,
      7.  பலாச்சுளை - ரசிகன்
      8.  ரெயிவே ஸ்தானம் - பாரதியார்,
      9.  சண்டையும் சமாதானமும் - நீல பத்மநாபன்
      10. பொழுது - சிவசங்கரி,
      11.  நிஜத்தை தேடி- சுஜாதா


தமிழ் இந்து நாளிதழில் கதா நதி என்ற கட்டுரைத் தொடரை பிரபஞ்சன் எழுதி வருகிறார்.அதில் சிறந்த சிறுகதைகளைக் குறிப்பிட்டு எழுதி வருகிறார்.அதன் அடிப்படையில்  பட்டியலில் சில மாற்றங்கள் வரலாம்.  

இனி மூன்று பரிந்துரை பெற்ற சிறுகதைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.


       1. புதுமைப்பித்தன் - காலனும் கிழவியும், மனித யந்திரம், சிற்பியின்                               நகரம்கபாடபுரம்

       2. ஆறில் ஒரு பங்கு - பாரதியார்,

       3.  சுந்தர ராமசாமி - எங்கள் டீச்சர், காகங்கள்
                           சீதை மார்க் சீயக்காய் தூள்,

        4. . மாதவையா - ஏணியேற்ற நிலையம், கண்ணன் பெருந்தூது

        5. தி ஜானகிராமன் - கோபுர விளக்கு, பரதேசி வந்தான், துணை,     
                             கோதாவரிக் குண்டு

        6. பி எஸ் ராமையா - கார்னிவல், மலரும் மணமும்

        7. பா செயப்பிரகாசம் - இருளுக்கு அழைப்பவர்கள், தாலியில்  
                               பூச்சூடியவர்கள்

        8. ந பிச்சமூர்த்தி - தாய்,   ஜம்பரும் வேஷ்டியும்,   மாயமான்

        9. கு ப ராஜகோபாலன் - புனர் ஜென்மம்

        10. கு அழகிரிசாமி - இருவர் கண்ட ஒரே கனவு

        11. வண்ண தாசன் - ஞாபகம், போய்க்கொண்டிருப்பவன், சமவெளி,  
                     தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், வடிகால்

        12. அசோகமித்திரன் - குழந்தைகள், மாறுதல், பார்வை

        13. ஜெயகாந்தன் - குருபீடம், மௌனம் ஒரு பாஷை, நான் என்ன
                         செய்யட்டும் சொல்லுங்கோ, ட்ரெடில், பிணக்கு

        14. சி சு செல்லப்பா - மூடி இருந்தது

        15. அ முத்துலிங்கம் - அமெரிக்காகாரி, அக்கா

        16. நகுலன் - அயோத்தி, ஒரு எட்டு வயது பெண் குழந்தையும் நவீன
                      மலையாளக் கவிதையும்

        17. ஆதவன் - லேடி,   ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்

        18. பூமணி - கரு, பெட்டை, பொறுப்பு, வயிறுகள், தொலைவு

        19. ஜெயமோகன் - மாடன் மோட்சம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய்

        20. எஸ் ராமகிருஷ்ணன் -இந்த நகரிலும் பறவைகள்  
                      இருக்கின்றன,புலிக்கட்டம், தாவரங்களின் உரையாடல்

        21. இந்திரா பார்த்தசாரதி- இளமாறன் கொடுத்த பேட்டி, நாசகார கும்பல்,
                                 பயணம்

        22. ஜி நாகராஜன்இளிந்த ஜாதி, தீராக்குறை, டெர்லின் ஷர்ட்டும் எட்டு
                             முழ வேஷ்டி அணிந்த மனிதரும்

        23. நாஞ்சில் நாடன் - கிழிசல், விரதம், பாலம்

        24. கந்தர்வன் - தராசு, மங்கலநாதர், காளிப்புள்ள

        25. சுஜாதா - திமலா,

        26. கிருஷ்ணன் நம்பி -எக்ஸெண்டிரிக், நீலக்கடல், தங்க ஒரு..,
                               காணாமல் போன அந்தோனி

         27.   23 -   மாலன்

         28. அக்ரஹாரத்தில் ஒரு பூனை - திலீப்குமார்,
                               மனம் எனும் தோணி பற்றி - திலீப்குமார்

         29. (ஹி)ம்சை - சோ தர்மன்,

         30.  மழையும் தொலைவும் - தமயந்தி,

         31. அணி - எஸ் பொன்னுதுரை

         32. அந்த தெருவின் முடிவில் ஒரு சுடுகாடு - ஜெயபாரதி

         33. அசரீரி - அஜித்ராம் பிரேமிள்
    
         34. ஏன் - மௌனி

         35. இலைகள் சிரித்தன - பாதசாரி

         36. இடைவெளி - சம்பத்

         37. கலைஞனின் தியாகம் - கி வா ஜகந்நாதன்

         38. காலச்சக்கரம் - வை மு கோதைநாயகி அம்மாள்

         39. களவு - சுந்தர பாண்டியன்

         40. கார்த்திகைச்சீர் - எம் எஸ் கமலா

         41. கருப்பு குதிரை சதுக்கம் - அம்பை , மிருத்யு - அம்பை ,
                                      வெளிப்பாடு - அம்பை

         42. கடைசி வேட்டை -சங்கரராம்

         43. கருப்பு ரயில் - கோணங்கிகோப்பம்மாள் - கோணங்கி

         44. கழிவு - ஆண்டாள் பிரியதர்ஷினி

         45. குலவதி - கு ப சேது அம்மாள்

         46. குறட்டை ஒலி - மு வரதராசனார்

         47. குடிமுந்திரி - தங்கர் பச்சான்

         48. மனசு - பிரபஞ்சன்

         49. மனிதர்கள் - கிருஷ்ணமூர்த்தி

         50. மானுடத்தின் நாணயங்கள் - சு சமுத்திரம்,
             போதும் உங்க உபசாரம் - சு சமுத்திரம்

         51. மதிப்பு மிகுந்த மலர் - வல்லிக்கண்ணன்

         52. மாட்டுத்தொழுவம் - விந்தன்

         53. மாடுகள் -இமையம்

         54. மீதி - மா அரங்கநாதன்

         55. மூளி மாடுகள் -சுயம்பு லிங்கம்

         56. மொட்டை - ஜெயந்தன், பகல் உறவுகள் - ஜெயந்தன்

         57. மொழி அதிர்ச்சி - கோபி கிருஷ்ணன்

         58. நரிக்குறத்தி - ஜெகசிற்பியன்

         59. வதம் - திலகவதி

         60. நீலச்சிலுவை - என் ஆர் தாசன்

         61.  நீலம் - பிரமிள்

         62. நிலவோ நெருப்போ - சோமகாந்தன்

         63. நொண்டிக்கிளி - தி ஜ ரங்கநாதன்

         64. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்

         65. பச்சை கனவு - லா சா ராமாமிர்தம்

         66. படம் - க்ருஷாங்கினி

         67. பாதுகை - டொமினிக் ஜீவா

         68. பட்டுவின் கல்யாணம் - கா சி வேங்கடரமணி

         69. பாவணைகள் - ச தமிழ்ச்செல்வன்,
                            வாளின் தனிமை - ச தமிழ்ச் செல்வன்

         70. பேராசிரியர் தக்கியின் ஆடு - விட்டல் ராவ்,
                             தூர தேசம் - விட்டல் ராவ்

         71. பேசுதல் - பாவண்ணன்

         72. பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப் பொழுது - உதயசங்கர்

         73. பிளாக் நம்பர் 27 திருலோக்புரி - சாரு நிவேதிதா

        74. பொன்னுத்தாயி - பாமா

        75. பூமிக்கு சற்று மேலே - அ வெண்ணிலா

        76.   செப்டிக் - சிவசங்கரி

        77. ரத்த சுவை - கரிச்சான் குஞ்சு

        78. சப்பாத்தி பழம் - ந முத்துசாமியார் துணை - ந முத்துசாமி

        79. சரணபாலாவின் பூனைக்குட்டி - செ யோகநாதன்

        80. சதுப்பு நிலம் - எம் ஏ நுஹ்மான்

        81. செம்படவ சிறுமி - சங்கு சுப்ரமணியம்

        82. சத்ரு - பவா செல்லதுரை

        83. தபால்கார அப்துல்காதர் - எம் எஸ் கல்யாணசுந்தரம்

        84. தாக்கம் - கௌரிசங்கர்
    
        85. தம்பி - கௌதம சித்தார்த்தன்

        86. தமிழ்ப்பித்தன் நகர் - காசியபன்

        87.தண்ணீர் - ஆ மாதவன்

        88. தீராத பிரச்சினை - கிருத்திகா

        89. தேவானை - ராஜாஜி

        90. உக்கிலு - குமார செல்வா

        91. உள்ளும் புறமும் - வண்னநிலவன்

        92. உத்தராயணம் - இரா முருகன்

        93. வாக்கு - சுப்ரபாரதி மணியன்

        94. வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்,
          காலத்தின் ஆவர்த்தனம் - தோப்பில் முகம்மது மீரான்

        95. வேலையும் விவாகமும் - ந சிதம்பர சுப்ரமனீயம்

        96. வேட்கை - பெருமாள் முருகன்

        97. பொருதகர் - செண்பகம் ராமசாமி

        98. தனபால செட்டியார் கம்பெனி - அண்ணாதுரை

        99. ஆலமரம் - தாழையடி சபாரத்தினம்


      இந்த மூன்று பரிந்துரை பட்டியலில் 154 கதைகள் உள்ளன. இவை இன்னும் சில எழுத்தாளர்களின் பரிந்துரை பெற்றால் சிறந்த சிறுகதைகள்
பட்டியலில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அது வரை இந்த கதைகள் நல்ல கதைகள் என்ற பட்டியலில் இருக்கும். வாசகர்கள் இந்த கதைகளை தேடிப் படிக்க வேண்டும். இரண்டு பரிந்துரைகள் பெற்ற கதைகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.



Email : - enselvaraju @ gmail.com